Monday, October 12, 2020

மினுவங்கொடை கொரோனா கொத்தணி: இந்தியாவில் இருந்து வந்தவர்கள் சுகாதார நடைமுறை பேணியமையை நிரூபிக்க தயார் என்கிறது பிரண்டிக்ஸ்

 


இலங்கையில் மிகப்பெரும் கொரோனா பரவல் கொத்தணியாக உருவெடுத்துள்ள மினுவங்கொடையிலுள்ள பிரண்டிக்ஸ்  நிறுவனத்திற்கு சொந்தமான ஆடைத்தொழிற்சாலையில் இந்தியாவில் இருந்து வந்தவர்கள் எவ்வித சுகாதார விதிமுறைகளையும் பின்பற்றாது பணிக்கமர்த்தப்பட்டதான குற்றச்சாட்டுக்கள் விமர்சனங்கள் எழுப்பப்பட்டு வரும் நிலையில் பிரண்டிக்ஸ் நிறுவனம்  தனது நிலைப்பாட்டை விளக்கி அறிக்கை வெளியிட்டுள்ளது. 

பிரண்டிக்ஸ் அனைத்து தைினைப்படுத்தல் நெறிமுறைகளையும் பின்பற்றியதென உறுதி  அறிவிப்பதாகவும் இந்தியாவில் இருந்து இலங்கைக்கு பயணித்த 341  ஊழியர்கள் மற்றும் குடும்ப உறுப்பினர்களுக்கு தனிமைப்படுத்தல் நெறிமுறைகளை பின்பற்றியமைக்காக அதிகாரிகளால் வழங்கப்பட்ட சான்றிதழ் கைவசம் உள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளது.







No comments:

Post a Comment