Friday, October 23, 2020

தீர்க்கமான கட்டத்தில் இலங்கையில் கொரோனா பரவல் நிலைமை

 


இன்று வெள்ளிக்கிழமை மாத்திரம்   இதுவரையில் 866 கொரோனா தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ள நிலையில் இலங்கை தீர்க்கமான கட்டத்தில் உள்ளதாக சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது. ஆனாலும் நிலைமை இன்னமும் கட்டுப்பாட்டின் கீழ் உள்ளது என அமைச்சு மேலும் தெரிவித்துள்ளது. 





கொரோனா வைரஸ் பரவல் இலங்கையில் பதிவுசெய்யப்பட்ட ஜனவரி மாதம் முதலான காலப்பகுதியில் ஒரு நாளில் பதிவுசெய்யப்பட்ட அதிக எண்ணிக்கையான கொரோனா தொற்றாளர்கள் இன்று வெள்ளிக்கிழமையே பதிவானமை குறிப்பிடத்தக்கது. 

கடந்த சில நாட்களாக  தினந்தோறும் இனங்காணப்படும் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை சடுதியாக அதிகரித்துவருகின்ற நிலையில் தற்போது நிலைமை தீர்க்கமான கட்டத்தில் உள்ளதென்பதை பொதுமக்கள் விளங்கிக்கொள்ள வேண்டும் என பொதுச் சுகாதார சேவைகளின் பிரதி பணிப்பாளர் நாயகம் டொக்டர் ஹேமந்த ஹேரத் தெரிவித்தார். 


இலங்கையில் COVID-19 தொற்றாளர்களின் எண்ணிக்கை 7,000 தை தாண்டியுள்ளது-(7,153) வைத்தியசாலைகளில் சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 3,495 ஆக அமைந்துள்ளது. 

நாட்டின் நிலைமை தீர்க்கரமான கட்டத்தில் இருந்தாலும் இன்னமும்நிலைமை முற்றாக கட்டுப்பாட்டை மீறிச் செல்லவில்லை என அவர் மேலும் தெரிவித்தார் 

பொதுமக்கள் தமது முழுமையான ஒத்துழைப்பை வழங்க மறுத்தால் நிலைமை கட்டுக்கடங்காது செல்வதற்கு வாய்ப்பிருப்பதாக அவர் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார். 

அதிகாரிகளால் விடுக்கப்பட்ட அனைத்து வழிகாட்டல்களையும் பின்பற்றுவதை பொதுமக்கள் உறுதிசெய்யவேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டார் .

மக்கள் தமது நடமாட்டத்தைக் குறைத்துக்கொள்ளவேண்டும் ஏதேனும் அத்தியாவசியத்தேவையைத் தவிர்த்து மக்கள்  வீட்டில் இருந்து வெளியே செல்வதைத் தவிர்த்துக்கொள்ளவேண்டும் என்றும் அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார். 

கொழும்பின் பல பகுதிகள் உட்பட இதுவரை 49 பொலிஸ் பிரிவுகளில் தனிமைப்படுத்தல் ஊரடங்குச் சட்டம் அமுல் செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்கத்கது. 


No comments:

Post a Comment