குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தின்(சி.ஐ.டி). செயற்பாடுகள் தொடர்பாக கொழும்பு மறைமாவட்ட கத்தோலிக்கப் பேராயர் கர்தினால் மல்கம் ரஞ்சித் கரிசனையை வெளிப்படுத்தி சில மணிநேரம் ஆவதற்குள்ளாக சி.ஐ.டி. யின் பணிப்பாளப்பாளராக இருந்த பிரதிப் பொலிஸ் மா அதிபர் நுவன் வெதசிங்க இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் மேல் மாகாணம் வடக்கிற்கான பதில் பிரதி பொலிஸ் மா அதிபராக அவர் நியமிக்கப்பட்டுள்ளார்.
சி.ஐ.டி. யின் புதிய பொறுப்பதிகாரியாக பிரதிப் பொலிஸ்மா அதிபர் எஸ்.பி. ரணசிங்க நியமிக்கப்பட்டுள்ளார்.
No comments:
Post a Comment