மீன்களை சமைத்து உண்டாலும் கூட உண்பதன் மூலம் கொரோனா வைரஸ் தொற்று பரவுவதாக, சமூகத்தில் பரவியுள்ள வதந்திகளை நம்ப வேண்டாம் என சுகாதார அமைச்சு மக்களை கேட்டுக்கொண்டுள்ளது.
அவ்வாறான தகவலை விஞ்ஞானபூர்வமாக உறுதிப்படுத்துவதற்கான எவ்வித ஆதாரமும் இல்லை சுகாதார அமைச்சு அறிக்கையூடாக தெரிவித்துள்ளது.
எனினும், மீனை சமைக்கும் போதும் களஞ்சியப்படுத்தும் போதும் முகத்தை தொடுவதை தவிர்க்குமாறு அமைச்சு அறிவுறுத்தியுள்ளது.
கொரோனா வைரஸ், மீனின் எப்பாகத்திலும் இருக்கலாம் என்ற காரணத்தினால் இந்த அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது.
இதன் பின்னர் பயன்படுத்திய பாத்திரங்கள் மற்றும் கைகளை நன்றாக கழுவ வேண்டும் எனவும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.
எவ்வித காரணமுமின்றி மீன் விற்பனை நிலையத்தை மூடுவதை தவிர்க்குமாறும் சுகாதார அமைச்சு தனது அறிக்கையூடாக குறிப்பிட்டுள்ளது.
சமூக இடைவௌியை பேணுதல்இ கைகளை கழுவுதல் முகக்கவசம் அணிதல் உள்ளிட்ட சுகாதார நடைமுறைகளுடன் வர்த்தக நிலையங்களை நடாத்திச் செல்ல முடியும் எனவும் சுகாதார அமைச்சு மேலும் தெரிவித்துள்ளது.
No comments:
Post a Comment