Sunday, October 18, 2020

எஸ்.பி.பாலசுப்ரமணியம் உயிரிழப்புக்கு சீனாவே காரணம்; சர்வதேச நீதிமன்றத்தில் மனுத் தாக்கல்

 



16 மொழிகளில் 45,000 ற்கும் மேற்பட்ட பாடல்களைப் பாடிய பிரபல பின்னணி பாடகர் எஸ்.பி. பாலசுப்ரமணியம் அவர்களின் மறைவு இசை ஆர்வலர்களுக்கு ஈடுசெய்யமுடியாத பேரிழப்பு என்பதில ஐயமில்லை. இந்நிலையில் எஸ்.பி.பி உயிரிழந்தமைக்கு சீனாதான் காரணமென சர்வதேச நீதிமன்றத்தில் மனுவொன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஆந்திர மாநிலம் விஜயவாடாவை சேர்ந்த உயர் நீதிமன்ற வழக்கறிஞரான சீனிவாச ராவ்இ  மறைந்த பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியத்தின் தீவிர ரசிகர் ஆவார்.

இந்நிலையில் சீனிவாச ராவ் சர்வதேச நீதிமன்றத்தில் மனுவொன்றை தாக்கல் செய்துள்ளார். அதில் அவர் கூறியுள்ளதாவது, 'கடந்த 8 மாதங்களாக கொரோனா வைரஸ் தொற்றால் இந்தியாவின் பொருளாதாரம் சீர் குலைந்து விட்டது.

கொரோனா வைரஸை உருவாக்கி, பல நாடுகளுக்கு பரவச் செய்தது சீனாதான் என பல நாடுகள் குற்றம் சாட்டி வருகின்றன. ஆனால்இ இதுகுறித்து சீனா இதுவரை எந்த பதிலையும்  வழங்கவில்லை.

ஏற்கெனவே அமெரிக்கா, இந்தியா ஆகிய நாடுகளை பொருளாதார ரீதியாக வலுவிழக்கச் செய்ய வேண்டுமெனும் எண்ணம் சீனாவிற்கு உள்ளது.

ஆகையால்தான் கண்ணுக்கு புலப்படாத நுண் உயிர் கொல்லியை உலகம் முழுவதும் சீனா பரவச் செய்துள்ளது. இதனால்தான் பிரபல பாடகர் எஸ்.பி. பாலசுப்ரமணியம் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் மற்றும் அப்பாவி மக்கள் உயிரிழந்துள்ளனர்.

எனவே சீனா மீது குற்றவியல் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்' என அவர் குறிப்பிட்டுள்ளார்.

1946ம் ஆண்டு ஜுன் மாதம் 4ம் திகதி பிறந்த எஸ்.பி .பி கடந்த செப்டம்பர் மாதம் 25ம்திகதி உயிரிழந்திருந்தமை குறிப்பிடத்தக்கது. 

எஸ்.பி.பி.யின் மறைவை அடுத்து அவரது நினைவுகளையும் பெருமையையும் தனித்துவத்தையும் மீட்டுப்பார்க்கும் வகையில் இலங்கைக்கான இந்துப்பத்திரிகையின் செய்தியாளர் மீரா ஸ்ரீனிவாசனுடன் நடத்திய நேர்காணல் இதோ...





No comments:

Post a Comment