Wednesday, October 28, 2020

இலங்கையில் பொம்பியோவின் எச்சரிக்கையும் சீனத்தூதரகத்தின் நகைச்சுவைப் பதிவும் !

 


இலங்கைக்கு நேற்றைய தினம் வருகைதந்த அமெரிக்க இராஜாங்கச் செயலாளர் மைக் பொம்பியோ இன்றுகாலை வெளிவிவகார அமைச்சர் டினேஸ் குணவர்த்தனவை சந்தித்த பின்னர் நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பின்போது,

"A strong sovereign Sri Lanka is a powerful strategic partner for the US in the world stage and can be beacon for a free and open Indo-Pacific. Adds that China is a predator and the US comes as a friend and partner."

 " இலங்கை உலக அரங்கில் அமெரிக்காவின் வலுவான கேந்திர முக்கியமிக்க பங்காளர். திறந்ததும் சுதந்திரமுமான இந்து சமுத்திரப் பிராந்தியத்தின் கலங்கரை விளக்கமாக திகழ்கின்றது. சீனா சூறையாடுபவன் . அமெரிக்கா நண்பனாகவும் பங்காளராகவும்  திகழ்கின்றது" என்று தெரிவித்திருந்தார். 

predator என்பதற்கு பொருள் சூறையாடுபவன் என்றோ பிறவிலங்குகளை வேட்டையாடிக் கொன்று தின்னும் விலங்கு என்று பொருள்படும்  இதற்கு சீனத்தூதரகம் கடுமையான பொருள் பொதிந்த நகைச் சுவைப் பதிவை அதன் டுவிட்டர் தளத்தில் வெளியிட்டிருந்தது



"மன்னிக்கவும் இராஜாங்க அமைச்சர் பொம்பியோ. நாம் இலங்கைக்கும் சீனாவிற்கும் இடையிலான நட்புறவையும் ஒத்துழைப்பையும் வலுப்படுத்துவதில் பிஸியாக இருக்கின்றோம். உங்களது ஏலியன் எதிர் பிறிடேட்டர் விளையாட்டுக்கான அழைப்பில் எமக்கு அக்கறையில்லை.  என்றும் போல அமெரிக்கா இரட்டைப் பாத்திரத்தை ஒரே நேரத்திலேயே விளையாட முடியும்" என்று சீனத்தூதரகத்தின் டுவிட்டர் தளத்தில் பதிவிடப்பட்டுள்ளது.  


பின்னணிக் குறிப்பு

ஹொலிவுட் சுப்பர்ஸ்டார் ஆர்னோல்ட் ஸ்வாஸ்னேகர் நடித்த  Predator என்ற படம் 1987ம் ஆண்டில் வெளியாகிருந்தது. அதில் கண்ணுக்குப் புலப்படாது மனிதர்களை வேட்டையாடி கொடூரமாகக் கொல்லும்  நவீன தொழில்நுட்பத்துடன் இரண்டறக்கலந்த விலங்கை ஆர்னோல்ட் கொன்றொழிப்தே மையக்கதை .

 அதேபோன்று 2004ம் ஆண்டில் வெளியான Aliens Vs Predator விஞ்ஞான புனைக்கதை திகில் திரைப்படத்திலும் இதேவிதமான கதைக்கருவே இருந்தது. அதன் இரண்டாம் பாகம் 2007ல் வெளியாகியிருந்தது. Aliens Vs Predator என்ற பெயரிலான வீடியோ கேம்களின் மூன்று பாகங்கள் ஏற்கனவே வெளியாகியுள்ளமை குறிப்பிடத்கத்கது. 

No comments:

Post a Comment