கொரோனா தொற்றுக்குள்ளானதான இனங்காணப்பட்டவர்களுடன் நேரடியான முதற்தொடர்பைக் கொண்டவர்கள் இன்று முதல் அவர்தம் வீடுகளிலேயே சுயதனிமைப்படுத்தலுக்குட்பட வேண்டும் என கொவிட்-19 தடுப்பு தேசிய செயலணியின் தலைவரும் இராணுவத் தளபதியுமான லெப்டினற் ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
இனிமேல் இத்தகையவர்கள் தனிமைப்படுத்தல் நிலையங்களுக்கு அனுப்பிவைக்கப்படமாட்டார்கள் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இதேவேளை இன்று (26) இதுவரை 280 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
தனிமைப்படுத்தல் நிலையங்களில் இருந்த 15 பேரும் கொரோனா நோயாளர்களுடன் நெருங்கிய தொடர்பில் இருந்த 265 பேருக்கும் தொற்று உறுதிப்படுப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment