இலங்கையில் கடந்த சில நாட்களாக கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை அதிகரிக்க அதிகரிக்க போலிச் செய்திகளின் எண்ணிக்கையும் அதிகரித்துவருகின்றது
கொரோனாவுடன் தொடர்புடைய போலிச் செய்திகள் என்பது ஐந்து வகையாக வரும் என்பதை போலிச்செய்திகள் தொடர்பாக ஆராயும் அமெரிக்காவைத் தளமாகக் கொண்ட ஊடக அமைப்பினர் சுட்டிக்காட்டியிருந்தனர்.
1. Content 'Recontextualised'
ஒரு உள்ளடக்கத்தை வேறு காலகட்டத்திற்கு வேறு சூழ்நிலைக்கு ஏற்றமாதிரியாக வடிவமைக்கும் போலிச் செய்திகள் . இதற்கு உதாரணமாக கூறுவதெனில் பிரண்டிக்ஸ் நிறுவனம் இந்தியாவிலுள்ள அதன் தொழிலாளர்களை இலங்கைக்கு வாடகைக்கு அமர்த்தப்பட்ட தனி விமானங்கள் மூலம் அழைத்துவந்த விடயத்தை வைத்துக்கொண்டு அவர்களை கொரோனா தொற்றாளர் இனங்காணப்பட்டுள்ள மினுவங்கொடை தொழிற்சாலைக்குத் தான் கொண்டுவந்தார்கள் என மாற்றம் செய்து செய்தியாக பிரசுரிப்பது. முன்னர் நடைபெற்ற ஒன்றை இப்போது நடைபெற்றது மாதிரியாக காண்பிப்பதும் இதில் அடங்கும் .
2. Narrative 'Hijacking'
அமெரிக்காவில் கொரோனா வைரஸ் பரவலைக்கட்டுப்படுத்த டொனால்ட் ட்ரம்ப் நிர்வாகம் தவறிவிட்டது என்ற குற்றச்சாட்டுக்கள் தொடர்ச்சியாக எழுப்பப்படுகின்றபோது சீனாவும் உலக சுகாதார ஸ்தாபனம் தான் இதற்கு காரணம் என்ற வகையில் குற்றச்சாட்டுக்களை திசைதிருப்திவிடும் ட்ரம்ப் நிர்வாகத்தின் நடவடிக்கையை இதற்கு உதாரணமாக சொல்லமுடியும். அதுபோன்று இலங்கையில் புதிய தொற்று அதிகரிப்பிற்கு ஒரு தரப்பை குற்றம் சாட்டும் போது வேறுதரப்பை நோக்கி கவனத்தை சிதறடிக்க போலிச்செய்திகள் வடிவமைக்கப்படலாம்.
3. Hate Engine Optimazation
கொரோனா பரவலுக்கு ஒரு சமூகம் ஒரு பிரதேசத்தினர் ஒரு இனக்குழுமத்தினரே காரணம் என்ற வகையில் பரப்பப்படும் போலிச்செய்திகள்.
இலங்கையில் கொரோனாவிற்கு காரணம் இத்தாலியில் இருந்தவந்தவர்களே என்று ஒரு காலத்தில் வெறுப்பு பரப்பப்பட்டது. பின்னர் கடற்படையினரே காரணம் என்று பரப்பப்பட்டது. பின்னர் முஸ்லிம்களே காரணம் என்று பரப்பப்பட்டது. தற்போது தனியார் ஆடைத்தொழிற்சாலையே காரணம் என்று பரப்பப்படும் போலிச்செய்திகளைக் குறிப்பிடலாம் . குறித்த தரப்பினர் மீது வெறுப்பை அதிகரிக்கும் வகையில் இவ்வாறான போலிச்செய்திகள் பரப்பப்படுகின்றன.
4. Fake accounts
போலி ஃபேஸ்புக் டுவிட்டர் கணக்குகளை உருவாக்கி அதிலிருந்து போலியான தகவல்களை பரப்பும் வகையான போலிச் செய்திகள். ஒக்டோபர் 6ம் திகதி நாடுமுழுவதும் ஊரடங்குச் சட்டம் பிறப்பிக்கப்படவுள்ளதாக ஜனாதிபதி செயலகத்தின் கடிதத்தலைப்பை ஒத்த கடிதத்தலைப்பில் பரப்பப்பட்ட போலித் தகவலை இதற்கு உதாரணமாக கூறலாம். இந்ததகவலைப்பரப்பியதற்காக 18வயதுடைய ஒருவர் கைதுசெய்யப்பட்டமை அறிந்ததே. ஒக்டோபர் 6ம் திகதி நாடுமுழுவதும் ஊரடங்குச் சட்டம் பிறப்பிக்கப்படவுள்ளதாக ஜனாதிபதி செயலகத்தின் கடிதத்தலைப்பை ஒத்த கடிதத்தலைப்பில் பரப்பப்பட்ட போலித் தகவலை இதற்கு உதாரணமாக கூறலாம். இந்ததகவலைப்பரப்பியதற்காக 18வயதுடைய ஒருவர் கைதுசெய்யப்பட்டமை அறிந்ததே.
5. Manipulated Media
ஒரு உண்மையான விடயத்தில் சில திரிவுகளைச் செய்து இவ்வாறான போலித் தகவல்கள் உருவாக்கப்படுகின்றன. பிரபல ஹொலிவுட் நடிகர் டொம் ஹாங்ஸ் கொரோனா தொற்றுக்குள்ளாகி அவுஸ்திரேலியாவிலுள்ள வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டபோது அவர் கையிலே ஒரு கரடிப்பொம்மையை வைத்து விளையாடுவது போன்று செய்தியை பிரசுரித்திருந்தார்கள். இதில் அவர் வைத்தியசாலையில் இருந்தமை உண்மை ஆனால் கரடிப்பொம்மை திரிவு. இப்படி பல உதாரணங்கள் உள்ளன.
எனவே இவ்வாறானதும் இதற்கும் மேலானதுமான போலிச்செய்திகள் தொடர்பாக விழிப்பாக இருப்பதன் மூலம் நாமும் நிர்க்கதியாகி நம்மைச் சார்ந்தவர்களையும் நிர்க்கதியாவதிலிருந்து பாதுகாப்போடு இருப்போம்.
No comments:
Post a Comment