இலங்கையில் புதிய கட்ட கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்திருக்கும் நிலையில் எதிர்வரும் நாட்களில் அதிக உயிரிழப்புக்கள் பதிவாகக்கூடும் என சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மினுவங்கொடை மற்றும் பேலியாகொடை கொத்தணியோடு தொடர்புடைய மேலும் பல தொற்றாளர்கள் நாட்டின் பல பாகங்களில் இருந்தும் இனங்காணப்பட்டுவருவதாக தொற்று நோய் விஞ்ஞானப் பிரிவின் பணிப்பாளர் விசேட மருத்துவ நிபுணர் சுதத் சமரவீர சுட்டிக்காட்டியுள்ளார்.
பேலியாகொடை கொத்தணியானது மினுவங்கொடை கொத்தணி போன்றோ அதற்கு முன்னர் கண்டறியப்பட்ட கொத்தணிகள் போன்றோ அன்றி வித்தியாசமானது. ஏனெனில் அதன் பரவல் வீச்செல்லை பெரிதாக அமைந்துள்ளது. பேலியாகொடை மீன் சந்தையே நாட்டின் ஏனைய பகுதிகளுக்கான மீன் விநியோகத்தின் மத்திய ஸ்தானமாக விளங்குவதே இதற்கு காரணமாகும்.
பேலியாகொடை சந்தையுடன் தொடர்புடைய தொற்றாளர்களை இனங்காணப்பதற்காக மேலும் பிசிஆர் பரிசோதனைகள் மேற்கொள்ளப்படுவதாக தெரிவித்த விசேட வைத்தியர் சுதத் சமரவீர தற்போது தனிமைப்படுத்தல் நடைமுறை பின்பற்றப்படுவதாக தெரிவித்தார்.
இலங்கை சுகாதார மேம்பாட்டுப் பணியகத்தின் தரவுகளின் படி இதுவரை இலங்கையில் கொரோனா தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 8,870 ஆக பதிவாகியுள்ளதுடன் இதில் 4,075 பேர் குணமடைந்து வீடுகளுக்கு சென்றுள்ளனர். தற்போது 4,776 பேர் நாட்டின் பலபாகங்களிலுமுள்ள கொரோனா சிசிச்சை நிலையங்களில் தங்கவைக்கப்பட்டு சிசிச்சையளிக்கப்பட்டுவருகின்றனர். இதுவரை இலங்கையில் 19 பேர் கொரோனா வைரஸால் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்கத்கது.
No comments:
Post a Comment