Wednesday, October 14, 2020

வெளிநாட்டுக் கடன்களை தவணை தவறாது திருப்பிச் செலுத்த சர்வதேச நாணய நிதியத்திலும் பார்க்க சீனாவை இலங்கை விரும்புவதேன்?

 


இலங்கை அரசாங்கம் வெளிநாடுகளிடமிருந்தும் சர்வதேச நிதி நிறுவனங்களிடமிருந்தும் பெற்றுக்கொண்ட கடன் தவணைகளைத் திருப்பிச் செலுத்துவதற்காக சர்வதேச நாணய நிதியம் போன்ற அமைப்புக்களை நாடுவதைவிடவும் சீனாவையே நம்பியிருப்பதாக Nikkei Asia நிக்கேயி ஏசியா சஞ்சிகை செய்திவெளியிட்டுள்ளது. 

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் அரசாங்கம்  வெளிநாடுகளுக்கும் சர்வதேச நிறுவனங்களுக்கும் விரைவில் திருப்பிக்கொடுக்க வேண்டிய 15 பில்லியன் அமெரிக்க டொலர்கள் என்ற பாரிய தொகையைக்குரிய தவணைக்கொடுப்பனவுகளை உரிய காலத்தில் தவறாது திருப்பிக்கொடுபதற்கு மிக அவசரமாக பணத்தை எதிர்பார்த்துள்ளது. 

சீனாவின் அபிவிருத்தி வங்கியின் மூலம் ஒருங்கிணைக்கப்பட்ட  1.2பில்லியன் கடனில் ஒருபகுதியாக 500 மில்லியன் அமெரிக்க டொலர்களை இவ்வருட முற்பகுதியில் வழங்கியதன் மூலம் பதற்றநிலையைத்தணிப்பதற்கு சீனா உதவியிருந்தது. 



'நாம் தற்போது சீன அபிவிருத்தி வங்கியுடன் தொடர்பில் உள்ளோம்.மேலதீகமாக 700 மில்லியன் அமெரிக்க டொலர்களைப் பெறுவதற்காக  நாம் தற்போது பேச்சுவார்த்தைகளை நடத்திவருகின்றோம்'  என நிதி மூலதனச் சந்தை மற்றும் அரச தொழில்முயற்சியாண்மை மறுசீ ரமைப்பு ஆகியவற்குக்கு பொறுப்பான இராஜாங்க அமைச்சர் அஜித் நிவார்ட் கப்ரால் Nikkei Asiaக்கு  தெரிவித்துள்ளார். 

'இரண்டாவது தவணை இந்த வருட இறுதியில் அவசியமாகின்றது. எமது இருதரப்பு பங்காளித்துவ நாடுகளிடமிருந்து  பணத்தைப் பெற்றுக்கொள்வதற்கான தெரிவுகள் உள்ளன. நாம் இதில் வெற்றிபெறுவோம் என்ற நம்பிக்கை உள்ளது' என கப்ரால் தெரிவித்துள்ளார்.

"நாம் சர்வதேச நாணய நிதியத்தின் கரங்களைப் பற்றிக்கொள்வதாக இருப்பினும் சர்வதேச நாணய நிதியம் எமது கரங்களைப் பற்றிக்கொள்வதாக இருப்பினும் அது அபாயச் சமிக்ஞையாக அமையும். எமது கடன் நிலைமையை கட்டுப்பாட்டின் கீழ் வைத்திருக்கவேண்டும் என்பது எமக்குத் தெரியும் . இதற்கு சர்வதேச நாணய நிதியம் தேவையா? இல்லை" என அவர் மேலும் பதிலளித்துள்ளார்.

வெளிநாட்டுக் கடன்களை தவணை தவறாது திருப்பிச் செலுத்த சர்வதேச நாணய நிதியத்திலும் பார்க்க சீனாவை இலங்கை விரும்புவதேன்? என்பது தொடர்பாகவும் நாட்டின் பொருளாத நிலையின் யதார்த்தத்தை விளங்கிக்கொள்ளவும்  கொழும்பு பல்கலைக்கழகத்தின் பொருளியல்துறை பேராசிரியர் கோபாலபிள்ளை அமிர்தலிங்கம் வழங்கிய நேர்காணலைப் பாருங்கள்.



No comments:

Post a Comment