20 வது அரசியல் அமைப்பு திருத்த சட்ட வரைபு அரசியல் அமைப்புக்கு முரணானது அல்லவெனவும் அதனை நிறைவேற்றுவதற்கு சர்வஜென வாக்கெடுப்பு தேவையில்லையெனவும் நீதிமன்றத்தின் கவனத்திற்கு கொண்டுவரப்பட்டுள்ளது.
20 வது அரசியல் அமைப்பு திருத்தம் தொடர்பான மனுக்கள் குறித்த விசாரணைகள் இன்றைய தினம் ஆரம்பமானதன் பின்னர் குறித்த விடயங்கள் சுட்டிக்காட்டப்பட்டன. நாட்டின் முக்கியமான 13 வது அரசியல் அமைப்பு திருத்தம் மற்றும் 19 வது அரசியல் அமைப்புக்கு சர்வஜென வாக்கெடுப்பு தேவைப்படாத நிலையில் 20 வது அரசியல் அமைப்பு திருத்தத்திற்கும் அதேபோன்று தேவையில்லையென ஜனாதிபதி சட்டத்தரணி காமினி மாரப்பென தெரிவித்துள்ளார். இலங்கையின் பெயரை மாற்றுதல் தேசிய கொடி, தேசிய கீதம் உள்ளிட்ட விடயங்களின் போதே சர்வஜென வாக்கெடுப்பு கட்டாயமென ஜனாதிபதி சட்டத்தரணி சஞ்சீவ தயரத்ன நீதிமன்றத்தின் கவனத்திற்கு கொண்டுவந்துள்ளார்.
அதேபோன்று அவசர சட்ட வரைபை முன்வைப்பதற்கான முறைகளை மீண்டும் அறிமுகப்படுத்துவதற்கு தேவையான வழிமுறைகள் 20 வது அரசியல் அமைப்பு திருத்தத்தில் கொண்டுவரப்பட்டுள்ளதாகவும் அது நாட்டிற்கு தேவையானதெனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். 19 வது அரசியல் அமைப்பு திருத்ததின் ஊடாக ஜனாதிபதியிடம் காணப்பட்ட ஒரு பகுதி அதிகாரங்களை பிரதமருக்கு வழங்கும் செயற்பாட்டில் சர்வஜென வாக்கெடுப்பு நடத்தப்படவில்லையென மற்றுமொரு இடையீட்டு மனுசார்பாக ஆஜரான ஜனாதிபதி சட்டத்தரணி துஸான் டி சில்வா குறிப்பிட்டுள்ளார். 20 வது அரசியல் அமைப்பு திருத்தத்தின் ஊடாக அரசியல் அமைப்பின் முழு கட்டமைப்பிற்கும் எவ்வித பாதிப்பும் ஏற்படாதென ஜனாதிபதி சட்டத்தரணி சவீந்திர பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment