Thursday, October 22, 2020

இலங்கையில் கொரோனா வைரஸ் சமூகப்பரவல் ஆகிவிட்டதா?




இலங்கையின் பல்வேறு பகுதிகளில் இருந்து கொரோனா தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளதாக கடந்த சில நாட்களாக அறிவிப்புக்கள் வெளியாகிவரும் நிலையில் நாட்டில் சமூகப்பரவல் ஏற்பட்டுவிட்டதா ? என்ற கேள்வி பல்வேறு தரப்பினர் மத்தியிலும் எழுந்துள்ளது. 

மட்டக்குளி, முகத்துவாரம், புளூமென்டல், கிரேண்ட்பாஸ் மற்றும் வெல்லம்பிட்டிய ஆகிய பகுதிகளுக்கு உடன் அமுலுக்கு வரும் வகையில் தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்படுவதாக கொவிட் -19 தடுப்பு செயலணியின் தலைவரான இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் ஷவேந்திர சில்வா இன்று காலை அறிவித்திருந்தார். 

 மினுவங்கொடையில் ஆரம்பித்து கம்பஹா முழுதும் விஸ்தரித்து கொழும்பில் மக்கள் செறிவுமிக்க பகுதிகளில் ஊரடங்கு அமுலாகிவிட்டது. தற்போது களுத்துறை தனிபமாவட்டத்தின் பல பகுதிகளும் தனிமைப்படுத்தலுக்கு உட்பட்டுள்ளதாக அறிவித்தல் வெளியாகியுள்ளது. இதனைத்தவிர நாட்டின் பலபகுதிகளில் இருந்தும் கொரோனா தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுவருகின்றனர். இலங்கையின் பிரதம  தொற்றநோயியல் வைத்தியர் சுகத் சமரவீரவின் கருத்துப்படி ஏற்கனவே 13 மாவட்டங்களில் கொவிட்-19 பரவிவிட்டது.  எஞ்சிய மாவட்டங்களிலும் வைரஸ் பரவலுக்கான அதிக வாய்ப்புக்கள் உள்ளன அவர் தெரிவித்திருக்கின்றார். 

பல்வேறு பகுதிகளில் இருந்து  புதிய கொரோனா தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ள போதிலும் இன்னமும்  நாட்டில் கொரோனா சமூகப்பரவலாக மாறவில்லை என சுகாதார அமைச்சர் பவித்திரா வன்னியாராச்சி  தெரிவித்துவருகின்றமை தொடர்பாக எதிர்கட்சிகளும் ஊடகவியலாளர்களும் சமூகவியலாளர்களும் தமது கருத்துக்களை தெரிவித்துவருகின்றனர். 

இந்த நிலையில் இது சமூகத் தொற்றாக என்று அறிந்துகொள்வதற்காக சமுதாய மருத்துவ விசேட நிபுணர் முரளி வல்லிபுரநாதனிடம் வினவியபோது அவர் அளித்த பதில் 

"பிசிஆர் பரிசோதனையின் போது இனங்காணப்படும் கொரோனா தொற்றாளர்களை எந்தவொரு கொரோனா கொத்தணியோடேனும் தொடர்புபடுத்தக்கூடியதாக இருக்கும் வரை அதனை சமூகப்பரவல் என்று கூறமுடியாது. மாறாக எழுந்தமனமாக செய்யப்படும் பரிசோதனைகளின் போது கொவிட்-19 தொற்று உறுதிசெய்யப்படுபவர்களோடு பழகியவர்கள் தொடர்பில் இருந்தவர்களிடமும் நடத்தப்படும் சோதனைகளின் போது அவர்களை எந்தவொரு கொரோனா கொத்தணியொடும் தொடர்புபடுத்த முடியாவிடின் அதனை சமூகப்பரவல் என்று கூறமுடியும்."

'இலங்கையில் அடையாளப்படுத்தப்பட்ட கொரோனா கொத்தணியைத் தாண்டி நாட்டின் பல பகுதிகளிலும் எழுந்தமனமாக சமூகப்பரவலாக கொரோனா  பரவிவிடும் இடத்தை அதனால் நோய்வாய்படுபவர்களை அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்படவேண்டிய நிலை இருந்தால் அதனைச் சமாளிப்படுத்து சுகாதாரத்துறைக்கு முடியாது . இந்நிலையில் வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்தும் உபாயமே வெற்றியளிக்கக்கூடியது' என அவர்  சமுதாய மருத்துவ விசேட மருத்துவர் முரளி வல்லிபுரநாதன் மேலும் தெரிவித்தார். 



சில தினங்களுக்கு முன்னர் சமுதாய மருத்துவ விசேட நிபுணர் டொக்டர் முரளி வல்லிபுரநாதன் குளோப்  தமிழுக்கு வழங்கிய விரிவான நேர்காணல் இதோ






No comments:

Post a Comment