Friday, October 9, 2020

இல்ங்கையில் தொடர்ச்சியாக அதிகரிக்கும் கொரோனா தொற்றாளர்கள் எண்ணிக்கை

 


இந்தியர்கள் இருவர் உட்பட 35 புதிய கொரோனா தொற்றாளர்கள் இன்று இல்ங்கையில் இனங்காணப்பட்டுள்ளனர்.

நாட்டில் இதுவரை 4,523  பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

தொற்றுக்குள்ளானோரில் 3,296 பேர் குணமடைந்துள்ளதுடன், 1,214 பேர் தொடர்ந்தும் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

சமாந்திரமாக மினுவாங்கொடை கொரோனா கொத்தணியில் தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.இதுவரை மினுவங்கொடை கொரோனா கொத்தணியில் இருந்து 1083 பேர் இனங்காணப்பட்டுள்ளனர்.

இதேவேளை, சீமாட்டி ரிட்ஜ்வே சிறுவர் போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த 10 மாதக் குழந்தைக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக வைத்தியசாலையின் பணிப்பாளர் டொக்டர் ஜீ.விஜேசூரிய தெரிவித்தார்.

தற்போது அந்த குழந்தை IDHவைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.

மினுவாங்கொடை பகுதியை சேர்ந்த குழந்தை ஒன்றே Covid-19 தொற்றுக்குள்ளாகியுள்ளது.

காய்ச்சல் காரணமாக இந்த குழந்தை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதோடுஇ வைத்தியர்களுக்கு ஏற்பட்ட சந்தேகத்தின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட சோதனைகளில் குழந்தைக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளது

இதேவேளை, வைத்தியசாலையில் சிகிச்சை பெறும் குழந்தையொன்றின் தந்தையொருவரும் கொரோனா தொற்றுக்குள்ளாகியுள்ளதாக ரிட்ஜ்வே சீமாட்டி சிறுவர் போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் டொக்டர் ஜீ.விஜேசூரிய குறிப்பிட்டார்.

கண்டியை சேர்ந்த குறித்த குழந்தை கடந்த இரண்டரை மாதங்களாக வைத்தியசாலையில் தங்கியிருந்து சிகிச்சை பெறுவதாகவும்இ தற்போது அவர்கள் கொட்டிகாவத்தை பகுதியில் வசிப்பதாகவும் அவர் கூறினார்.

குழந்தையின் தந்தை இடைக்கிடை வைத்தியசாலைக்கு வருகை தந்தமையால்இ அவர்கள் இருந்த விடுதியிலுள்ள அனைவரையும் தொற்றிலிருந்து பாதுகாப்பதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக ரிட்ஜ்வே சீமாட்டி சிறுவர் போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் டொக்டர் ஜீ.விஜேசூரிய தெரிவித்தார்.

இதேவேளை, ஹொரணை ஆதார வைத்தியசாலையின் 5 ஆம் இலக்க வார்ட் மூடப்பட்டுள்ளதுடன், ஒன்பதாம் இலக்க வார்ட் தனிமைப்படுத்தப்பட்டுள்ளது.

Brandix  நிறுவனத்தில் பணிபுரியும் ஒருவரின் மனைவி ஐந்தாம் இலக்க வார்ட்டில் தாதியாக சேவையாற்றி வருவதாக குறித்த வைத்தியசாலையின் வைத்திய அதிகாரி தெரிவித்தார்.

No comments:

Post a Comment