Thursday, November 12, 2015

நீதித்துறை மீது எவ்வித நம்பிக்கையும் கிடையாது - பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா*மஹிந்தவின் ஆட்களே நீதித்துறையில் அதிகமாக உள்ளனர்.
*இனவழிப்பு செய்வதாக இருந்தால் சரணடைந்த 12000 புலிகளையும் எளிதாக அழித்திருப்போம்
*குற்றவாளிகள் இருப்பார்களேயானால் அவர்கள் நிச்சயமாக தண்டிக்கப்படவேண்டும். 


நேர்காணல் அருண் ஆரோக்கியநாதர்

நாட்டின் நீதித்துறைமீது எந்தவிதமான நம்பிக்கையும் கிடையாது.  மஹிந்த ராஜபக்ஸவினால் நியமிக்கப்பட்டவர்களில் அனேகர் இன்னமும் நீதித்துறையிலுள்ள முக்கிய பொறுப்புக்களில் இருக்கின்ற காரணத்தினாலேயே முக்கிய வழக்குகளில் தாமதங்களும் இழுத்தடிப்புப்களும் காணப்படுகின்றன என  முன்னாள் இராணுவத்தளபதியும் ஜனநாயகக் கட்சியின் தலைவருமான பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவிக்கின்றார். 


சுடர் ஒளிக்கு வழங்கிய பிரத்தியேக நேர்காணலின் போதே அவர் இந்தக்கருத்துக்களை  வெளியிட்டார்.

நாட்டில் ஜனவரி-8 ஆட்சிமாற்றத்தினை ஏற்படுத்துவதில் நீங்களும் முக்கிய வகிபாகத்தை ஆற்றியிருந்தீர்கள். இந்த நிலையில் தற்போதை அரசாங்கத்தின் செயற்பாடுகள் தொடர்பில் நீங்கள் திருப்திகொண்டிருக்கின்றீர்களா?

இந்த அரசாங்கத்தின் செயற்பாடுகள் தொடர்பில் நாங்கள் நூற்றுக்கு நூறு வீதம் திருப்தி கொள்ள முடியாது. ஜனாதிபதியும் பிரதமரும் மாற்றத்தை ஏற்படுத்த முனைகின்றனர். முன்னர் ஆட்சியில் இருந்தவர்களுன் ஒப்பிடும் பொழுது தற்போதைய ஜனாதிபதியும் பிரதமரும் மிகவும் வித்தியாசமானவர்கள். ஆனால் பிரச்சனை எங்கிருக்கின்றதென்றால் அவர்களது கட்சியிலுள்ள ஏனையவர்களுடன் இவர்கள் பணியாற்ற வேண்டியுள்ளது.இந்தக்கட்சிகளிலுள்ள சில அதிகாரமிக்கவர்கள் ஊழல் பேர்வழிகளாக இருக்கின்றனர். அவர்கள் கௌவரத்திற்கு பாத்திரமானவர்களல்லர். அவர்கள் நாட்டிற்காக  சிந்திப்பவர்களல்லர். நாட்டின் அபிவிருத்திக்காகவோ மக்களின் நலன்களுக்காகவோ தம்மை அர்ப்பணிப்பதற்கு அவர்கள் தயாராகவில்லை. நிச்சயமாக சில பின்னடைவுகள் இருக்கின்றன.

நீங்கள் ஊழல் மோசடிகளில் ஈடுபட்டதாகக் கூறி  இரண்டரை ஆண்டுகாலம் சிறையில் அடைக்கப்பட்டிருந்தீர்கள். ஜனவரிடி-8 ஆட்சிமாற்றத்தின் முக்கிய வாக்குறுதிகளிலொன்றாக தேர்தல் பிரசார சுலோகமாக ஊழல் மோசடிகளுக்கு எதிரான நடவடிக்கை கூறப்பட்டிருந்தது. முன்னாள் ஆட்சியாளர்களுக்கு எதிராக கடுமையான ஊழல் மோசடிக்குற்றச்சாட்டுக்கள் உள்ளன. விசாரணைகள் முன்னெடுக்கப்படுகின்றனவே தவிர காத்திரமான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படாதிருப்பது பற்றி? 

ராஜபக்ஷவினால் நியமிக்கப்பட்ட சட்டவிரோதமான கங்காரு  நீதிமன்றத்தின் மூலமாக கனிஷ்ட அதிகாரிகள் போலிக் குற்றச்சாட்டுக்களின் அடிப்படையிலேயே என்னைச் சிறையடைத்திருந்தார்கள். கனிஷ்ட அதிகாரிகளை நீதிபதிகளாகக் உள்ளடக்கியதாக இராணுவ நீதிமன்றங்களை அமைக்க முடியாது.கனிஷ்ட அதிகாரிகளை நீதிபதிகளாகக் உள்ளடக்கியதாக இராணுவ நீதிமன்றங்களை அமைக்க முடியாது.சில கனிஷ்ட அதிகாரிகளுக்கு லஞ்சத்தைக் கொடுத்து போலிக்குற்றச்சாட்டுக்களின் அடிப்படையில் என்னைக் குற்றவாளியாக அறிவித்தனர். விசாரணைகளின் போது நான் எந்த ஏமாற்று நடவடிக்கையிலும் ஈடுபடவில்லை என்பதையும் ஊழல் மோசடியில் சம்பந்தப்படவில்லை என்பதையும் அவர்கள் ஏற்றுக்கொண்டனர். அவர்கள் என்மீது சுமத்திய குற்றம் என்னவென்றால் என்னுடைய உறவினரொருவர் ஏதோ டென்டருக்கு விண்ணப்பித்திருந்ததாகவும் நான்டென்டர் சபையில் அங்கம் வகித்தேன் என்பதேயாகும்.இது பற்றி எனக்கு எதுவுமே தெரிந்திருக்கவில்லை. அந்த சபையில் அங்கம்வகித்தது குற்றம் என்று அவர்கள் கூறினர். அதற்காகவே நான் சிறையில் தள்ளப்பட்டேன். உங்களுடைய கேள்ளியின் மற்றப்பகுதிக்கு விடையளிப்பதானால் நிச்சயமாக இந்த நபர்கள் சிறைக்கு செல்லவேண்டியவர்களாவர்.உங்களுடைய கேள்ளியின் மற்றப்பகுதிக்கு விடையளிப்பதானால் நிச்சயமாக இந்த நபர்கள் சிறைக்கு செல்லவேண்டியவர்களாவர்.அடிப்படையில் இந்த நாட்டின் நீதித்துறைமீது எனக்கு எந்தவிதமான நம்பிக்கையும் கிடையாது.நீதிமன்ற நடவடிக்கைகளில் தொடர்புபட்டுள்ளவர்களில் அனேகமானவர்கள் இன்னமும் மஹிந்த ராஜபக்ஸவின் ஆட்களாகவே உள்ளனர்.அவர்கள் நல்லமனிதர்கள் கிடையாது. அவர்களிடத்தில் உண்மையில்லை. அந்த இடங்களில் அமர்வதற்கு அவர்கள் தகுதியானவர்கள் கிடையாது. இதன்காரணமாகவே மக்கள் எதிர்பார்க்கின்ற விடயங்கள் நடைபெறாதுள்ளது.  தேவையின்றி வழக்குகள் இழுபட்டுச் செல்கின்றன. தாமதிப்புக்கள் இடம்பெறுகின்றன. சிலர் கைதுசெய்யப்படவேண்டியவர்களாக உள்ளபோதும் தேவையற்றவை இடம்பெறுகின்றன.
நீதிமன்ற நடவடிக்கைகள் இந்த நாட்டிலே இன்னமும் முறையாக அமையவில்லை. அது மாற்றமடையவேண்டும்.சட்டமா அதிபர் திணைக்களம்  நீதிமன்றங்களில் நீதிபதிகளாக  நல்ல மனிதர்கள் உரிய பதவிகளுக்கு நியமிக்கப்படவேண்டும்.எவ்வித அரசியல் செல்வாக்கும் இன்றி உரிய முறையில் அவர்கள் அந்த இடங்களுக்கு நியமிக்கப்படவேண்டும். தற்போது மிக அதிகமான அரசியல் அழுத்தங்கள் பிரயோகிக்கப்படுகின்றன. பிரதம நீதியரசராக மொஹான் பீரிஸை எங்ஙனம் மஹிந்த ராஜபக்ஷ நியமித்திருந்தார் என்பது உங்களுக்குத் தெரியும் .இது ஒரு உதாரணம் மட்டுமே. இதேபோன்ற பல விடயங்கள் பல இடங்களிலும் இடம்பெற்றுள்ளன.


யுத்தத்தை முடிவிற்கு கொண்டுவந்த இராணுவத்தளபதி என்ற வகையில் போர் தொடர்பான உங்கள் நிலைப்பாட்டை சுருக்கமாக குறிப்பிடுங்கள்?  போர் தொடர்பான பல்வேறு குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்படுகின்ற நிலையில் இது தொடர்பாக என்ன நடவடிக்கை எடுக்கப்படவேண்டும்?.  தமிழ் மக்களுக்கு எதிராக இடம்பெற்றது ஓர் இனவழிப்பு  நடவடிக்கையே என்ற கருத்துநிலைப்பாடுகளும்  வெளிப்படுத்தப்படுகின்றமை குறித்து எப்படிப்பார்கின்றீர்கள்? 


இனவழிப்பு என்றெல்லாம் கூறுவது பக்கச்சார்பான குற்றச்சாட்டுக்களாகும்.இனவழிப்பு  இடம்பெறவில்லை.நான் பன்னிரெண்டாயிரம் விடுதலைப்புலிகள் இயக்க உறுப்பினர்களைக் கைதுசெய்திருந்தேன்.அவர்கள் இன்றும் கூட உயிருடன் இருக்கின்றனர்.அவர்கள் புனர்வாழ்வளிக்கப்பட்டுள்ளனர். இனவழிப்பு என்றால் நாம் அவர்களை கைதுசெய்தவுடன் எளிதாக அழித்தொழித்திருக்கமுடியும்.கைதுசெய்யப்பட்டவர்களை நன்கு பராமரித்து புனர்வாழ்வளித்து நாம் விடுதலைசெய்திருக்கின்றோம். அப்படியிருக்கும் போது தமிழர்களை இனவழிப்புச் செய்தோம் என எப்படியாராலும் கூறமுடியும்.


போரிரை நடத்தியதற்கான அனைத்துப்பொறுப்புக்களையும் நான் ஏற்கின்றேன்.நான் யுத்தத்தை நெறிப்படுத்தியிருந்தேன்.திட்டமிட்டிருந்தேன். உத்திகளை வகுத்திருந்தேன்.உத்தரவுகளைப் பிறப்பித்திருந்தேன். உத்திகளைமாற்றியமைத்திருந்தேன். இதற்கான கௌரவத்தை வேறெவரும் உரிமை கோரமுடியாது. என்னுடையதே  திட்டங்கள், என்னுடையதே புதிய உத்திகள், நானே தளபதிகளைத் தெரிவுசெய்திருந்தேன்.இதனாலேயே நாம் போரில் வெற்றிபெற்றோம். இந்த யுத்தத்தில் தனிப்பட்ட சம்பவங்கள் இடம்பெற்றிருக்குமேயானால், 200,000 இராணுவத்தில் எழேட்டுப்பேர் ஏதேனும் குற்றங்களை இழைத்திருப்பார்களேயானால் அதற்கான பொறுப்பை இராணுவம் ஏற்கமாட்டாது.அதற்கான பொறுப்பை அவர்களே ஏற்கவேண்டும். அவர்களை எவராலும் தண்டிக்கமுடியும்.
அது இராணுவத்தின் பிரச்சனையல்ல. அவர்களைப்பற்றி நாம் அலட்டிக்கொள்ளத் தேவையில்லை. என்னுடைய உத்தரவை மீறி யாரேனும் மனித உரிமைகளை மீறிச்செயற்பட்டிருந்தால் குற்றங்களை இழைத்திருந்தால் அதற்கு அவர்களே பொறுப்பேற்க வேண்டும்.அவர்கள் நிச்சயமாக தண்டிக்கப்படவேண்டியவர்கள்.  நீங்கள் யுத்தத்தின் இறுதிக்காலப்பகுதியில் இலங்கையில் இருக்கவில்லை. யுத்தம் தொடர்பாக தெரிவிக்கப்படும் குற்றசசாட்டுக்களில் கணிசமானவை இறுதிநாட்களிலேயே இடம்பெற்றதாக கூறப்படுகின்றது.அப்படியானால் ஒட்டுமொத்த யுத்தத்திற்கான பொறுப்பை நீங்கள் எப்படி எடுக்கமுடியும்? 

நான் யுத்தின் இறுதிப்பகுதியில் ஆறுநாட்கள் நாட்டிற்கு வெளியே இருந்தேன். வெள்ளைக்குடி குற்றச்சாட்டு உட்பட சில குற்றச்சாட்டுக்கள் அந்த ஆறுநாட்களுக்குள்ளாகவே சுமத்தப்பட்டுள்ளன. இதற்கு நான் பொறுப்பேற்கமாட்டேன். ஆனால் அந்த ஆறுநாட்களும் நானே யுத்தத்தை நடத்தியிருந்தேன். நான் நாட்டிற்கு வெளியே சென்றிருந்தபோது என்னுடைய செயற்பாட்டு அதிகாரிகளையும் தொடர்பு சாதனங்களையும் வரைபடங்களையும் தேவையான அனைத்தையும் நான் கொண்டுசென்றிருந்தேன்.இதன் மூலமாக சீனாவில் இருந்துகொண்டே யுத்த நடவடிக்கைக்கு நான் தலைமைதாங்கியிருந்தேன்.எப்படி கொழும்பிலிருந்து செயற்பட்டேனோ அப்படியே சீனாவிலிருந்தும் செயற்பட்டிருந்தேன்.
என்னுடைய களமுனைத்தளபதிகளுடன் நாளொன்றுக்கு மூன்று தடவை தொலைபேசியூடாக கதைத்திருந்தேன் அவர்களுடன் உரையாடி அவர்களுக்கு உத்தரவுகளைப் பிறப்பித்தேன். தேவையான அனைத்து அறிவுறுத்தல்களையும் வழங்கினேன். நாட்டில் இருக்கவில்லை என்பதனால் எவ்வித பிரச்சனைகளும் இருக்கவில்லை. இராணுவத்தளபதியென்ற வகையில் நான் யுத்தத்திற்கு தலைமைதாங்கியிருந்தேன்.


அப்படியானால் சரணடைந்த விடயம் தொடர்பாக உங்களுக்கு களமுனையில் இருந்தவர்கள் அறிவித்திருந்தார்களா? 

வெள்ளைக் கொடி விடயம் பற்றி எனக்கு ஒருபோதும் அறிவிக்கப்படவில்லை. ஆனால் சரணடைவது பற்றி நான் எனது உத்தரவுகளை பிறப்பித்திருந்தேன்.இதன்காரணமாகத்தான் 12000 விடுதலைப்புலிகள் இயக்க உறுப்பினர்கள் சரணடைந்தபோது அவர்கள் அனைவரும் பொறுப்பேற்கப்பட்டு பராமரிக்கப்பட்டனர்.சரணடைகின்றவர்களை ஏற்றுக்கொண்டு பாதுகாப்பு வழங்கி மனிதர்களாக நடத்துமாறு நான் உத்தரவுகளை வழங்கியிருந்தேன்.இதனால் தான் ஏப்ரல் 19மதிகதி 6000 விடுதலைப்புலிகள் இயக்க 'பயங்கரவாதிகளும் இன்னுமொரு 6000பேர் மே மாதம் 14ம்திகதியும்  என மொத்தமாக சரணைந்த 12000 பேரும் பராமரிக்கப்பட்டனர். வெள்ளைக் கொடி சம்பவம் தொடர்பாக பல கலந்துரையாடல்கள் இடம்பெற்றதாக கூறப்படுகின்றது. ஐசிஆர்சி (செஞ்சிலுவைச் சங்கம்)வெளிநாட்டு ஊடகவியலாளர்கள் என கலந்துரையாடல் இடம்பெற்றதாக கூறப்படுகின்றது. இந்த விடயத்தை கையாண்டவர்கள் அதற்காக பொறுப்பை ஏற்கவேண்டும்.அவற்றிற்கான பொறுப்பை என்னால் எடுக்கமுடியாது.

உங்களுடைய உத்தரவுகளை மீறி வேறுதரப்பினர் யுத்தம் தொடர்பில் தலையிட்டிருந்தனரா?
யுத்தத்தை நடத்திய விடயத்தில் யாரும் தலையிட்டிருக்கவில்லை.ஆனால் எனக்கு தெரியப்படுத்தாது யாரேனும் வித்தியாசமான அறிவுறுத்தல்களை தனிப்பட்டவர்கள் எவருக்கேனும் அவ்வப்போது வழங்கியிருக்குமிடத்திலும் அந்த தவறான அறிவுறுத்தல்களின் படி அவர்கள் செயற்பட்டிருக்குமிடத்திலும் அவர்களே அந்தப்பொறுப்பை ஏற்றாகவேண்டும்.

2009ம் ஆண்டு இந்திய பொதுத் தேர்தல் முடிவுகள் வெளியாக இருந்தநிலையில் யுத்தத்தை விரைவாக முடிவிற்கு கொண்டுவருமாறு பணிக்கப்பட்டிருந்ததாக அண்மையில் சில தகவல்கள் வெளியாகியிருந்தன. நீங்களும் அந்தக்கலந்துரையாடல்களில் பங்கெடுத்திருந்தீர்களா? 

அப்படியொன்றும் இடம்பெறவில்லை.வழமையான எப்படி நான் யுத்தத்தை முன்னெடுத்தேனோ அதன் படியே நான் செயற்பட்டிருந்தேன்.

அப்படியானால் நீங்கள் யுத்ததை விரைவாக முடிக்கவேண்டும் என்று எந்தவொரு சமயத்திலும் செயற்படவல்லையா? 

இந்தியத் தேர்தலின் பொருட்டன்றி 2008ம் ஆண்டு ஜனவரி மாதம் முதற்கொண்டே மஹிந்த ராஜபக்ஸ யுத்தத்தை விரைவாக முடிவிற்கு கொண்டுவரவேண்டும் என்பதில் பெரும் அவசரம் காண்பித்திருந்தார். அவர் பெரிதும் பொறுமையிழந்தவராக காணப்பபட்டார். நீண்டகால யுத்தத்திற்கு அவர் தயாராக இருக்கவில்லை.அது அவருக்கு பெரும் அழுத்தமாக பாரமாக அமைந்திருந்தது. இதனை விரைவாக முடிக்க வேண்டும் . இப்படியே போய்க்கொண்டு இருக்க முடியாது என எந்த நேரத்திலும் என்மீது பெரும் அழுத்தங்களைப் பிரயோகித்தார். அவர் நிச்சயமற்ற நிலையில் நிழலாடிக்கொண்டிருந்தார். ஆனால் அவர்களிற்கு நான் செவிமடுக்கவில்லை. இராணுவரீதியாக எப்படி யுத்தத்தை நடத்தவேண்டுமோ அப்படியே நான் யுத்தத்தை நடத்தியிருந்தேன்.


ஜனாதிபதி மாளிகையில ஒரு பகுங்குகுழி இருக்கின்ற விடயம் தொடர்பில் நீங்கள் அறிந்திருக்கவில்லை என்று  அண்மையில் நீங்கள் கூறியிருந்தீர்கள்.யுத்தகாலத்தில்
 இந்தப்பதுக்குழி பாதுகாப்புக்காரணத்திற்காக  நிர்மாணிக்கப்பட்டதாக கூறப்படுகின்றதே?

அது ஒரு பதுங்கு குழியல்ல மாறாக நிலத்தின் கீழ் அமைக்கப்பட்ட ஒரு மாளிகையாகும். கடாபி சதாம் ஹுசைன் போன்றவர்கள் செய்ததையே அவர் பின்பற்றினார். விடுதலைப்புலிகளின் விமானத்தாக்குதல்களுக்கு  அதுபோன்று நிலத்தின்க கீழ் நான்கு அடுக்கு மாடிகள் அவசியமல்ல. நான் இராணுவத்தலைமையகத்திலேயே இருந்தேன். அது ஜனாதிபதி மாளிகையில் இருந்த 200மீற்றர் தூரத்திலேயே இருந்தது.அது அறுபது ஆண்டுகள் பழமையான வீடாகும்.
நான் மூன்று அறைகளைக்கொண்ட ஒரு கட்டிடத்திலேயே இருந்தேன். நான் என்னுடைய படுக்கை அறைக்கு மேலாக ஒரு கொங்கீரிட் தட்டைமாத்திரமே அமைத்துக்கொண்டேன். இதற்கு இராணுவத்தினருக்கு ஐம்பதாயிரம் ரூபாய்கள் மாத்திரமே செலவானது.அந்த விடுதலைப்புலிகளது விமானம் தொடர்பாக அவ்வளவு பயம் உங்களுக்கு இருந்திருக்குமானால் அதற்காக 33 மில்லியன் அமெரிக்க டொலர்களை (அண்ணளவாக 470 கோடி ரூபா)செலவிடுவதாக இருந்தால் நாட்டின் தலைவராக இருப்பதற்கு நீங்கள் அருகதையற்றவர்.கிளிநொச்சியில் இருந்த வரும் அந்த விளையாட்டுப்பொருள் போன்ற விமானத்தினைக் கண்டு அவ்வளவு பயந்திருந்தால்  அதற்காக நான்கு மாடிக்கட்டிடத்தை நிலத்தின் கீழ் நிர்மாணித்ததாக கூறுவார்களேயானால் அவர்களை நல்ல தலைவர்களாக கருதமுடியாது.  அவர்களை முதற்தரக் கோழைகளாகவே நோக்கவேண்டும். 

ஜெனிவா தீர்மானத்தை நீங்கள் எவ்வாறு நோக்குகின்றீர்கள்? அரசாங்கம் உள்ளக பொறுப்புக்கூறல் பொறிமுறையை நிறுவவுள்ளதாக கூறுவது தொடர்பில் உங்கள் கருத்து என்ன? 

அரசாங்கம் ஓர் உள்ளகப் பொறிமுறைக்கு இணங்கியிருக்கின்றது.அரசாங்கம் ஓர் உள்ளகப் பொறிமுறைக்கு இணங்கியிருக்கின்றது அது சரியானது. ஏனென்றால் குற்றச்சாட்டுக்கள் உள்ளன.பலர் முறைப்பாடுகளைத் தெரிவித்துக்கொண்டிருக்கின்றார்கள். அவர்களிடத்தில் நியாயமாக நடந்துகொள்வதாக இருந்தால் நாம் நம்பகரமான விசாரணையை நடத்தியாகவேண்டும். அப்போதுதான் அவர்களுக்கு எந்த விதமான சந்தேகங்களும் இல்லாமல் போகும். அவர்களுக்கு  செவிசாய்த்தால் அனைவரும் மகிழ்ச்சிகொள்ளமுடியும்.வலுவான குற்றச்சாட்டுக்கள் இருந்தால் அதுபற்றி விசாரணை நடத்தவேண்டும். ஆனால் அப்பாவிகளை ஒன்றும் செய்யாதவர்களை தண்டிக்கமுடியாது. குற்றவாளிகள் இருப்பார்களேயானால் அவர்கள் நிச்சயமாக தண்டிக்கப்படவேண்டும். ஆனால் நியாயமான ஒருவர் தண்டிக்கப்படக்கூடாது. உள்ளகப் பொறிமுறை நல்லது.ஆனால் சர்வதேச சமூகத்தினரும் ஏனைய தரப்பினரும்  நடைபெறும் விடயங்கள் தொடர்பில் அறிந்திருப்பதற்காகவும் நம்பிக்கை வைப்பதற்காகவும்  சர்வதேச கண்காணிப்பாளர்களையும் ஆலோசகர்களையும் நியமிப்பதில் தப்பில்லை.

Monday, October 26, 2015

பொறுப்புக்கூறல் விடயத்தில் தென் ஆபிரிக்கா உறுதி -தென் ஆபிரிக்கத்தூதுவர் ஜெவ் டொயிட்ஜ் தெரிவிப்புபொறுப்புக்கூறல் விடயத்தில் தென் ஆபிரிக்கா உறுதியாகவுள்ளதாகவும் இலங்கை அரசாங்கத்துடனான பேச்சுவார்த்தைகளின் போது பொறுப்புக்கூறல் விடயத்தில் உறுதியான நிலைப்பாட்டைப் பேணிவருவதாகவும் இலங்கைகான தென் ஆபிரிக்கத்தூதுவர் ஜெவ் டொயிட்ஜ் தெரிவிக்கின்றார்.
 சுடர் ஒளிக்கு வழங்கிய பிரத்தியேக நேர்காணலின் போது அரசியல் கைதிகள் தொடர்பாக எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

ஜெனிவா தீர்மானத்திற்குப்பின்னர் உள்ளகப் பொறிமுறை முன்னெடுக்க எண்ணியுள்ளதாக கூறியுள்ள இலங்கை அரசாங்கம் இதற்காக தென் ஆபிரிக்காவில் கடைப்பிடிக்கப்பட்ட உண்மை நல்லிணக்க ஆணைக்குழுவை போன்றதொரு ஆணைக்குழுவை அமைக்கவுள்ளதாக  கூறியுள்ளது. இந்த முன்நகர்வில் தென் ஆபிரிக்காவின் வகிபாகம் என்ன? ஏற்கனவே இந்த அரசாங்கம் உங்களைத் தொடர்புகொண்டுள்ளதா? உண்மையில் என்ன நடைபெறுகின்றது? 
முதலில் நாம் ஒரு படி பின்னோக்கிப்பார்க்கவேண்டும். 2013ம்  ஆண்டில் பொது நலவாய நாடுகளின் தலைவர்கள் மாநாடு கொழும்பில் நடைபெற்றபோது எமது ஜனாதிபதி ஸுமாவிடம் உண்மை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவை அமைக்க உதவும் படி   ஜனாதிபதி ராஜபக்ஷ வேண்டுகோள் விடுத்திருந்தார்.எமது பணிகள் உண்மையிலேயே 2011ல் ஏற்கனவே ஆரம்பாகியிருந்தன. நாம் ஜனாதிபதி ராஜபக்ஸவின் அரசாங்கத்தோடு பேச்சுவார்த்தை நடத்திக்கொண்டிருந்தபோது நாம் தென் ஆபிரிக்காவின் அனுபவத்தைப் பகிர்ந்துகொள்வதற்கு விரும்பினோம்.ஏனெனில்  இலங்கையைப்  போன்று தென்  ஆபிரிக்காவும் பல வருடகால மோதல்களிலிருந்து வெளியே வந்திருந்தது. இலங்கையின் முப்பது ஆண்டுகால மோதல்களுடன் பார்க்கையில் எமது தென் ஆபிரிக்க போராட்டம் மிகவும் நீண்ட காலப்பரப்பைக் கொண்டது.எமது போராட்டத்தை நாம் 1912ல் ஆரம்பித்திருந்தோம். எமக்கு விடுதலையோ 1994ம் ஆண்டிலேயே கிடைத்தது.அதற்கு பல ஆண்டுகள் பல தசாப்தங்கள் எடுத்தன. தென் ஆபிரிக்காவிடமுள்ள தனித்துவமான அனுபவத்தை இலங்கையுடன் பகிர்ந்துகொள்ளவேண்டும் என நாம் விரும்பினோம்.இலங்கையுடன்  பகிர்ந்துகொள்ளக்கூடியதான ஒரு தனித்துவமான அனுபவம் தென் ஆபிரிக்காவிற்கு உள்ளதென நாம் உணர்ந்தோம். ஆனால் இலங்கை அரசாங்கம் நாம் உதவவேண்டும் என கோருமிடத்திலேயே நாம் எமது அனுபவத்தைப் பகிர்ந்துகொள்வோம் என எப்போதுமே கூறிவந்தோம். அந்த வகையில் 2013ல் பொதுநலவாய நாடுகளின் தலைவர்கள் கொழும்பிலே சந்தித்தபோது உண்மை நல்லிணக்க ஆணைக்குழுவை ஸ்தாபிப்பதற்கு தென் ஆபிரிக்க உதவி தேவைபபடுவதாக ஜனாதிபதி ராஜபக்ஸவிடமிருந்து தென் ஆபிரிக்க ஜனாதிபதி ஸுமாவிடம் வேண்டுகோள் விடுக்கப்பட்டது. 2014 மார்ச்சில் ஜெனிவாவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டதை நீங்கள் அறிவீர்கள்.அது இலங்கைக்கு தென் ஆபிரிக்கா எவ்வளவு சிறப்பாக உதவ முடியும் என்பது தொடர்பில் மேம்பட்ட புரிந்துணர்விற்கு வழிகோலியது. இவ்வருட ஜனவரி-8ல் அரசாங்க மாற்றமொன்று இடம்பெற்றதும் ஓகஸ்ற்-17ல் மீண்டும் அரசாங்க மாற்றமொன்று இடம்பெற்றதை நீங்கள் அறிவீர்கள். தற்போது ஜெனிவாவில் தீர்மானத்திற்கு இலங்கை அரசாங்கமும் இணை அனுசரணை வழங்கியுள்ளது.நாம் மனித உரிமைகள் பேரவையில் அறிக்கையொன்றை விடுத்திருந்தோம்.இதிலே இலங்கையில் இடம்பெற்ற பணிகளை ஏற்று அங்கீகரித்திருந்தோம்.இதன் போது இலங்கையில் தீர்வொன்றைக் காண்பதற்கு புலம்பெயர்ந்தவர்களும் முக்கிய பங்களிப்பை வழங்கவேண்டியவர்கள் என்பதை நாம் சுட்டிக்காட்டியிருந்தோம். உள்ளக பொறுப்புக்கூறல் முறைமையொன்றை ஸ்தாபிப்பதற்கு உதவுமாறு தென் ஆபிரிக்கத் தரப்பிரிவினரிடம் பிரதமர் தலைமையிலான புதிய அரசாங்கத்தினால் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது. இலங்கைக்கு உதவுமாறு விடுக்கப்பட்ட அழைப்பையிட்டு நாம் ஊக்கமடைந்துள்ளோம்.இலங்கை அதன் சொந்த பொறுப்புக்கூறல் முறைமையை தயாரிப்பதற்கான ஒரு சந்தர்ப்பம் இதுவாகும். அது தென் ஆபிரிக்காவைப் போன்று இருக்க வேண்டும் என்று அவசியமில்லை. ஆனால் தென் ஆபிரிக்காவின் அனுபவங்களில் இருந்து கற்றுக்கொள்ளமுடியும்.இலங்கைக்கு உதவுமாறு விடுக்கப்பட்ட அழைப்பையிட்டு நாம் ஊக்கமடைந்துள்ளோம்.இலங்கை அதன் சொந்த பொறுப்புக்கூறல் முறைமையை தயாரிப்பதற்கான ஒரு சந்தர்ப்பம் இதுவாகும். அது தென் ஆபிரிக்காவைப் போன்று இருக்க வேண்டும் என்று அவசியமில்லை. ஆனால் தென் ஆபிரிக்காவின் அனுபவங்களில் இருந்து கற்றுக்கொள்ளமுடியும். தென் ஆபிரிக்கா செய்ததனைததனையும் இங்கு நடைமுறைப்படுத்த வேண்டியதில்லை. தென் ஆபிரிக்காவில் உண்மை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு மூலமாக எடுத்துணர்ந்தப்பட்ட விடயமும் இலங்கையில் (அமைக்கப்படவுள்ள) உண்மை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவில் எடுத்துணர்த்தப்படவுள்ள விடயமும் மாறுபட்டதாகும். நர்ம் எம்மை வழிநடத்தும் பொறுப்பை அரசாங்கத்திடம் கொடுப்போம். அவர்கள் எம்மை வழிநடத்துவர். அவர்களுக்கு  என்ன தேவையாகவுள்ளதெனப் பார்ப்போம் எமது அனுபவங்கள் எப்படி  இலங்கைக்கு உதவமுடியும் என்பதையும் நாம் பார்ப்போம்.ஏன் தென் ஆபிரிக்கா அதன் அனுபவத்தைப் பகிர்ந்துகொள்ள விரும்புகின்றது? 

ஏனெனில் நாம் ஒரு கடினமான கடந்த காலத்திற்கூடாக வந்திருக்கின்றோம்.  அந்தக்கடந்த காலத்தில் நிறைய மோதல்கள் இடம்பெற்றுள்ளது.அதில் நிறைய பிரிவினைகள் காணப்பட்டன.அதில் நிறைய பிரிவினைகள் காணப்பட்டன. அந்தக்கடந்த காலத்தில் சில சமயங்கள் மதிக்கப்படவில்லை சில கலாச்சாரங்ளை அரசாங்கம் மதிக்கவில்லை. அந்தக்காலகட்டத்தில் அரசாங்கம் அதன் சொந்த சமயத்திற்கும். சொந்த கலாசாரத்திற்கும் தனது சொந்த மக்களுக்குமே மதிப்பளித்தது.உங்களையும் என்னையும் போன்ற நிறங்களைக் கொண்டோர் மதிக்கப்படவில்லை.நாம் தென் ஆபிரிக்கரவில் பிறந்திருந்த போதும் அப்போதைய அரசாங்கத்தினால் மதிக்கப்படவில்லை. நாம் மிகக்கொடூரமான முறைமைக்குள்ளாகவிருந்து வந்துள்ளோம். அந்த முறைமையில் பல மோதல்கள் இருந்தன. அன்றாட வாழ்வில் ஒவ்வொரு பகுதிகளையும் ஆளுகைசெய்வதாக  அமைந்த பல கடினமான சட்டங்களையும் கொண்டதாக அந்த முறைமை காணப்பட்டது.வெள்ளையராக இருக்கும் ஒரு நபர் செய்யக்கூடியவற்றை வேறுநிறத்தவர் செய்ய முடியாத நிலை காணப்பட்டது.  ஏனெனில் சட்டரீதியாக தடைபோடப்பட்டிருந்தது.சிறுவனாக இருந்த போது என்னால் வெள்ளையினத்தைச் சேர்ந்தவருடன் விளையாடமுடியாது.ஏனெனில் வெள்ளையரும் ஏனைய நிறத்தவரும் சேர்ந்திருக்கக்கூடாது என சட்டத்திலேயே கூறப்பட்டிருந்தது.அந்த வகையில் வழமைக்குமாறான ஒரு வாழ்ககையை நாம் வாழ்த்திருந்தோம். நாம் ஒரு நாடாகவோ ஒரு சமூகமாகவோ இருக்க வில்லை. நாம் பிளவுபட்டவர்களாக இருந்தோம்.எமது பாடசாலைகள் பிளவுபட்டிருந்தன.தேவாலங்கள் பிளவுபட்டிருந்தன .எமது வியாபாரத்தலங்கள் ,எமது விளையாட்டு ,எமது கலாசாரம் என பலதும் பிளவுபட்டிருந்தன.அந்தவகையில் அதுவொரு கொடூரமான முறைமையாக காணப்பட்டது.இதன்காரணமாக புரிந்துணர்வற்ற நிலைகாணப்பட்டது.நான் ஒரு கிறிஸ்தவான இருந்தால் என்னால் முஸ்லிமை புரிந்துகொள்ள முடியாத நிலை காணப்பட்டது.அதேபோன்று முஸ்லிமால் யூதர்களைப் புரிந்துகொள்ள முடியவில்லை. நான் ஒரு கிறிஸ்தவான இருந்தால் என்னால் முஸ்லிமை புரிந்துகொள்ள முடியாத நிலை காணப்பட்டது.அதேபோன்று முஸ்லிமால் யூதர்களைப் புரிந்துகொள்ள முடியவில்லை. யூதர்களால் இந்துக்களைப் புரிந்துகொள்ள முடியாது. இது தென் ஆபிரிக்காவில் மிகப்பெரும் பிரச்சனையாக உருவெத்திருந்தது.அந்த வகையில் எம்மிடம் பகிர்ந்துகொள்வதற்கான நிறையஅனுபவங்கள இருக்கின்றன.உண்மை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு விடயத்தில் மட்டுமன்றி அரசியல் பேச்சுவார்த்தைகள் எப்படி அரசியல் தீர்வைக் காண்பது, எமது அரசியலமைப்பு நெருக்கடியின் போது  தீர்வுகண்ட அனுபவம் ஒரு அரசியல்யாப்பை எவ்வாறு சமரசத்தினூடாக முன்கொண்டுசெல்தல், அரசியல் யாப்பை எழுது எப்படி என்ற அனுபவம் என நிறைய அனுபவங்களை பகிர்ந்துகொள்ள முடியும். இதனைத் தவிர எமது அரசியல்யாப்பு மிகப்பெரிய மக்கள் பங்கேற்றல் நிகழ்ச்சித்திட்டத்தினூடாக முன்னெடுக்கப்பட்டது.எமது அரசியல்யாப்பு மிகப்பெரிய மக்கள் பங்கேற்றல் நிகழ்ச்சித்திட்டத்தினூடாக முன்னெடுக்கப்பட்டது. இதனைத் தவிர 2.5மில்லியன் ( 25 லட்சம்) மக்கள் தமது அரசியல்யாப்பு பேரவைக்கு தமது சமர்பிப்புக்கைளைச் கையளித்திருந்தனர். அரசியல்யாப்பு எண்ணக்கருக்களை மக்கள் எளிய மொழியில் எடுத்தியம்பியிருந்தனர்.உதாரணமாக சொல்வதானால் மக்கள்  ஒரு கடதாசித்துண்டை எடுத்து  சட்டமானது எனது கால்நடைகள் திருடப்படாது சட்டத்தின் மூலமாக பாதுகாக்கப்படவேணடும். தமது கால்நடைகளை மேய்ச்சல் நிலத்தில் விடும் போது அதன் எந்தத் தீங்கிற்கும் உள்ளாக்கப்படாமல் சட்டத்தின் மூலமாக பாதுகாக்கப்படவேண்டும்   போன்ற  சிறிய விடயங்களைக் கூட ( அது அவரவருக்கு பெரியவிடயம்) அரசியல் சாசனத்தில் இவற்றையெல்லாம் உத்தரவாதப்படுத்த வேண்டும் போன்ற எண்ணக்கருக்களை மிக எளிய முறையில் முன்வைத்திருந்தனர்.இது எமது அரசியல்யாப்பு தயாரிப்பு முறையை வலுப்படுத்துவதாக அமைந்தது. கடந்த காலத்திற்கும் எதிர்காலத்திற்கும் இடையிலான பாலமாகவே நாம் தென் ஆபிரிககாவில் எமது அரசியல்யாப்பை கருதுகின்றோம்.நாம் மிக மோசமான கடந்த காலத்தைக் கடந்து வந்திருக்கின்றோம்.எம்மை எதிர்காலத்திற்கு அழைத்துச்செல்வதற்கு எமக்கொரு பாலம் தேவைப்படுகின்றது. அதுவே எமது அரசியல்யாப்பாகும்.கடந்த காலத்தில் நடைபெற்ற பல விடயங்களை சரிசெய்வதாக எமது அரசியல் யாப்பு அமைந்திருக்கின்றது.மக்களைப் பிளவு படுத்திய சட்டங்கள் அனைத்தையும் களையப்பட்டன.வெள்ளையரும் ஏனைய நிறத்தவரும் ஒரே திருச்சபைக்கு செல்ல முடியாது என்ற சட்டத்தை நீக்கியது.வெள்ளையரும் கறுப்பரும் ஒரே கிரிக்கட் அணியில் விளையாடமுடியாது என்ற சட்டத்தை அரசியல் யாப்பு நீக்கியது.இன்று தென் ஆபிரிக்க கிரிக்கட் அணியில் வித்தியாசமான பல இனங்களை நிறங்களைச் சேர்ந்தவர்கள் இணைந்துவிளையாடுகின்றனர். ரக்பி அணியிலும் இதேநிலைதான். யாரேல்லாம் விளையாட ஆசைப்படுகின்றார்களோ அவர்கள் வரவேற்கப்படுகின்றனர். முன்னர் கிரிக்கட் அணியில் வெள்ளையர் மாத்திரமே இருந்தனர். ரக்பி அணியில் வெள்ளையர் மாத்திரமே இருந்தனர். ஏனெனில் அப்போது அதுவே சட்டமாக இருந்தது.எமது அரசியல் யாப்பு அந்தக் குறைபாடுகளை அநீதிகளை களைந்து .எமது அரசியல்யாப்பு ஜனநாயக சமத்துவ சமூகத்தை பெறுவதற்கு வழிகோலியது. எந்த சமயமும் ஒன்றைவிட மற்றொன்று மேலானது அல்ல என்பதை நிலைப்படுத்தகின்ற மதச்சார்பற்ற அரசியல் யாப்பு எமது யாப்பாகும்.நாம் எதிர்நோக்கிய சமயப்பிரச்சனைகள் நீங்கள் இலங்கையில் எதிர்நோக்குவதிலும் வித்தியாசமானதாகும்.எமது அரசியல் யாப்பு பலதரப்பட்டவர்களதும் சமரச பேச்சுவார்த்தைகளுக்கு உட்பட்டது. அதில் பங்கேற்றவர்கள் மதத்தை அரசியல்யாப்பிற்கு வெளியே வைப்பதற்கு இணங்கினர்.ஆனால் அது பேச்சுவார்த்தைகளால் இணக்கங்காணப்பட்டதொன்றாகும்.
ஒரு முஸ்லிம் நாட்டில் அதனைச் செய்யமுடியாது போகலாம். இலங்கை போன்றதொரு நாட்டிலும் அதனைச் செய்ய முடியாது போகலாம் அது சூழ்நிலையைப் பொறுத்ததொன்றாகும். எமது அனுபவத்திலிருந்து இந்த விடயங்களில் இலங்கைக்கு உதவ நாம் விரும்புகின்றோம். எமது அனுபவத்திலுள்ள அனைத்து விடயங்களும் உதவும் எனக் கருதவில்லை. ஆனால் அரசியல்யாப்பைத் தயாரிப்பதில் எம்மால் உதவமுடியும் என்பதை நாம் அறிவோம். நிரந்தர அரசியல்தீர்வைக்காண்பதற்கான அரசியல் பேச்சுவார்த்தைகளில் உதவமுடியும் என்பதை நாம் அறிவோம்.உள்ளக பொறுப்புக்கூறல் பொறிமுறையை அமைப்பதில் உதவமுடியும் என்பதை நாம் அறிவோம். இதில் ஒரு முக்கியமான விடயத்தை நான் குறிப்பிட்டாக வேண்டும். இலங்கையிலுள்ள எந்தவொரு அரசாங்கத்துடனும் இணைந்து இந்த செயன்முறையை முன்னோக்கிக்கொண்டுசெல்வதற்கு தென் ஆபிரிக்கா தயாராகவுள்ளது.நாம்  ஜனாதிபதி ராஜபக்ஷ அரசாங்கத்துடனும் பணியாற்றியுள்ளோம். தென் ஆபிரிக்காவிடம் அவர் உதவி கேட்டதையிட்டு நாம் மிக்க மகிழ்ச்சியடைந்தோம்.ஜனாதிபதி சிறிசேன பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அரசாங்கத்துடனும் நாம் இணைந்து பணியாற்றுவோம். புதிய அரசாங்கத்துடன் இந்த விடயத்தில் முன்னோக்கிச் செல்வதற்காக நாம் இணைந்து பணியாற்றுவோம்.நாடென்ற வகையில் இலங்கை முன்னோக்கிச்செல்லவேண்டும் எனவே நாம் விரும்புகின்றோம்.மக்கள் விசேடமாக தமிழ் மற்றும் முஸ்லிம் மக்கள் அனைவரும் எமது பார்வையில் மிகவும் முக்கியமானவர்களாக திகழ்கின்றனர் என்பதைக் கூறிவைக்க விரும்புகின்றேன்.அனைவரும் வித்தியாசமானவர்களாக திகழ்வதுடன் முக்கியமானவர்களாகவும் உள்ளனர்.  எமக்கு அனைவருமே முக்கியமானவர்கள். யுத்தத்தால் பாதிக்கப்பட்டவர்கள் இருக்கின்றனர். பாதிக்கப்படாதவர்கள் இருக்கின்றனர் நாம் அனைவருக்கும் உதவிபுரிய விரும்புகின்றோம். நாடு மீண்டும் பின்னோக்கிச் செல்லாமல் முன்னோக்கிச் செல்வதற்காகவே இதனைச் செய்கின்றோம். எமக்கு எது சரியாக அமைந்தது என்ற அனுபவம் உள்ளபடியாலேயே தென் ஆபிரிக்கா இதனைச் செய்ய முனைகின்றது. இலங்கை அரசாங்கம் என்ன செய்ய வேண்டும் என நாம் கூறுவதில்லை. நீங்கள் ஊடகங்களில் தென் ஆபிரிக்கா  அதைச் செய்யவேண்டும் இதனைச்  செய்தாக வேண்டும் என்று இலங்கையிடம் கூறியதாக ஒருபோதும் பார்த்திருக்கமாட்டீர்கள்.மக்கள் மத்தியில் இணக்க கருத்துருவாக்கத்தை ஏற்படுத்த முடியும் என்று நாம் நம்புகின்றோம்.வேறு வகையில் கூறுவதென்றால் வித்தியாசமாக செயற்படமுடியும் என மக்களை ஊக்குவிக்க எம்மால் முடியும். அரசாங்கத்துடன் எப்படி தொடர்பைப் பேணுகின்றோம் என்பதில் நாம் மிகுந்த எச்சரிக்கையுடன் நடந்துகொள்கின்றோம். நாங்கள் என்ன செய்ய வேண்டும் என்று வேறுதரப்பினர் கூறுவதை நாம் விரும்பமாட்டோம். நாம் தென் ஆபிரிக்காவில் பிரச்சனைகளை கடந்த போன காலப்பகுதியில் என்ன செய்ய வேண்டும் என மற்றவர்கள் கூறுவதை விரும்பியிருக்கவில்லை. எமக்கு என்ன வேண்டும் என்பதை நாமே தீர்மானித்தோம். அதனால் தான் மக்கள் பங்களிப்பு முக்கியம் என்று கூறினேன்.மக்கள் என்ன சொல்கிறார்கள். உங்களது சமூகம் பொறுப்புக்கூறல் பற்றி என்ன சொல்கின்றது.இன்னொரு தரப்பினர் பொறுப்புக்கூறல் பற்றி என்ன சொல்கின்றனர்.. இந்த விடயத்தில் புரிந்துகொள்ள முடியாத தரப்பினருக்கு தென் ஆபிரிக்காவினால் என்ன செய்யமுடியும் என்றால்  உண்மை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு பற்றி விளக்க முடியும். உங்கள் பத்திரிகையில் இந்த நேர்காணல் பிரசுரமான பின் மக்களை இதுபற்றி எழுதுமாறு கோரமுடியும். கேள்விகளைக் கேட்குமாறு கூறமுடியும். அந்தவகையில் மேலும் சில நேர்காணல்களை பின்னர் வழங்குவதனூடாக தென் ஆபிரிக்காவின் உண்மை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு பற்றி தெளிவுபடுத்த முடியும்.உலகில் பல உண்மை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுக்கள் (Truth and Reconciliation Commission ) TRC உள்ளன. ஆனால் இலங்கை அரசாங்கமோ தென் ஆபிரிக்க பாணியில் விருப்புக் காண்பித்துள்ளது. இதற்கு தென் ஆபிரிக்க ஆணைக்குழுவானது பொறுப்புக்கூறலை விடவும் நல்லிணக்கத்திற்கே முக்கியத்துவம் கொடுத்தமையும் ஒரு காரணமாக அமைந்துள்ளதென மக்கள் கூறுகின்றனர்.  உங்களுடைய உண்மை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு எப்படிக் கட்டமைக்கப்பட்டதென எமக்கு சுருக்கமாக விபரியுங்கள்? 
 
ஒரு முக்கியமான விடயத்தை நான் வலியுறுத்த விரும்புகின்றேன். தென் ஆபிரிக்கா பொறுப்புக்கூறல் விடயத்தில் உறுதியான நிலைப்பா ட்டில் இருக்கின்றது. உங்களுடைய அரசாங்கத்துடன் நாம் பேசுகின்றபோது நாம் பொறுப்புக்கூறல் விடயத்தில் மிகவும் உறுதிப்பாடான நிலைப்பாட்டையே பேணிவருகின்றோம். பொறுப்புக்கூறல் என்பது பல வழிமுறைகளில் நடைபெறமுடியும். அது நீதிமன்றத்தில் நடைபெறலாம். அது உண்மை ஆணைக்குழு (TRC )முன்பாகவும் நடைபெறலாம்.மோதல்களுடன் தொடர்புடைய விடயங்கள் மக்கள் மீதான அடக்குமுறைகள் மனித உரிமை மீறல்கள்  குறித்த பொறுப்புக்கூறலுக்கு சில சமயங்களில் TRC மிகவும் பொருத்தமானதாக அமையும். ஏனெனில் நீதிமன்றங்களில் சமர்பிக்கக்கூடியதான சாட்சியங்கள் இல்லாத சந்தர்ப்பங்களைக் கொண்டதான இத்தகைய நிலைகளில் TRC பொறிமுறையே பொருத்தமானது. இது ஒரு வித்தியாசமான பொறிமுறையாகும். இது நீதிமன்றத்தை விடவும் வித்தியாசமானது. நீதிமன்றத்தில் போய் நீங்கள் உங்கள் கதையைக் கூறமுடியாது. அங்கே உங்கள் சாட்சியைத்தான் பதிவுசெய்யமுடியும். ஆனால் TRCயில் உங்கள் கதையைச் கூறமுடியும்.சில வேளைகளில் நீதிமன்ற நடைமுறையை விட அதிக சாத்தியப்பாடுகளைக் கொண்டதாக அமையும். ஏனெனில் இதன் நடைமுறைகள்  சாதாரணமக்களாலும் மேம்பட்ட வகையில் அணுகப்படக்கூடியதாக அமையும். மக்கள் அக்கறைப்பட்ட விடயங்களில் ஆழமாகச் செல்வதற்கும் இந்த நடைமுறை அனுமதிக்கின்றது.  ஆனால்  TRCயில்  உங்களுக்கு விரும்பியவகையில் உங்கள் கதையைக் கூறக்கூடியதாக இருக்கும். TRCயில் மக்கள் மிகவும் வசதியாக உணர்வார்கள் நீதிமன்றத்திற்கு சென்றால் அது மிகவும் வரையறுக்கப்பட்ட ,ஒழுங்கமைக்கப்பட்ட செயன்முறையாக இருப்பதைப் பார்ப்பீர்கள். ஆனால் ஒரு  TRCயில் உங்களுக்கு அதிகமான இடைவெளி இருக்கும். உங்களால் TRCயில் திரும்பவந்து விசாரணைகளை மேற்கொள்ளமுடியும். நடைமுறையை மீண்டுமாக தரிசக்க முடியும். ஒரு ஆரம்பமும் முடிவுமுள்ள ஒரு நடைமுறையாக TRC இருக்கமாட்டாது.TRCயில் முன்வைக்கப்பட்ட விடயங்களுன் தொடர்புபட்டதாக 2015ம் ஆண்டிலும் தென் ஆபிரிக்காவில் நாம் இன்னமும் சடலங்கைத் தோண்டியெடுத்து அவற்றை பரிசோதித்துக்கொண்டிருக்கின்றோம். எமது TRCயின் பரிந்துரைகள் இன்னமும் நடைமுறைப்படுத்தலுக்கு உட்பட்டுவருகின்றன.நீதிமன்றமென்றால் ஒரு வழக்கு தொடர்பாக ஆராய்ந்து தீர்ப்பொன்றை வழங்கி அந்த வழக்கை மூடிவிடும்.நீங்கள் அந்த நீதிமன்றத் தீர்ப்புடன் வாழவேண்டியிருக்கும். மோதல்களிலிருந்து வெளிவரும் நாடுகளுக்கு உதவுவதற்கு TRC கள் பல்வேறு வழிகளிலும் உதவுகின்றன.இந்த நடைமுறையில் உண்மையைக் கூறுவதன் மூலமாக நாம் பொறுப்புக்கூறலை நிலைநாட்டுகின்றோம். அந்த வகையில் இது TRC  முன்பாக வந்து தமது  தரப்பு சம்பவத்தை சொல்வதற்கான சந்தர்ப்பத்தை விரும்பிய எவருக்கும் வழங்குகின்றது.உங்களுடைய TRC  தென் ஆபிரிக்க TRCயி லும்  முற்றிலும் வித்தியாசமானதாகக்கூட அமையலாம். அது நல்லவிடயம்.ஏனெனில் இலங்கை அதன்  TRC  யை அதுவாகவே வடிவமைப்பது அவசியமாகும். அது இலங்கையின் கலாசாரத்திற்கும் மத நடைமுறைகளுக்கும் வரலாற்றிற்கும் பொருத்தமானதாக அமையவேண்டும். உங்கள் TRC ஆனது அனைத்து மக்களுக்கும் வித்தியாசமான குழுக்களுக்கு மகிழ்ச்சியளிப்பதாகவும் திருப்தியைததருவதாகவும் அமையவேண்டும்..
உலகெங்கிலும் 40ற்கு மேற்பட்ட TRCகள் இருக்கின்றன.இன்னும் பல அமைக்கப்பட்டுக்கொண்டிருக்கின்றன. கனடாவில் அண்மையில் ஒருTRC அமைக்கப்பட்டது. இலங்கை உட்பட மேலும் பல நிறுவப்படவுள்ளன.
தென் ஆபிரிக்காவில் கிடைக்கப் பெற்ற அனுபவத்தைக் கொண்டு அதனைப் பகிர்ந்துகொள்ள விரும்புகின்றோம். அப்போது  தென் ஆபிரிக்கா இவற்றைச் செய்ததை நாம் அறிந்திருக்கின்றோம். அதிலிருந்து கற்றுக்கொண்டுள்ளோம் . அதனை விடவும் மேலாக செய்யமுடியும் என இலங்கை கூறக்கூடியநிலை ஏற்படவேண்டும். இந்தவகையில் கருணை  சபையானது ஏற்கனவே ஒர் உதாரணமாக அமைந்துள்ளது. தென் ஆபிரிக்காவின் TRCயில் மதத்தலைவர்கள் ஒன்றுசேர்ந்து செயற்பட்டது கிடையாது. ஏற்கனவே இது எனக்கு சிறந்ததொரு சமிக்ஞையாக காணப்படுகின்றது.  புரிந்துணர்வைக் கட்டியெழுப்புவதில் இன்னமும் நிறைய பணிகள் முன்னெடுக்கப்படவேண்டியுள்ளது. இலங்கையில் TRC எப்படி கட்டமைக்கப்பட்டிருக்கும் என இன்னமும் எமக்குத் தெரியாது. அரசாங்கத்தரப்பினருக்கு கிடையில் இன்னமும் அது கலந்துரையாடப்பட்டுவருகின்றது. அரசாங்கம் தயாராக இருக்கும் போது நாம் உதவுவோம்.அது எப்படி அமையும் என எமக்குத் தெரியாது. ஒருவேளை அது TRC என்றழைக்கப்படாமல் வேறேதும் பெயரில் அழைக்கப்படலாம்.ஆனால் அது TRC  போன்றதொரு பொறிமுறையாகும். TRC யை அமைப்பதற்கு இலங்கை தீர்மானித்துள்ளதையிட்டு நாமும் வேறுபல நாடுகளும் மகிழ்ச்சியடைந்துள்ளோம். ஏன் தென் ஆபிரிக்கா என்ற கேள்வி எழுந்துள்ளதென்றால் தென் ஆபிரிக்காவின் TRCயானது பலப்பல வழிகளில் வித்தியாசமானதாகும். தென் ஆபிரிக்காவும் இலங்கையைப் போன்ற வித்தியாசமான பல TRC களை ஆராய்ந்திருந்தது.நாம் விசேடமாக சிலியின் TRC யை ஆராய்ந்திருந்தோம். இவ்வாறாக பல நாடுகளதும் கற்றுக்கொண்டபின்னர் எமது கலாசாரத்திற்கும் மக்களுக்கும் பொருத்தமானதை நாம் தீர்மானத்தோம்.இவ்வாறாக பல நாடுகளதும் கற்றுக்கொண்டபின்னர் எமது கலாசாரத்திற்கும் மக்களுக்கும் பொருத்தமானதை நாம் தீர்மானத்தோம். இலங்கைக்கு மிகவும் நீண்ட வரலாறு உள்ளது. உங்களது சமயங்களும் பல ஆயிரம் ஆ ண்டுகால வரலாற்றைக் கொண்டன. இந்த விடயங்களை நன்கு சீர்தூக்கிப் பார்ப்பது முக்கியமாகும். TRC  நடைமுறையூடாக இந்த நாட்டைக் குணப்படுத்துகின்ற செயற்பாடு இடம்பெறும்.அதன் மூலமாக நல்லிணக்கத்தை நோக்கிச் செல்வதற்கு மக்கள் ஊந்தப்படுவார்கள்.நல்லிணக்கத்தின் பின்னர் தேசத்தைக் கட்டியெழுப்பும் நடவடிக்கை இடம்பெறவேண்டும். அனைத்தின் முடிவிலும் நீங்கள் ஒரு தேசததைச் சார்ந்தவராக இருக்க வேண்டும் என்றே விரும்புவீர்கள். என்னை யாரும் இவர் கறுப்பினத்தைச் சேர்ந்தவரென்றோ கலர் என்றோ அழைப்பதையன்றி தென் ஆபிரிக்கர் என்று அழைக்கவும் அறியப்படவுமே விரும்புவேன். தென் ஆபிரிக்கா என்ற தேசத்தின் அங்கத்தவர் என்றே நான் அறியப்பட விரும்புகின்றேன். உண்மையைச் சொல்வதன் மூலமாக பொறுப்புக்கூறல் முன்னகர்த்தப்படுவது முக்கியமாக இருக்கும் அதேவேளை நல்லிணக்கமும் முக்கியமாகும். அதேபோன்று நினைவுகளின் காயங்களில் இருந்து குணமடைவதும் முக்கியமாகும்.மக்கள் குணடையவேண்டும். மக்கள் கடந்த காலத்து கோர நிகழ்வுகளால் மிகவும் சின்னாபின்னடைந்துள்ளனர். வடக்கு கிழக்கிற்கு செல்லும் போது அவர்களது கடந்த கால வரலாற்றை சொல்லுமாறு கேட்கின்ற போது அவர்கள் அழ ஆரம்பிக்கின்றனர். நாம் அந்த மக்களை கடந்த கால காயங்களிலிருந்து ஆற்றுபபடுத்தவேண்டும். நீதிமன்றச் செயற்பாடுகளின் போது உங்கள் உளக் காயங்களை ஆற்றுப்படுத்துவத்தற்கு  மதத்தலைவர்களை நாடுங்கள் என்றெல்லாம் கூறமாட்டார்கள் . ஆனால் TRC யில் இது  நடக்கும்.பொறுப்புக்கூறல் விடயத்தில் நீதிமன்ற செயற்பாடு அவசியமானதொன்றாக இருப்பினும் TRC ஆனது மேலதீகமான நன்மைகளுக்கு வழிகோலும்.தென் ஆபிரிக்க TRC  யில் செய்த விடயங்கள் ஏனைய TRC களில்  செய்தவிடயங்களைப் பார்கிலும் வித்தியாசமானது என மக்கள் நினைத்துவிடக்கூடாது.தென் ஆபிரிக்க  TRCயில் சந்தேகம் கொள்ளத்தேவையில்லை .உண்மை என்னவென்றால் உண்மையைச் சொல்லுதல், பொறுப்புக்கூறல் நல்லிணக்கத்தை நிலைநாட்டல், தேசத்தைக் கட்டியெழுப்பல் மற்றும் கடந்தகால கசப்பான நினைவுகளில் இருந்து குணமடைதல என ஒவ்வொரு கட்டங்களாக தென்ஆபிரிக்க TRC வழிநடத்தியது.கடந்த காலத்தில் இடம்பெற்றவை காரணமாக  அந்த நினைவுகளில் இருந்து குணமடைந்து கொள்வதில் தென் ஆபிரிக்கர்கள் இன்னமும் போராடவேண்டியிருக்கின்றது.


தென் ஆபிரிக்காவில் நிறவெறிக்கெதிரான போராட்டத்தின் போது நெல்ஸன் மண்டேலா உட்பட பெரும் எண்ணிக்கையிலானவர்கள் அரசியல் கைதிகளாக இருந்த அனுபவம் உங்களுக்கு இருக்கின்றது. கடந்த சில நாட்களாக இலங்கையிலுள்ள  சிறைகளிலே உள்ள தமிழ் அரசியல் கைதிகள் உண்ணாவிரதப்போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர். இவர்கள் விடுவிக்கப்படவேண்டும் என்ற விடயத்தில் தென் ஆபிரிக்க அரசாங்கம் கரிசனைகொண்டுள்ளதா? 

“அரசியல் கைதிகள் என அழைக்கப்படுகின்றவர்கள் அன்றேல் தடுத்துவைக்கப்பட்டுள்ளவர்கள் குறித்து நாம் அரசாங்கத்திடம்  கேட்டுள்ளோம். தென் ஆபிரிக்கா இந்த விடயத்தில் கரிசனை கொண்டுள்ளமையால் ஒரு முன்னோக்கிய செயன்முறை இவ்விடயத்தில் இடம்பெறுவதாக அரசாங்கம் எமக்கு உறுதியளித்துள்ளது. தடுத்துவைக்கப்பட்டுள்ளவர்களின் வழக்குகள்  தொடர்பாக அவர்கள் அவர்கள் கவனம் செலுத்திவருகின்றனர். தற்போதைய நிலையில் அவர்களை விடுவிப்பதாக அரசாங்கம் எம்மிடம் கூறவில்லை. ஆனால் சில நேரங்களில் ஊடகங்களில் தடுத்துவைக்கப்பட்டுள்ளவர்கள் விடுவிக்கப்படுவர் என சில நேரங்களில் ஊடகங்களில் அறிக்கையிடப்படுவதைப் பார்த்திருக்கின்றோம். தென் ஆபிரிக்கா இவ்விடயம் தொடர்பில் அரசாத்துடன் தொடர்ச்சியாக கலந்துரையாடிவருகின்றது. இவ்விடயம் தொடர்பாக முன்நோக்கிய செயன்முறை இடம்பெறுவதாக அரசாங்கம் எமக்கு உறுதியளித்துளளமையாலும் அவர்களது வழக்குகள் தொடர்பாக ஆராய்ந்துவருவதாலும் சிலர் விடுவிக்கப்படுவதற்கான ஏதுநிலை உருவாகும என நான் நினைக்கின்றேன்.யாருடைய வழக்குகள் தொடர்பில் அரசாங்கம் ஆராய்கின்றது என எனக்கு தெரியாது. எத்தனை பேர் விடுவிக்கப்படவுள்ளனர் என்றும் தெரியாது. ஆனால் இவ்விடயம் தொடர்பில் நாம் அரசாங்கத்திடம் கேள்வியெழுப்பியுள்ளோம். அதற்கு தாம் இவ்விடயத்தை கவனத்தில் எடுத்துசெயற்படுவதாக உறுதியளித்துள்ளனர். இது ஒரு சிறந்த நல்லெண்ணச் சமிக்ஞையாக அமையும். சிலர் விடுவிக்கப்படுமிடத்து அரசியல் ரீதியாக அது சிறந்த விடயமாக அமையும். சிலர் விடுவிக்கப்படுவார்களாயின் தென் ஆபிரிக்கா நிச்சயமாக  மகிழ்ச்சியடையும் ஊக்கம்கொள்ளும்.. அது தமிழ்  மக்களுக்கும்  பாதிக்கப்பட்ட ஏனைய சமூகங்களுக்கும் சிறந்த செய்தியை எடுத்துச் செல்வதாக அமையும். ஏனெனில் அரசாங்கமானது கடந்த காலத்தில் இடம்பெற்ற விடயங்கள் தொடர்பில் முன்னோக்கிய நடவடிக்கைகளை எடுப்பதற்கு திடசங்கற்பம் பூண்டுள்ளது என்பதை  காண்பிப்பதற்கு அரசியல் கைதிகளின் விடுதலையானது மிகச் சிறந்த நல்லெண்ணச் சமிக்ஞையாகும். இது   நாம் அதனைச் செய்யுமாறு அரசாங்கத்தை ஊக்குவிக்கின்றோம்
தென் ஆபிரிக்காவில் நிறவெறி ஆட்சியில் இழைக்கப்பட்டவற்றுடன் ஒப்பிடுகையில் இலங்கையில் இழைக்கப்பட்ட குற்றச்செயல்களின் பரிமாணம் மாறுபட்டது. இலங்கையில் இழைக்கப்பெற்ற குற்றங்கள் மிகவும் பாரதூரமானவை என ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையாளரே குறிப்பிட்டிருந்தார்.தென் ஆபிரிக்க உண்மை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் முன்பாக நிறவெறி ஆட்சியில் இழைக்கப்பெற்ற குற்றங்களுக்காக யாரேனும் தண்டிக்கப்பட்டார்களா? மீண்டும் மோதல்கள் இடம்பெறாதிருப்பதை உறுதிப்படுத்துவதற்கு பாரதூரமான குற்றங்களை இழைத்தவர்களுக்கு தண்டனை வழங்கப்படவேண்டும் எனக் கருதுகின்றீர்களா? 

தென் ஆபிரிக்காவில் ஒரே காலகட்டத்தில் பல விடயங்கள் இடம்பெற்றிருந்தன.நாம் புதிதாக ஒரு அரசியல்யாப்பை உருவாக்கியிருந்தோம். அரசியல்யாப்பானது கடந்த காலத்திற்கும் எதிர்காலத்திற்குமிடையிலான பாலமாக திகழ்கின்றது என நான் உங்களின் முன்னைய கேள்விக்கான பதிலின் போதும் தெரிவித்திருந்தேன். மீண்டும் மோதல்கள் ,அநீதிகள் கடந்தகாலத்தில் போன்று நிகழ்ந்துவிடக்கூடாது என்பதை உறுதிப்படுத்துவதற்கான ஒரு கருவியாக அரசியல்யாப்பு அமைந்துள்ளது.ஏனெனில் அரசியல்யாப்பு இனவாதத்தைத் தடைசெய்துள்ளது. அவதூறுப் பேச்சுக்களைத் தடைசெய்துள்ளது. எங்களுடைய அரசியல் யாப்பை நீங்கள் பார்க்கும் போது அதிலுள்ள சம உரிமைச் சரத்துக்களைக் உன்னிப்பாக நோக்குங்கள். நாம் மீண்டுமாக பழைய நிலைக்கு திரும்பாது இருப்பதை உறுதிசெய்வதற்கான கருவியாக அரசியல்யாப்பு இருக்கின்றதென்பதை பறைசாற்றுவதாக அதிலுள்ள சம உரிமைச்சரத்துக்கள் அமைந்துள்ளன.நாம் மீண்டுமாக துயர்படிந்த கடந்தகாலத்திற்கு திரும்பமாட்டோம் என்பதை உறுதிப்படுத்தும் மிகமுக்கிய நடவடிக்கைகளில் ஒன்றாக அரசியல்யாப்பு உருவாக்கம் அமைந்திருக்கின்றது.

நீங்கள் ஒரு நீதிமன்றத்திற்கு முன்செல்வதோ அன்றேல் உண்மை நல்லிணக்க ஆணைக்குழுவிற்கு முன்பாக செல்வதோ கடந்த கால துயரச் சம்பவங்கள் மீண்டும் இடம்பெறமாட்டாது என்பதை உறுதிப்படுத்தவதற்கு போதுமானதாக அமைந்துவிடாது. நீதியை நிலைநிறுத்தும் நிறுவனங்கள் சீரமைக்கப்படவேண்டுவதும் முக்கியமானதாகும். நீதிக்கட்டமைப்பு பொலிஸ் மனித உரிமை ஆணைக்குழு ஆகியன வலுப்படுத்தப்படவேண்டும். மனித உரிமைகளைப் பாதுகாப்பதை உறுதிப்படுத்துவதற்காக நீதியை கட்டிக்காப்பதற்காக அரசாங்க நிறுவகக் கட்டமைப்பில் புதிய நிறுவனங்கள் உருவாக்கப்படவேண்டும்.

தென் ஆபிரிக்காவில் பெரும்பான்மையினரான கறுப்பினத்தவர்களே பெரிதும் பாதிக்கப்பட்டிருந்தனர். அவர்கள் ஆட்சியதிகாரத்திற்கு வந்தமையால் பொறுப்புக்கூறல் நல்லிணக்கம் என்பன சாத்தியமாயிற்று. ஆனால் இலங்கையில் சிறுபான்மையினரே மிகமோசமாக பாதிக்கப்பட்டுள்ளனர். இந்தவகையில் தென் ஆபிரிக்க படிப்பினைகள்  எவ்வாறு உதவமுடியும்?

நீங்கள் மோதலில் பாதிக்கப்பட்டவராக இருந்தால் நீங்கள் சிறுபான்மையினராக இருந்தாலோ பெரும்பான்மையினராக இருந்தாலோ நீங்கள் மோதலில் பாதிக்கப்பட்டவரே. மோதல்களின் போது,யாரேனும் உங்களுக்கு எதிராக தீங்கிழைதிருந்தால் ,யாரேனும் உங்கள் உறவினரை கொலைசெய்திருந்தால் ,யாரேனும் உங்கள் உறவினரைக் கடத்திச் சென்றிருந்தால் ,யாரேனும் உங்கள் மனித உரிமைகளை மீறிச் செயற்பட்டிருந்தால், யாரேனும் உங்கள் சகோதரியையோ தாயாரையோ பாலியல் வல்லுறவிற்கு உட்படுத்தியிருந்தால்  அவை எங்குமே  மாற்றடையப்போவதில்லை.எந்த மோதலின் போதும் அவை ஒரேவிதமானவையாகவே உள்ளன.
தென் ஆபிரிக்காவில் மிகவும் பாதிக்கப்பட்ட மக்கள் அரசாங்க அதிகாரத்தைப் பெற்றுக்கொண்டமை எம்மைப்பொறுத்தவரையில் அதிர்ஷ்டமிக்கதாக அமைந்தது.தென் ஆபிரிக்காவில் அது எமக்கு உதவியாக அமைந்தது.இந்த விடயங்களை கையாள்வதற்கான மேம்பட்ட வாய்ப்புக்களை அது வழங்கியது.

பெரும்பான்மையினரான தென் ஆபிரிக்கர்களைப் பொறுத்தவரையில் வியந்துபார்க்க கூடியவிடயமாக அமைந்ததென்னவென்றால்  ஆட்சியதிகாரத்திற்கு வந்தவுடன் அவர்கள் அராஜகப்பான்மையுடன் நடந்துகொள்ளவில்லை.அவர்கள் அரசாங்கமமைத்தவுடன் அவர்கள் மன்னிப்பவர்களாக மாறினர். இதனை அனைவரும் எப்போதும் உதாரணமாக எடுத்துக்கொள்ளவேண்டும். ஒரு நாட்டில் நீங்கள் பெரும்பான்மையினராக இருந்தால் ஏன் நீங்கள் நல்லிணக்கத்தினை நோக்கி வழிநடத்தக்கூடாது. தென் ஆபிக்காவில் கறுப்பினத்தவர்கள்  வெள்ளையரல்லாதவர்கள் தான் பெரும்பான்மையினர். அவர்களே நல்லிணக்கத்தை நோக்கிய பயணத்தில் தலைமைதாங்கிவழிநடத்தியிருந்தனர். பொறுப்புக்கூறல் செயற்பாடுகளில் தலைமைதாங்கியிருந்தனர். கறுப்பினத்தவர்களிடத்தில் இருந்தே பொறுப்புக்கூறல் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டிருந்தது. தென்ஆபிரிக்காவில் உண்மை மறறும் நல்லிணக்க ஆணைக்குழு அமைக்கப்படுவதற்கு அங்குள்ள கறுப்பினத்தவர்களே காரணமாக அமைந்தனர்.
கடந்த காலத்தில் இடம்பெற்ற விடயங்கள் தொடர்பாக நடவடிக்கைகளை எடுப்பதில் பெரும்பான்மையினர் முன்னின்று செயற்படவேண்டும் என்பதை இங்குள்ளவர்கள் விளங்கிக்கொள்ளவேண்டும்.கடந்த காலத்தில் இடம்பெற்ற விடயங்கள் தொடர்பாக நடவடிக்கைகளை எடுப்பதில் பெரும்பான்மையினர் முன்னின்று செயற்படவேண்டும் என்பதை இங்குள்ளவர்கள் விளங்கிக்கொள்ளவேண்டும். அது மிக முக்கியமான விடயம். அந்த வகையில்  பல சிக்கலான பாடங்களை  தென் ஆபிரிக்காவில் இருந்து கற்றுக்கொள்ளமுடியும். பெரும்பான்மையினர் எதிர் சிறுபான்மையினர் போன்ற விடயங்களை இலங்கைககு உசிதமான வகையில் பயன்படுத்திக்கொள்ளமுடியும்.நீங்கள் என்ன வேண்டும் என்பதை கூறுகின்ற தகவலாக இந்தப்பாடங்கள் அமையமாட்டாது.மாறாக நீங்கள் அதைப் பார்த்து தென் ஆபிரிக்காவில் பெரும்பான்மையினரான கறுப்பினத்தவர்கள் பல்வேறு துயர்களை எதிர்கொண்டிருந்தபோதும் அந்த துயரங்களை விளைவித்த சிறுபான்மையினரை அவர்கள் மன்னித்தவிடயத்தை மனதில் நிறுத்திக்கொள்ளலாம்.இங்குள்ள பெரும்பான்மையினர் எப்படி சிறுபான்மையினருடன் சமாதானத்தை ஏற்படுத்திக்கொள்ள முடியும் என அந்த அனுபவத்தைக் கொண்டு ஆராயமுடியும். அந்த வகையில் பல வித்தியாசமான படிப்பினைகளை தென் ஆபிரிக்காவிலிருந்து கற்றுக்கொள்ள முடியும். தென் ஆபிரிக்காவில் பாதிக்கப்பட்ட பெரும்பான்மை சமூகத்தைச் சேர்ந்தவர்கள் ஆட்சி அதிகாரத்திற்கு வந்தார்கள். இலங்கையில் பாதிக்கப்பட்ட சிறுபான்மையினத்தவர்கள் அரசாங்கததையமைப்பார்கள் என நான் நினைககவில்லை. எம்மைப் பொறுத்தவரையில் பாதிக்கப்பட்ட தரப்பினர்  ஆட்சியதிகாரத்திற்கு வந்தமை முன்னோக்கிய பயணத்திற்கு பேருதவியாக அமைந்தது.தென் ஆபிரிக்காவில் கறுப்பினத்தவர்கள் முன்னோக்கிச்  செல்லவிரும்பினர். நாடு முன்னோக்கிச் செல்வதை அவர்கள் விரும்பினர்.இதற்காக அவர்கள் மன்னிப்புணர்வை வெளிப்படுத்தினர்.இது போன்ற படிப்பினைகளையே நாம் பகிர்ந்துகொள்ள விரும்புகின்றோம்.கடந்த காலத்தில் மிகக் கொடூரமான சம்பவங்கள் இடம்பெற்றன என்பதை அங்கீகரித்துக்கொண்டு அவற்றைப் பின்னோக்கி வைத்துவிட்டு அனைவரும் முன்னோக்கிச் செல்லமுடியும்.


தென் ஆபிரிக்க உண்மை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் தலைவராக டெஸ்மண்ட் டுட்டு இருந்தார். ஏனைய அங்கத்தவர்கள்  யார்? அவர்களின் வெளிநாட்டவர்களும் இடம்பெற்றிருந்தனரா?ஆணைக்குழு எப்படி கட்டமைக்கப்பட்டிருந்தது?


ஆணைக்குழுவில் தென் ஆபிரிக்கர்கள் மாத்திரமே இடம்பெற்றிருந்தனர். நான் ஒரு நீதிபதியாக இருந்தால் என்னுடைய நாட்டின் அரசியல்யாப்பிற்கு பிரமாணிக்காக உள்ளதாக நான் சத்தியம் செய்யவேண்டும். இன்னொருவருடைய நாட்டில் நான் நீதிபதியாக இருக்க முடியாது. அந்தநாட்டின் நீதிமன்றமொன்றில் போய் நான் அமரமுடியாது.ஆனால் என்னுடைய நிபுணத்துவ ஆற்றலை அந்த நாட்டில் வடிவமைக்கப்படும் பொறிமுறைக்கேற்ப பயன்படுத்திக்கொள்ளமுடியும். மண்டேலா அனைத்து அரசியற்கட்சிகளுடனும் கலந்தாலோசித்திருந்தார். அவர்கள் அந்த ஆணைக்குழுவிற்கு இணக்கத்தை வெளிப்படுத்தியிருந்தனர்.அது கலந்தாலோசித்தலினூடாக இணக்கங்காணப்பட்ட அணுகுமுறையாக இருந்தது. ஆனால் எமக்கு தொழில்நுட்ப ரீதியாக சர்வதேச நிபுணத்துவ ஆற்றலுள்ளவர்கள் உதவியிருந்தனர். இங்கு  சர்வதேச வழக்குத் தொடுநர்கள் சர்வதேச நீதிபதிகளைக் அழைப்பது தொடர்பாக வாதப்பிரதிவாதங்கள் முன்வைக்கப்பட்டு வருவதை நான்  அறிவேன். அரசாங்கம் இது விடயத்தில் எப்படி நடந்துகொள்ளப்போகின்றது என்பதை அவதானிக்கின்றோம். எம்முடைய தென் ஆபிரிக்க அனுவவத்தைப் பொறுத்தவரையில் நீதிபதி முதற்கொண்டு அனைவரும் தென் ஆபிரிக்கர்களாகவே இருந்தனர்.

 உங்களுடைய தென் ஆபிரிக்க உண்மை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவிற்கு காலவரையை நிர்ணயிக்கப்பட்டிருந்ததா?
ஆம் நிச்சயமாக அதற்கென ஒரு காலவரையறை இருந்தது. ஆணைக்குழு,1995ம் ஆண்டில் ஸ்தாபிக்கப்பட்டு 1998ல்  அறிக்கை வெளியிடப்பட்டது.தெட்டத்தெளிவான காலவரையிருந்தது.

முன்னைய கேள்விக்கு பதிலளிக்கும் போது கடந்த காலத்தில் இடம்பெற்றதை வைத்தே நீங்கள் தீர்ப்பிடப்படுவீர்கள் என்று கூறியிருந்தீர்கள். அந்தவகையில்
கடந்த காலங்களில் இடம்பெற்ற அட்டூழியங்கள் தொடர்பாக நியமிக்கப்பட்ட பல விசரணைக்குழுக்கள் வெறுமனே ஏமாறஎறுச் செயல்களாகவே அமைந்திருந்தன. தற்போதும் கூட அரசாங்கம் ஜெனிவா தீர்மானத்தை நிறைவேற்றுவதாக பொறுப்பேற்றிருப்பது காலத்தை இழுத்தடித்து சர்வதேசத்தை ஏமாற்றுவதற்காகவே என்ற கருத்துக்கள் ஏற்கனவே முன்வைக்கப்பட்டுள்ளன. நீங்கள் ஓர் அனுபவம் வாய்ந்த இராஜதந்திரி என்ற வகையில்  இந்த நாட்டின் பிரச்சனைகளுக்கு நிரந்தரத் தீர்வைக் காண்பது குறித்து இந்த அரசாங்கத்தின் அர்ப்பணிப்புத் தொடர்பாக உங்கள் மதிப்பீடு எப்படியாகவுள்ளது?

அரசாங்கத்தின் போக்கை மதிப்பீடு செய்வதற்கு இன்னமும் காலம் போதாது. இது ஆரம்பநாட்களாகவே உள்ளன. அரசாங்கமும் அதன் நோக்கங்கள் குறித்து என்னமும் தெளிவாக வெளிப்படுத்தவில்லை.ஆனபோதும் நிரந்தர அரசியல் தீர்வைக் காண்பதற்கான அரசியல் பேச்சுவார்த்தை இடம்பெறவேண்டியது அவசியமாகும் என்பது தொடர்பாக நாம் தொடர்ச்சியாக அரசாங்கத்திற்கு நினைவூட்டிவருகின்றோம்.நாம் தென் ஆபிரிக்காவில் 1990 முதல் 1994ம் ஆண்டுவரை சமரசப் பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டோம். மூன்று தடவைகள் பேச்சுக்கள  முறிவடைந்தன. ஆனாலும் நாம் மீண்டும் ஆரம்பித்து சரிவரும் வரையில் வெற்றியளிக்கும் வரையில் முயற்சித்தோம். உங்களைப் பொறுத்தவரையில் இது சற்றே கடினமானதாகும். எமது பேச்சுக்கள் முறிவடைந்தபின்னர் நாம் மீண்டும் பேச்சுக்களை புதிதாக ஆரம்பித்திருந்தோம்.உங்களைப் பொறுத்தவரையில் இது சற்றே கடினமானதாகும். எமது பேச்சுக்கள் முறிவடைந்தபின்னர் நாம் மீண்டும் பேச்சுக்களை புதிதாக ஆரம்பித்திருந்தோம். நீங்களோ பேச்சுகளை நிறுத்தவில்லை. தொடர்ந்துகொண்டே இருக்கின்றீர்கள். ஜெனிவாவும்  நடைபெற்றுக்கொண்டிருக்கின்றது. எமது காலகட்டத்தில் மனித உரிமை பேரவை இருக்கவில்லை. எமது விடயத்தில் தீர்மானம் இருக்கவில்லை.அந்த தீர்மானம் உங்கள் மீது அழுத்தத்தை ஏற்படுத்திக்கொண்டிருக்கின்றது. பொறுப்புக்கூறல் தொடர்பில் நடவடிக்கை எடுத்தாகவேண்டிய நிலை  உங்களுக்கு ஏற்பட்டுள்ளது.நாடாளுமன்ற உறுப்பினர் ஈ.சரவணபவன் நேற்று வியாழக்கிழமையன்று நாடாளுமன்றத்தில் ஆற்றிய உரை. நாம் சமரசப் பேச்சுவார்த்தைகளோடு ஆரம்பித்தோம்.இடைக்கால அரசியல்யாப்புடன் ஆரம்பித்தோம்.தொடர்ந்து தேர்தலுக்குச் சென்றோம். அதன் பின்னர் அரசியல்யாப்பு உருவாக்கத்தில ஈடுபட்டோம்.1995ல் உண்மை நல்லிணக்க  ஆணைக்குழுவை ஸ்தாபித்தோம்.அந்தவகையில் எமது நடைமுறை எப்படி செயற்பட்டது என்பதை நீங்கள் கண்டுகொள்ளமுடியும். உங்கள் நடைமுறை வித்தியாசமானது. நீங்கள் தற்போது  பொறுப்புக்கூறல் தொடர்பாக எதையாது செய்தாக வேண்டிய நிர்ப்பந்தத்தில் உள்ளீர்கள்.
அழுத்தம் உங்கள் மீது உள்ளது. அதனைச் சரியான முறையில் செய்தாக வேண்டியது சரியானதாகும். இந்த அனைத்து விடயங்களிலும் அடிநாதமாக நிரந்தரமான அரசியல் தீர்வைக்காண்பதற்கான பேச்சுவார்த்தைகளை நடத்துவது அவசியமானது என்பதை நாம் தொடர்ச்சியாக அரசாங்கத்திற்கு நினைவூட்டிவருகின்றோம்.


தாமதிக்கப்பட்ட நீதி மறுக்கப்பட்ட நீதிக்கு ஒப்பானது என்ற உலகப் பொது அபிப்பிராயம் உள்ள நிலையில் நாடுகள் சில தமது புவிசார் நலன்களுக்காக பாதிக்கப்பட்ட தமிழர்களுக்கு நீதி கிடைப்பதை தடுக்க முற்படுவதான எண்ணப்பாடு தமிழ்மக்களிடத்திலே காணப்படுகின்றது. இவர்களுக்கு நீங்கள் கூறுவிரும்பும் செய்தியென்ன?

சர்வதேச சமூகத்திலுள்ள அனைவருமே பொறுப்புக்கூறல் விடயத்தில் உறுதிப்பாடாக இருக்கின்றனர் என்பதை மிக முக்கியமாக கூறிவைக்க விரும்புகின்றேன். தமிழ் மற்றும் முஸ்லிம் மக்கள் எப்படி உணர்கின்றார்கள் என்று அறிந்துகொள்ளாமல் எந்தவொரு நாடும் இருக்கமாட்டாது என நான் நினைக்கின்றேன். சர்வதேச சமூகத்திலுள்ள அனைவரும் இதனை அறிந்துவைத்துள்ளனர். அனைவருமே பொறுப்புக்கூறல் நிலைநாட்டப்படுவதைக் காண விரும்புகின்றனர்.இதிலே பொறுப்புக்கூறலை நிலைநாட்டுவதற்கு எந்தவகையான பொறிமுறையினை நாம் ஏற்றுக்கொள்ளப்போகின்றேர்ம் என்பதிலேயே சிக்கலுள்ளது.அதுவே கடினமான காரியமாக அமைந்துள்ளது.அதுவே கடினமான காரியமாக அமைந்துள்ளது.எந்த பொறிமுறைக்கு இணக்கம் காணப்பட்டாலும் அதிலே தென் ஆபிரிக்கா தனது பங்களிப்பை வழங்கியது என்பதை அனைத்து சமூகத்தவர்களும் புரிந்துகொள்ளவேண்டும்.எத்தகைய பொறிமுறை நடைமுறைப்படுத்தாலும் அது பாதிக்கப்பட்டவர்களின் கரிசனைகளில் அக்கறைசெலுத்துவதாக அவற்றிற்கு தீர்வுகாண்பதாக அமையவேண்டும் என்பதை தென்ஆபிரிக்கா உறுதிப்படுத்த விரும்புகின்றது.
இலங்கையில் பொறுப்புக்கூறல் நிலைநாட்டப்படவேண்டும். அப்போது யுத்தத்தால் பாதிக்கப்பட்ட மக்கள் தமக்கு நீதி கிடைத்ததாக உணர்ந்துகொள்ளமுடியும் என தென்ஆபிரிக்கா 2011 கூறியதையே 2015லும் கூறுகின்றது.

Monday, April 20, 2015

உள்நாட்டு அரசியலில் பந்தாடப்படும் பொறுப்புக்கூறல்

இலங்கையின் புதிய அரசு வலிந்து கேட்டுக் கொண்டதன்பேரில் இலங்கையில் இடம்பெற்ற இறுதிப்போரில் இழைக்கப்பட்ட போர்க்குற்றங்கள், மனித உரிமை மீறல்கள் மீதான விசாரணை அறிக் கையை வெளியிடும் நடவடிக்கையை ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவை எதிர்வரும் செப்டெம்பர் மாதம் வரையில் ஒத்திவைத்தது.

நாட்டிலே சீர்குலைந்துபோயுள்ள நல்லாட்சியை மேம்படுத்தி மனித உரிமைகளை நிலைநாட்டவும், பொறுப்புக்கூறல் விடயத்தில் நம்பகரமான செயற்பாடு களை முன்னெடுக்கவும் ஏற்கனவே நடவடிக்கைகளை ஆரம்பித்துவிட்டதாகவும் இனிவரும் காலங்களில் அது வீச்சுப்பெறும் என்றும் இலங்கை அரச தரப்பில் வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர அளித்த வாக்குறுதியின் பிரகாரமே ஐ.நா. மனித உரிமைகள் பேரவை இந்தக் காலஅவகாசத்தை வழங்கியது.

இதற்கு அமெரிக்கா உட்பட மேற்குலக நாடுகளும் ஆதரவளித்தன. நாடாளுமன்றம் ஏப்ரல் 23ஆம் திகதி யின் பின்னர் கலைக்கப்பட்டு, பொதுத்தேர்தல் ஜூனில் நடத்தப்படலாம் என்ற நிலையில், ஐ.நாவின் விசா ரணை அறிக்கை தற்போதைய அரசை எவ்விதத்திலும் பாதித்துவிடக்கூடாது என்ற கரிசனையும் விசாரணை அறிக்கையை ஒத்திப்போடுவதில் தாக்கம் செலுத்தி யிருந்தது. ஆனால், தற்போதைய நிலையில் நாடாளு மன்றக் கலைப்பு என்பது நூறு நாள் திட்டத்தில் கூறப் பட்டதுபோன்று ஏப்ரல் 23ஆம் திகதி இடம்பெறப் போவதில்லை என்பது நிச்சயமாகத் தெரிகின்றது.

ஜனாதிபதி செயலகத்தில் நேற்றையதினம் நடை பெற்ற அனைத்துக் கட்சித் தலைவர்களினதும் விசேட கூட்டத்தில் உயர்நீதிமன்றம் அங்கீகரித்துள்ளதான 19ஆவது திருத்த சரத்துகள் தொடர்பில் நாளையும், நாளை மறுதினமும் விவாதித்து வாக்கெடுப்பை நடத்துவதற்கும், தேர்தல் சீர்திருத்தம் நிறைவேற்றப்படும் வரையில் நாடாளுமன்றைக் கலைக்காதிருக்கவும் இணக்கம் காணப்பட்டுள்ளது. தேர்தல் சீர்த்திருத்தம் என்ற விடயத்தை நினைத்த மாத்திரத்தில் ஒருசில தினங்களில் முன்னெடுக்க முடியாது என்ற நிலையில், அதனை நிறைவேற்றுவதற்கு இன்னமும் சில மாதங் களேனும் செல்லக்கூடும். இந்நிலையில், நாடாளுமன் றக் கலைப்பும் அதன் பின்னர் பொதுத்தேர்தலும் வருவதற்கு ஓகஸ்ட் அன்றேல் செப்டெம்பர் மாதம் கூட ஆகிவிடலாம்.

இந்த அரசை சங்கடப்படுத்தி மஹிந்த தரப்பினருக்கு மீண்டும் அரசியல் அதிகாரத்தைப் பெறுவதற்கு வாய்ப்பளிக் கக்கூடாது என்ற நோக்கில் ஐ.நா. விசாரணை அறிக்கை வெளியாவதைத் தள்ளிவைத்த தரப்பினர், தேர்த லொன்று இடம்பெறும் காலப்பகுதியில் மீண்டும் அதனை வெளியிடுவார்களா என்ற கேள்வி ஒருபுறம் இருந்தாலும், அரசு வாக்களித்த நம்பகரமான உள்நாட் டுப் பொறிமுறை தேர்தல் காலப்பகுதியில் ஸ்தாபிக்கப் படுமா, நம்பகரமான முறையில் விசாரணைகளை முன்னெடுத்துச் செல்லுமா என்ற கேள்விகள் தற்போது எழுகின்றன.

இலங்கையில் இடம்பெறும் ஆட்சிமாற்றங்களின் போது ஆட்களே வெறுமனே மாறுகின்றார்களே தவிர, ஆட்சிபீடம் ஏறும் அரசுகள் தமிழருக்கு நியாயம் வழங்க இதயசுத்தியுடன் செயலில் ஈடுபடுவதில்லை; சர்வதே சத்தை ஏமாற்றிக் காலங்கடத்துவதற்கும் தமது சொந்தக் கட்சி அரசியல் அதிகாரத்தை அடைந்துகொள்வதற்குமே முயற்சிக்கின்றன என்ற விமர்சனங்களை மெய்ப்பிக் கும் வகையில் தற்போதைய நிலைமை காணப்படு கின்றது.

எதிர்வரும் ஜூன் மாதத்திலேயே பொறுப்புக்கூறல் விடயத்தைக் கையாள்வதற்கான உள்நாட்டுப் பொறிமுறை நிறுவப்படும் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அண்மையில் சர்வதேச ஊடகமொன்றுக்கு வழங்கிய நேர்காணலில் தெரிவித்திருந்தார். ஆனால், தன்னைப் பொதுவேட்பாளராக அறிவிக்கும் முதலாவது கூட்டத்திலேயே யுத்தத்தில் ஈடுபட்ட அனைத்துப் படை யினரையும் பாதுகாப்பேன் என உத்தரவாதம் வழங் கிய ஜனாதிபதியிடமிருந்து எப்படித் தமிழர்கள் நம்பக ரமான பொறுப்புக்கூறலை எதிர்பார்க்கமுடியும்? ‡ என்ற கேள்வி எழுகின்றது.

பொறுப்புக்கூறல் விடயத்தில் வெற்று வாக்குறு திகளோடு மாத்திரம் நின்றுவிடாது, செயலிலும் காத்திர மான நடவடிக்கையை மேற்கொள்வதை உறுதிப்படுத்த வேண்டும் என்ற செய்தியை மே மாத முற்பகுதியில் இலங்கை வரவுள்ள அமெரிக்க இராஜாங்கச் செயலாளர் ஜோன் கெரி ஆணித்தரமாக இலங்கை அரசுக்குத் தெரிவிப்பதுடன், என்னதான் உள்நாட்டு அரசியல் அதிகா ரப்போட்டிகள் இடம்பெற்றாலும் சர்வதேசம் பொறுப்புக் கூறல், நல்லிணக்கம் ஆகிய விடயங்களில் இலங்கை யிடமிருந்து அர்த்தபூர்வமான செயற்பாட்டை எதிர்பார்த்து உன்னிப்பாக அவதானித்துக்கொண்டிருக்கின்றதென்ற செய்தியையும் தெரிவித்துச் செல்வது மிகவும் அவசிய மாகும்.

சுடர் ஒளியின் 20.04.2015 ஆசிரியர் தலையங்கம் 

Thursday, April 16, 2015

சர்ச்சையைக் கிளப்பியுள்ள இனவழிப்பு சொற்பதம்இனவழிப்பு என்ற சொற்பதத்தைக் கேட்டாலே இலங்கையில் மட்டுமன்றி சர்வதேசத்திலும் பெரும் அதிர்வலைகள் ஏற்படுகின்றதை செய்திகளின் காத்திரத்தன்மையிலிருந்து புரிந்துகொள்ளமுடிகின்றது.
கடந்த பெப்ரவரி 10ம்திகதி வடமாகாண சபையில்  இனவழிப்புத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டபோது இலங்கையில் அது பாரிய அதிர்வலைகளை ஏற்படுத்தியிருந்தது.

கடந்த ஞாயிற்றுக்கிழமை வத்திக்கானில் இடம்பெற்ற திருப்பலி நிகழ்வில் ஆற்றிய பிரசங்கத்தின் போது கருத்துரைத்த பரிசுத்த பாப்பரசர் பிரான்ஸிஸ் 1915ம் ஆண்டில் 15லட்சம் வரையிலான ஆர்மேனியர்கள்  படுகொலைசெய்யப்பட்டமை 20ம் நூற்றாண்டில் முதலாவது இனவழிப்பாக அமைந்துள்ளதுடன் அதனை சர்வதேச சமூகம் உரியவகையில் அங்கீகரிக்கவேண்டும் என கோரியிருந்தார்.

ஒட்டோமன் சாம்ராஜியத்தின் கீழ் ஒட்டோமன் துருக்கியர்களால் ஆர்மேனிய மக்களுக்கு எதிராக இழைக்கப்பட்ட படுபாதகச்செயலை கண்டிக்கும் வகையிலே பாப்பரசர் வெளியிட்ட கருத்து துருக்கியத்தரப்பிலிருந்து கடுமையான விமர்சனங்களுக்கு வழிகோலியுள்ளது. துருக்கி ஜனாதிபதி ரிஸப் டையீக் எர்கோடன் பாப்பரசரின் கருத்தை அர்த்தமற்றதென நிராகரித்துள்ளதுடன் இதுபோன்ற தவறுகளை மீண்டும் இழைக்கமுற்படக்கூடாது என பாப்பரசரை எச்சரித்திருந்தார்.

ஒட்டோமன் சாம்ராஜத்தின் இறுதிநாட்களில் 15 லட்சம் முதல் 17லட்சம் வரையிலான ஆர்மேனியர்கள் 1915 ம் ஆண்டுமுதல் 1917ம் ஆண்டுவரையான காலப்பகுதியில் திட்டமிட்டரீதியில் இலக்குவைக்கப்பட்டு படுகொலைசெய்யப்பட்டதாக ஆர்மேனியர்கள் குற்றஞ்சாட்டிவருகின்றனர். துருக்கியோ தாம் ஆர்மேனியர்களுக்கு எதிராக ஒருபோதும் இனவழிப்;பை மேற்கொள்ளவில்லை எனவும் ஒட்டோமன் ஆட்சியாளருக்கு எதிராக அன்றைய காலத்தில் படையெடுத்துவந்த ரஸ்யத் துருப்பினருடன் இணைந்துகொண்டு கிளர்ச்சியில் ஈடுபட்டதாகவும் அப்போது ஏற்பட்ட யுத்தகால நெருக்கடிச் சூழலால் மூன்று லட்சம் முதல் ஐந்து லட்சம் வரையான ஆர்மேனியர்களும் அதே அளவான துருக்கியர்களும் பலியானதாகவும் காரணம் கற்பிக்கும் துருக்கி அதனை இனவழிப்பு என அடையாளப்படுத்தும் முயற்சிகளை தொடர்ச்சியாக கடுமையாக எதிர்த்துவருகின்றது.

தென் அமெரிக்கா மற்றும் ஐரோப்பாவைச் சேர்ந்த சுமார் இரண்டு டஸின் நாடுகள் ஆர்மேனியர்களுக்கு எதிராக இழைக்கப்பட்டது இனவழிப்புத்தான் என ஏற்றுக்கொண்டுள்ளபோதும் அமெரிக்கா ஜேர்மனி உள்ளிட்ட நாடுகள் துருக்கியுடனான கேந்திர உறவு பாதிக்கப்படும் என்ற அச்சத்தில் இன்னமும் இவ்விடயத்தில் தீர்மானமெடுக்காது நழுவல் போக்கை கடைப்பிடித்துவருகின்றன. இத்தனை லட்சம் மக்களைக் கொல்லும் போது காட்டாத அக்கறையை இனவழிப்பு என்ற சொற்பதத்தை அதுவிடயத்தில் பயன்படுத்திவிடக்கூடாது என்று பிரயத்தனமெடுக்கும் துருக்கிய அரச தரப்பின் செயற்பாடு மக்களை ஈவிரக்கமின்றிக் கொல்லும் ஏனைய அரசுகளின் இரட்டைவேடத்தை அம்பலப்படுத்திநிற்கின்றது.

இலங்கையில் தமிழர்களுக்கு எதிராக இடம்பெற்றது இனவழிப்பா இல்லையா என்பதை முறையான நீதிவிசாரணையின் மூலமே உறுதிசெய்யமுடியும் என்றபோதும் இலங்கையில் ஆயிரக்கணக்கான தமிழர்கள் கடந்த ஆறுதசாப்தகாலத்தில் திட்டமிட்ட ரீதியில் கொல்லப்பட்டதை மறுதலிக்கமுடியாது.

தனது மக்களின் உயிர்களைக் காப்பாற்றுவதே ஒரு நாட்டினது அரசின் தலையாய கடமை. அதனைச் சரிவரச் செய்தால் இனவழிப்பு போன்ற சொற்பதற்களுக்கு அஞ்சவேண்டிய அவசியம் ஏற்படாது.

சுடர் ஒளி ஆசிரியர் தலையங்கம்: 16-04-2015

தமிழ் புத்தாண்டு விடிவைத்தருமா?தமது உரிமையைப் பெற்றுக்கொள்வதற்காக அஹிம்சை ரீதியிலும் ஆயுதரீதியிலும் பல தசாப்தகாலமாக போராடிய தமிழர்கள் இலட்சக்கணக்கான உயிர்களையும் பெறுமதிக்க முடியாத உடமைகளை இழந்த நிலையிலும் தன்மானத்துடன் ஏனைய இனத்தவர்களுடன் சரிசமமாக வாழும் எதிர்பார்ப்புடன் அரசியல் போராட்டத்தை முன்நகர்த்திக்கொண்டு இன்னுமொரு தமிழர் புத்தாண்டிற்குள் காலடியெடுத்துவைக்கின்றனர்.

சுதந்திரத்திற்கு பின்னரான காலப்பகுதியில் ஆட்சிக்கு வந்த ஒவ்வொரு அரசுகளும் தமக்கு நியாயமான தீர்வுகளைப் பெற்றுக்கொடுக்கும் என்ற எதிர்பார்ப்பில் தமிழர் தரப்பு நல்லெண்ணக் சமிக்ஞைகளைக் காண்பித்து ஒத்துழைத்துச் செயற்பட்டபோதும் ஈற்றிலே ஏமாற்றமே மிஞ்சியதை வரலாறு நமக்கு உணர்த்தி நிற்கின்றது

கடந்த ஜனவரியில் இடம்பெற்ற தேர்தலில் போட்டியிட்ட இரு பிரதான வேட்பாளர்களுமே சிங்கள பௌத்த பெரும்பான்மையின சமூகத்தைச் சேர்ந்தவர்கள் என்ற போதும் இந்த நாடு சர்வாதிகாரப்போக்கில் முன்நகர்ந்து ஒட்டுமொத்த மக்களுக்கும் ஜனநாயகம் மறுக்கப்படுவதை தடுப்பதற்காக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எவ்வித வற்புறுத்தல்களுமில்லாத நிலையில் கூட மஹிந்வை தோற்கடிப்பதில் பங்களித்ததை மறந்துவிடக்கூடாது. 

              தமிழர் தரப்பின் பிரச்சனைகள் தீர்க்கப்படும் என்பது தொடர்பான தெளிவான                               வாக்குறுதிகள் அரசின் 100நாள் திட்டத்தில் உள்ளடக்கப்படாத நிலையிலும்              ஒட்டுமொத்த இலங்கை மக்களின் ஜனநாயக இருப்பை உறுதிசெய்துகொள்வதற்காக தமிழர்கள் சர்வாதிகாரத்தின் விளிம்புநிலைக்கு சென்றிருந்த மஹிந்த அரசை வீட்டுக்கு அனுப்புவதற்காக தமது வாக்குப்பலத்தை பயன்படுத்தியதற்கான நன்றிக்கடனை இந்த அரசு மறந்து விடக்கூடாது. 

100 நாட்களை நெருங்கிக்கொண்டிருக்கும் இந்த அரசு தமிழர்கள் தொடர்பான பிரச்சனைகள் விடயத்தில் ஒரு சில நம்பிக்கை தரும் அறிவிப்புக்களை விடுத்துள்ள போதும் அவை இன்னமும் நடைமுறைச்சாத்தியமாகவில்லை என்பது சுட்டிக்காட்டத்தக்கது. இனிமேலும் காலத்தை வீணடிக்காது கௌரவமான அரசியல் தீர்வு நம்பகரமான பொறுப்புக்கூறல் உட்பட முக்கியமான விடயங்களில் காத்திரமான தீர்வுகளைப் பெற்றுக்கொடுக்க அரசு முன்வரவேண்டும். 

நிறைவேறாமற் போகுமா நிறைவேற்று ஜனாதிபதி முறைமை ஒழிப்பு?இந்த நாட்டின் சாபக் கேடாக பார்க்கப்படும் நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமையை நடப்பு ஜனாதிபதியின் பதவிக்காலத்திலும் இல்லாதொழிக்கப்படும் என்ற நம்பி;க்கை விரைவாக அருகிவருகின்றது. கடந்த ஜனாதிபதித் தேர்தலின் போது நிறைவேற்று ஜனாதிபதி முறைமையை ஒழிக்கவேண்டும் என்ற நோக்கை முதன்மைப்படுத்தி ஒன்றுபட்ட பல்வேறு தரப்பட்ட சக்திகளும் மூன்று மாதகாலத்திற்குள்ளாக தத்தம் அரசியல் தேவைப்பாடுகளுக்காக பிரிந்து நிற்பதனால் நிறைவேற்று அதிகார ஒழிப்பு கானால் நீராகவே போய்விடுமோ என்ற ஐயப்பாடுகள் தலைதூக்கியுள்ளன.

நூறு நாட்கள் திட்டத்தில் அளித்த வாக்குறுதிகளில் முதன்மையானதாக கருதப்படும் நிறைவேற்று அதிகார முறைமை ஒழிப்பை நிறைவேற்றுவது கடுமையான தேர்தலில் பல்வேறு சவால்களையும் தாண்டி  ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை வெற்றிபெறச் செய்து பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவையும் புதிய அரசையும் ஆட்சிக்குக் கொண்டுவர வழிகோலிய தரப்பினர் நம்பிக்கைகளை எதிர்வரும் பொதுத் தேர்தலில் தக்க வைப்பதற்கு இன்றியமையாததாகும்.  இதன்காரணகவே நிறைவேற்று ஜனாதிபதி முறைமையிலுள்ள அபாயகரமான அம்சங்கள் நீக்கப்படாத நிலையிலும் 19வது திருத்தத்தை நிறைவேற்றுவதற்கு அரச தரப்பு முனைந்துள்ளது. 

தற்போது உயர் நீதிமன்றத்தினால் வழங்கப்பட்ட தீர்;ப்பையடுத்து நாடாளுமன்றில் நிறைவேற்றப்பட உத்தேசிக்கப்பட்டுள்ள 19வது திருத்தம் என்பது தற்போதுள்ள அரசியலமைப்பில் மஹி;ந்த ராஜபக்ஸ தரப்பினரால் திணிக்கப்பட்ட 18வது திருத்தத்தை நீக்கிவிட்டு 17வது திருத்தத்தை உள்வாங்குகின்ற செயற்பாடு என்றே பார்;க்க முடிகின்றது. 

ஜனாதிபதி பதவிக்காலத்தின் வரையறைகளை இல்லாமல் செய்த 18வது திருத்தம் இல்லாமல் போவதும்  சுயாதீன ஆணைக்குழுக்களைத் கொண்டுவரும் 17வது திருத்தம் உள்வாங்கப்படுவதும் நல்ல விடயங்களே. ஆனால் நிறைவேற்று அதிகார ஒழிப்பு என்ற வழங்கிய வாக்குறுதியை 19வது திருத்தம் மூலம் நிறைவேற்ற முடியாது என்பதே வெள்ளிடை மலையாகும். 

நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமையானது உலகில் 32 நாடுகளில் உள்ளன. அமெரிக்கா பிரான்ஸ் உட்பட அபிவிருத்தியடைந்த நாடுகளில் இதனை நேர்த்தியாக கையாண்டு அவை முன்னேற்றமடைந்தன. ஆனால் ஆபிரிக்கா ஆசியா போன்ற பிந்தங்கிய கண்டங்களிலுள்ள நாடுகளில் இந்த முறைமை நாடுகளில் சீரழிவிற்கே வழிகோலியதற்கு சான்றுகளுள்ளன. தெற்காசியாவில் நிறைவேற்று ஜனாதிபதி முறைமையை கொண்டுள்ள பாகிஸ்தான் மாலைதீவு மற்றும் இலங்கை ஆகிய மூன்று நாடுகளில் ஜனநாயகத்தின் வீழ்ச்சிக்கே அது வழிகோலியுள்ளது. 

இதனைப் பார்க்கும் போது நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறையில்;; பிழையில்லை மாறாக அதனை பயன்படுத்தும் நபரின் ஆளுமைக்கு அமைவாகவே அது நல்லநோக்கிற்காகவா அன்றேல் தீய நோக்கிற்காகவா பயன்படுத்தப்படும் என்பது தீர்மானிக்கப்படும் என்ற கருத்து நிலைப்பாடும் உள்ளது. இலங்கை போன்ற நாடுகளில் உள்ள அதிகார வேட்கை பிடித்த அரசியல் வாதிகள் நிறைவேற்று ஜனாதிபதி முறைமையிலு;ள்ள அபரீதமான அதிகாரங்களைப் பயன்படுத்தி அதனைத் துஸ்பிரயோகம் செய்வதற்கான சாத்தியமே அதிகம் என்பதற்கு வரலாறு சான்று பகர்கின்றது.

 நிறைவேற்று அதிகார முறைமையை இலங்கையில் அறிமுகப்படுத்திய ஜே. ஆர் ஜெயவர்த்தன முதற்கொண்டு மஹிந்த ராஜபக்ஸவரை உதாரணங்களை அடுக்கமுடியு;ம். பிரேமதாசவின் அகால மரணத்தைத் தொடர்ந்து பதவிக்கு வந்த டீ.பி. விஜயதுங்க ஒரு கனவான நடந்தார் என்று சுட்டிக்காட்டப்படுகின்றபோதும் அவர் மக்களின் ஆணையைப் பெற்று அந்தப்பதவிக்கு வரவில்லை என்பது நினைவுகூரப்படவேண்டும். புதவி மோகம் பிடித்தவர்கள் மக்களின் ஆணையையும் சாதகமாக பயன்படுத்திக்கொண்டு பண்ணிய  அட்டூழியங்களும் அடாவடித்தனங்களும் கொஞ்சநஞ்சமல்ல. சர்வதிகாரத்தின் விளிம்பு நிலைக்கு சென்ற நலையிலேயே தெய்வாதீனமாக கடந்த தேர்தலில் இலங்கையின் ஜனநாயகம் காப்பாற்றப்பட்டது. 

மஹிந்தவுடன் ஒப்பிடும் போது நிறைவேற்று அதிகாரத்தை தற்போது தன்வசம் கொண்டுள்ள மைத்திரிபால நல்லவராக இருப்பதால் அது இருந்துவிட்டுப் போகட்டும் என்ற கருத்துநிலையும் எழுச்சிபெறுவதைக் காணமுடிகின்றது. ஆனால் இந்த நிறைவேற்று ஜனாதிபதி முறைமை நல்ல புத்திசாலித்தனமான அரசியல் வாதிகளையும் மோசமானவர்களாக மாற்றக்கூடியதென்பதையும்  அடுத்த நிலையில் சர்வாதிகாரிகளாகவும் மாற்றக்கூடியதென்பதையும் உணர்ந்துகொண்டு செயற்படுவது இன்றியமையாததாகும். 

நல்லிணக்கத்தின் முக்கியத்துவம்

நல்லிணக்கம் இல்லாதவிடத்தில் தேசிய ஒற்று மையை ஊக்குவிக்கின்ற அரசின் முயற்சிகள் சீர் குலைந்து போகும் என இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க தெரிவித்துள்ளமையை அனைத்து தரப்பினரும் மிக வும் கவனமாகக் கருத்தில் கொள்ளவேண்டியது அவசி யமாகும்.

கடந்த 9 ஆண்டுகளாக அரசியலில் இருந்து ஒதுங்கி யிருந்து விட்டு கடந்த ஜனாதிபதித் தேர்தலுடன் மீண்டும் பொது அரங்கிற்குத் திரும்பியிருந்த சந்திரிகா பண்டார நாயக்க குமாரதுங்க ஆட்சியிலிருந்த ஜனாதிபதிகளில் இனப்பிரச் சினைக்குத் தீர்வு காண்பதற்கு ஓரளவேனும் அர்ப்பணிப்புடன் முயற்சியயடுத்த ஒரு தலைவராகப் பார்க்கப்படுபவர். 

கடந்த சில ஆண்டுகளில் முதற்றடவையாக சர்வதேச ஊடகமொன்றிற்கு வழங்கிய பேட்டியாக சில தினங் களுக்கு முன்பாக இந்துப் பத்திரிகைக்கு அளித்துள்ள பேட்டியிலேயே நல்லிணக்கமானது இலங்கையின் நலன்களுக்கு மிகவும் அத்தியாவசியமானது என்ற கருத்தை வலியுறுத்தியிருக்கின்றார். 

தனது காலத்திலே இலங்கையின் இனப்பிரச்சினை யைத் தீர்ப்பதற்கு முடியாமற்போனமை தொடர்பில் பலமுறை கவலைகளை வெளிப்படுத்தியிருந்த சந்திரிகா, சில ஆண்டுகளுக்கு முன்பாக இலங்கை மன்றக் கல்லுரியின் கேட்போர் கூடத்தில் நீதியரசர் பாலகிட்ணர் நினைவுப் பேருரையை ஆற்றியபோது சனல் 4 தொலைக் காட்சியில் ஒளிபரப்பப்பட்ட இறுதிப் போர் அவலங்களைப் பார்த்துவிட்டு தனது மகன் விமுக்தி இலங்கையர் என்று சொல்வதற்கு வேதனைப்படுவதாகக் கண்ணீர் மல்கக் கூறியிருந்தார்.

சிங்களத் தலைவர்களில் முக்கியமான ஒருவராகப் பார்க்கப்படுபவரான சந்திரிகாவின் வாயிலிருந்து இத்தகைய வார்த்தைகள் வெளிவந்தபோது அப்போது ஆட்சியிலிருந்த மஹிந்த ராஜபக்­ அரசின் அடிவருடி களும் ஊடகங்களும் சந்திரிகாவை கடுமையாகச் சாடியிருந்தமை சுட்டிக்காட்டத் தக்கவை. நல்லிணக்கம் தொடர்பான ஜனாதிபதியின் விசேட செயலணிக் குழுவிற்குத் தலைமைதாங்குவதற்காக விடுக்கப்பட்ட அழைப்பை ஏற்றுச் செயற்படும் சந்திரிகா, இந்தத் தடவையேனும் உண்மையான நல்லிணக் கத்தைக் காண்பதை உறுதிசெய்வாரா என்பதற்குக் காலம்தான் பதில்சொல்ல வேண்டும்.முன்னைய மஹிந்த அரசின் காலத்தில் நல்லிணக் கம் என்பது ஏதோ ஒரு கண்ணாம்பூச்சி விளையாட் டுப்போன்றே கையாளப்பட்டது. 

சர்வதேச மட்டத்தில் இலங்கை பற்றிப் பேசுகின்றபோதோ அன்றேல் சர்வ தேச பிரதிநிதிகள் இலங்கைக்கு வருகைதரும்போதோ மூலையில் கிடப்பில் போடப்பட்டிருந்த நல்லிணக்கத் தைத் தூசுதட்டி முன்னுரிமைப்படுத்திப் பேசுவதும் கவனம் திசைமாறியதாக உணரும்போது கிடப்பில் போடப்படுவதுமாகவே இருந்துவந்துள்ளது.

விடுதலைப் புலிகளுக்கு எதிராக ஈட்டிய அசாத்திய போர் வெற்றி மஹிந்த அரசின் கண்களைக் குருடாக்கி யிருந்ததுடன் இந்த நாட்டில் பிரச்சினையயான்று உள்ளது, அதற்கு அரசியல் தீர்வுடன் கூடிய நல்லிணக் கமே அவசியம் என்ற உண்மையை மறைத்து அபி விருத்தியால் எல்லாப்பிரச்சினைக்கும் தீர்வுகண்டுவிடமுடி யும் என்ற மாயத்திரையை விரித்திருந்தது. ஆனால், இலங்கையில் தமிழ் பேசும் மக்கள் பொருளாதார நெருக்கடிகளைத் தாண்டி பல்வேறு அடக்குமுறைகளை எதிர்நோக்கியிருக்கின்றனர். இதற்குத் தீர்வுகாணப்படு வது நாட்டின் நலனுக்கு அவசியமானது என்பதை கடந்த தேர்தலில் வாக்குகள் மூலமாக தமிழ்பேசும் மக்கள் எடுத்துணர்த்தியிருந் தனர்.

இந்நிலையில், மஹிந்தவைத் தோற்கடித்து புதிய அரசை அமைப்பதில் முக்கிய பாத்திரங்களை வகித்த சந்திரிகா, ரணில், மைத்திரி ஆகியோர் இலங்கை முன்னோக்கிச் செல்வதற்கு அவசியமான தேசிய ஒற்றுமையைக் கட்டியயழுப்புவதற்கு நல்லிணக்கம் மிகவும் இன்றியமையாதது என்பதை உணர்ந்து கருத்துகளைவெளியிட்டு அதற்கமைவாக சில நடவடிக் கைகளையும் எடுத்துள்ளமை ஆரம்பகட்ட நம்பிக் கையை அளிப்பதாக அமைந்துள்ளபோதும் இன்னமும் காத்திரமான நடவடிக்கைகள் எடுக்கப்படவேண்டியது மிகவும் அவசியமாகும். 

ஒவ்வொரு அரசியல் தலை வர்களும் தேர்தல் வெற்றியை மாத்திரம் குறிவைத்து காய்நகர்த்துவார்களாக இருப்பின், ஒருசில நல் லெண்ண சமிக்ஞைகளுடன் நல்லிணக்கம் பற்றிய எதிர்பார்ப்பு மருகிவிடலாம். அரசியல்வாதிகள் என்ற நிலையில் இருந்து சிங்கப்பூரின் லீ குவான் யூ போன் றும் தென்னாபிரிக்காவின் நெல்சன் மண்டேலா போன் றும் தேசத் தலைவர்கள் என்று தம்மை உயர்த்திக் கொண்டு தூரதரிசனத்துடன் தீர்மானங்களை எடுக் கும்போதே உண்மையான நல்லிணக்கம் என்பது நடைமுறைச் சாத்தியமாகும்.

Thursday, April 2, 2015

உலகக்கிண்ணம் உணர்த்தும் பாடம்மெல்பேர்ண் மைதானத்தில் நேற்றைய தினம் இடம்பெற்ற உலகக்கிண்ண கிரிக்கட் இறுதிப்போட்டியில் நியூஸிலாந்து அணியை எழு விக்கட்டுக்களால் தோற்கடித்து ஆஸ்திரேலிய அணி சம்பியனாகியது.

பதினோராவது முறையாக இடம்பெற்ற சர்வதேச ஒருநாள் உலகக்கிண்ண கிரிக்கட் போட்டித் தொடரில் ஐந்தாவது முறையாக சம்பியனாகியதன் மூலம் கிரிக்கட் உலகில் தனது ஆதிக்கத்தை ஆஸ்திரேலிய அணி மீண்டுமாக நிரூபித்துக்கொண்டதென்றால் மிகையாகாது.  இந்த அணியின் தொடர்ச்சியான ஆதிக்கத்திற்கு பின்னால் அந்த நாட்டில் கிரிக்கட் வீரர்களின் வளர்ச்சிக்காக இருக்கின்ற மிக உயர்தரமான கட்டுமானம் முக்கியமானது. ஒரு சில வீரர்களின் திறமையில் தங்கியிராது ஒட்டுமொத்த அணியாக இடைவிடாது தொடர்ச்சியாக வெளிப்படுத்தும்  ஆற்றல் வெளிப்பாடுகளின் பிரதிபலனே ஆஸ்;திரேலிய அணியின் ஆதிக்கத்திற்கு வலுச்சேர்த்துநிற்கின்ற மற்றுமொரு முக்கிய விடயமாகும்.

வெற்றிபெற்ற ஆஸ்திரேலிய அணியினரும் அதன் ரசிகர்களும் அளவில்லா மகிழ்ச்சியில் ஆழ்ந்திருப்பதை செய்திகளும் புகைப்படங்களும் புலப்படுத்துகின்றன. வெற்றிபெறும் போது ஏற்படுகின்ற மகிழ்ச்சியுணர்வு அலாதியானது. அதனை அனுபவிக்கும் போதுதான் அதன் மகத்துவம் புரியும். ஆனால் போட்டியில் தோல்வியுற்ற நியுஸிலாந்து அணிக்கும் அதன் ரசிகர்களுக்கும் இதுவே வாழ்வின் முடிவல்ல. இறுதிப் போட்டியில் தோற்றமை வருத்தமளிக்க கூடியது தான் என்றாலும் அதனையே நினைத்துக்கொண்டு வாழ்நாளை முடித்துக்கொண்டுவிடமுடியாது. இறுதிப்போட்டியைத் தாண்டியும் வாழ்க்கையொன்று இருக்கின்றது என்பதே யதார்த்தம். உலகக்கிண்ண இறுதிப்போட்டிக்கு மூன்றுமுறை முன்னேறியும் கிண்ணத்தை வெல்லமுடியாமல் போன இங்கிலாந்து கிரிக்கட் வீரர்களும் ரசிகர்களும் அதற்குப்பிறகும் வாழ்க்கையைத் தொடரவில்லையா? தொடர்ந்துமே முயற்சித்துக்கொண்டிருக்கவில்லையா?

கிரிக்கட் உட்பட ஓவ்வொரு விளையாட்டிலிருந்தும் வாழ்க்கைக்கு எடுத்துக்கொள்ளவேண்டிய பாடங்கள் நிறைவே இருக்கின்றன.  வெற்றிபெறும் போது கிடைப்பதைவிடவும் தோல்வியடையும் போது தான் நிறைய விடயங்களை ஒரு வீரன் அன்றேல் ஒரு அணி கற்றுக்கொள்ளமுடிகின்றது. தனது பலம் பலவீனம் வீழ்த்துவதற்காக வகுக்கப்பட்ட வியூகம் உட்பட பல விடயங்களை அறிந்துகொண்டு அடுத்தகட்டத்திற்கு தயாராக முடியும். விளையாட்டுப்போட்டியில் பங்கேற்கும் அனைவருமே சம்பியன்கள் ஆவதில்லை. அதுபோன்றே வாழ்க்கையில் அனைவருக்குமே வெற்றிவாய்த்துவிடுவதில்லை. காபொத பரீட்சைகளில் சித்திபெறத்தவறுவர்கள் முதற்கொண்டு காதலில் வெற்றிபெறத்தவறுபவர்கள் என பலரும் தற்கொலையை ஒரு தெரிவாக எடுத்துக்கொண்டு வாழ்க்கையை தொலைத்துக்கொள்கின்ற செய்திகளைப் பார்த்திருக்கின்றோம்;.

அத்தகையவர்கள் விளையாட்டு வீரர்களது வாழ்க்கையை எண்ணிப்பார்த்து வாழ்க்கையின் உண்மையான அர்த்தத்தை உணர்ந்திடவேண்டும். போட்டியில் வெற்றிபெற்றால் மகிழ்ச்சி இல்லாவிட்டால் போட்டியில் பங்கேற்றதற்காகவும் தம்மால் ஆனமட்டும் முயன்றுபார்த்ததற்காகவும் பெருமைப்பட்டுக்கொண்டு வெற்றியை நோக்கி முன்னேறுவதற்காக மேலும் திடசங்கற்பத்துடன் உழைக்கவேண்டும்.
உலகக்கிண்ணத்தை வெல்வது போன்ற பெரிய வெற்றியுணர்வு ஒரு சில அணிகளுக்கே கிடைப்பது போன்று வாழ்க்கையில் ஒரு சிலருக்கே பெரிய வெற்றியுணர்வுதரும் கணங்கள் வாய்க்கப்பெறுகின்றன.

ஆனால் பெரும்பாலான மனிதர்களுக்கே அன்றாடவாழ்வில் எத்தனையே வெற்றிக்குரிய மகிழ்ச்சிகரமான கணங்கள் கிடைத்துக்கொண்டே இருக்கின்றன என்பதை நாம் மறந்துவிடக்கூடாது. ஒரு பிஞ்சுக்குழந்தையின் மழலைச் சொல்லைக் கேட்கும் பாக்கியமாக இருக்கட்டும் அந்தக்குழந்தை முதன்முறையாக நடக்கும் அழகைப் பார்க்கும் தருணமாக இருக்கட்டும் நல்ல உணவை நான்கு சொந்தங்களுடன் பகிர்ந்து கொள்ளும் தருணமாக இருக்கட்டும் வீதியில் நண்பர்களுடன் விளையாடும் போட்டியில் கிடைக்கின்ற மகிழ்ச்சியாக இருக்கட்டும். நல்ல நிகழ்ச்சியைப்பார்த்த திருப்தியாக இருக்கட்டும் இவை ஒவ்வொன்றுமே ஒருவகையான வெற்றி மகிழ்ச்சியைத் தரும் தருணங்கள் தாம் என்பதை நாம் நினைவிற்கொள்ளவேண்டும். வாழ்க்கையை கணங்களாக தருணங்களாக ரசித்து அனுபதிவத்து மகிழ்ந்திடவேண்டும்.