Thursday, March 18, 2021

ஜெனிவாவில் இலங்கையை இந்தியா ஆதரிக்கும் என வெளிவிவகார செயலாளர் கூறுவது உண்மையா?

 


ஜெனிவாவில் நடைபெற்றுவரும் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 46வது கூட்டத்தொடரில் இலங்கை மீதான தீர்மானம் தொடர்பான வாக்கெடுப்பு நெருங்கிவரும் நிலையில் இந்தியாவின் நிலைப்பாடு என்ன என்பது பலரதும் கேள்வியாக இருக்கின்றது. ஆனாலும் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் முன்னர் இலங்கையின் இறையாண்மையைப் பாதுகாப்பதற்கு இந்தியா உறுதிமொழியளித்துள்ளதாக இலங்கையின் வெளிவிவகார செயலாளர் அட்மிரல் ஜெயநாத் கொலம்பகே தெரிவித்துள்ளார்.

தேசிய அபிவிருத்திக்கான ஊடக மத்திய நிலையத்தால் ஏற்பாடுசெய்யப்பட்டிருந்த 3வது கலந்துரையாடலின் போதே அவர் இந்தத்தகவலை வெளியிட்டுள்ளார்.

இந்தியாவின் நிலைப்பாட்டை இலங்கை பெரிதும் பாராட்டுவதாக குறிப்பிட்டுள்ள வெளிவிவகார செயலாளர் இறையாண்மையை மதிக்கின்ற எந்தவொரு அமைப்புடன் இணைந்து பணியாற்றுவதற்கு தயாராக உள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

ஜெனிவாவில் இலங்கையை ஆதரிக்கும் நிலைப்பாட்டை இந்தியா உத்தியோகபூர்வமாக எடுத்துவிட்டதா?என இந்திய வெளிவிவகார அமைச்சுக்கு நெருக்கமான வட்டாரத்தில் வினவியபோது இந்தியா இன்னமும் உத்தியோகபூர்வமான நிலைப்பாட்டை எடுக்கவில்லை எனக் கூறப்பட்டது. எங்கிருந்து இலங்கை வெளிவிவகார செயலாளர் இந்தியாவின் ஆதரவு என்ற உத்தரவாதத்தைப் பெற்றார் என்பது வியப்பாக உள்ளதெனவும் அவ்வட்டாரம் மேலும் தெரிவித்தது.

Wednesday, March 17, 2021

அஸாத் சாலிக்கும் ஈஸ்டர் தாக்குதலுக்கும் தொடர்பு? கைதுசெய்யப்பட்டமைக்கு அதுவே காரணம் என்கிறார் அமைச்சர் சரத் வீரசேகர

 


ஈஸ்டர் தாக்குதலுடன் தொடர்பு இருப்பதால் தேசிய ஐக்கிய முன்னணியின் தலைவர் அசாத் சாலி கைது செய்யப்பட்டதாக அமைச்சர் சரத் வீரசேக்கர தெரிவித்துள்ளார்.

கைது செய்யப்பட்ட அசாத் சாலி 3 நாட்கள் தடுத்து வைக்கும் உத்தரவின் பேரில் குற்றப்புலனாய்வு திணைக்களத்தினராரல் விசாரிக்கப்படுகின்றார்.

சட்ட மாஅதிபரின் பணிப்புரைக்கமைய கொள்ளுபிடி பகுதியில் வைத்து அசாத் சாலி கைது செய்யப்பட்டார். தேசிய ஐக்கிய முன்னணியின் தலைவர் அசாத் சாலி நாட்டின் சட்டங்கள் தொடர்பாக சர்சைக்குரிய கருத்துக்களை வெளியிட்டு வந்தார். அக்கூற்று தொடர்பா பல தரப்பினரும் குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் முறைப்பாடு செய்திருந்தனர்.

அசாத் சாலி பயணித்த மோட்டார் காரில் இருந்து வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கியொன்றும் ரவைகளும் பொலிசாரினால் கைப்பற்றப்பட்டதாக பொலிஸ் ஊடக பேச்சாளரும் பிரதி பொலிஸ் மாஅதிபருமான அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.

இதேநேரம் அமைச்சர் கலாநிதி சரத் வீரசேக்கர கருத்து வெளியிடுகையில் ஈஸ்டர் தாக்குதலுடன் தொடர்பு இருப்பதற்கான விடயங்கள் தெரியவந்தமையினால் அசாத் சாலி கைது செய்யப்பட்டதாக தெரிவித்துள்ளார்.

1996 உலகக்கிண்ண வெற்றியின் பின்னான 25 ஆண்டுகளில் இனங்களுக்கிடையிலான ஒற்றுமையில் ஆற்றிய வகிபாகம் பற்றிய ஒரு பார்வை

 



1996ம் ஆண்டு உலகக்கிண்ண கிரிக்கட் போட்டியில் சம்பியன் பட்டம் வென்ற இலங்கை அணி அதன் 25வது வருட நிறைவை  இன்று கொண்டாடுகின்றது. இலங்கை நாட்டின் வரலாற்றில் முக்கியமான தருணமாக இந்த உலகக்கிண்ண வெற்றி பார்க்கப்படுவதில் எவ்வித சந்தேத்திற்கும் இடமில்லை. 

இனமுரண்பாடுகளால் மிகவும் பாதிக்கப்பட்டிருக்கின்ற இலங்கையில் அனைவரையும் பலவித வேற்றுமைகளுக்கு மத்தியில்  ஒன்றிணைக்கும் அரிய விடயமாக கிரிக்கட் போட்டிகள் பல சந்தர்ப்பங்களில் அமைந்திருந்ததை மறுக்கமுடியாது

இலங்கையின் ஆயுதப்படையினருடனும் பதவியில் இருந்த அரசாங்கங்களுடன் மூர்க்கமாக மோதிக்கொண்ட விடுதலைப்புலிகள் கூட இலங்கை கிரிக்கட் அணியின் தீவிர ரசிகர்களாக இருந்திருக்கின்றனர் என்பதை நான் இரு தடவைகள் நேரிலேயே கண்ணுற்றிருக்கின்றேன்.  இலங்கையில்  நீண்டநாட்கள் தொடர்ச்சியாக போர் நிறுத்தம் நடைமுறையில் இருந்த காலப்பகுதியான 2002ம் ஆண்டு முதல் 2006 ஆண்டு காலப்பகுதியில் சக்தி டீவியில் நான் பணியாற்றிய காலப்பகுதி 2005ம் ஆண்டு மார்ச் மாதத்துடன் நிறைவிற்கு வந்துவிட்டது. சக்தி டீவிக்கு செய்திசேகரிப்பதற்காக  நான்கு தடவைகள் வன்னிக்கு செல்லக்கிடைத்தது. அப்படியாக சென்ற ஒரு தருணத்தில் கிளிநொச்சியில் சமாதான செயலகம் அமைந்துள்ள  பகுதிக்கு அருகே விடுதலைப்புலிகளின் அங்கத்தவர்கள் இலங்கை கிரிக்கட் அணி வேறு சர்தேச அணியொன்றுடன் மோதும் போட்டியைப் பார்த்துக்கொண்டிருந்தனர். அப்போது அவர்கள் இலங்கை அணியினர் சிறப்பாக செயற்படும் சந்தர்ப்பங்களின் மகிழ்வுணர்வை வெளிப்படுத்தியதை அவதானித்தேன். அப்போது நீங்கள் இலங்கைப் படைகளுக்கு எதிராக மோதுகின்றீர்கள் . ஆனால் இலங்கை கிரிக்கட் அணியை ரசிக்கின்றீர்கள் என்பது வெளிபடையாக தெரிகின்றது.  அதற்கு அவர்கள் கிரிக்கட்டை அரசியலுக்கு அப்பாற்பட்டதாக வெறுமனே விளையாட்டாக நோக்கியமையே காரணமாக இருந்தது என்பதை அவர்களுடனான கலந்துரையாடல்களின் போது உணர்ந்துகொண்டேன். 



இதேவிதமான இன்னுமொரு தடவையும்  நேரில் அவதானித்திருக்கின்றேன். 2004ம் ஆண்டு  சுனாமிக்கு பின்னர் 2005ம் ஆண்டு மே மாதம் தொடக்கம் 2006ம் ஆண்டு நவம்பர் மாதம் வரை வேர்லட் விஷன் நிறுவனத்தில் மட்டக்களப்பு மாவட்டத்திற்கான சிறுவர் பாதுகாப்பு அதிகாரியாக கடமையாற்றியபோதே இது நிகழ்ந்தது.  கொழும்பில் இருந்து மட்டக்களப்பிற்கு சிறுவர்களது நலன்களை கவனிக்கும் விடயத்திற்கு பொறுப்பானவராக சென்றதால் விடுதலைப்புலிகளின் கடிதத்தலைப்பில் ஒரு அழைப்பு வந்தது. இராணுவக் கட்டுப்பாடற்ற வெல்லாவெளிப்பிரதேசத்திற்கு சென்று அவர்களைச் சந்திக்க வேண்டும்.  யார் எதைப் போட்டுக்கொடுத்தார்களோ என்ற நினைப்போடு அவர்களது பிரதேசத்திற்கு சென்றேன். அப்போது நான் பார்த்த காட்சி  முன்னர் வன்னியில்பார்த்ததை நினைவிற்கு கொண்டுவந்தது. இலங்கை அணிவிளையாடும் கிரிக்கட் போட்டியை அவர்கள் பார்த்து ரசித்துக் கொண்டிருந்தனர். அப்போது உடனே அவர்களிடம் என்ன இலங்கை அணியின் போட்டியைப் பார்க்கின்றீர்கள் ரசிகர்கின்றீர்கள் ஆதரிக்கின்றீர்கள் என ஆர்வத்தோடு கேள்வி எழுப்பினேன்.  அவர்களும் சிரித்துக்கொண்டு இலங்கை அணியை ரசிப்பதை ஏற்றுக்கொண்டனர்.  போர் நிறுத்தமாக இருந்ததால் அவர்கள் இலங்கை அணியை ஆதரித்து ரசித்தார்களா இல்லை ஆரம்பமுதலே அப்படித்தானா என்பது எனக்குள் இருந்த கேள்வியாக இருந்தது. 

இலங்கை சுதந்திரம் பெற்ற காலப்பகுதி முதலாக சிறுபான்மை மக்களின் உரிமைகள் பறிக்கப்பட்டும் நசுக்கப்பட்டும் வருகின்ற காரணத்தால் இலங்கை அணி 1996ல் ஈட்டிய சரித்திர வெற்றியை அனைவரும் ஒருமித்து கொண்டாடினரா என்பது கேள்விக்குரியதாகும். அதிலும் விளையாட்டு என்பது அரசியலுக்கு அப்பாற்பட்டது எனக் கூறப்படுகின்ற காரணத்தால் அரசியலைத் தாண்டி இலங்கையின் கிரிக்கட் வெற்றியை சிறுபான்மையின மக்கள் ஒட்டுமொத்தமாக கொண்டாடினரா எனக் கேட்டால் அதற்குப் பதில் இல்லை என்பதாகவே வரும். சுதந்திரம் கிடைத்தது முதலான காலப்பகுதியில் இலங்கையில் வாழும் மக்கள் அனைவரும் இலங்கையரே என்ற பொது அடையாளத்தை வளர்ப்பதற்கு ஆட்சியாளர்கள் தவறியமையும் தமது குறுகிய அரசியல் நோக்கங்களுக்காக மக்களை இன ரீதியாக மத ரீதியாக மொழி ரீதியாக பிரித்தாண்டமையுமே இதற்கான காரணங்களாகும். 


தேசிய அணி வெற்றி பெற்ற சந்தர்ப்பங்களில் சிறுபான்மை மக்கள் ஆதரித்தார்கள் என்பதற்காகவோ சிறுபான்மை மக்களது பிரதிநிதிகள் தேசிய அணியில் இடம்பிடித்தார்கள் என்பதற்காகவோ தேசிய அணி மீது தீவிர பற்றுடைய சிறுபான்மையினத்தைச் சேர்ந்த மக்களும் உள்ளனர் என்பதற்காகவோ அரசியல் ரீதியாக கட்டவிழ்த்துவிடப்படும் பாரபட்சங்களும் அநீதிகளும் ஒடுக்குமுறைகளும் இல்லாமல் போகுமென்று எவரேனும் நம்பினால் அவர்கள் யதார்த்தத்தை உணராதவர்களாகவே கருதப்படவேண்டும். தேசிய அணிக்கு ஆதரவு என்று இரத்தத்திலேயே உடலில் எழுதிவைத்தாலும் இங்குள்ள அரசியல்வாதிகளும் இனவாதிகளும் தமக்கு தேவையான நேரத்தில் இனவாதத்தையும் மதவாதத்தையும் ஏவிவிட வல்லவர்கள் என்பதை உணர நீண்ட நாட்கள் பின்னோக்கிநகர வேண்டியதில்லை. 

25 ஆண்டுகளுக்கு முன்னர் இலங்கை அணி உலக சம்பியன் ஆனபோது அவ்வணியில் முத்தையா முரளிதரன் இடம்பெற்றிருந்ததை சிறுபான்மையினர் குறிப்பாக தமிழ் மக்கள்  மகிழ்வுடன் வரவேற்றிருந்தனர் . அதனைக் கொண்டாடியவர்களும் உண்டு. ஆனால் அதற்குப்பின்னர் வந்த 25 ஆண்டு காலப்பகுதியில் சிறுபான்மை இனத்தவரில் இருந்து எத்தனை பேருக்கு இலங்கை அணியில் வாய்ப்புக்கிடைத்துள்ளது என்றால் ஏமாற்றமே மிகுதியாகும்.  முத்தையா முரளிதரன் தவிர இலங்கை அணியில் ரஸல் ஆர்னோல்ட் 1997ம் ஆண்டு முதல் 2007ம் ஆண்டு வரை  பத்தாண்டுகள் இடம்பெற்றிருந்தார். திலக்கரத்ன முதியான்ஸலாகே தில்ஷான் அன்றேல் திலக்கரத்ன தில்ஷான் என இன்று அறியப்படும் தில்ஷான் 1999ம் ஆண்டுமுதல் 2016ம் ஆண்டு வரை இலங்கை  தேசிய அணியில் இடம்பெற்றிருந்தார். தில்ஷானின்  ஆரம்ப பெயர் துவான் மொஹமட் தில்ஷான் என்றபோதும் அவர் தன்னை ஒரு சிறுபான்மை இனத்தவராக அன்றி தாயாரின் பெயர் வழியே பெரும்பான்மை இனத்தவராக  அடையாளப்படுத்தப்படுகின்றார். அவரைத்தவிர சுராஜ் ரன்தீவ் இலங்கை அணிக்காக 2012 முதல் 2016 வரை விளையாடியிருந்தார். இவரது ஆரம்ப பெயர் மொஹமட் மர்சூக் மொஹமட் சுராஜ் என்பதாகும். இவரும் ஒரு சிறுபான்மை இனத்தவராக அன்றி  பெரும்பான்மை இனத்தவராக  அடையாளப்படுத்தப்படுகின்றார்.

இவர்களைத்தவிர 2004 ஆண்டு முதல் 2016ம் ஆண்டு வரையான காலப்பகுதியில் இலங்கைத் தேசிய அணியைப் பிரதிநிதித்துவப்படுத்தி சகல துறை வீரர் பர்வீஸ் மஹ்ருப் பல போட்டிகளில் விளையாடியிருந்தார். நவீட் நவாஸ் ஒரு டெஸ்ட் போட்டியில் இலங்கைக்காக பங்களாதேஷிற்கு எதிராக 2002ல் ஒரு போட்டியில் விளையாடி 99 ஓட்டங்களை எடுத்த போதும் அதன் பின்னர் ஒருபோட்டியில் கூட விளையாடவில்லை.

2008ம் ஆண்டு முதல் இலங்கை தேசிய அணிக்காக விளையாடிவரும் அஞ்சலோ மத்தியுஸின் தந்தை ட்ரெவர் மத்தியூஸ் தமிழர் என்றபோதிலும் அஞ்சலோ தன்னை தமிழாக அடையாளம் காண்பிப்பதில்லை. இதற்கு அவர் மருதானை புனித சூசையப்பர் கல்லூரியில் சிங்கள மொழியில் கல்விகற்றமை காரணமாக இருக்கக்கூடும். 

இவர்களைத்தவிர 1996ம் ஆண்டு உலகக்கிண்ணத்திற்கு பின்னர் வந்த காலப்பகுதியில் இலங்கையைப் பிரதிநிதித்துவப்படுத்திய தமிழ் முஸ்லிம் இனங்களைச் சேர்ந்தவர்கள் என்று பார்த்தால் பிரதீப் ஜெயப்பிரகாஷ்தரன் மட்டும்தான் . ரோயல் கல்லூரியின் பழைய மாணவரான பிரதீப் 2005ம் ஆண்டில் ஒரே ஒரு சர்வதேச ஒருநாள் போட்டியில் பங்கேற்று ஒரு விக்கட்டை கைப்பற்றியிருந்தார். அவரைத்தவிர  சர்வதேச போட்டிகளை நெருங்கிவந்த சிறுபான்மை இனத்தவர் என்று பார்த்தால் 2019ம் ஆண்டில் தென் ஆபிரிக்க அணிக்கெதிரான இலங்கை டெஸ்ற் குழாமில் இடம்பிடித்த மொஹமட் சிராஸைக்குறிப்பிடலாம். 

ஏறத்தாழ 22 மில்லியன் சனத்தொகையைக் கொண்ட இலங்கையில் சிறுபான்மை மக்களின் எண்ணிக்கை ஏறத்தாழ 25 சதவீதத்திற்கு அதிகமாக இருப்பினும் இலங்கை தேசிய கிரிக்கட் அணியில் அவர்களது பிரசன்னம் என்பது கடந்த 25 வருட காலத்தில் மிகவும் குறைவாக இருப்பதைப் புரிந்துகொள்ளமுடியும். ஆனால் ஏறத்தாழ 1450 மில்லியன் சனத்தொகையைக் கொண்ட இந்தியாவில் கடந்த 25 ஆண்டுகாலப்பகுதியில் எத்தனை சிறுபான்மை இனத்தவர்கள் தேசிய கிரிக்கட் அணியில் இடம்பெற்றிருக்கின்றார்கள் எனப்பார்க்கின்றபோது நாம் எங்கிருக்கின்றோம் என்பது புலனாகும். மொஹமட் அஸாருதீன் தொடக்கம்  ஷஹீர் கான், முனாப்  பட்டேல், மொஹமட் ஷமி ,மொஹமட் சிராஜ், லக்ஸ்மிபதி பாலாஜி,  சுப்ரமணியம் பத்ரினாத் ,ஹேமங் பதானி ,ரவிச்சந்திரன் அஷ்வின் ரி.நடராஜன் ,முரளி கார்த்திக் ,முரளி விஜய், வொஷிங்டன் சுந்தர் , சஞ்சு சம்ஸன், ஸ்ரீசாந்த் என எண்ணிலடங்கா வீரர்கள் நாம் பார்க்கும் காலத்திலேயே விளையாடியிருக்கிறார்கள். தற்போதைய இந்திய அணியில் தமிழகத்தைச் சேர்ந்த ஒரு வீரர் எனினும் இடம்பெறுவதைக் காணமுடியும். இது எதனைக் காண்பிக்கின்றது. 



தேசிய அணியில் பங்கேற்கும் தகுதி  இலங்கையிலுள்ள தமிழ் முஸ்லிம் வீரர்களுக்கு இல்லை என்பதையா அன்றேல் அவர்கள் பங்கேற்பதற்கு தேவையான வசதி வாய்ப்புக்கள் ஏற்படுத்திக்கொடுக்கப்படாமையையா இது காண்பிக்கின்றது . போதிய வசதிகள் இல்லாத வட கிழக்கு பகுதிகளில் வசதிகள் ஏற்படுத்திக்கொடுக்கப்படவேண்டும் . அதுமட்டுமன்றி வீரர்கள் முதற்தர தேசிய மட்ட போட்டிகளில் பங்கேற்பதற்கான வாய்ப்புக்கள் ஏற்படுத்திக்கொடுக்கப்படவேண்டும். கடந்தாண்டு வடக்கைச்சேர்ந்த விஜயகாந்த் வியாஸ்காந்த் லங்கா பிரிமியர் லீக் போட்டிகளில் ஜெவ்னா ஸ்டாலியன்ஸ் அணிக்காக விளையாடியபோது அதற்கு தமிழ் மக்கள் மத்தியில் இருந்து பெரும் வரவேற்புக் கிடைத்தது. வாய்ப்புக்கள் உருவாக்கப்படும் போதே இப்படியான பங்கேற்பு சாத்தியமானது. இன்னமும் பல வாய்ப்புக்கள் ஏற்படுத்தப்படும் போதே இன்னமும் அதிகமானவர்கள் தேசிய அளவிலும் அதனைத் தாண்டி சர்வதேச அளவிலும் பிரகாசிக்க முடியும். அனைவரும் விளையாடலாம் என்பது சமத்துவம் .ஆனால் அனைவரும் விளையாடும் வகையில் வசதிகளை ஏற்படுத்திக்கொடுப்பதே சிறுபான்மையினர் மேலும் அதிகமாக தேசிய அணிக்கு தெரிவாக வழிகோலும் . 





சனத்தொகையில் எண்ணிக்கைக்கு சமனாக தமக்கு தேசிய அணியில் பிரதிநிதித்துவம் கிடைக்கவேண்டும் என்பது இலங்கையிலுள்ள சிறுபான்மை மக்களின் எண்ணமல்ல. மாறாக தமது பிரதிநிதிகளும் கூட திறமையை வெளிப்படுத்தி தேசிய அணிக்கு தெரிவாகக்கூடிய வாய்ப்புக்கள் உருவாக்கப்படவேண்டும் என்பதே அவர்களது உள்ளுணர்வாகும். 


ஆக்கம்: அருண் ஆரோக்கியநாதர்.

Tuesday, March 16, 2021

அஸ்ரா செனேக்கா தடுப்பூசி தொடர்பில் சந்தேகம் கொள்ள தேவையில்லை : உலக சுகாதார அமைப்பு

 


அஸ்ரா செனேக்கா astrazeneca தடுப்பூசி தொடர்பில் சந்தேகம் கொள்ள தேவையில்லையென உலக சுகாதார அமைப்பு அறிவித்துள்ளது. தடுப்பூசியினை தொடர்ந்தும் செலுத்துமாறு அவ்வமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது.

ஜேர்மன், பிரான்ஸ், இத்தாலி மற்றும் ஸ்பெய்ன் உள்ளிட்ட சில நாடுகள் அஸ்ரா செனேக்கா தடுப்பூசி வழங்கும் நடவடிக்கையினை தற்காலிகமாக நிறுத்தியுள்ள நிலையிலையே உலக சுகாதார அமைப்பு குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது. தடுப்பூசி செலுதிக்கொள்ளப்பட்டதன் பின்னர் இரத்தம் உறைவதாக கருத்துக்கள் வெளியானதை அடுத்து அந்நாடுகள் தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கையினை இடைநிறுத்தியுள்ளன.



எவ்வாறெனினும் இரத்தம் உறைவதற்கும் இத்தடுப்பூசிக்கும் தொடர்பேதும் இருப்பதாக இதுவரை உறுதிப்படுத்தப்படவில்லையென உலக சுகாதார அமைப்பு தெரிவிக்கிறது. தடுப்பூசி செலுத்தப்பட்டதன் பின்னர் சிலருக்கு இரத்த உறைவு ஏற்பட்டதாக தெரிவிக்கப்படுகின்ற போதிலும் தடுப்பூசி வழங்கலை இரத்து செய்யுமளவுக்கு ஆதாரங்கள் கிடைக்கவில்லையென உலக சுகாதார அமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது.

Monday, March 15, 2021

கொரோனா தொற்றாளர்கள் எண்ணிக்கையில் சீனாவை நெருங்கும் இலங்கை

 


இலங்கையில் இதுவரை காலத்தில் கொரோனா தொற்றுக்குள்ளானவர்களின் ஒட்டுமொத்த எண்ணிக்கை 88,000த்தைக் கடந்துள்ளது. உலக நாடுகளுடன் ஒப்பிடுகையில் இலங்கை 87வது இடத்தில் உள்ளது.

Covid-19 தொற்றுக்குள்ளான 178 பேர் இன்று (15) அடையாளம் காணப்பட்டுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.இதனையடுத்தே மொத்த தொற்றாளர்கள் எண்ணிக்கை 88,000க் கடந்தது.

இதேவிதமாக கொரோனா தொற்றாளர்கள் எண்ணிக்கை நாளாந்த பதிவாகும் இடத்து அடுத்து சில நாட்களுக்குள் இலங்கை சீனாவை முந்திவிட வாய்ப்புள்ளது.

தற்போது 90,049 கொரோனா தொற்றாளர்களுடன் சீனா உலகளவில் 86வது இடத்தில் உள்ளது. சீனா உண்மையான தரவுகளை மறைக்கின்றது அங்கே பதிவான கொரோனா தொற்றாளர்கள் எண்ணிக்கை இதைவிட அதிகமாக இருக்கும் என்று கருத்துக்கள் வெளியானாலும் உலகிலுள்ள அங்கிகரிக்கப்பட்ட கொரோனா பற்றிய இணையத்தளங்களின் விபரங்களுக்கு அமைவாக இதுவரை 90,049 கொரோனா தொற்றாளர்களே பதிவாகியிருப்பதாக கூறப்பட்டிருப்பதால் அதனையே கருத்தில் கொள்ளவேண்டியுள்ளது. இதனடிப்படையில் இலங்கை இன்னமும் சில நாட்களில் சீனாவின் எண்ணிக்கையை முந்தினாலும் ஆச்சரிப்படுவதற்கில்லை.

இதேவேளை கொரோனா மூன்றாவது அலை ஏற்படக்கூடிய அபாய நிலை காணப்படுவதாக இலங்கை பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கத்தினர் முன்னெச்சரிக்கை விடுத்துள்ளனர்.

பண்டிகைக் காலத்தில் உரிய சுகாதார விதிமுறைகளை பின்பற்ற தவறினால் கொரோனா தொற்று அதிகரிக்கக்கூடும் என சங்கத்தின் செயலாளர் மஹேந்திர பாலசூரிய தெரிவித்துள்ளார்.

இதுவரை உலகளவில் 120,507,233 (120 மில்லியன்) மக்கள் கொரோனா தொற்றுக்கிலக்காகி உள்ளதுடன் 2,666,907 உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

பும்ராவை போல்ட் ஆக்கிய தமிழ் பொண்ணு!

 


இந்திய கிரிக்கட் அணியின் நட்சத்திர வேகப்பந்துவீச்சாளராக திகழ்பவர் ஜஸ்பிரிட் பும்ரா. துல்லியமான தனது பந்துவீச்சால் எதிரணி துடுப்பாட்டவீரர்களுக்கு சிம்மசொப்னமாக திகழ்பவர் பும்ரா. அவர் கிரிக்கட் வாழ்வில் கைப்பற்றிய அனேக விக்கட்கள் அவரது யோக்கர் பந்துமூலமாகவே வீழ்ந்தன. இதில் விக்கட்டில் நேரில் பட்டு போல்ட் முறையில் ஆட்டமிழந்தவர்கள் பலர் . 27வயதுடைய பும்ராவிற்கு இந்தியாவில் கோடிக்கணக்கான ரசிகர்கள் உள்ளனர். ஆனால் பும்ரா ரசிகராக இருந்ததோ சஞ்சனா கணேசன் என்ற தொலைக்காட்சி அறிவிப்பாளருக்கு என்றால் வியப்பாகவுள்ளதா?

ஸ்டார் டீவியின் பிரபல அறிவிப்பாளரான சஞ்சனா கணேசன் முன்னர் பல தொலைக்காட்சிகளில் முக்கியமான நிகழ்ச்சிகளைத் தொகுத்துவழங்கியுள்ளார்.1991ம் ஆண்டு மே மாதம் 6ம் திகதி பிறந்த சஞ்சனா கணேசன் மகாராஸ்டிரா மாநிலத்தின் புனே நகரைச் சேர்ந்தவர் .இவரது தந்தை கணேசன் ராமசாமி எழுத்தாளராகவும் முகாமைத்துவ குருவாகவும் திகழ்வதுடன் தாயார் சுஷ்மா கணேசன் சட்டத்தரணியாகவும் உடற்திடநிலை பயிற்றுவிப்பாளராகவும் திகழ்கின்றமை குறிப்பிடத்தக்கது.

 

தனது டுவிட்டர் தளத்தில் தான் ஒரு தமிழ் பொண்ணு என்பதை அவர் பெருமையாக பதிவிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இந்திய கிரிக்கட் அணியின் நட்சத்திர வேகப்பந்துவீச்சாளர் ஜஸ்பிரிட் பும்ரா ,ஸ்டார் டிவியின் அறிவிப்பாளர் சஞ்சனா கணேசன் திருமணம் இன்று கோவாவில் நடைபெற்றது.

Sunday, March 14, 2021

இலங்கைத் தமிழ் மக்கள் மீதான கரிசனை தேர்தல்காலத்திற்கு மட்டுப்படுதப்பட்டதாக அன்றி உண்மையானதாக இருக்கவேண்டும்-இந்திய வெளிவிவகார அமைச்சர் கருத்து

 



இலங்கைத் தமிழ் மக்கள் மீது காண்பிக்கப்படும் கரிசனை என்பது தேர்தல்காலத்திற்கு மாத்திரம் மட்டுப்படுத்தப்பட்டதாக அன்றி  உண்மையானதாக அமையவேண்டும் என இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார். 


'இந்தியா டுடே' ஊடக நிறுவனத்தின் வருடாந்த மாநாட்டில் பங்கேற்றபோதே அவர் இவ்வாறு கருத்துவெளியிட்டுள்ளார். 

இலங்கைத்தமிழ் மக்கள் மீதான கரிசனை என்பது சரியானது . ஏனெனில்  அது இயற்கையானது. ஏனெனில்.இருதரப்பினருக்கும் இடையே மொழியால் உறவுநிலை இருக்கின்றது. 

"தமிழ் நாட்டில் உள்ளவர்களும் ஏனைய பகுதிகளில் உள்ளவர்களும் ஒரு விடயத்தை  தெளிவாக புரிந்துகொள்ளவேண்டும். இலங்கையில் வாழும் தமிழ் மக்கள் மீதான கரிசனை என்பது   தேர்தல்தினத்திற்கு ஒரு மாதத்திற்கு முன்பாக ஆரம்பித்து தேர்தலுக்கு மறுதினம் முடிவடைகின்ற ஒருவிடயமாக இருக்கக்கூடாது சில வேளைகளில் தேர்தல்கள் நெருங்கும் போது இலங்கைத் தமிழர்கள் மீதான உணர்வு அதிகரிக்கும்.  பின்னர் அது தணிந்துபோகும். '


அடிப்படைவாத செயற்பாடுகளுக்காக சரணடைவோருக்கு புனர்வாழ்வு: வர்த்தமானி வௌியீடு

 



அடிப்படைவாத செயற்பாடுகள் தொடர்பாக சரணடையும் அல்லது கைது செய்யப்படும் நபர்களுக்கு புனர்வாழ்வளிக்கும் சட்ட விதிகள் உள்ளடக்கப்பட்ட அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் வௌியிடப்பட்டுள்ளது.

இதன்படி, பொலிஸ் அதிகாரியல்லாத எவரேனும் ஒருவரிடம் சரணடையும் ஒருவர் 24 மணித்தியாலங்களுக்குள் அண்மையிலுள்ள பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியிடம் ஒப்படைக்கப்பட வேண்டும்.

பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி விசாரணை நடத்துவதற்காக சட்டமூலத்தில் 9 ஆவது சரத்தின் பிரகாரம் சம்பந்தப்பட்ட நபரை தடுத்து வைத்துக்கொள்ள வேண்டுமா என்பதை பரிசீலிப்பதற்காக அமைச்சருக்கு அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும் எனவும் அந்த அதிவிசேட வர்த்தமானியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சம்பந்தப்பட்ட நபர் குற்றமிழைத்துள்ளமை உறுதியாகும் பட்சத்தில், சட்ட நடவடிக்கை எடுப்பதற்கு அவர் சட்டமா அதிபரிடம் முன்னிலைப்படுத்தப்பட வேண்டும்.

குற்றத்தின் தன்மைக்கு அமைவாக, அந்த நபருக்கு எதிராக வழக்கு தொடராமல் மத்திய நிலையத்தில் புனர்வாழ்வு அளிப்பதற்கு தகுதியுடையவரென்பதே சட்டமா அதிபரின் நிலைப்பாடாக இருந்தாலும் அவர் நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட வேண்டும் என்பதுடன், அதன்போது விடயங்களை ஆராய்ந்து ஓராண்டுக்கு மேற்படாத காலத்திற்கு புனர்வாழ்வளிக்க உத்தரவிட முடியும்.

புன்வாழ்வளிக்கப்படும் காலம் முடிந்த பின்பு அதன் பெறுபேற்றை பரிசீலித்து விடுதலை செய்யவோ அல்லது மேலதிகமாக புனர்வாழ்வளிக்கவோ அல்லது பரிசீலித்துப் பார்க்கவோ வேண்டும் என்பதோடுஇ அதற்காக புனர்வாழ்வு ஆணையாளர் நாயகம் அமைச்சின் செயலாளருக்கு அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும்.

நீடிக்கப்படும் புனர்வாழ்வு கால எல்லையின் முடிவில் குறித்த நபர் விடுவிக்கப்பட வேண்டும் என இந்த அதிவிசேட வர்த்தமானி அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நன்றி: நியுஸ் பெஸ்ட்

Monday, March 8, 2021

"கறுப்பு ஞாயிறு" நீதியைப் பெற்றுத்தருமா?

 



ஈஸ்டர் தாக்குதல் நடந்த முதல் சில நாட்களில் கத்தோலிக்க பேராயர் கர்த்தினால் மல்கம் ரஞ்சித் செயற்பட்ட விதமே இந்த நாட்டில் பாரிய இரத்தக்களரியைத் தடுத்து நிறுத்தியது என்பதை எவரும் மறுக்க முடியாது. ஆனால் தாக்குதல்களின் முன்னரும் சில வாரங்களின் பின்னரும் அவர் செயற்பட்ட விதம் தொடர்பாக குறிப்பாக அவரது அரசியல் தெரிவுகள் தொடர்பாக நாட்டிலே கத்தோலிக்கர்கள் உள்ளடங்கலாக பலருக்கும் கேள்விகள் எழுந்தமை சுட்டிக்காட்டத்தக்கது. 



இலங்கையில் நாடளாவிய ரீதியில் கத்தோலிக்க ​தேவாலயங்களில் நேற்று  (07) கறுப்பு ஞாயிறு அனுஷ்டிக்கப்பட்டது

நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் அமைதியான முறையில் கத்தோலிக்க தேவாலயங்களில் எதிர்ப்பு நடவடிக்கைகளும் இடம்பெற்றன.

ஏப்ரல் 21 தாக்குதலில் பாதிக்கப்பட்ட மக்களுக்கான நீதியை நிலைநாட்ட வலியுறுத்தி, கொழும்பு பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை விடுத்த வேண்டுகோளுக்கு அமைய நேற்றைய தினம் கறுப்பு ஞாயிறு தினமாக கடைப்பிடிக்கப்படுகின்றது.



நாட்டிலுள்ள கத்தோலிக்க தேவாலயங்கள் அனைத்திலும் கறுப்புக் கொடி ஏற்றப்பட்டு விசுவாசிகள் அனைவரும் கறுப்பு நிற ஆடையுடன் திருப்பலிகளில் கலந்துகொண்டனர்.

கொச்சிக்கடை புனித அந்தோனியார் தேவாலயத்தில் நேற்று  கொழும்பு பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை தலைமையில் விசேட திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டது.



இதன் பின்னர் ஊடகங்களிடம் கருத்துவெளியிட்ட கொழும்பு பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை,

"தாக்குதலின் பின்னணியில் யார் செயற்பட்டுள்ளனர் என்பதை அறிந்துகொள்ளவே இந்த ஆணைக்குழுவின் மூலம் நாம் எதிர்பார்த்தோம். எனினும் அது தொடர்பில் ஆணைக்குழு எந்தளவிற்கு செயற்பட்டுள்ளது என்பது எமக்குத் தெரியாது. ஆகவே ஆணைக்குழுவின் அறிக்கை முழுமையமற்றது என்பதால் தொடர்ந்தும் ஆணைக்குழுவின் பரிந்துரைகளை சேகரித்து தாக்குதலை உண்மையாக வழிநடத்தியவர்கள் யார் என்பதை வௌிக்கொணரவே நாம் முயற்சிக்கின்றோம். ஏனெனில் மக்கள் இதனையே எதிர்பார்க்கின்றனர்."என  தெரிவித்தார்.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களால் உண்மையிலேயே நன்மைபெற்றவர்கள் யார்? தாக்குதலுக்கு யார் தூண்டுகோலாக அமைந்தது?  போன்ற கேள்விகளை எழுப்பும் போது இதற்குப் பின்னணியிலுள்ளவர்கள் யார்  என்பதை ஊகிக்க மேதைகள் தேவையில்லை என்பதை சாதாரண பொதுமக்களுடனான உரையாடல்களின் போது உணர்ந்துகொள்ள முடிந்தது. 

 ஆணைக்குழுக்கள் என்பது பலதடவைகளில் கண்துடைப்பு நாடகங்களுக்கு துணைபோகும் பொறிமுறையாகவே அமைந்திருக்கின்றன என்பது இலங்கையின் கடந்த கால வரலாற்றை அவதானித்தவர்களுக்குத் தெரியும்.

அவ்வாறான ஆணைக்குழுக்கள் காலத்தை இழுத்தடிக்கும் செயற்பாடுகளாக அமைந்தனவே தவிர ஒரு பிரச்சனைக்கோ   விடயத்திற்கோ தீர்வாக அமையவில்லை.



அப்படியிருக்க ஆணைக்குழுக்கள் மீது முழுமையாக நம்பிக்கை வைத்து நீதியை கர்த்தினால் மல்கம் ரஞ்சித் உள்ளிட்ட தரப்பினர் உண்மையிலேயே எதிர்பார்த்திருப்பின் அது கானல் நீராகவே முடியும். 

இழைக்கப்பட்ட அநீதிக்காக நீதியைத் தேடுபவர்கள் தாம் விரும்பிய ஆட்சியாளர்கள் வரும் போது ஒருவிதமாகவும் தமக்கு விருப்பமில்லாத ஆட்சியாளர்கள் இருக்கும் போது வேறுவிதமாகவும் செயற்படுமிடத்து நீதிக்கான அவர்களின் வேட்கை என்பது கேள்விக்குட்படுத்தப்படும்.

 ஈஸ்டர் தாக்குதல் நடந்த முதல் சில நாட்களில் கத்தோலிக்க பேராயர் கர்த்தினால் மல்கம் ரஞ்சித் செயற்பட்ட விதமே இந்த நாட்டில் பாரிய இரத்தக்களரியைத் தடுத்து நிறுத்தியது என்பதை எவரும் மறுக்க முடியாது. ஆனால் தாக்குதல்களின் முன்னரும் சில வாரங்களின் பின்னரும் அவர் செயற்பட்ட விதம் தொடர்பாக குறிப்பாக அவரது அரசியல் தெரிவுகள் தொடர்பாக நாட்டிலே கத்தோலிக்கர்கள் உள்ளடங்கலாக பலருக்கும் கேள்விகள் எழுந்தமை சுட்டிக்காட்டத்தக்கது. 



சொந்த விருப்பு வெறுப்புக்களைத் தாண்டி சமூகத்தின் தலைவர்கள் பாதிக்கப்பட்ட தமது சமூகத்திற்காக இடைவிடாமல் நீதிக்கான போராட்டத்தை தளராது முன்னெடுக்கும் போதே பொறுப்புக்கூற வேண்டும் என்ற எண்ணம் அதிகாரத்தில் இருப்பவர்களுக்கும் ஏற்படும். இல்லையேல் இவர்கள் எமது ஆட்கள் இவர்களைச் சமாளித்துவிடமுடியும் என்ற எண்ணத்தில் தமது ஆட்சி அதிகாரத்தை வலுப்படுத்தேவே நடவடிக்கை எடுப்பார்களே தவிர நீதியை வழங்க நடவடிக்கை எடுக்க மாட்டார்கள். 

வடக்கு கிழக்கில் போர்க்காலத்தில் இழைக்கப்பட்ட பாரிய மனித உரிமை மீறல்கள் போர்க்குற்றங்கள் தொடர்பான குற்றச்சாட்டுக்களின் போது அதற்காக வடக்கு கிழக்கைச் சேர்ந்த கத்தோலிக்க ஆயர்களும் குருக்களும் ஓங்கிக்குரல்கொடுத்த போது கர்த்தினால் மல்கம் ரஞ்சித், அவர்களுக்கு ஆதரவாக குரல்கொடுத்தாரா? வடக்கு கிழக்கு சிறுபான்மை மக்களின் உரிமைகள் பறிக்கப்படுகின்றபோதும் நசுக்கப்படுகின்றபோதும் எத்தனை தடவை கொழும்பைத்தலைமையகமாகக் கொண்ட இலங்கையின் கத்தோலிக்க திருச்சபை குரல்கொடுத்திருக்கின்றது அன்றேல் ஆதரவுக்கரம் நீட்டியிருக்கின்றது என்று பார்த்தால் ஏமாற்றமே மிஞ்சும். 

அநீதி என்பது இலங்கையின் வடக்கு கிழக்கில் நிகழ்த்தப்பட்டாலோ தெற்கில் நிகழ்த்தப்பட்டாலோ அதற்கு எதிராக குரல் கொடுக்கவும் நீதியைக் கோரவும் இனியேனும் கத்தோலிக்க திருச்சபை  இன மொழி பேதம் பாராது ஒரு குடையின் கீழ் முன்வரவேண்டும். அப்போதுதான் நீதிக்கான கோரிக்கையை ஆட்சியளார்களால் தட்டிக்கழிக்க முடியாத நிலை ஏற்படும் .


ஆக்கம் : அருண் ஆரோக்கியநாதர்.

Saturday, March 6, 2021

உலகில் தைரியமிக்க பெண் என்ற விருதிற்கு சட்டத்தரணி ரனிதா ஞானராஜா தகுதியானவரா?





நேற்றையதினம் ஃபேஸ்புக்கில் திரைப்பட நெறியாளரும் ஊடக பயிற்றுவிப்பாளரும் நண்பருமான நடராஜா  மணிவாணன் ' சில சாதனையாளர்களை உடனிருந்து பார்த்த பின்னர் அவர்களைக் கொண்டாட முடியாமல் போய்விடுகின்றது...' என பதிவொன்றை இட்டிருந்தார். 




அவர் அந்தப்பதிவை இட்ட சில மணிநேரத்தில் சமூக வலைத்தளத்தில் சட்டத்தரணியும் மனித உரிமை செயற்பாட்டாளருமான ரனிதா ஞானராஜா, உலகில் தைரிய மிக்க பெண்களுக்காக அமெரிக்க இராஜாங்க செயலாளரினால் வழங்கப்படும் 'International Women of Courage'  விருதுக்கு தெரிவு செய்யப்பட்டுள்ள செய்தி சமூக வலைத்தளங்களில் பரவலாக பகிரப்பட்டிருந்தது. 

மணிவாணன் ,யாரை நினைத்து அந்தப்பதிவை இட்டாரோ தெரியவில்லை.அவரது பதிவில் ஆழமான பொருள் பொதிந்துள்ளது. எங்கோ வெளிநாட்டில் வாழ்பவர்கள் சிறிதாக சாதித்துவிட்டாலும் அதனை போற்றிப் புகழ்ந்து ஆலவட்டம் எடுக்கும் நம்மவர்கள் எம்மத்தியிலேயே வாழ்ந்துகொண்டிருக்கின்றவர்களின் உண்மையான பெறுமதியை பலவேளைகளில் உணரத்தவறிவிடுகின்றோம். அன்றேல் இவர்கள் நம்மவர்கள் தானே என்ற ஒரு அலட்சியப்பான்மையுடன் தட்டிக்கழித்துக் கடந்துபோய்விடுகின்றோம். 

சட்டத்தரணி ரனிதா ஞானராஜாவை சில தடவைகள் தான் நேரில் சந்தித்திருக்கின்றேன். பல தடவைகள் தொலைபேசியில் உரையாடியிருக்கின்றேன்.  சக்தி  ஊடகபணிப்பாளர் கந்தவேள் மயூரனின் மனைவி என்றவகையில் நல்ல நட்புடனும் பேசும் அவரது  அநீதி கண்டு பொங்கும்  உளப்பிரவாகத்தை பேச்சுக்களினூடாகவும் சமூக வலைத்தளப் பதிவுகளுடாகவும்   பல தடவைகள்  உணர்ந்துகொண்டுள்ளேன்.

தனது சொந்த வாழ்வில் மிக இளம் வயதில் காணாமலாக்கப்பட்டதன் வலியை அனுபவித்து உணர்ந்தமையையும்  மனித உரிமை மீறல்களால் பாதிக்கப்பட்டவர்களுக்காக குறிப்பாக காணாமலாக்கப்பட்டவர்களின் உறவுகளுக்காக  தொழில்சார் தன்மையைத்தாண்டி மனிதாபிமானத்தோடு ஈடுபாடாக ரனிதா பணியாற்றுவதற்கு காரணமாக அமைவதாக அவரோடு நெருங்கிப்பழகுபவர்கள் தெரிவிக்கின்றனர். 

பல்கலைக்கழக காலத்திலேயே ரனிதாவுடன் நன்கு பரிட்சயமான சட்டத்தரணியும் அரசியல்வாதியுமான மங்களேஸ்வரி சங்கர் விருதுபற்றி கருத்துவெளியிடுகையில், " படிக்கும் காலத்தில் இருந்தே மனித உரிமை இல்லத்தில் தனது சட்ட அனுபவத்தை பயன்படுத்திக்கொண்டவர். அதன் பின்னர் மனித உரிமைக்கும் அபிவிருத்திக்குமான நிலையம்  CHRரில்  CEO ஆக நான் கடமையாற்றிக்கொண்டிருந்த காலத்தில் தான் . ரனிதா ,ஒரு சட்ட உத்தியோகத்தராக  எங்களுடைய நிலையத்தில் இணைந்துகொண்டவர் அன்றிருந்து மிக ஆர்வமாக CHR நடத்திக்கொண்டிருந்த மனித உரிமை மீறல் வழக்குகள், காணாமலாக்கப்பட்டவர்கள் விவகாரம், மனித உரிமை பாதுகாவலர்களுக்கான பயிற்சிகள் என்று பல்வேறு கருத்திட்டங்களில் மிக மும்முரமாக தனது சட்ட அறிவைப்பயன்படுத்தி  வெற்றிகரமாக ஈடுபட்டுக்கொண்டிருந்த ஒருவர்."' என நினைவுகூர்ந்தார். 


ரனிதாவைப் பற்றி சிரேஷ்ட சட்டத்தரணி கே.எஸ். ரத்னவேல் கூறுகையில்,  கடந்த பத்துவருடகாலமாக அவர் தம்மோடு  பணியாற்றுகின்றபோது எவ்விதமான அச்சுறுத்தல்கள் மத்தியிலும் எந்தவிதமான சமரசத்திற்கும் இடமின்றி அர்ப்பணிப்போடு தொழிலை முன்னெடுக்கும்  உறுதிமிக்க  பெண்மணி எனக்குறிப்பிட்டார்.  எப்போதுமே அர்ப்பணிப்போடு செயற்படும் அவர் தொழில்சார் ரீதியாக மட்டுமன்றி அதற்கு அப்பாலும் சென்று மனித நேயத்தோடு பாதிக்கப்பட்டவர்களுக்காக பரிந்துபேசுபவர் என புளகாங்கிதமடைந்தார் ரத்னவேல். 



உலகில் தைரியமான பெண் என்ற விருது பற்றி அமெரிக்க இராஜாங்கத்திணைக்கம் கூறுகையில்,ரனிதா ஞானராஜா, அச்சுறுத்தல் மற்றும் சவால்களுக்கு மத்தியில் நாட்டில் ஒதுக்கப்பட்ட மற்றும் பாதிப்புகளை எதிர்நோக்கும் சமூகங்களின் உரிமைகளுக்காக தொடர்ந்து போராடியவர் என  சுட்டிக்காட்டியுள்ளது.

வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்கள், நீண்ட காலமாக பயங்கரவாத தடுப்புச் சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்களுக்கு இலவச சட்ட உதவியை ரனிதா வழங்கியுள்ளதாக அமெரிக்க இராஜாங்க திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.

தனிப்பட்ட முறையில் போரினால் பாதிக்கப்பட்டு, பாதிக்கப்பட்டவர்களுடனும் அவர்களது குடும்பத்தினருடனும் பணியாற்றிய தனது விரிவான அனுபவத்தின் அடிப்படையில், இலங்கையின் மிகவும் நலிவுற்ற மக்களுக்கு நீதியையும் பொறுப்புக்கூறலையும் பெற்றுக்கொடுப்பதில் ரனிதா அர்ப்பணிப்புடன் செயற்பட்டுள்ளார்.

உலகெங்கும் உள்ள பெண்களின் தைரியத்தையும் தலைமைத்துவத்தையும் அமைதிக்கான வாதிடலையும் அங்கீகரித்து, நீதி, மனித உரிமைகள், பால்நிலை சமத்துவம், பெண்களை வலுவூட்டல் போன்றவற்றுக்காக தனிப்பட்ட ரீதியில் அபாயத்தையும் பொருட்படுத்தாமல் பணியாற்றியமைக்காக அவர்களை கௌரவப்படுத்தும் விதமாக International Women of Courage விருது வழங்கப்பட்டு வருகிறது.


இம்முறை 15 ஆவது ஆண்டாக இந்த விருது வழங்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

இதுவரை 75 நாடுகளை சேர்ந்த 155 பெண்கள் விருது வழங்கி கௌரவிக்கப்பட்டுள்ளனர்.

விருது வழங்கும் விழா சர்வதேச பெண்கள் தினமான மார்ச் 8ம்திகதி  காணொளி தொழில்நுட்பத்தினூடாக நடைபெறவுள்ளது.




இதன்போது அமெரிக்காவின் முதல் பெண்மணி னுச. ஜில் பைடன் தெரிவு செய்யப்பட்ட பெண்களின் சாதனைகளை அங்கீகரித்து தனது கருத்துக்களை பகிரவுள்ளார் என நியுஸ்பெஸ்ட் இணையத்தளம் குறிப்பிட்டுள்ளது. 

ரனிதாவிற்கு விருது வழங்கப்படவுள்ளதான அறிவிப்பையடுத்து இலங்கையிலுள்ள மற்றுமொரு தைரியமிக்கபெண்மணியும் சர்வதேச விருதுகள் பல வென்ற மனித உரிமை செயற்பாட்டாளருமான ஷிரீன் ஷரூர் கருத்துவெளியிடுகையில், "ரனிதா, நீண்டகாலமாக மனித உரிமைகள் தொடர்பான சட்டத்தரணியாக பணியாற்றிவருவதுடன் ஏனையவர்கள் பொறுப்பேற்கத் தயங்கும் வழக்குகளை முன்னின்று எடுத்து நடத்தியுள்ளார். அவர் அச்சுறுத்தல்களுக்கும் அபாயங்களுக்கு மத்தியிலும் கூட அரசியல் கைதிகள், காணாமலாக்கப்பட்டோர்  வழக்குகள் மற்றும் முக்கியமாக மன்னார் பாரிய புதைகுழி விவகார வழக்குகளில்  தனது வகிபாகத்தை வழங்கியுள்ளார். "மிகவும் தகுதிமிக்கதும் மிக்க அவசியமானதுமான அங்கீகாரமாக நான் பார்க்கின்றேன்.' என்று குறிப்பிட்டார். 

இந்த உலகில் அண்மைக்காலமாக பதவிக்காகவும் அதிகாரத்திற்காகவும் பணத்திற்காகவும்  சோரம் போகின்றவர்களுக்கே விருதுகளும் சிறப்புக்களும் கௌரவிப்புக்களும்  நடக்கின்றனவே என்று ஆதங்கப்பட்டு பன்னாடைகளுக்கெல்லாம் பொன்னாடை போர்த்துகின்றனரே என்று அங்கலாய்த்திருக்கையில் ,சட்டத்தரணி ரனிதா ஞானராஜா உயரிய சர்வதேச விருதொன்றுக்காக தெரிவுசெய்யப்பட்டிருப்பதான செய்தி மனமகிழ்ச்சியளிக்கின்றது. 

குரலற்றவர்களின் குரலாக திகழும் ரனிதா ஞானராஜாவிற்கு உலகில் தைரியமிக்க பெண்மணி என்ற விருது வழங்கப்படுவது முற்றிலும் பொருத்தமானது.  உங்கள் பணி இன்னமும் சிறப்புற வாழ்த்துக்கள் ரனிதா .

ஆக்கம்: அருண் ஆரோக்கியநாதர்


Tuesday, March 2, 2021

ஜெனீவாவில் இந்தியாவின் ஆதரவு ஏன் இலங்கைக்கு எளிதாக கிடைக்கமாட்டாது?




ஜெனிவா உட்பட சர்வதேச அரங்குகளில் தனிப்பட்ட நாடுகளுக்கு எதிரான தீர்மானங்களின் போது நடுநிலைமை வகிப்பது இந்தியாவின் நிலைப்பாடாக இருந்துவருகின்றபோதும் இலங்கை விடயத்தில் அது மாறுபாடான நிலைப்பாட்டை எடுத்திருப்பதை வரலாறு உணர்த்துகின்றது. 2009ம் ஆண்டு இலங்கைக்கு சார்பாக கொண்டுவரப்பட்ட தீர்மானத்தின் போது சார்பாக வாக்களித்த இந்தியா 2012 மற்றும் 2013 ஆண்டுகளில் இலங்கைக்கு எதிராக வாக்களித்திருந்தது. 2014ல் வாக்களிப்பில் இந்தியா பங்கேற்றிருக்கவில்லை .  2021ல் அதன் நிலைப்பாடு எப்படியிருக்கும் என்பது இன்னமும் தெளிவற்றதாகவே உள்ளது. தமிழ்நாட்டில்  மாநில தேர்தல்கள் நடைபெற இருக்கின்ற நிலையிலும் இலங்கையில் இந்தியாவின் புவிசார் அரசியல் அபிலாஷைகள் பின்னடைவைச் சந்தித்துவரும் நிலையிலும் இந்தியாவிற்கு முன்பாக உள்ள தெரிவுகள் இலங்கைக்கு ஆதரவளிப்பதாக இருக்க முடியாது. ஒன்று பிரித்தானியா தலைமையிலான மேற்கு நாடுகள் கொண்டுவரும் தீர்மானத்திற்கு ஆதரவாக வாக்களிப்பது இல்லையேல் 2014ம் ஆண்டில் செய்ததைப் போன்று நடுவுநிலைமை வகிப்பதே இந்தியாவிற்குள்ள தெரிவுகளாக இருக்க முடியும் .

இந்தியா கடந்த வருடங்களில் எவ்வாறு ஜெனிவாவில் வாக்களித்திருந்தது?



ஜெனிவாவில் கொண்டுவரப்படவுள்ள புதிய தீர்மானத்திற்கு எதிராக நாடுகளை அணிசேர்க்கும் முனைப்பை இலங்கை அரசாங்கம் தீவிரப்படுத்தியுள்ளது. இதில் இந்தியாவின் ஆதரவைப் பெறுவதற்கு அரசாங்கம் பகிரதப்பிரயத்தனத்தை மேற்கொண்டுவருகின்றது.

ஒரு மாதத்திற்கு முன்பாக கொழும்புத் துறைமுகத்தின் கிழக்குமுனையத்தை அபிவிருத்திசெய்வது தொடர்பாக இந்தியாவுடன் செய்துகொண்ட உடன்படிக்கையை ஒருதலைப்பட்சமாக இரத்துச்செய்திருந்த இலங்கை அரசாங்கம்  ஜெனிவாவில் வாக்கெடுப்பு நெருங்கும் நிலையில் மேற்குமுனையத்தை வழங்குவதற்கு  ஒப்புதல் அளித்திருக்கின்றது. 

பாரிய சர்ச்சையின் பின்னர், கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு முனையத்தை வௌிநாட்டவர் கைப்பற்றுவதை நிறுத்திய போதும் துறைமுகத்தின் மேற்கு கொள்கலன் முனையத்தை இந்தியாவின் அதானி நிறுவனத்திற்கு வழங்க அமைச்சரவை தீர்மானித்துள்ளது

35 வருடங்களில் அபிவிருத்தி செய்து, நடைமுறைப்படுத்தி மீள கையளித்தல் அடிப்படையில் கொழும்பு துறைமுகத்தின் மேற்கு கொள்கலன் முனையத்தை அபிவிருத்தி செய்வதற்காக இந்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

புதிய தீர்மானமொன்றைக் கொண்டுவரப்போவதை இலங்கை தொடர்பாக ஜெனீவாவில் செயற்படும் பிரித்தானியா தலைமையிலான பிரதான நாடுகள் குழு ஏற்கனவே உறுதிப்படுத்தப்பட்ட நிலையில் தீர்மானத்தில் ஆரம்ப வரைவும் தற்போது வெளியாகி பல்வேறு வாதப்பிரதிவாதங்களை உருவாக்கிவிட்டுள்ளது. 

இந்த நிலையில், இலங்கைக்கு ஆதரவாகவே ஜெனிவாவில் இந்தியா வாக்களிக்கும் என அண்மையில் வெளிவிவகார செயலாளர் ஒய்வுபெற்ற அட்மிரல் ஜெயநாத் கொலம்பகே கருத்துவெளியிட்டிருந்தார். இலங்கையை இந்தியா கைவிடக்கூடாது என்றும் வேண்டுகோள் விடுத்திருந்தார். 





இலங்கை இறுதி நேரத்தில் இவ்வாறான நகர்வுகளை மேற்கொண்டிருக்கின்ற போது,ஜெனீவாவில் இலங்கைக்கு இந்தியாவின் ஆதரவு என்பது வெறுமனே தட்டிலேவைத்து தாரைவார்க்கப்படமாட்டாது என இந்தியாவின் முன்னணி ஒன்லைன் ஊடகங்களிலொன்றாக திகழும் Wireரின் இராஜதந்திர விவகாரத்திற்கு பொறுப்பான ஆசிரியர்  தேவிரூபா மித்ரா தெரிவித்துள்ளார் .

ஜெனிவாவிற்கான இந்தியத்தூதுவர் இந்திரா மணி பாண்டே 46வது தொடரின் ஆரம்பத்தில் ஆற்றிய உரையைச் சுட்டிக்காட்டியுள்ள அவர் இது இறுதிவரை ஜெனிவாவில் அனைத்துதெரிவுகளையும் இந்தியா கொண்டிருக்கும் என்பதைக் கோடிட்டுக்காட்டுவதாக சுட்டிக்காட்டியுள்ளார். 

'தமிழர்களின் நியாயமான விருப்பங்களை நிறைவேற்றுவது இலங்கையின் சிறந்த நலன்களுக்கானது என்பதை இந்தியா பரிந்துரைக்கிறது' என ஜெனிவாவிற்கான இந்தியாவின் பிரதிநிதி இந்திரா மணி பாண்டே தெரிவித்துள்ளார்.

இலங்கை அரசியலமைப்பின் 13-வது திருத்தத்தை முழுமையாக அமல்படுத்துவது இந்தியாவின் விருப்பம் என இந்தியா தெரிவித்துள்ளது.

'இலங்கை தொடர்பான ஐ.நா. மனித உரிமைகள் ஆணையர் அறிக்கை மற்றும் அவரது உரையின்போது தெரிவிக்கப்பட்ட கருத்துகளை இந்தியா கவனத்தில் கொண்டுள்ளது.

இலங்கையுடன் நெருங்கிய நட்பு நாடென்ற வகையிலும் பக்கத்து நாடு என்ற நோக்குடனும் இந்தியா தொடர்ந்தும் உறுதிப்பாடுடன் இலங்கை விஷயத்தில் முன்னின்று செயற்படுகின்றது.

எவ்வாறாயினும் இலங்கை தொடர்பான இந்தியாவின் தொடர்ச்சியான நிலைப்பாடானது முக்கிய இரு தூண்களில் உள்ளது.

1. இலங்கையின் ஒற்றுமை மற்றும் பிராந்திய ஒருமைப்பாட்டிற்கான ஆதரவு

2. சமத்துவம், நீதிஇ அமைதி, கௌரவத்திற்கான இலங்கைத் தமிழர்களின் விருப்பங்களுக்கு உறுதியளித்தல்

ஆகிய இரு பிராதன தூண்களை மையப்படுத்தியதாகவே எமது நிலைப்பாடு உள்ளது. இவை தவிர வேறு தேர்வுகள் இல்லை.

அர்த்தமுள்ள அதிகாரப் பகிர்வு உட்பட தமிழ்ச் சமூகத்தின் உரிமைகளை மதிப்பதுஇ இலங்கை ஒற்றுமைக்கும், ஒருமைப்பாட்டிற்கும் நேரடியாகப் பங்களிப்பு செய்யும் என்பதை உறுதியாக நம்புகிறோம். எனவே, தமிழ்ச் சமூகத்தின் நியாயமான விருப்பங்களை நிறைவேற்றுவது இலங்கையின் சிறந்த நலன்களுக்கானது என்பதையே இந்தியா பரிந்துரைக்கிறது.

நல்லிணக்கச் செயல்முறை மற்றும் இலங்கை அரசியலமைப்பின் 13-வது திருத்தத்தை முழுமையாக அமல்படுத்துவது உள்ளிட்ட இத்தகைய விருப்பங்களுக்குத் தீர்வு காண தேவையான நடவடிக்கைகளை முன்னெடுக்க இலங்கையைக் கேட்டுக்கொள்கிறோம்.'

என ஜெனிவாவிற்கான இந்தியத்தூதுவர் தெரிவித்திருந்தமையை சுட்டிக்காட்டியுள்ள தேவிரூபா மித்ரா  இது எளிதாக இந்தியாவின் ஆதரவு இலங்கைக்கு கிட்டமாட்டாது என்பதைக் கோடிகாட்டுவதாகவும் தெரிவித்துள்ளார். 

இந்தியா எதிர்வரும் தீர்மானத்தின் மீதான வாக்களிப்பில் எப்படி தனது நிலைப்பாட்டை எடுக்கும் என்பது தொடர்பாக இதுவரை அறிவிக்கப்படவில்லை. ஆனால் அனைத்து தெரிவுகளையும் தமக்கு முன்பாக இந்தியா வைத்துள்ளதென்பது தெளிவாகின்றது என அவர் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார். 

ஜெனிவா உட்பட சர்வதேச அரங்குகளில் தனிப்பட்ட நாடுகளுக்கு எதிரான தீர்மானங்களின் போது நடுநிலைமை வகிப்பது இந்தியாவின் நிலைப்பாடாக இருந்துவருகின்றபோதும் இலங்கை விடயத்தில் அது மாறுபாடான நிலைப்பாட்டை எடுத்திருப்பதை வரலாறு உணர்த்துகின்றது. 2009ம் ஆண்டு இலங்கைக்கு சார்பாக கொண்டுவரப்பட்ட தீர்மானத்தின் போது சார்பாக வாக்களித்த இந்தியா 2012 மற்றும் 2013 ஆண்டுகளில் இலங்கைக்கு எதிராக வாக்களித்திருந்தது. 2014ல் வாக்களிப்பில் இந்தியா பங்கேற்றிருக்கவில்லை . என்ற நிலையில் 2021ல் அதன் நிலைப்பாடு எப்படியிருக்கும் என்பது இன்னமும் தெளிவற்றதாகவே உள்ளது. தமிழ்நாட்டில்  மாநில தேர்தல்கள் நடைபெற இருக்கின்ற நிலையிலும் இலங்கையில் இந்தியாவின் புவிசார் அரசியல் அபிலாஷைகள் பின்னடைவைச் சந்தித்துவரும் நிலையிலும் இந்தியாவிற்கு முன்பாக உள்ள தெரிவுகள் இலங்கைக்கு ஆதரவளிப்பதாக இருக்க முடியாது. ஒன்று பிரித்தானியா தலைமையிலான மேற்கு நாடுகள் கொண்டுவரும் தீர்மானத்திற்கு ஆதரவாக வாக்களிப்பது இல்லையேல் 2014ம் ஆண்டில் செய்ததைப் போன்று நடுவுநிலைமை வகிப்பதே இந்தியாவிற்குள்ள தெரிவுகளாக இருக்க முடியும் .

ஆக்கம் : அருண் ஆரோக்கியநாதர்.

Monday, March 1, 2021

இம்ரான் கானின் வருகையோ ஜெனிவா அமர்வோ ஜனாஸாக்களை புதைப்பதற்கான அனுமதிக்கு காரணமல்ல

 முகத்தை முற்றாக மறைக்கும் நிகாபிற்கு தடை விதிக்கப்பட்டாலும் ஹிஜாப் ,ஹபாயாவுக்கு எந்த தடையும் கிடையாது





 தினகரன் வாரமஞ்சரிக்காக நீதி அமைச்சர் அலி சப்றியுடன் ஷம்ஸ் பாஹிம் நடத்திய நேர்காணல் 


கேள்வி. ஜெனீவா மனிதை உரிமை மாநாடு மற்றும் பாக்கிஸ்தான் பிரதமரின் இலங்கை விஜயம்  என்பவற்றின் காரணமாக தான் கொரோனா மரணங்களை புதைக்க அனுமதி கிடைத்ததாக பரவலாக பேசப்படுகிறது. இதன் உண்மை நிலை என்ன?

பதில். அதனை ஏற்க முடியாது. நீண்ட  நாட்களாக இந்த பிரச்சினை பேசப்பட்டு வருகிறது. இது தொடர்பில் நியமிக்கப்பட்ட குழுவில் இது குறித்து ஆராயப்பட்டு வந்தது.குழுவிலுள்;ள சிலர் இதற்கு அனுமதி வழங்குவதற்கு தயாராக இருக்கவில்லை.அந்தக் குழு திரும்பவும் கூடி ஆராய்ந்த பின்னர் எடுத்த முடிவிற்கு அiமையவே புதைப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.அது தவிர வேறு காரணம் கிடையாது.

கேள்வி. பாகிஸ்தான் பிரதமரின் வருகையின் போது முக்கிய அமைச்சராக ஆரம்ப முதல் இறுதி வரை நீங்கள் இருந்தீர்கள். புதைக்கும் அனுமதி தொடர்பில் அவருடனான விஜயத்தில் பேசப்பட்டதா?

பதில். அவரின் விஜயத்தில் பிரதமர் மற்றும் ஜனாதிபதியுடன் தனியாக நேரடி பேச்சுக்கள் நடந்தன.அங்கு பேசப்பட்டதா என்று தெரியாது. பொதுவாக நடந்த கூட்டங்கள் இந்த விடயம் பேசப்படவில்லை.

கேள்வி.  விகாரை, தேவாலய சட்டம் மாற்றப்படாது ஆனால் முஸ்லிம் தனியார் விவாக விவாகரத்து சட்டம் மாற்றப்படும் என்று கூறியிருந்தீர்கள். துனியார் சட்டங்களை மாற்றுவதாக இருந்தால் ஒன்றுக்கு மாத்திரம் அனுமதிப்பது பற்றி விமர்சனம் எழுகிறதே?

பதில். முஸ்லிங்களின் பள்ளிவாசல்கள் தொடர்பான வக்பு சட்டத்தை போன்றது தான் அது.அதனால் எவருக்கும் எந்த பாதிப்பும் கிடையாது. ஆனால் ஏனைய தனியார் சட்டங்களில் மாற்றம் செய்ய வேண்டும்.

சிலர் கூறுவது போன்று அரசியலமைப்பின் 16-2 சரத்தை நீக்கினால் அது சகல  தனியார் சட்டங்களையும்  பாதிக்கும்.

எமது நாட்டிலுள்ள முஸ்லிம் பெண்களின் நலனுக்காக தான் முஸ்லிம் தனியார் விவாக விவாகரத்து சட்டம் மாற்றப்படுகிறது.அது தற்காலத்திற்கு உகந்ததாக இல்லை.சவுதி அரேபியாவில் 18 வயது திருமண வயதாக அறிவிக்கப்பட்டுள்ளது. உச்ச நீதிமன்ற நீதிபதிகளாக கூட அங்கு பெண்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.மலேசியாவில் பிரதம நீதியரசராக பெண் ஒருவர் இருக்கிறார்.

சிங்கப்பூர் ஜனாதிபதி முஸ்லிம் பெண்மணி. பாக்கிஸ்தான்,பங்களாதேஷ்களில் பிரதமராக பெண்கள் இருந்தார்கள். எமது நாட்டில் காதி நீதிபதியாக பெண் ஓருவரை நியமிக்க முடியாது என்றால் அதைத் தவிர வேறு பிற்போக்கு இருக்க முடியுமா?. எமது முஸ்லிம் விவாக விவாகரத்து சட்டம் பழைமைவாத போக்குள்ளது.இதனை மாற்றியாக வேண்டும்.

காதி நீதிபதிகள் பற்றி அனேக பெண்கள்இ பெற்றோர்களுக்கு நல்லபிப்பிராயம் கிடையாது.70 வீதமான காதி நீதிபதிகளின்  நடத்தை பற்றி விமர்சனம் உள்ளது.இது தொடர்பில் பல முறைப்பாடுகள் கிடைத்துள்ளன. குhதி நீதிமன்ற விசாரணைகளுக்கு நேரம்இஇடம் எதுவும் கிடையாது. வுழக்கிற்கு இலக்கம் கூட வழங்கப்படுவதில்லை.

கேள்வி. சில பிக்குமார்களும் அமைப்புகளும் முஸ்லிம் விவாக விவாகரத்து சட்டத்தை மாற்றுவது பற்றி பெரிதாக பேசி வருகின்றரே..?

பதில். அவர்கள் கூறுவதற்காக நாம் சட்டத்தில் மாற்றம் செய்யவில்லை. தமது அரசியலுக்காக அவர்கள் பேசுகிறார்கள்.எமது பெண்களின் நலனுக்காக இதில் கட்டாயம் மாற்றம் செய்தாக வேண்டும்.அதற்கான முன்னெடுப்புகள் நடைபெறுகிறது.இவ்வருடத்திற்குள் மாற்றம் வரும்.50 வருடங்களுக்கு மேலாக மாற்றம் பற்றி பேசப்பட்டாலும் எதுவும் நடக்கவில்லை. கடந்த ஆட்சியிலும் திருத்தம் பற்றி பேசப்பட்டது. யோசனைக் கூட முன்வைக்கப்பட்டன. முஸ்லிம் தனியார் சட்டத்தினால் இளவயது திருமணம் நடப்பதாக விமர்சிக்கின்றனர். ; 18 வயதிற்கு குறைந்த பெண்பிள்ளைகள் தாய்மையடைவது தொடர்பான புள்ளிவிபரங்களின் படி 80 வீதமானவர்கள் முஸ்லிம் பெண்களல்ல என்பதும் கவனிக்கப்பட வேண்டும்.

கேள்வி. சட்டத்தில் உள்ள குறைபாட்டை விட அதனை அமுல்படுத்துவோரின் குறை பற்றி பரவலாக பேசப்படுகிறது. இது பற்றி?

பதில். அதில் உண்மை இருக்கத்தான் செய்கிறது.ஆனால் சட்டத்தில் தான் அதிகமான குறைபாடுகள் காணப்படுகிறது. 12 வயது சிறுமியை திருமணம் செய்து வைக்க முடியுமா?  பெண் ஒருவருக்கு காதி நீதிபதியாக இருக்கமுடியாது என்பதை ஏற்க  முடியுமா? மணப்பெண் கையொப்பமிடத் தேவையில்லை என்பதை தான் ஏற்கலாமா? கட்டாயம் மாற்றங்கள் நடக்க வேண்டும்.நடைமுறைச்சாத்தியமாக இவை மாற்றப்பட வேண்டும். காதி நீதிபதிகளுக்கு 7500 ரூபா கொடுத்து தீர்ப்பு வழங்குவதை எதிர்பார்க்க முடியாது.

கேள்வி. புதிய சட்ட திருத்தம் எமது நாட்டுக்கு தனித்துவமான ஒன்றாக தயாரிக்கப்படுமா ? அல்லது வேறு நாடுகளில் பின்பற்றப்படும் முறைகளை மாதிரியாக கொண்டு உருவாக்கப்படுமா?

பதில். பல நாடுகளில் நடைமுறைப்படுத்தப்படும் முறைகளை ஆராய்ந்து வருகிறோம். நான் நியமித்துள்ள குழு பரிந்துரை வழங்கினாலும் அமைச்சரவை அனுமதி தேவை. அமைச்சரவை சொல்வதை தான் நான் செய்ய வேண்டியுள்ளது.இதனை விமர்சனம் செய்பவர்கள் புரிந்து கொள்ள வேண்டும். சில விடயங்கள் நாம் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் நடந்துதான் தீரும். எம்மீது ஒரு விடயம் திணிக்கப்படுவதை விட நாமாக முன்வந்து மாற்றம் செய்வது எமக்கு ஒரளவு சாதகமாக இருக்கும்.முஸ்லிம் சமூகம் தாமாக முன்வந்து மாற்றங்களை செய்திருப்பதாக கூறலாம்.பகுத்தறிவுடன் நடப்பது உகந்தது.

வேறு ஒரு அமைச்சர் எனது பதவியில் இருந்தாலும் இந்த மாற்றங்கள் நடக்கத்தான் போகிறது.

எனக்கு தேவையானதையெல்லாம் செய்து விட முடியாது.முஸ்லிம் சமூகத்தையும் இணைத்து எமது பெண்களின் உரிமைகளையும் பாதுகாத்து   இதனை நிறைவேற்றுவதே எனது நோக்கமாகும்.

கேள்வி. முற்றாக முககத்தை மறைக்கும் புர்காவை  தடை செய்ய சட்டம் கொண்டு வரப்பட இருப்பதாக கூறியிருந்தீர்கள்.முஸ்லிம் அமைச்சராக இருந்து கொண்டு முஸ்லிம் பெண்களின் உரிமையை பறிக்க முயல்வதாக சில விமர்சனங்கள் முன்வைக்கப்படுகிறதே.?

பதில். கடந்த அரசில் நியமிக்கப்பட்டிருந்த பாராளுமன்ற தெரிவுக் குழு பாதுகாப்புடன் தொடர்புள்ள பலடவிடயங்கள் தொடர்பில் பரிந்துரை செய்திருந்தது. அவற்றை எந்தெந்த அமைச்சுக்களின் ஊடாக முன்னெடுப்பது என ஆராயப்பட்டு பொறுப்புகள் வழங்கப்பட்;டுள்ளன. முகத்தை முற்றாக மறைக்கும் புர்காவை தடை செய்வது தொடர்பிலும் பரிந்துரை வழங்கப்பட்டுள்ளது. இதனை அமுல்படுத்தும் பொறுப்பு நீதி அமைச்சிற்கு வழங்கப்பட்டுள்ளது. அதற்கான ஏற்பாடுகளை தான் எனது அமைச்சு செய்கிறது.


கேள்வி. பாதுகாப்பு காரணத்திற்காக புர்காவை தடை செய்வதாக கூறப்படுகிறது.ஆனால் முகத்தை மறைப்பது தற்போதைய கொரோனா நிலைமையில் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.இந்த இரண்டும் முரண்பட்டதாக இல்லையா?

பதில். தொற்று நோய்  போன்ற நிலைமைகளில் அதற்கு இடமளிப்பது தொடர்பான சில சரத்துகளில் அதில் உள்ளடக்கப்பட்டுள்ளது.முழுமையாக முகத்தை மறைக்கும் தலைக்கவசம் தொடர்பிலும் பிரச்சினை இருக்கிறது.அதுவும் தடை செய்யப்படுகிறது.

கேள்வி. முஸ்லிம் பெண்கள் அணியும் ஏனைய ஹபாயா.ஹிஜாப் என்பவற்றுக்குள் பாதிப்பு வரலாம் என அச்சம் காணப்படுகிறதே?;

பதில். ஹிஜாப். ஹபாயா என்பபவற்றுக்கு எந்த தடையும் பாதிப்பும் வராது.அவற்றுக்கு அனுமதி இருக்கும் வகையிலே மாற்றங்கள் செய்யப்படும்.முற்றாக முகத்தை மூடுவதற்கு தான் தடை வரும்.

கேள்வி. கருப்பு நிறத்தில் அணிவது தொடர்பிலும் விமர்சனம் இருக்கிறதே.

பதில்.  ஒவ்வொருவரினதும் விருப்பத்திற்கு அமைய நிறத்தை முடிவு செய்யலாம். அதில் நாம் தலையிட மாட்டோம். ஆனால் இன்று கருப்பு ஆடை அணிவதும் முற்றாக முகத்தை மூடும் புர்கா அணிவதும் பெரிதும் குறைந்துள்ளது வரவேற்கத்தக்கது.அவர்களாக விரும்பி மாறியுள்ளனர்.ஒரு வீதமானவர்களின் செயற்பாட்டினால் முழு சமுகத்திற்கும் பாதிப்பு வர இடமளிக்கக் கூடாது.

இம்ரான் கானின் வருகையின் போது அவர் அனைத்து முஸ்லிம் எம்.பிகளையும் சந்தித்தார். எல்லா நாடுகளிலும் ஒவ்வொரு இனங்களிலும் 10 வீதமான அடிப்படை வாதிகள் இருப்பார்கள்.10 வீதம் நல்லவர்கள் இருப்பார்கள்.சிறுபான்மையினராக வாழ்வோர் ஒதுங்கி வாழாது  இணைந்து வாழ வேண்டும என்று ஆலோசனை வழங்கியிருந்தார்.

கேள்வி. கொரோனா மரணங்களை புதைக்க அனுமதி வழங்கி வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது.ஜெனீவா அமர்வின் பின்னர் மீண்டும் அனுமதி ரத்தாகும் என சமூக வலைத்தளங்களில் விமர்சிக்கப்படுகிறது.அதற்கு வாய்ப்புள்ளதா?

பதில். அதில் எந்த உண்மையும் கிடையாது. ஜெனீவா அமர்வை நோக்காக கொண்டு இந்த அனுமதி வழங்கப்படவில்லை.இந்த வர்த்தமான அறிவிப்பு மீண்டும் மாற்றப்படாது.

கேள்வி. முஸ்லிங்கள் தொடர்பான பிரச்சினைகளின் போது ஒரே ஒரு முஸ்லிம் அமைச்சர் என்ற வகையில் உங்களை தான் விமர்சிப்பார்கள், ஏசுவார்கள். கொரோனா மரணங்களை புதைக்க அனுமதி பெற நீங்களும் பல முயற்சிகளை மேற்கொண்டீர்கள். ஆனால் இந்த வெற்றிக்கு யார் சொந்தக்காரர் என பரந்தளவில் ஆராயப்படுகிறது.இது பற்றி என்ன கூற விரும்புகிறீர்கள்?

பதில். எமக்கு புதைக்க அனுமதி கிடைக்க வேண்டும் என்பது தான் முக்கியமானதே தவிர அதற்கான பாராட்டும் மலர்மாலைகளும் முக்கியமே கிடையாது. சமுகத்தின் நலனுக்காக முடிந்தளவு முயற்சி செய்கிறோம்.நாம் பாராட்டை எதிர்பார்க்கும் கீழ்த்தரமான அரசியல் செய்ய வரவில்லை.

அமைச்சரவையில் நான் மாத்திரம் தான் ஒரே முஸ்லிம் அமைச்சர். நான் இருப்பதால் என்னை ஏசுகிறார்கள்.அவர்கள் ஏசாவாவது அமைச்சரவையில் இருக்கிறேனே.நான் மாலைகளையும் பாராட்டுகளையும் எதிர்பார்த்து அரசியல் செய்ய வரவில்லை.

நாம் நீண்ட காலம் கௌரவமாக இந்த நாட்டில் வாழ்ந்தோம்.எதிர்காலத்திலும் ஏனைய சமூகங்களுடன் இணைந்து கௌரவமாக வாழ வேண்டும்.நடுநிலையாக வாழ வேண்டும்.கடந்த 25-30 வருடங்களாக பிரதான சமுகத்தில் இருந்து ஒதுங்கி செல்ல ஆரம்பித்திருக்கிறோம்.

இந்தியாவில் முஸ்லிங்கள் பிரச்சினைகளுக்கு எதிர்நோக்க அதுதான் காரணம்.

எமது மக்கள் மத்தியில் மனப்பாங்கு ரீதியான மாற்றம் வர வேண்டும்.எமது கல்விஇமத்ரஸா முறைஇ ஆடை விடயம் என பலவற்றில் மாற்றம் தேவை.



இந்தியாவால் ஜெனிவாவில் எங்களை கைவிட முடியாது-வெளிவிவகார செயலாளர்

 


ஜெனீவாவில் தனது செயல் வடிவிலான ஆதரவை இந்தியா, இலங்கைக்கு வழங்கவேண்டுமென இலங்கை வெளிவிவகார அமைச்சின் செயலாளர் ஜயநாத் கொலம்பகே வேண்டுகோள் விடுத்துள்ளார். அத்துடன் இந்தியா எங்களை கைவிட முடியாது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

இந்தியாவிலிருந்து வெளிவரும் தி ஹிந்து நாளிதழுக்கு வழங்கியுள்ள செவ்வியொன்றிலேயே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

தெற்காசிய நாடுகள், ஜெனீவாவில் ஆதரவளிக்காவிட்டால் இலங்கை மிகவும் குழப்பமடையுமென தெரிவித்துள்ள ஜயநாத் கொலம்பகே, ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையில் அங்கம் வகிக்கும் பாகிஸ்தான், இந்தியா, நேபாளம், பங்களாதேஷ் ஆகிய நாடுகள் இலங்கையைப் போன்று கொரோனா வைரசுக்கு எதிரான போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதாலும், மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுகளை எதிர்கொண்டுள்ளதாலும் இலங்கைக்கு ஆதரவளிக்குமென நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

எமது ஜனாதிபதி ஆதரவுகோரும் கடிதத்தை முதலில் இந்திய பிரதமருக்கே அனுப்பினார். ஏனென்றால் தெற்காசிய ஒற்றுமை குறித்து நாங்கள் உணர்வுபூர்வமாக உள்ளோமென தெரிவித்துள்ளார் என்றும் வெளியுறவுச் செயலாளர் ஜயநாத் பொலம்பகே தெரிவித்துள்ளார்.

இலங்கைக்கு அதன் அயல்நாடுகளின் ஆதரவு மிகவும் அவசியமாக உள்ளது, நாங்கள் மிகவும் அசாதாரணமான ஒன்றை கேட்கவில்லை.

நாங்கள் அயலவர்களுக்கு முன்னுரிமை என்ற இந்தியாவின் கொள்கையை அடிப்படையாக நாங்கள் இந்த வேண்டுகோளை விடுக்கின்றோம் எனவும் தெரிவித்துள்ளார்.

Sunday, February 28, 2021

ஜுனில் மாகாண சபைத் தேர்தலை நடத்த அரசாங்கம் திட்டம்?

 


எதிர்வரும் ஜுன் மாதத்தில் மாகாண சபைத் தேர்தலை நடத்துவதற்கு அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாக சண்டே டைம்ஸ் பத்திரிகை இன்று செய்திவெளியிட்டுள்ளது. 

இந்த விடயம் தொடர்பாக கலந்துரையாடுவதற்காக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ எதிர்வரும் புதன்கிழமை முன்னாள் மாகாண சபை உறுப்பினர்களை சந்திக்கவுள்ளதாகவும் அந்தச் செய்தியில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது. 



நாடு எதிர்நோக்கியுள்ள கொரோனா நிலைமையின் கீழ் மாகாண சபைத் தேர்தலை நடத்துவது பொருத்தமற்றது என ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி தெரிவித்துள்ள அதேவேளை புதிய அரசியல்யாப்பு அறிமுகப்படுத்தப்படவுள்ள நிலையில் மாகாண சபைமுறையை தொடர்பாக என்ன செய்யவேண்டும் என்பது தொடர்பாக தீர்மானிக்கப்படவேண்டியுள்ளதாக அரசாங்கத்திலுள்ள சில தரப்புக்கள் தமது அபிப்பிராயத்தை வெளிப்படுத்தியுள்ளன. 

கட்டம்கட்டமாக தவணைக்காலங்கள் 2018ம் ஆண்டில் நிறைவுற்ற நிலையில் நாட்டிலுள்ள 9 மாகாண சபைகளும் தற்போது மத்திய அரசாங்கத்தின் கீழே செயற்பட்டுவருகின்றமை குறிப்பிடத்தக்கது. 

அரசாங்கம் தேர்தல் முறைமையை மாற்றியமைக்குத் தீர்மானித்த நிலையில் எல்லைநிர்ணய நடவடிக்கை தாமதமானதால் மாகாணசபைத் தேர்தல் தாமதமாகியது. 

புதிய தேர்தல் முறைமையின் கீழோ பழைய தேர்தல் முறைமையின் கீழோ தேர்தலை நடத்த வேண்டுமாயின் தற்போதுள்ள சட்டத்தில் மாற்றம் செய்வதன் மூலமாகவே சாத்தியமாகும் 

ஹம்பாந்தோட்டை துறைமுகத்தை இனி இலங்கை மறக்கவேண்டியது தானா? ஒப்பந்தத்தை சீனாவால் 198 ஆண்டுகளுக்கு நீடிக்க முடியும்!

 




முன்னாள் அரசாங்கம் இழைத்த தவறுகாரணமாக 99 வருடகால குத்தகைக்கு சீனாவிற்கு வழங்கப்பட்ட ஹம்பாந்தோட்டை துறைமுகத்தை சீனா 198 ஆண்டுகளுக்கு நீடிக்க கூடும் என இலங்கை வெளிவிவகார அமைச்சர் தினேஷ் குணவர்த்தனவை மேற்கோள் காட்டி சீனாவின் South China Morning Post பத்திரிகை செய்திவெளியிட்டுள்ளது.  



துறைமுக ஒப்பந்தத்தை இலங்கை அரசாங்கம் மீள்பார்வைக்குட்படுத்துகின்றது என வெளியான தகவல்களையடுத்தே இலங்கை வெளிவிவகார அமைச்சர் இவ்வாறு தெரிவித்துள்ளதாகவும்  அந்தச்செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சீனாவிடம்பெற்ற கடன்களை திருப்பிச் செலுத்துவதற்கு வழியின்றி முன்னைய மைத்திரி-ரணில் 'நல்லாட்சி' அரசாங்கம்  ஹம்பாந்தோட்டை துறைமுகத்தை சீனாவிற்கு 99வருட குத்தகைக்கு வழங்கும் ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டது. 

2019ம் ஆண்டு நவம்பர் மாதத்தில் ஜனாதிபதியாகப் பதவியேற்ற கோட்டாபய ராஜபக்ஸ தாம் ஆட்சிக்கு வந்து சில நாட்களில் தமது மூத்த சகோதரர் மஹிந்த ராஜபக்ஸ ஜனாதிபதியாக இருந்தபோது ஆரம்பிக்கப்பட்ட ஹம்பாந்தோட்டை துறைமுகம் தொடர்பாக 2017ல் செய்துகொள்ளப்பட்ட ஒப்பந்தத்தை மீள் பார்வைக்குட்படுத்தப்போவதாக அறிவித்திருந்தபோதும் சீனத் தரப்பினர் வெளிப்படுத்திய எதிர்ப்பை அடுத்து ஒப்பந்தத்தை மீள்பார்வைக்குட்படுத்தும் திட்டமில்லை என சில நாட்களிலேயே கூறியிருந்தார். 



இருந்தபோதும் பெப்ரவரி 6ம்திகதி சிலோன் டுடே பத்திரிகைக்கு வழங்கியிருந்த நேர்காணலில் ஜனாதிபதி கோட்டாபய ஹம்பாந்தோட்டை துறைமுக ஒப்பந்தத்தை மீள்பார்வைக்குட்படுத்தவுள்ளதாக துறைமுக அதிகார சபையின் தலைவர் ஜெனரல் தயா ரத்னாயக்க தெரிவித்திருந்தார். 

இந்தத் துறைமுகத்தில் இருந்து இலங்கை எதனையுமே பெற்றுக்கொள்ளவில்லை என கூறியிருந்த தயா ரத்னாயக்க சீன அதிகாரிகளோடு நடத்திய பல சுற்று கலந்துரையாடல்களை அடுத்து சீனாவின் கட்டுப்பாட்டின் கீழுள்ள பகுதியிலிருந்த கடற்படைத்தளத்தையும் வேறிடத்திற்கு மாற்றிவிட்டதாக சுட்டிக்காட்டியிருந்தார். 



நேற்று பெப்ரவரி 20ம்திகதி சனிக்கிழமை சிலோன் டுடே பத்திரிகைக்கு  கருத்துவெளியிட்டுள்ள வெளிவிவகார அமைச்சர் தினேஷ் குணவர்த்தன "முன்னைய அரசாங்கம்,  2015ம் ஆண்டு பதவிக்கு வந்ததையடுத்து ஹம்பாந்தோட்டை ஒப்பந்தத்தை இரத்துச்செய்தபின் கடனைக் கட்டவழியின்றி மீண்டும் சீனாவுடன் 2017ல் ஒப்பந்தம் செய்துகொண்டபோது   99 வருட நீண்டகால குத்தகைக்கு வழங்கியது மட்டுமன்றி  அந்த தவணை முடிந்தவுடன் மேலும் 99வருடங்களுக்கு குத்தகைய புதுப்பிக்கக்கூடியவாறான சரத்தையும் ஒப்பந்தத்தில் உள்ளடக்கியுள்ளதாக குறிப்பிட்டுள்ளார். அரசாங்கம் ஒப்பந்தத்தில் மாற்றம் செய்ய உத்தேசித்துள்ளமை பற்றி வெளிவிவகார அமைச்சர் எதனையும் குறிப்பிடவில்லை.

இதனிடையே ஹம்பாந்தோட்டை ஒப்பந்தம் மீள்பார்வைக்குட்படுத்தப்பட்டுள்ளதான செய்திகளை சீனா மறுத்துள்ளது. புதன்கிழமை பேசிய சீன வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர் வாங் வென்பின் துறைமுக நடவடிக்கைகள் விஸ்தரிக்கப்பட்டுவருவதாக தெரிவித்துள்ளார்.

இருநாடுகளுக்கும் இடையே இடம்பெற்ற சமநிலையான தன்னார்வ பேச்சுக்களின் விளைவாகவே இந்த ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டதாக கூறியுள்ள சீன வெளிவிவகார பேச்சாளர் இந்துசமுத்திரத்தின் போக்குவரத்து கைத்தொழில் மற்றும் இடவசதியேற்படுத்தல் கேந்திர ஸ்தானமாக துறைமுகத்தை மாற்றுவதே நோக்கம் எனச் சுட்டிக்காட்டியிருந்தார். 



சீனாவின் சர்ச்சைக்குரிய ஒரு மண்டலம் மற்றும் ஒரு பாதை அன்றேல் பட்டுப்பாதை திட்டத்தில் ஹம்பாந்தோட்டை முக்கியஸ்தானத்தைப் பெறுகின்றமை குறிப்பிடத்தக்கது. 

இலங்கையின் தென் முனையில் அமைந்துள்ள ஹம்பாந்தோட்டை துறைமுகம் தெற்காசியாவின் முக்கியமான கடற்பாதைகளுக்கு அருகே அமைந்துள்ளமையால் எதிர்காலத்தில் முக்கியமான கடற்போக்குவரத்து கேந்திரமுனையமாக அமைவதற்கான சாத்தியக்கூறுகளைக் கொண்டுள்ளது. 

புவிசார் அரசியலில் செல்வாக்குச்செலுத்துவதற்காக சீனா கடன்பொறி இராஜதந்திரத்தின் கீழ் இந்துசமுத்திரத்தில் கேந்திர முக்கியத்துவமுள்ள இலங்கையிலுள்ள இடங்களை கையகப்படுத்துவதான சர்வதேச அவதானத்திற்கும்  குற்றச்சாட்டுகளுக்கும் ஹம்பாந்தோட்டை துறைமுகம் இலக்காகியுள்ளமை குறிப்பிடத்தக்கது. 

மூலம்: South China Morning Post

https://www.scmp.com/news/china/diplomacy/article/3122975/mistake-china-can-extend-hambantota-port-lease-198-years-sri

தமிழாக்கம்: அருண் ஆரோக்கியநாதர்


Saturday, February 27, 2021

இலங்கை – பாகிஸ்தான் நட்புறவு: இந்தியாவிற்கு எத்தகைய தாக்கத்தை ஏற்படுத்தும் ?

 




பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் பிப்ரவரி 23, 24 திகதிகளில் இலங்கைக்கு விஜயம் செய்த நேரத்தில் அவரின் நாடாளுமன்றத்தில் உரையாற்றுவதற்கான அழைப்பை ரத்து செய்ததால் சர்ச்சைகள் கிளம்பியது. ஆனால் இரு நாடுகளுக்கும் இடையேயான உறவு முன்பை காட்டிலும் அதிக வலுவுடையதாகவே இருக்கிறது. எனவே இந்த ரத்து அவர்களின் நீண்ட, நிலையான உறவில் எந்த பாதிப்பினையும் ஏற்படுத்தவில்லை.

தெற்காசியாவில் பாகிஸ்தான் இலங்கையின் இரண்டாவது மிகப்பெரிய வர்த்தக கூட்டாளி நாடாகும். பிப்ரவரி 18ஆம் திகதி அன்று இம்ரான்கான் வருகைக்கு முன்பு வர்த்தகச் செயலாளர்கள் மட்ட பேச்சுவார்த்தைகளின் போது இரு நாடுகளுக்கும் இடையே வர்த்தகத்தில் உள்ள தொழில்நுட்ப சிக்கல்களை தீர்க்க ஒரு கூட்டு செயற்குழுவை மீண்டும் செயல்படுத்த முடிவு செய்துள்ளதாக டான் (Dawn) பத்திரிக்கை செய்தி வெளியிட்டிருந்தது.

இலங்கை மற்றும் பாகிஸ்தான் நாடுகளுக்கு இடையேயான சுதந்திரமான வர்த்தக ஒப்பந்தம் 2005ஆம் ஆண்டிலிருந்து நடைமுறையில் உள்ளது. இலங்கைக்கு பாகிஸ்தான் ஜவுளி மற்றும் சிமெண்ட் பொருட்களை ஏற்றுமதி செய்கிறது. அதேபோன்று இலங்கை பாகிஸ்தானுக்கு தேயிலை, இரப்பர் மற்றும் ஆயத்த ஆடைகள் ஏற்றுமதி செய்கிறது. கடந்த காலங்களில் பாகிஸ்தான் அதனுடைய பண்டைய புத்த தொடர்புகளையும் தளங்களையும் முன்னிலைப்படுத்தி இலங்கையுடன் ஒரு கலாச்சார இணைப்பில் பணியாற்ற முயன்றது.



இலங்கை மற்றும் பாகிஸ்தான் நாடுகளுக்கு இடையேயான இருதரப்பு உறவுக்கு மிகவும் வலுவான தூணாக அமைந்தது பாதுகாப்பு. ஐ.பி.கே.ஃஎப் பணியில் இருந்து இந்தியா 1990ல் வெளியேறிய பிறகு இலங்கை ராணுவத்திற்கு எந்த விதமான பாதுகாப்பு ஆதரவினையும் வழங்க வில்லை. இருப்பினும் விடுதலைப் புலிகளுக்கு எதிரான யுத்தத்தில் உளவுத்துறை உதவிகளை வழங்கியது. இறுதிகட்ட போரின்போது தேவைப்பட்ட ஆயுதங்கள் மற்றும் வெடிமருந்துகள் போன்றவற்றிற்காக இலங்கை பாகிஸ்தானை நாடியது. போர் விமான விமானிகளுக்கு பயிற்சி அளிக்கவும் பாகிஸ்தானின் ஆதரவை நாடியது. அப்போது இலங்கையின் பாதுகாப்புச் செயலாளராக இருந்த அன்றைய அதிபர் கோத்தபாய ராஜபக்‌ஷே 2008ஆம் ஆண்டில் பாகிஸ்தானுக்கு வருகை புரிந்து போருக்கான ராணுவ பொருட்கள் வேண்டும் என்று கோரிக்கை வைத்தார்.

உதகை வெலிங்டனில் உள்ள தேசிய பாதுகாப்பு  மற்றும் பாதுகாப்பு சேவைகள் பணியாளர் கல்லூரியில் பயிற்சிக்காக இலங்கை ராணுவ அதிகாரிகள் இந்தியாவுக்கு வருவது போல (ஜனாதிபதி ராஜபக்‌ஷே ஒரு பழைய மாணவர்)இ அவர்கள் பாகிஸ்தான் ராணுவ கல்விக்கூடங்களுக்கு செல்கிறார்கள். இந்த மாத தொடக்கத்தில்இ பாகிஸ்தானின் பல நாடுகளின் கடற்படைப் பயிற்சியான அமன் -21 இல் இலங்கை பங்கேற்றது.

1971ம் ஆண்டு போரின் போது பாகிஸ்தானின் போர் விமானங்கள் எரிபொருளை இலங்கையில் நிரப்பின. இலங்கைக்கான பாகிஸ்தானின் தூதர்கள் பெரும்பாலும் ஓய்வு பெற்ற ராணுவ அதிகாரிகள் தான். சில ஆண்டுகளுக்கு முன்பு வரை பாகிஸ்தானுக்கான இலங்கை உயர் ஆணையர்களும் ராணுவ வீரர்களாகவே இருந்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

2006 ஆம் ஆண்டு கொழும்புவில் இலங்கைக்கான பாகிஸ்தான் உயர் ஆணையர் முகமது வாலி அலுவலகம் விடுதலைப்புலிகளால் தாக்கப்பட்டது. அவர் முன்னாள் உளவுத் துறை தலைவரும் கூட. அவர் அந்த தாக்குதலில் இருந்து உயிர் தப்பினார் இருப்பினும் அந்த தாக்குதலில் 7 பேர் கொல்லப்பட்டனர்.  இம்ரான் கானின் வருகை பல புரிந்துணர்வு ஒப்பந்தங்களுக்கு வழி வகுத்தது. பாதுகாப்பு துறையில் 50 மில்லியன் அமெரிக்க டாலர்கள் உதவி என்பது தலைப்பு செய்திகளாக இருந்தன.



கண்டியின் பேராதெனியபல்கலைக்கழகத்தில் ஆசிய கலாச்சாரம் மற்றும் நாகரீகம் தொடர்பாக பாகிஸ்தான் ஒரு மையத்தை உருவாக்க உள்ளது. நாடாளுமன்ற உரை ரத்து செய்யப்பட்ட பின்பும் கூட, அங்கிருக்கும் ஒரு விளையாட்டு அரங்கிற்கு இம்ரான் கானின் பெயர் சூட்டப்பட்டு இரு நாடுகளுக்கும் இடையேயான கிரிக்கெட் தொடர்பை வெளிப்படுத்தினர்.

உறுதியான விளைவுகளை தவிர பாகிஸ்தான் மற்றும் இலங்கை ஆகிய நாடுகளுக்கு இந்த வருகை மிகவும் முக்கியமானது. இம்ரான் கான் பிரதமராக பதவியேற்ற பிறகு இது இரண்டாவது சுற்றுப்பயணம் ஆகும்.  கடந்த நவம்பர் மாதத்தில் அவர் ஆப்கானிஸ்தானுக்கு சென்றார். இறுதியாக இலங்கைக்கு வந்த பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரிப். பாகிஸ்தானை தனிமைப்படுத்தும் முயற்சியில் இந்தியாவின் பங்கு சிறப்பாக இருந்தபோதிலும் இஸ்லாமாபாத்திற்கு அண்டை நாடுகளின் நட்புறவு இருக்கிறது என்பதை உறுதி செய்தது அந்த வருகை. தொற்று நோய் பரவலுக்கு பிறகு இலங்கைக்கு விஜயம் செய்த முதல் அரசாங்க தலைவர் இம்ரான்கான். அவர் கொழும்பு பொறுத்தவரையில் இந்த வருகை சர்வதேச அரங்கில் முக்கியமான நிகழ்வாக கருதப்படுகிறது.

கொரோனா வைரஸால் உயிரிழந்த இஸ்லாமியர்களின் உடல்களை இலங்கை அரசு அப்புறப்படுத்திய விதம் இஸ்லாமிய நாடுகளை திகைப்பிற்கு ஆளாக்கியது. அடக்கம் நடைபெறவில்லை. ஆனால் அனைத்து உடல்களும் தகனம் செய்யப்பட்டன. இந்த விதி இலங்கையில் பெரும் புயலை உருவாக்கியது. இஸ்லாமியர்களை துன்புறுத்த அரசு இந்த முறையை பயன்படுத்துகிறது என்று தலைவர்கள் நம்பினார்கள்.



இலங்கையின் மக்கள்தொகையில் சுமார் 11 சதவீதத்தைச் சேர்ந்த முஸ்லிம்கள், கடந்த பத்தாண்டுகளில் சிங்கள புத்த பெரும்பான்மையினருடன் பதட்டமான உறவைக் கொண்டிருந்தனர். கலவரங்கள் சில வருடங்களுக்கு ஒருமுறை அமைதியைக் குலைக்கும். ஐ.எஸ்.ஐ.எஸ் உறுப்பினர்களாக இருப்பதாகக் கூறும் ஆண்கள் மற்றும் பெண்கள் குழுவினரால் நடத்தப்பட்ட ஈஸ்டர் 2019 குண்டுவெடிப்பின் பின்னர் பதட்டங்கள் அதிகரித்தன. ஒரு இஸ்லாமிய நாட்டின் தலைவர் இலங்கைக்கு வருவது நல்ல விதமாக பார்க்கப்படுகிறது.

ஏற்கனவே கொழும்பு துறைமுகத்தில் கிழக்கு கண்டெய்னர் தீர்ப்பாயம் அமைக்கும் முத்தரப்பு ஒப்பந்தத்தில் இருந்து திடீரென இலங்கை, இந்தியா மற்றும் ஜப்பானை வெளியேற்றியது. மேலும் சீன நிறுவனம் ஒன்றுக்கு புதுப்பிக்கத்தக்க ஆற்றலை பயன்படுத்தி மின்சாரம் தயாரிக்கும் ஒப்பந்தம் ஒன்றை இலங்கை வழங்கியுள்ளது. இதனால் அதிருப்தியில் இருக்கும் இந்தியாவை மேலும் எதிர்க்க இலங்கை விரும்பவில்லை என்பதால் இலங்கை நாடாளுமன்றத்தில் காஷ்மீர் விவகாரம் குறித்து இம்ரான் கான் பேசலாம் என்ற யூகமே அவரின் உரையை ரத்து செய்ய காரணமாக இருந்தது என்று ஒரு தரப்பு தெரிவிக்கின்றது.



இந்தியா மற்றும் பாகிஸ்தானுக்கு இடையே நல்ல உறவை சமநிலையில் வைத்துக் கொள்ள இலங்கை கற்றிருக்கிறது. வர்த்தக உறவுகளை மேம்படுத்துவதற்காக சீனா பாகிஸ்தான் பொருளாதார அமைப்பை பயன்படுத்திக் கொள்ள கான் தனது வட்டாரத்திற்கு அழைப்பு விடுத்தது எந்தவொரு எதிர்வினையையும் வெளிப்படுத்தவில்லை, குறைந்தபட்சம் பொதுவில் இல்லை எந்தவிதமான எதிர்ப்பும் வெளியாகவில்லை.

இலங்கையின் மிக நெருங்கிய நட்பு நாடாக இருக்கும் நிலையிலும், கொழும்புவில் பாகிஸ்தானை எதிரியாக இந்தியா கருதவில்லை. கானின் விமானம் இந்திய பரப்பில் பறக்க டெல்லி அனுமதி வழங்கியது. சமீபத்தில் எல்.ஓ.சியில் ஏற்பட்டிருக்கும் மாற்றத்தினால் கூட இந்த அனுமதி வழங்கப்பட்டிருக்கலாம். அல்லது போர்நிறுத்தம் தொடர்பான உடனடி இந்தியா-பாகிஸ்தான் ஒப்பந்தம் இல்லாமல் கூட அனுமதி வழங்கப்பட்டிருக்கலாம்.

அவ்வப்போது, இந்திய பாதுகாப்பு அமைப்பு முஸ்லிம்களை தீவிரமயமாக்குவதில் பாகிஸ்தானின் பங்கு குறித்து கவலை தெரிவித்துள்ளது – குறிப்பாக கிழக்கு இலங்கையில். அங்கு சில புதிய மசூதிகளை எழுப்ப்ப மேற்கு ஆசிய நாடுகளிலிருந்து நிதி வழங்கப்பட்டுள்ளது. இது இந்தியாவிலும் விளைவுகளை ஏற்படுத்தக் கூடும்.


நன்றி : இந்தியன் எக்ஸ்பிரஸ் 

இந்தக் கட்டுரை முதலில் இந்தியன் எக்ஸ்பிரஸில் பிரசுரமானது. மக்களுக்கு  அறிவூட்டும் நன்நோக்குடன் குளோப்தமிழில் மீள்பிரசுரிக்கப்படுகின்றது. 

ஊடகத்துறையில் மறக்கமுடியாத அனுபவம்


ஈஸ்டர் தாக்குதலில் கடும் பாதிப்பிற்குள்ளான கட்டுவாபிடிய புனித செபஸ்தியார் தேவாலயத்தில்...

 ஊடகத்துறை வாழ்வில் ஒவ்வொருவருக்கும் மறக்கமுடியாத அனுபவங்கள் பல இருக்கக்கூடும்.  இறுதிப்போர்க் காலத்தில் 2009ம் ஆண்டில்,  தீபம் தொலைக்காட்சியில் பணியாற்றியபோது  புதுமாத்தளன் , புதுக்குடியிருப்பு,  கிளிநொச்சி மற்றும் வவுனியாவின் மெனிக்பாம் சென்று தகவல்திரட்டி அறிக்கையிட்டமை மறக்கமுடியாதது.



 அதற்கு பின்னர் 2019ம் ஆண்டு ஈஸ்டர் உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களையடுத்து  ஆதவன் தொலைக்காட்சிக்காக தகவல்திரட்டி அறிக்கையிட்டமையும்  சர்வதேச ஊடகங்களுடன் இணைந்து பணியாற்றியமையும் மறக்கமுடியாதது.
  

       கொச்சிக்கடை புனித அந்தோனியார் தேவாலயத்தில்...

உலகின் முன்னணி ஊடகங்கள் வரிசையில் இடம்பெறும் அல்ஜஸீரா அமெரிக்காவின் National Public Broadcast (NPR) என். பி. ஆர். அவுஸ்திரேலியாவின் ABC- ஏ.பி.சி. மற்றும் S.B.S-எஸ்.பி. எஸ் ஆகியவற்றிற்காக பணியாற்றியமை மறக்கமுடியாதது. ஊடகத்துறையிலுள்ளவர்கள் தொடர்ச்சியாக தம்மை மேம்படுத்தி அறிவை வளர்த்துக்கொள்ளும் போதே தம்மை நம்பி தகவல்களுக்காக காத்திருக்கும் பாமரர் உட்பட பலதரப்பட்ட மக்களுக்கும் புரியும் படியாத செய்திகளை தெளிவாகக் கொண்டுசேர்க்கமுடியும். அந்த வகையில் இந்த நிறுவனங்களுடன் இணைந்துபணியாற்றிதன் மூலம் பல புதிய விடயங்களையும் தெரிந்தவிடயங்களை ஆழமாகவும் அறிந்துகொள்ளக்கிடைத்தது.


             அல் ஜஸீரா செய்தியாளர் டேவிட் பேர்னாட்டுடன் கடும்போக்காளர்கள் நிறைந்த சிங்களக் கிராமமொன்றில் ...


 ஊடகத்துறையில் ஒரு விடயம் தொடர்பாக தமக்கென தனியான கருத்துக்களை விருப்புக்களைக் கொண்டிருந்தாலும் செய்தி என்று வரும் போது எமக்கு தனிப்பட்ட ரீதியில் விருப்பமில்லாதவர்களை அன்றேல் உடன்பாடில்லாதவர்களை மாற்றுக்கருத்துக்களைக் கொண்டவர்களது கருத்துக்களையும் நாம் உள்வாங்குவது அவசியம் என ஏற்கனவே அறிந்திருந்த கருத்தை மீண்டும் உறுதிப்படுத்திக்கொள்ளமுடிந்தது. என்றென்றும் மறக்கமுடியாத அனுபவமாக இது அமைந்தது.


                   காத்தான்குடி மெத்தைப் பள்ளிவாசலில் சிறுவர்களுடன்...

தனது அன்புக்குரிய தங்கையை இழந்தவருத்தத்தில் கொச்சிக்கடையில் புவனேஷ்வரி அக்காவை   ABC நேர்காணல் செய்ய பங்களித்தபோது...



----------------xxxxx--------------------------------------------xxxxx-----------------------------------------

கொச்சிக்கடை அந்தோனியார் ஆலய முன்றலில்


..........................xxxxx...................................................xxxxx......................................................


கட்டுவாபிடிய செபஸ்தியார் ஆலய சந்தியில் 




------------xxxxx----------------------------xxxxx----------------------------------------------------------






-------------------xxx...........................xxxxxx.........................xxxxx


                                  கொச்சிக்கடை அந்தோனியார் ஆலயத்தில்





----------------xxxxx-------------------------------xxxxx------------------------------------------------
                   கட்டுவாபிடிய செபஸ்தியார் ஆலயத்தில்...
 







----------------------xxxxx.........................................xxxxx.................................................

காத்தான் குடிக்கு அல்ஜஸீரா செய்தியாளர்களுடன் சென்றபோது...





---------------xxxxx----------------------xxxxx------------------------------------xxxxx-------------













----------------------------------------------xxxxx-------------------------------------------------------