இலங்கையில் புதிய கட்ட கொரோனா வைரஸ் பரவலின் உண்மை நிலை என்ன என்று பலரும் வினவுகின்றனர். இன்று இரவு 8.40ற்கு கிடைத்த அரசாங்க தகவல் திணைக்களத்தின் உத்தியோகபூர்வ அறிக்கையின் பிரகாரம் இலங்கையிலுள்ள கொரோனா சிசிக்கை நிலையங்களில் சிகிச்சையளிக்கப்பட்டுவரும் கொரோனா தொற்றாளர்களின் மொத்த எண்ணிக்கை 1,172 ஆகும். இவர்களில் 1034 பேர் மினுவங்கொட தனியார் ஆடைத்தொழிற்சாலைக் கொத்தணியில் இருந்து இனங்காணப்பட்ட தொற்றாளர்களாவர்.
இன்றையதினம் புதிதாக இனங்காணப்பட்ட 207 தொற்றாளர்கள் உட்பட இலங்கையில் இதுவரை கண்டறியப்பட்ட தொற்றாளர்களின் மொத்த எண்ணிக்கை 4459 ஆகும். இவர்களின் ஏற்கனவே 3274 பேர் சிகிச்சை நிறைவடைந்து வெளியேறியுள்ள நிலையில் தற்போது 1,172பேர் மாத்திரமே வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்றுவருகின்றனர்.
இது எமக்கு உத்தியோகபூர்வமாக அரச தரப்பில் இருந்து கிடைத்த தரவுகள் தாம். இது தானா உண்மையான தரவு என்பது பலருக்கும் இருக்கின்ற கேள்வியாக உள்ளது .
அரசாங்கத்தரப்பல்லாத நான்கு தனியார் நிறுவனங்களிடம் இருந்து கடந்த 12 மணிநேரத்திற்குள்ளாக வந்த அறிக்கைகள் கொரோனா பரவல் பற்றிய பார்வையைத் தருவதற்கு உதவும் என நம்புகின்றோம்.
Brandix நிறுவன அறிக்கை
இந்தியாவில் இருந்து மினுவாங்கொடை தொழிற்சாலைக்கு வந்தவர்கள் தொடர்பாக பகிரப்படுகின்ற தகவல்கள் பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.
கடந்த செப்டம்பர் மாதம் 22 ஆம் திகதி இந்தியாவின் விசாகபட்டிணத்தில் இருந்து மத்தளை விமான நிலையத்திற்கு விமானம் மூலம் இந்திய பிரஜைகள் சிலர் நாட்டை வந்தடைந்ததாக சமூக வலைத்தளத்தில் தகவல்கள் பகிரப்படுகின்றன.
Brandix நிறுவனம் ஏற்பாடு செய்த UL 1159 விமானத்தில் சிலர் மினுவாங்கொடை தொழிற்சாலைக்கு வந்துள்ளதாகவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக தௌிவூட்டும் வகையில்இ Brandix நிறுவனம் இன்று அறிக்கையொன்றை விடுத்துள்ளது.
இந்தியா அல்லது வேறு நாட்டைச் சேர்ந்த எவரும் தமது தொழிற்சாலைக்கு வருகை தரவில்லை என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவின் விசாகபட்டிணத்தில் இருந்து இலங்கை பணியாளர்களும் அவர்களது குடும்ப உறுப்பினர்களும் மூன்று விமானங்களில் இலங்கைக்கு அழைத்துவரப்பட்டதாக அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இவர்கள் அனைவரும் இலங்கை அரசாங்கத்தின் விதிமுறைகளுக்கு அமைய தனிமைப்படுத்தப்பட்டதாகவும் Brandix நிறுவனம் தெரிவித்துள்ளது.
இவர்களில் எவரும் மினுவாங்கொடை தொழிற்சாலைக்கு செல்லவில்லை எனவும் அந்த நிறுவனம் விடுத்துள்ள அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது
St. Joseph's College அறிக்கை
கொழும்பு சென்.ஜோசப் கல்லூரியின் மாணவர்களில் ஒருவரின் தந்தைக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.
இதுகுறித்து கல்லூரி நிர்வாகத்தால் ஒரு அறிக்கையை வெளியிடப்பட்டுள்ளது.
இவ்வாறு கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக குடும்ப உறுப்பினர்கள் தனிமைப்படுத்தலில் வைக்கப்பட்டுள்ளதாகவும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, தொற்றுக்குள்ளானவரின் குடும்ப உறுப்பினர்களுக்கும் பி.சி.ஆர். பரிசோதனை நடத்தப்படவுள்ளது.
Aitken Spence நிறுவன அறிக்கை
தோட்டப்பணியாளரும் அவரது குடும்பத்தினரும் பிசிஆர் பரிசோதனைக்கு உட்படுத்தப்படும் அதேவேளை ஏனைய தோட்டப்பணியாளரையும் அவரின் தொடர்பு வீச்சுக்குள் வந்திருக்கக்கூடியவர்கள் இன்று 7ம்திகதிமுதல் பணிக்கு வரவேண்டாம் என்றும் அக்கழகம் வேண்டுகோள் விடுத்துள்ளது.
No comments:
Post a Comment