பிரெஞ்ச் ஓபன் டென்னிஸில் ஆண்களுக்கான ஒற்றையர் பிரிவு இறுதி ஆட்டம் இன்று நடைபெற்றது. இதில் 12 முறை சாம்பியனும், தரவரிசையில் 2-வது இடத்தில் இருப்பவருமான ‘களிமண் தரை கதாநாயகன்’ ரபேல் நடாலுடன் (ஸ்பெயின்), ஜோகோவிச் மோதினார்.
நடால் வேகத்திற்கு ஜோகோவிச்சால் ஈடுகொடுத்து விளையாட முடியவில்லை. இதனால் முதல் செட்டை நடால் 6-0 எனக் கைப்பற்றினார். 2-வது செட்டிலும் ஜோகோவிச் துவண்டு போனார். கண் மூடி திறப்பதற்குள் 6-2 என நடால் 2-வது செட்டை கைப்பற்றினார்.
3-வது செட்டில் ஜோகோவிச் சற்று நெருக்கடி கொடுத்தார். இருந்தாலும் நடால் விடவில்லை. இருவரும் மாறிமாறி கேம்-ஸை வென்றனர். இறுதியில் நடால் 7-5 என 3-வது செட்டை தனதாக்கினார். இதன் மூலம் நடால் 6-0, 6-2, 7-5 என நேர்செட் கண்கில் ஜோகோவிச்சை வீழ்த்தி நடால் 13 வது தடவையாக பட்டம் வென்றார்.
இதன்மூலம் நடால் 20-வது கிராண்ட்ஸ்லாம் பட்டத்தை வென்று, அதிக கிராண்ட்ஸ்லாம் வென்ற ரோஜர் பெரடரின் (சுவிட்சர்லாந்து) சாதனையை சமன் செய்வார். பிரெஞ்ச் ஓபனில் இதற்கு முன் 7 முறை இருவரும் மோதி உள்ளனர். இதில் நடால் 6-1 என்ற கணக்கில் வெற்றி பெற்றிருந்தார்.
No comments:
Post a Comment