Monday, August 31, 2020

இணைய ஊடகவியலாளர் சதுரங்க டி சில்வா கைது

 


இணைய ஊடகவியலாளர் டெஸ்மண்ட் சதுரங்க டி சில்வா குற்றப்புலனாய்வுப்  பிரிவினரால் இன்று கைதுசெய்யப்பட்டுள்ளதாக முன்னாள் தென் மாகாண ஆளுநர் கீர்த்தி தென்னக்கோன் தெரிவித்துள்ளார்.

நீதிமன்றத்தால் பிறப்பிக்கப்பட்ட பிடிவிறாந்தின் அடிப்படையில் ஊடகவியலாளரைக் கைதுசெய்த குற்றப் புலனாய்வு பிரிவு அதிகாரிகள் அவரது கணனியையும் கைப்பற்றிச்சென்றுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

லங்காநியுஸ்வெப் lankanewsweb.org இணையத்தளத்தின் ஆசிரியராக இவர் கடமையாற்றிவந்த சதுரங்க டி சில்வா நீதித்துறையை அவமதிக்கும் வகையில் செய்ரிh ஆக்கங்களை பிரசுரித்த குற்றச்சாட்டின் அடிப்படையிலேயே கைதுசெய்யப்பட்டுள்ளார்.


சம்பூரில் அமெரிக்க நிதி உதவியோடு புதிய பாடசாலை நிர்மாணம்



கிழக்கு மாகாணத்தின் சம்பூரில் அமெரிக்காவின் நிதியுதவியோடு பாடசாலையொன்று நிர்மாணிக்கப்பட்டுள்ளது.   




சம்பூரில் புதிய கூனித்தீவு நாவலர் பாடசாலையை ஓகஸ்ட் 26 ஆம் திகதி இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் அலெய்னா பி. டெப்லிட்ஸ் திறந்து வைத்தார். எட்டு வகுப்பறைகளுடன் கூடிய இரண்டுமாடி வகுப்பறை கட்டிடம், 30,000 லீற்றர் கொள்ளளவுடைய சேமிப்புத் தொட்டியுடன் கூடிய மழைநீர் சேகரிப்பு முறைமை, மற்றும் மாணவ, மாணவியர், ஆசிரியர்கள், மற்றும் அங்கவீனமுடையோருக்கான வசதிகளுடன் கூடிய கழிவறைகள் என்பன இந்த புதிய வசதித்திட்டத்தில் உள்ளடங்குகின்றன. அமெரிக்க இந்தோ-பசுபிக் கட்டளையகத்தின் (U.S. Indo-Pacific Command) முன்னெடுப்பொன்றான இந்த திட்டத்தில் அமெரிக்காவும் இலங்கை கல்வி அமைச்சும் 93 மில்லியன் ரூபாவை (ஏறக்குறைய 5 இலட்சம் அமெரிக்க டொலர்கள்) முதலீடு செய்துள்ளன.



'புதிய கோட்பாடுகள் மற்றும் சிந்தனைகளை ஆராய்ந்தறிவதற்கு மாணவர்களுக்கு பாதுகாப்பான சூழலொன்றை இந்த புதிய கட்டிடம் வழங்கும் அதேநேரம், அவர்களுக்கும் அவர்களது சமூகத்துக்குமான எதிர்காலமொன்றையும் நிர்மாணிக்கிறது,' என்று தூதுவர் டெப்லிட்ஸ் இந்த நிகழ்வில் தெரிவித்தார். 'பிள்ளைகளின் கல்வியில் அவர்களை ஆதரிக்கும் மற்றும் வலுவூட்டும் சிறப்புரிமையையும் பொறுப்பையும் அனைத்து பெரியவர்களும் பகிர்ந்து கொள்கின்றனர்,' என்றும் அவர் மேலும் குறிப்பிட்டார்.   


 
மிகவும் அவசியமாக இருந்த வகுப்பறை வசதிகளை வழங்குவதற்கு மேலதிகமாக, உள்ளூரில் இருப்பிடங்களை இழந்த 400 பேர் வரையானோருக்கான அவசரகால தங்குமிடமாக செயற்படக்கூடிய வகையிலும் இந்த கட்டிடம் அமைக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, இந்த பிராந்தியம் இயற்கை அனர்த்தங்களால் பாதிக்கப்படக்கூடியது என்ற வகையில் இது பயனுள்ளதாக அமைந்துள்ளதாக    அமெரிக்கத்தரப்பினரால் நம்பிக்கை வெளியிடப்பட்டுள்ளது. 



கிழக்கு மாகாண ஆளுநர் அனுராதா யாஹாம்பத், கிழக்கு மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் ஐ.கே.ஜி. முத்துபண்டா, மாகாண கல்விப் பணிப்பாளர் எம்.ரி.ஏ. இஷாம், வலயக் கல்விப் பணிப்பாளர் ஏ.எல்.எம். காசிம், மற்றும் பிரதேச செயலளார் எம்.பி.எம். முபாரக் ஆகியோரும் இந்த நிகழ்வில் கலந்துகொண்டனர்.  
 


கடந்த ஒன்பது வருடங்களில், அமெரிக்க இந்தோ-பசுபிக் கட்டளையகத்தின் ஊடாக அமெரிக்க மக்கள் 5.8 மில்லியன் அமெரிக்க டொலர்களுக்கும் அதிகமான முதலீடுகள் மூலம் 14 பாடசாலைகளின் நிர்மாணத்திற்கு உதவியுள்ளனர். பாடசாலை நிர்மாண திட்டங்களானது வசதிகளற்ற சமூகங்களுக்கு நேரடியாக பயனளித்து அமெரிக்காவுக்கும் உள்ளூர் சமூகங்களுக்கும் இடையிலான நீண்டகால பங்காண்மையை பிரதிநிதித்துவப்படுத்தும் அதேநேரம், இலங்கையின் இளையோருக்கு கற்பித்தல் தொடர்பிலும் பங்களிப்புச் செய்வதாக அமெரிக்க தூதரகம் தெரிவித்துள்ளது.      


ஒரே நாளில் 78,761 பேருக்கு இந்தியாவில் கொரோனா தொற்று உலக சாதனை: இலங்கையின் நிலை என்ன?

 




கொரோனா வைரஸ் தொற்று நோய் உலகில் கடந்த டிசம்பர் மாதம் பரவத்தொடங்கியமை முதல் ஒரே நாளில் அதிக தொற்றாளர்கள் இனங்காணப்பட்டமை இந்தியாவில் நேற்று ஞாயிற்றுக்கிழமை பதிவாகியுள்ளது.  நேற்று மாத்திரம் 78,761 தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளமை அதிர்ச்சியளிக்கின்றது. 

இதற்கு முன்பாக ஒரே நாளில் அதிக தொற்றாளர்கள் பதிவான சந்தர்ப்பமாக கடந்த ஜுலை மாதம் 16ம் திகதி அமெரிக்காவில் 77, 299 தொற்றாளர்கள் பதிவானமை குறிப்பிடத்தக்கது. 

தற்போது இந்தியாவில் கொரோனா தொற்றுக்கு இனங்காணப்பட்டுள்ளவர்களின் மொத்த எண்ணிக்கை 36 லட்சத்து 19 ஆயிரத்து 169 ஆக பதிவாகியுள்ளது. 

தற்போது இந்தியாவில் கொரோனா தொற்றுக்கு இனங்காணப்பட்டுள்ளவர்களின் மொத்த எண்ணிக்கை 36 லட்சத்து 19 ஆயிரத்து 169 ஆக பதிவாகியுள்ளது. இதன்படி அதிக கொரோனா தொற்றாளர்கள் இனங்காணப்பட்ட நாடுகள் வரிசையில் இந்தியா 3ம் இடத்தில் உள்ளது. முதலிடத்தில் உள்ள அமெரிக்கா 61லட்சம் தொற்றாளர்களையும் 2வது இடத்தில் உள்ள பிரேசில் 38 லட்சம் தொற்றாளர்களையும் கொண்டுள்ளது. கடந்த இருவாரமாக இந்தியாவில் பதிவுசெய்யப்படும் தொற்றாளர்கள் எண்ணிக்கையை அவதானிக்கும் போது அடுத்து ஓரிரு தினங்களில் பிரேசிலைத்தாண்டிவிடும்  என்பதைக் கூற கணிதமேதைகள் தேவையில்லை.



கடந்த சில நாட்களாக இந்தியாவில் பதிவாகிவரும் கொரோனா தொற்றாளர்கள் எண்ணிக்கையை நோக்குகின்றபோது கொரோனா பரவலின் மத்திய ஸ்தானமாக இந்திய உபகண்டம் மாறியுள்ளதை உணர்ந்துகொள்ளமுடிகின்றது. 

கொரோனாவால் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை நேற்றையதினத்தில் மாத்திரம் இந்தியாவில் 948 ஆக பதிவுசெய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் அங்கு உயிரிழந்துள்ளவர்களின் மொத்த எண்ணிக்கை 64,617 ஆக காணப்படுகின்றது. கொரோனாவிற்கு பலியானவர்களின் எண்ணிக்கையில் 187,224 உடன் அமெரிக்க முதலிடத்திலும் 120,896  உடன் பிரேசில்  2ம்  இடத்திலும் உள்ளது.

உலகில் இதுவரை கொரோனாவிற்கு பலியானவர்கள் எண்ணிக்கை 850,149 ஆக பதிவாகியுள்ளதுடன் ஜோன் ஹோப்பின்ஸ் பல்கலைக்கழகத்தின் தரவுகளுக்கு அமைவாக  இதுவரை கொரோனா தொற்று இனங்காணப்பட்டுள்ளவர்கள் எண்ணிக்கை 25 மில்லியன்களை உலகளவில் கடந்துள்ளமை குறிப்பிடத்தக்கது. 


இதேவேளை இலங்கையில் கொரோனா தொற்று இனங்காணப்பட்டுள்ளவர்களின் மொத்த எண்ணிக்கை நேற்றையதினம் முதன் முறையாக 3000 ஐ தாண்டியது . தற்போதுவரை 3012 பேர் இனங்காணப்பட்டுள்ளதுடன் இதில் 2,860 பேர் சிகிச்சை குணமடைந்து வெளியேறியுள்ளனர். 12 பேர் மாத்திரமே இலங்கையில் இதுவரை கொரோனா தொற்றுக்கு பலியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது. 




Sunday, August 30, 2020

அழிவை நோக்கி தமிழரசுக் கட்சி!- காலைக்கதிர் பத்திரிகையின் எச்சரிக்கைமிகு ஆசிரியர் தலையங்கம்

 



பொதுத் தேர்தலில் பெரும் வீழ்ச்சியைத் தழுவிய நிலையிலும் தமிழரசுக் கட்சி அதன் தவறுகளை நிவர்த்திக்காமல்  கட்சி உட்பூசலில் ஊறி நாறிக்கிடக்கின்றது என்ற விடயத்தை யாழ்ப்பாணத்தில் இருந்து வெளியாகும் காலைக்கதிர் பத்திரிக்கை வெளிப்படுத்தியுள்ளது. தேய்கிறது தமிழரசு என்ற தலைப்பில் இன்று பிரசுரமான ஆசிரியர் தலையங்கம் இதோ:

xxx

பொதுவாக வலிமையான அரசியல் கட்டமைப்பு ஒன்று தேர்தல்களில் பின்னடைவைச் சந்தித்தால் உடனடியாக விரைந்து தன்னைச் சுதாகரிப்பதற்குத் தயாராகும்.

உள்கட்சிப் பிளவுகளால் தேர்தல் பின்னடைவு ஏற்பட்டிருக்கின்றது என்பதை உணர்ந்தால் அந்தப் பிளவுகளை சீர்செய்து, ஐக்கியத்தை உறுதிப்படுத்தி, மீண்டும் புதுமெருகு பெற அந்தக் கட்டமைப்பு நடவடிக்கை எடுக்கும்.

இதைச் செய்வதற்கு இரண்டு விடயங்கள் முக்கியமானவை. ஒன்று - மக்கள் தீர்ப்புக்கு தலை வணங்குதல். அடுத்தது - சுயநலம் துறந்துஇ தான் சார்ந்த கட்டமைப்பை மீள வலிமையாக்கும் பொது நலன்நோக்கு இருக்க வேண்டும்.

வடக்குஇ கிழக்கில் தமிழர் தாயகத்தில் பெரும் தேர்தல் பின்னடைவைச் சந்தித்திருக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப் பின் பிரதான பங்காளிக் கட்சியான இலங்கைத் தமிழரசு ஏனோ இந்த விடயங்களை உணர்ந்து கொண்டதாக இல்லை.

தேர்தல் தோல்வியில் துவண்டு போய்க் கிடக்கும் அக்கட்சியைத் தூக்கி நிறுத்தும் பொது நலனை விடத் தத்தமது தனிப்பட்ட அரசியல் நலனே முக்கியமானது - உயர்வானது - என்று கருதியே கட்சித் தலைவரில் இருந்து கடைசித் தொண்டன் வரைகங்கணம் கட்டி நிற்கிறார்கள் போலும். அவர்களின் செயற்பாடுகள் அப்படித்தான் உள்ளன.

தேர்தல் தோல்வியில் - அல்லது பின்னடைவில் - இருந்து மீளுவதற்கும், உயிர்ப்புடன் மீளெழுவதற்கும் எதை எதைச் செய்ய வேண்டுமோ அதையதை எல்லாம் செய்யாமல் தவிர்த்து எதை எதையெல்லாம் செய்யக் கூடாதோ அதை அதையெல்லாம் தேடிச் செய்வதில் தமிழரசு முனைப்பாக இருப்பது கண்கூடு.

பொதுத் தேர்தல் பின்னடைவில் இருந்து மீண்டு மாகாண சபைத் தேர்தலுக்கு இடையில் மீளவும் மக்கள் மத்தியில் தன்னை வலிமையான சக்தியாகக் காட்டுவதை விடுத்து, நாம் இன்னும் இன்னும் பலவீனமானவர்கள், பிளவுண்டவர்கள் உள்வீட்டு மோதல்களில் உச்சமானவர்கள் என்று பொதுமக்களுக்கு அம்பலப்படுத்திக் காட்டுவதிலும், தமிழரசுக் கட்சி தொடர்பில் அத்தகைய படிமானம் சாதாரண பொதுமகன் மனதில் ஏற்படுவதைத் தூண்டும் விதத்திலான செய்திகளைப் பறைசாற்றுவதிலும் அக்கட்சியும், அதன் தரப்புகளும் மிகவும் முனைப்பாக இருக்கின்றன போலும்.

சரியோ, பிழையோ காரணம் எதுவாயினும் மக்கள் தீர்ப்புக்குத் தலைவணங்குவது அரசியல்வாதிகளினதும் கட்சியினதும் தலையாய கடமை. ஆனால், அது இங்கு மாறி நடக்கின்றது. மக்களால் அங்கீகரிக்கப்பட்டு வெற்றி பெற்றவர்கள் யாரோ, அவர்களைக் கட்சிக்குள்ளேயே திட்டித்தீர்த்து காலைவாரி கட்சியையே குட்டிச்சுவராக்கும் நிகழ்ச்சித் திட்டம் கனகச்சிதமாக திட்டமிட்டு அரங்கேற்றப்படுகின்றது.

வடக்கும், கிழக்கும் ஐக்கியப்பட்டிருப்பதுதான் தமிழ்த் தேசியத்தின் தனிப்பலம். தமிழரசுக்கும் மிஞ்சியிருக்கக் கூடிய பலம் அது ஒன்றுதான். உங்கள் நடவடிக்கை மூலம் வடக்கு கிழக்குப்பிரிவினை - பிரதேசவாதப் போக்கு - வந்துவிடக்கூடாது என்று கட்சியின் மூத்த தலைவர் பேசும்போது அவர்தான் (கட்சியின் மூத்த தலைவர்தான்) பிரதேசவாதத்தை முன்வைத்தார் என்ற சாரப்பட்ட குற்றச்சாட்டைப் பகிரங்கப்படுத்தி அதன் மூலம் கட்சி மேல் மட்டத்திலிருந்து கீழ் மட்டம் வரை பிரதேச வாதம் வந்து விட்டது என்ற தோற்றப்பாட்டைக் காட்டும் சிறுமைத்தனமும் அரங்கேறுகின்றது.

தோற்ற தரப்புகள் தோல்வி வெப்பியாரத்தில் அப்படிப் பேசுகின்றன செயற்படுகின்றன என்று பார்த்தால் விவகாரம் அதையும் தாண்டி மோசமானதாக உள்ளது.

கட்சிக்குள் பல அணிகள், குழுக்கள். கட்சித் தலைவரே பிரிந்து நிற்கும் அணி ஒன்றுக்குத் தலைமை தாங்கி உள்கட்சிச் சண்டைக்கு வாள் வீசும் பேரவலம்.

குட்டையைக் கலக்கிப் பருந்துக்குக் கொடுத்த மாதிரிஇ கட்சியைக் குழப்பி வெற்றியை மாற்றுத் தரப்புக்குக் கையளிக்கும் கைங்கரியத்துக்குக் கட்சித் தலைவரே தலைமை வகிக்கும் பேரவலக் கட்டத்தில் தமிழரசுக் கட்சி.

இப்படி ஈடாடிப் போய் நிற்கும் கட்டமைப்பு வரப் போகும் மாகாணசபைத் தேர்தலில் முதலமைச்சர் பதவியைப் பெறும் என்ற அதீத நம்பிக்கையில் உள்ளேயிருந்து கொண்டே சிலர் வாள்தீட்டி விடுகின்றனர்.

பழம்பெரும் கட்சியான தமிழரசு 'கழுதை தேய்ந்து கட்டெறும்பான நிலைக்கு' போய்க் கொண்டிருப்பதற்கு பிரதான காரணங்களில் ஒன்று அது ஐக்கியப்பட்ட - ஒற்றுமையான - கட்ட மைப்பல்ல என்ற மக்களின் கருத்து நிலைமை.

அதை ஊர்ஜிதப்படுத்தி உறுதிப்படுத்துமாற் போல கட்சித் தலைவரிலிருந்து அவரின் ஊது குழல் ஊடகம் வரை ஒற்றைக் காலில் நின்று செயற்படும் அவலம். இது விடயத்தில் தந்தை செல்வா சொன்னது அவரது கட்சிக்கே முதலில் பொருந்துவதாக இருக்கும். (காலைக்கதிர் - தலையங்கம் 30-08-2020)

காணாமல் ஆக்கப்பட்ட எம் அதிபர் பிரான்சிஸ் ஜோசப் எங்கே?



நாம் வாழ்க்கையில் எத்தனையோ மனிதர்களைக் கடந்துபோகின்றோம். எத்தனையோ சம்பவங்களை மறந்துபோகின்றோம். ஆனால் சில மனிதர்களும் சம்பவங்களும் எம் நெஞ்சத்து நினைவலைகளை விட்டு பிரிந்துவிடுவதில்லை.

அப்படியான விரல்விட்டெண்ணக்கூடிய மனிதர்களில் ஒருவராக யாழ் புனித பத்திரிசியார் கல்லூரியில் முதலாம் ஆண்டு முதல் 9ம் ஆண்டுவரை நான் படித்த காலப்பகுதியில் அதிபராக இருந்த அருட்தந்தை பிரான்சிஸ் ஜோஸப் அடிகளாரைக் குறிப்பிடலாம். அவர் யுத்ததின் இறுதியில் இராணுவத்தினரிடம் சரணடைந்த நிலையில் காணாமலாக்கப்பட்ட சம்பவத்தையும் எளிதில் மறந்துவிடமுடியாது. 

சர்வதேச வலிந்து காணாமலாக்கப்பட்டோர் தினமான இன்று வடக்கு கிழக்கைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான உறவுகள்  ஆர்ப்பாட்டப்பேரணிகளையும் கூட்டங்களையும் நடத்தியிருந்ததைப் பார்த்த போது எனது அதிபரை நினைத்துக்கொண்டேன்.

தமிழினத்தின் கல்வி மேம்பாட்டிற்காக தன்னலம் கருதாது உழைத்தவர் பிரான்சிஸ் ஜோஸப் அடிகளார்.13 ஆண்டுகளுக்கு மேலாக பத்திரிசியார் அதிபராக இருந்து ஓய்வுபெற்ற பின்னர் அவர் நினைத்திருந்தால் மேலைத் தேய நாடுகளுக்கு சென்று தனது இறுதிக்காலத்தை சௌகரிகமாக கழித்திருக்கமுடியும். ஆனால் தமிழ் மக்களின் கல்வி உயர்வையும் விடுதலையையும் இரு கண்களாக நேசித்ததால் அவர் தெரிவு வேறாக இருந்தது.  

அன்னாரைப் பற்றி தேசக்காற்று இணையத்தளத்தில் வெளியான அற்புதமான ஆக்கத்தை உங்களோடு இங்கு பகிர்ந்துகொள்கின்றேன்.



வணக்கத்துக்குரிய பிரான்சிஸ் ஜோசப் அடிகளார். இன்று உலகின் எங்கோ ஒரு மூலையிலாவது இவரைப்பற்றி பேசிக்கொண்டோ சிந்தித்துக்கொண்டோ இருக்கும் தமிழர்கள் இருக்கிறார்கள். மிகப் பெரியளவில் பேசப்பட்டுக் கவனயீர்ப்பைப் பெற்றிருக்க வேண்டிய அடிகளாரின் விடயம் பத்தோடு பதினொன்றாக சிறிதளவே பேசப்பட்டு வந்துள்ளது.

ஆனால் பிரான்சிஸ் ஜோசப் அடிகளாரைத் தெரியாமல் வன்னியில் யாரும் இருந்ததில்லை. அவ்வளவு தூரத்துக்கு வன்னியின் சமூக மேம்பாட்டுக்காக அயராது உழைத்திருந்தார் அடிகளார்.

யாழ்ப்பாணம் புனித பத்திரிசியார் கல்லூரியின் அதிபராகக் கடமையாற்றி ஓய்வு பெற்றபின்னர் முழுநேரமாக தமிழ்ச் சமூகத்தின் கல்வி மேம்பாட்டுக்காக உழைக்கத் தொடங்கினார். இந்நிலையில் தமிழர் பகுதியில் தமது நிழல் அரசாட்சியை நடத்திக்கொண்டிருந்த விடுதலைப் புலிகள் அமைப்பினால் உருவாக்கப்பட்ட கட்டமைப்புக்களுள் ஒன்றான 'தமிழீழக் கல்வி மேம்பாட்டுப் பேரவை'யின் தலைவராகப் பொறுப்பேற்று இறுதிவரை அவ்வமைப்பு மூலம் அரும்பணிகள் ஆற்றிவந்தார்.

யாழ்ப்பாணத்திலிருந்து போராட்டத் தலைமை வன்னிக்குப் பெயர்ந்த பின்னர் அடிகளாரின் பணி முழுமையாக வன்னியில் மிளிரத் தொடங்கியது. அவரது ஒவ்வொரு வினாடியும் எவ்வாறு தமிழ்ச்சமூகத்தின் கல்வித் தரத்தை மேம்படுத்துவது என்பதிலேயே கழிந்தது. எந்நேரமும் அதுகுறித்தே சிந்தித்துக் கொண்டும் செயலாற்றிக் கொண்டுமிருந்தார். குறிப்பாக ஆங்கில மொழியறிவை மேம்படுத்துவதில் அயராது உழைத்தார்.

இயல்பிலேயே ஆங்கில மொழிவல்லமை கொண்டிருந்தமையும், நீண்டகால ஆசிரியத் தொழில் அனுபவமும், யாழ்ப்பாணத்தின் மிகப்பெரிய கல்லூரிகளுள் ஒன்றான புனித பத்திரிசியார் கல்லூரியின் அதிபராகக் கடமையாற்றிய பெரு அனுபவமும் கொண்டிருந்தமையால் அவரால் தனது பொறுப்புக்களையும் கடமைகளையும் மிகத்திறம்படச் செய்ய முடிந்தது.

சிறிலங்கா அரசாங்கத்துக்கும் விடுதலைப் புலிகளுக்குமிடையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் கைச்சாத்தாகியபின்னர் தனது நீண்டநாட் கனவான ஆங்கிலக் கல்லூரியை நிறுவும் முயற்சியில் தீவிரமாக ஈடுபட்டு அதில் வெற்றியும் கண்டார்.

2004 ஆம் ஆண்டு கிளிநொச்சியில் திறக்கப்பட்ட ஆங்கிலக் கல்லூரியில் இவரே பொறுப்பாகவிருந்து அக்கல்வித் திட்டத்தை வெற்றிகரமாக இயக்கிக் கொண்டிருந்தார். தமிழ் இளையோரிடையே ஆங்கில மொழியறிவை விருத்தி செய்யவென்ற கனவோடு இயங்கிய இவரது உழைப்பு மிகப்பெரிய மாற்றத்தை வன்னியின் இளஞ்சமுதாயத்தில் தோற்றுவித்தது. இறுதிவரை அக்கல்லூரியையும் கல்வி மேம்பாட்டுப் பேரவையையும் பொறுப்பாக நடத்தி வந்தார். தனது உறவினரான செல்வி நாளாயினியையும் இணைத்துக் கொண்டு இவர் ஆங்கிலக் கல்லூரியைத் திறம்பட இயக்க வந்தார்.

அடிகளாரின் உழைப்பு அபரிதமானது. ஆங்கிலக் கல்லூரியில் தானே முழுநேரமாக ஆசிரியராகப் பணியாற்றியதோடு நிர்வாகத்தையும் கவனித்து வந்தார். அதேநேரம் கல்வி மேம்பாட்டுப் பேரவைக்கான பணியையும் செய்துவந்தார். தமிழீழ விடுதலைப்புலிகளின் முக்கியஸ்தர்கள் பொறுப்பாளர்களுக்கான ஆங்கிலக் கல்வி புகட்டலையும் தனக்குக் கிடைக்கும் மிகச்சிறு ஓய்வுநேரத்தில் செய்து வந்தார். அடிகளாரை அறிந்த எவருக்குமே அவரின் கல்விபுகட்டல் மீதான அதீத ஈடுபாடும் அதற்கான அவரின் உழைப்பும் வியப்பை ஏற்படுத்தும்.

இவ்வளவு வேலைப்பழுவிற்குள்ளும் கத்தோலிக்க மதகுருவாக தனது பணிகளையும் செய்துவந்தார். கிளிநொச்சி அம்பாள்குளம் பங்கில் திருப்பலி ஒப்புக்கொடுத்தல் உட்பட மதகுருவாக தனது பங்கையும் ஆற்றிவந்தார்.

ஈழ விடுதலைப் போராட்டத்தின்பால் இவருக்கிருந்த அக்கறை அதீதமானது. எமது மக்களுக்காகவே தன்னை முழுமையாக அர்ப்பணித்துப் பணியாற்றி அடிகளாரின் உடல்நிலை அவ்வளவுதூரம் சுமுகமானதாக இருக்கவில்லை. அவசரமாக சில சத்திரசிகிச்சைகள் செய்ய வேண்டிய நிலையில் அவரது உடல்நிலை இருந்தபோது அவரை சற்று ஓய்வெடுத்து மருத்துவத்தைக் கவனிக்கும்படி பலர் வற்புறுத்தினார்கள்.

தமிழீழத் தேசியத் தலைவரே அவரிடம் யாழ்ப்பாணம் போய் மருத்துவத்தைக் கவனித்துவிட்டு பின்னர் வன்னிக்கு வந்து பணியாற்றும்படி வேண்டுகோள் விடுத்தும்கூட அடிகளார் தனக்கான ஓய்வை எடுத்துக்கொள்ளவில்லை. தான் யாழ்ப்பாணம் போனால் திரும்பிவர முடியாநிலை ஏற்படலாம், அதனால் எல்லாப்பணிகளும் பாதிப்படையும் என்பதோடு தன்னால் தேவையேற்படும் இடத்தில் பணிபுரிய முடியாமற் போகுமென்ற காரணத்தைச் சொல்லி இறுதிவரை அவர் வன்னியை விட்டு வெளியேறாமலேயே இருந்தார்.

கத்தோலிக்கத் தலைமைப்பீடம் அவரை அழைத்தபோதுகூட தான் வெளியேறினால் திரும்பவும் வன்னிக்கு வரமுடியாத நிலையேற்படலாம் என்பதால் இறுதிவரை வன்னிக்குள்ளேயே பிடிவாதமாக இருந்து மக்களுக்காகப் பணியாற்றிய ஓர் உத்தமர்தான் வணக்கத்துக்குரிய பிரான்சிஸ் ஜோசப் அடிகளார்.

வன்னியில் போர் தீவிரமடைந்தபோது மக்களோடு மக்களாகவே அடிகளாரும் தனது கல்லூரியினதும், கல்வி மேம்பாட்டுப் பேரவையினதும் ஆவணங்களோடு ஒவ்வோரிடமாக இடம்பெயர்ந்து கொண்டிருந்தார். அவரோடு கூடவே செல்வி . நளாயினியும் விக்னேஸ்வரியும் இடம்பெயர்ந்து கொண்டிருந்தனர்.



போரின் உச்சக்கட்டத்தில் நிலைமை படுமோசமாகப் போய்க்கொண்டிருக்கும்போது அடிகளாரை படகு வழியாக பாதுகாப்பாக அனுப்புவதென தலைமை முடிவெடுத்து அதற்கான ஆயத்தங்களைச் செய்துவிட்டு அடிகளாரைப் புறப்படச் சொன்னபோது மிகக்கடுமையாக அதை எதிர்த்து, எனது மக்களோடேயே தான் நான் இருப்பேன் என்று பிடிவாதமாக நின்றுகொண்டவர். எழுபத்தைந்து வயதிலும் வலுவாகவும் இயல்பாகவும் அந்தக் கடைசிநேரக் கோரத்தை தான் நேசித்த மக்களோடேயே இருந்து எதிர்கொண்டவர்.

இறுதிக்கணம் வரை மக்களுக்காகவே வாழ்ந்துகொண்டிருந்தார் அடிகளார். வலைஞர்மடத்தில் தங்கியிருந்து பின்னர் முள்ளிவாய்க்காலில் இறுதியாக இருந்ததுவரை தனது ஆவணங்களையும் காவியபடியே மக்களோடு மக்களாக அவர் இருந்து பணியாற்றினார். முள்ளிவாய்க்காலில் உடல் அங்கவீனமான நவம் அறிவுக்கூடப் போராளிகள் சிலரைத் தங்கவைத்திருந்த ஒரு பதுங்குழியிலேயே அடிகளாரும் அவர்களோடு இணைந்து தங்கியிருந்து தனது பணிகளைச் செய்துகொண்டிருந்தார்.

முள்ளிவாய்க்கால் பேரவலத்தின் இறுதிநாட்களில் எல்லோரும் இராணுவத்தினரின் கட்டுப்பாட்டுப் பகுதிக்கு வந்தபோது அடிகளாரும் மக்களோடுதான் வந்திருந்தார். மே மாதம் 17ம் நாள் வட்டுவாகலில் இருந்து முல்லைத்தீவு நோக்கி நகர்ந்து வெட்டையிலே மக்களோடுதான் அடிகளார் இருந்தார். அவரோடு விடுதலைப்புலிகள் அமைப்பின் முக்கியமான உறுப்பினர்கள் சிலரும் இருந்தனர்.

மே மாதம் 18ம் நாள் காலையில், விடுதலைப் புலிகள் அமைப்பின் உறுப்பினர்கள் சிலர் தம்மை அடையாளப்படுத்தி இராணுவத்தினரிடம் சரணடையச் செல்வதென்ற முடிவெடுத்தபோது தனது ஆங்கிலமொழி வல்லமை அவ்விடத்தில் தேவைப்படுமென்பதால் பிரான்சிஸ் ஜோசப் அடிகளார் அந்தச் சரணடைவை சுமுகமாக நிகழ்த்தும் விதத்தில் அவரே முன்னின்று செயற்பட்டார். ஆனால் மற்றவர்களோடு அடிகளாரையும் இராணுவத்தினர் அழைத்துச் சென்றனர். ஏராளமான மக்கள் பார்த்திருக்கத் தக்கதாக அரசியல்துறை துணைப் பொறுப்பாளர் தங்கன், கல்விக்கழகப் பொறுப்பாளர் இளங்குமரன் (பேபி) பிரியன் குடும்பம் உட்பட பலர் அடிகளாரோடு இராணுவத்தால் அழைத்துச் செல்லப்பட்டார்கள்.



அவர்களில் ஒருவர்கூட இதுவரை திரும்பிவரவில்லை. ஒருவர்பற்றிய குறிப்புக்கூட யாருக்குமே தெரியவில்லை. அடிகளாரோடு இறுதிவரை பயணித்த செல்வி நளாயினியும், விக்னேஸ்வரியும் கூட திரும்பி வரவில்லை. அந்தச் சரணடைவில் குடும்பமாக அழைத்துச் செல்லப்பட்டபோது கொண்டு செல்லப்பட்ட குழந்தைகள் பற்றிய சிறு தகவல் கூட யாருக்குமே இல்லை. அடிகளாரோடு அழைத்துச் செல்லப்பட்ட அத்தனைபேருமே அனாமதேயமாகிப் போனார்கள்.

தனது ஒவ்வொரு வினாடியையும் தமிழ்ச்சமூகத்தின் கல்வி மேம்பாட்டுக்காவே செலவழித்து உழைத்து ஓடாய்த் தேய்ந்த அடிகளார் 'குறிப்பாக ஆங்கிலக் கல்வி மேம்பாட்டிற்காக வெறித்தனமாய் உழைத்த அடிகளார்' இறுதிச் சரணடைவிலும் தனது ஆங்கில வல்லமையின் உதவி தேவைப்படுவதை உணர்ந்து அந்தத் தள்ளாத வயதிலும் தானே முன்வந்து செயலில் இறங்கிய எமது அடிகளார் இன்று காணாமற் போனோர் பட்டியலிலே இணைக்கப்பட்டிருக்கிறார். ஆயிரக்கணக்கான மக்கள் பார்த்திருக்கப் போனவர்களின் கதை இன்று உலகின் முன் மாயமாகி விட்டது.

கபினற் அமைச்சர்களுக்கு நிகரான இராஜதந்திரி பதவியைப் பெறவுள்ள மிலிந்த மொரகொட !

 



இந்தியாவிற்கான இலங்கைத் தூதுவராக நியமிக்கப்படவுள்ள மிலிந்த மொரகொட கபினற் அமைச்சரவை அமைச்சர்களுக்கு நிகரான தரத்தைப் பெறவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இலங்கையின் வரலாற்றில் இராஜதந்திரி ஒருவருக்கு இத்தகைய கௌரவம் கிடைக்கவுள்ளமை இதுவே முதன்முறையாகும். 

வெளிநாட்டமைச்சுக்களுக்கு ஊடாக தகவல் பரிமாற்றங்களை மேற்கொள்ளும் வழமையான இராஜதந்திர ஒழுங்குமுறையைத் தாண்டி  இருநாடுகளின் தலைவர்களுடனும் நேரடியாக தொடர்பாடல்களை முன்னெடுக்க கூடிய அதிகாரத்தை அவர் கொண்டிருப்பார் என கூறப்படுகின்றது. 

அமெரிக்காவின் ஐக்கிய நாடுகள் சபைக்கான தூதுவராக நியமிக்கப்படுகின்றவர்கள் அந்நாட்டின் அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சர்களின் தரத்திற்கு நிகரானவர்களாக கருதப்படுகின்றனர். இப்போது தான் இலங்கையில் இத்தகைய நியமனம் முதன்முறையாக வழங்கப்படவுள்ளதாக அறியமுடிகின்றது

ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஸவின் நம்பிக்கைக்கு பாத்திரமானவர்களின் ஒருவரான மிலிந்த மொரகொட இந்தியாவிற்கான இலங்கைத்தூதுவராக நியமிக்கப்பட்டாலும் தொடர்ந்தும் ஜனாதிபதிக்கு ஒத்தாசையாக செயற்படுவார் என அறியமுடிகின்றது.

1964ம் ஆண்டில் பிறந்த அசோக மிலிந்த மொரகொட சர்வதேச விவகாவரரங்களில் சிறந்த அனுபவம் உடையவராக கருதப்படுகின்றார். 2001ம் ஆண்டு முதல் 2010ம் ஆண்டுவரை பாராளுமன்ற உறுப்பினராக இருந்த அவர் நீதி மற்றும் சட்ட மறுசீரமைப்பு அமைச்சராக 2009 முதல் 2010ம் ஆண்டுவரையும் சுற்றுலாத்துறை அமைச்சராக 2007ம் ஆண்டு முதல் 2009 ஆண்டு வரையும் அதற்கு முன்பாக பொருளாதார மறுசீரமைப்பு ,விஞ்ஞானம் தொழில்நுட்ப அமைச்சராகவும் இருந்துள்ளார். 

இலங்கை அரசாங்கத்திற்கும்  விடுதலைப்புலிகள் இயக்கத்திற்கும் இடையே நோர்வேயின் அனுசரணையில் 2002ம் ஆண்டு முதல் 2004ம் ஆண்டுவரை இடம்பெற்ற பேச்சுவார்த்தைகளின் போது முக்கிய பேச்சுவார்த்தையாளர்களில் ஒருவராக மிலிந்த மொரகொட விளங்கியிருந்தார். 

அவர் கடைசியாக கொழும்பு மாநகர சபையின் எதிர்க்கட்சித்தலைவராகவும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவின் ஆலோசகராகவும் பதவிவகித்திருந்தமை குறிப்பிடத்தக்கது. 



இலங்கைக்கும் நீண்டது சீன -அமெரிக்க முறுகல்?

 



சீன நிறுவனங்களுக்கு எதிராக அமெரிக்க அரசாங்கம் தொடர்ச்சியாக நடவடிக்கைகளை எடுத்துவரும் நிலையில் இலங்கையில் கொழும்பு துறைமுக நகர நிர்மாணப்பணியில் ஈடுபட்டுவரும் நிறுவனம் உட்பட  சீன 24 நிறுவனங்களுக்கு எதிராக அமெரிக்கா தடைகளை விதித்துள்ளது. 

அமெரிக்கா எடுத்துள்ள புதிய நடவடிக்கையின் இந்த சீன நிறுவனங்களுக்கு பொருட்களை ஏற்றுமதி செய்யவேண்டுமாயின் அமெரிக்க அரசாங்கத்தின் அனுமதி பெறப்படவேண்டியது அவசியமாகும்.

இலங்கையில் கொழும்பு துறைமுக நகரை நிர்மாணித்துவரும் சைனா ஹாபர் இன்ஜினியரிங் China Harbour Engineering Company கொம்பனியின் தாய் நிறுவனமான சைனா கொமியுனிகேஸஷன்  கொன்ஸ்ட்ரக்ஷன் கொம்பனி  China Communications Construction Company (CCCC), யையும் பாதித்துள்ள அமெரிக்காவின் இந்த நகர்விற்கு இலங்கையிலுள்ள சீனத்தூதரகம் கடுமையான கண்டனத்தை பதிவுசெய்துள்ளது. 

இந்த நிறுவனமே ஹம்பாந்தோட்டை துறைமுகம் மற்றும் மத்தள ராஜபக்ஷ விமானநிலையம் ஆகியவற்றையும் நிர்மாணித்திருந்தது.

'மூன்றாவது நாடொன்றால் மேற்கொள்ளப்பட்ட ஒரு தலைப்பட்டமானதும் நியாயமற்றதுமான நடவடிக்கையின் காரணமாக இறைமையுள்ள  நாடுகளான சீனாவினதும் இலங்கையினதும் அனுமதி பெற்ற நிறுவனங்கள் மற்றும் தனிநபர்களது வழமையான வர்த்தக ஒத்துழைப்பு பாதிக்கப்படும்' என சீனத்தூதரகம் கருதுகின்றது என சீனத்தூதுவராலயத்தின் அரசியல் பிரிவுத் தலைவர் லூவோ சொங் தெரிவித்துள்ளார்.

சீனாவின் ஒரு மண்டலம் மற்றும் ஒரு பாதை திட்டத்தின் தென் சீனக் கடற்பகுதியில் குறிப்பாக செயற்கைத் தீவுகளை நிர்மாணிக்கும் பணியில் தொடர்புடைய சீன நிறுவனங்களையும் தனிநபர்களையும் இலக்குவைத்து அமெரிக்கா தடைகளை விதித்துள்ளது.

'அமெரிக்கா அதன் தவறை உடனடியாக திருத்திக்கொள்ளவேண்டும் எனவும் சீனாவின் உள்விவகாரங்களில் தடையிடுவதை நிறுத்திக்கொள்ளவேண்டும் 'எனவும் சீனா கோரியுள்ளதாகவும் லூவோ தெரிவித்தார்.




Saturday, August 29, 2020

புதிய கத்தோலிக்க ஆயரைத்திருநிலைப்படுத்தும் ஆயத்துவ திருப்பொழிவு திருப்பலி இன்று எவ்வாறு நடைபெற்றது?

 



கொழும்பு மறைமாவட்டத்தின்  புதிய துணை ஆயராக அருட்தந்தை அன்டன் ரஞ்சித் பிள்ளைநாயகம்  இன்று திருநிலைப்படுத்தப்பட்டார்.

கொழும்பு லூசியாஸ் பேராலயத்தில் இன்று காலை நடைபெற்ற ஆயத்துவ திருப்பொழிவு திருப்பலி வழிபாட்டின் போது கொழும்பு பேராயல் கர்தினால் மல்கம் ரஞ்சித் ஆண்டகையால் அவர் திருநிலைப்படுத்தப்பட்டார். 

ஜுலை மாதம் 13ம்திகதி  பரிசுத்த பாப்பரசர் பிரான்சிஸ் ஜுலை மாதம் 13ம்திகதி இந்த நியமனம் தொடர்பான அறிவிப்பை வத்திக்கானிலிருந்து வெளியிட்டிருந்த நிலையில் ,இன்றைய தினமே உத்தியோகபூர்வமாக ஆயராக திருநிலைப்படுத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது. 

இன்றைய சிறப்புத்திருப்பலியில் யாழ் மறைமாவட்ட ஆயர் ஜஸ்ரின் ஞானப்பிரகாசம் உட்பட பத்திற்கும் மேற்பட்ட ஆயர்களும் நூற்றுக்கும் மேற்பட்ட அருட்தந்தையர்கள் கன்னியாஸ்திரிகளும் பங்குபற்றியிருந்தனர்.

கொழும்பு மறைமாவட்டத்தின் பேராயராக கர்தினால் மல்கம் ரஞ்சித் இருக்கும் நிலையிலும் ஏற்கன இரண்டு துணை ஆயர்கள் கொழும்பு மறைமாவட்டத்திற்கு இருக்கும் நிலையிலும் 3வது துணை ஆயராக 53வயதுடைய அன்டன் ரஞ்சித் பிள்ளைநாயகம் நியமிக்கப்பட்டுள்ளார்.




 மக்ஸ்வெல் சில்வா 2011ம் ஆண்டிலும்  ஜே.டி. அன்டனி ஜயகொடி 2018ம்  ஆண்டிலும்   கொழும்பு மறைமாவட்டத்தின் துணை ஆயர்களாக நியமிக்கப்பட்டிருந்தனர்.

கொழும்பு மருதானை புனித ஜோசப் கல்லூரியின் உப அதிபராக கடமையாற்றி தற்போது மொரட்டுவை புனித செபஸ்தியன் கல்லூரியின் அதிபராகவும் இறையியல் கல்லூரியின் தமிழ்ப்பிரிவு பணிப்பாளராகவும் பணியாற்றிவரும்  துணை ஆயர் அன்டன் ரஞ்சித் பிள்ளைநாயகம் யாழ். சம்பத்திரிசியார் கல்லூரியின் பழைய மாணவர் என்பதுடன் யாழ்ப்பாணத்தை பிறப்பிடமாகக்கொண்டவர்.

  1966ம் ஆண்டு செப்டம்பர் 23ம்திகதி பிறந்த அன்டன் ரஞ்சித் அவர்கள் 2000ம் ஆண்டு செப்டம்பர் 16ம்திகதி கொழும்பு புனிய லூசியாள் பேராலயத்தில் குருவாக திருநிலைப்படுத்தப்பட்டிருந்தார்.

யாழ் பல்கலைக்கழத்தில் கணிதத்துறையில் இளமானிப்பட்டத்தை பூர்த்திசெய்த அன்டன் ரஞ்சித் அவர்கள் ஐக்கிய இராச்சியத்திலுள்ள மிடில்செக்ஸ் பல்கலைக்கழகத்தில் கல்வித்துறையில் முதுமானிப்பட்டத்தையும் பின்னர் யாழ். பல்கலைக்கழகத்தில் தத்துவவியல் துறையில் முதுமானிப்பட்டத்தையும் பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது. 






Friday, August 28, 2020

க.பொ.த. சாதாரண தரப்பரீட்சைகள் 2021 ஜனவரி மாதம் நடைபெறும் என அறிவிப்பு



2020ம் ஆண்டிற்கான கா.பொ.த. சாதாரண தரப்பரீட்சை அடுத்த வருடம் 2021ம்ஆண்டு ஜனவரி மாதம் 18ம் திகதி முதல் 28ம்திகதி வரை நடைபெறும் என கல்வி அமைச்சர் பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார். 

அரசாங்க பாடசாலைகளின் மூன்றாம் தவணை டிசம்பர் மாதம் 24ம் திகதி நிறைவடைந்து அடுத்தாண்டு ஜனவரி மாதம் 4ம் திகதி புதிய தவணை மீண்டும் ஆரம்பமாகும் எனவும் அவர் அறிவித்துள்ளார்.

Thursday, August 27, 2020

இலங்கையின் அரசாங்கத்துடன் இணைந்து செயலாற்ற நோர்வே எதிர்பார்ப்பு



இலங்கைக்கான நோர்வே தூதுவர் டீரீன யுரன்லி எஸ்கடேல் பிரதமர் மஹிந்த ராஜபக்சவை . இன்று சந்தித்துக் கலந்துரையாடியுள்ளார். கொழும்பு அலரி மாளிகையில் இந்தச் சந்திப்பு இன்றைய தினம் (27) இடம்பெற்றது. 

நாடாளுமன்ற தேர்தலில் வெற்றியீட்டியமைக்காக பிரதமர் மஹிந்த ராஜபக்சவுக்கு  வாழ்த்துத் தெரிவித்திருந்ததுடன் தேர்தலை முறையாக ஏற்பாடு செய்து சமாதானமான முறையில் கொவிட்-19 பாதுகாப்பு வழிமுறைகளுக்கமைய முன்னெடுத்திருந்தமையையும் பாராட்டியிருந்தார். ஆரம்ப கட்டத்தில் இனங்கண்டு துரித கதியில் தடுப்பு நடவடிக்கைகளை முன்னெடுத்திருந்ததனூடாக கொவிட்-19 தொற்றுப் பரவலை கட்டுப்படுத்துவதில் இலங்கை வெற்றிகரமாக செயலாற்றியிருந்ததாகவும் அவர் குறிப்பிட்டார்.

புதிய அரசாங்கத்துடன் இணைந்து செயலாற்ற நோர்வே எதிர்பார்ப்பதாக பிரதமரிடம் தூதுவர் எஸ்கடேல் குறிப்பிட்டதுடன் இலங்கையுடன் நீண்ட காலமாக பேணி வரும் பங்காண்மை மற்றும் பரஸ்பர உறவுகளையும் பாராட்டியிருந்தார். இரு நாடுகளுக்கிடையேயும் கடல்சார் பொருளாதாரங்கள், தனியார் துறை கூட்டுறவு மற்றும் அபிவிருத்தி தொடர்பில் பொதுவான ஈடுபாடுகளைக் கொண்டுள்ளதாகவும் குறிப்பிட்டார். இரு நாடுகளுக்குமிடையிலான வணிக உறவுகளை மேலும் மேம்படுத்திக் கொள்வதற்கு அதிகளவு வாய்ப்புகள் காணப்படுவதாகவும் குறிப்பிட்டிருந்த அவர், இலங்கையில் தகவல் தொடர்பாடல் தொழில்நுட்பம், புதுப்பிக்கத்தக்க வலு ,சூரிய சக்தி, காற்றாலை மற்றும் நீர் மின் பிறப்பாக்கல் மற்றும் கடற்றொழிற்துறை போன்றவற்றில் நோர்வே நாட்டின் முதலீட்டாளர்கள் முதலீடுகளை மேற்கொள்ள ஆர்வமாக இருப்பதாகவும் குறிப்பிட்டிருந்தார்.

2013 முதல் 2019 வரையான காலப்பகுதியில் 2.3 மில்லியன் அமெரிக்க டொலர்கள் இலங்கையின் மீன்பிடித் துறைக்கு வழங்கப்பட்டிருந்ததுடன், செப்டெம்பர் மாதத்தில் இலங்கையுடன் மீன்பிடி நிர்வாக சாதனங்களை கட்டியெழுப்புவது தொடர்பில் புதிய உடன்படிக்கையொன்றில் கைச்சாத்திட எதிர்பார்ப்பதாகவும் தூதுவர் குறிப்பிட்டார்.

கொவிட்-19 தொற்றுப் பரவல் காரணமாக எழுந்துள்ள பொருளாதார தாக்கங்கள் தொடர்பிலும் பிரதமர் ராஜபக்ச மற்றும் தூதுவர் எஸ்கடேல் ஆகியோர் கலந்துரையாடியிருந்தனர். இந்த ஆண்டு ஏப்ரல் மாதத்தில், கொவிட்-19 தொடர்பான ஐக்கிய நாடுகளின் பன்முக நன்கொடை நம்பிக்கை நிதியத்தினூடாக நீண்ட கால அடிப்படையில் சமூக-பொருளாதார தாக்கங்களை குறைத்துக் கொள்வதற்கு உதவிகளை வழங்கும் நடவடிக்கைகளை நோர்வே மேற்கொண்டிருந்தது. இதன் பிரகாரம், இலங்கைக்கு இதுவரையில் 1 மில்லியன் அமெரிக்க டொலர்கள் வழங்கப்பட்டுள்ளன.

கொவிட்-19 தொற்றுப் பரவலுடன், தேசிய பாதுகாப்பு மற்றும் தனிநபர் சுதந்திரம் ஆகியவற்றுக்கிடையே சமநிலையை பேண வேண்டிய தேவை எழுந்துள்ளதாக குறிப்பிட்ட தூதுவர், பிரதமரும் புதிய அரசாங்கமும் தமக்கு கிடைத்த தெளிவான மக்கள் ஆணையைப் பயன்படுத்தி, பொது மக்களுக்கு சிறந்த வாழ்க்கையை முன்னெடுப்பதற்கும், சகல இலங்கை மக்களுக்கும் உள்ளார்ந்தமான சமூகத்தை ஏற்படுத்திக் கொடுப்பதிலும் கவனம் செலுத்தும் என தாம் எதிர்பார்ப்பதாக குறிப்பிட்டார்.


இந்தியாவிற்கான புதிய இலங்கைத் தூதுவராக மிலிந்த மொரகொட?

 

இந்தியாவிற்கான புதிய இலங்கைத் தூதுவராக  மிலிந்த மொரகொட நியமிக்கப்படவுள்ளதாக நம்பகரமான வட்டாரங்களில் இருந்து அறியமுடிகின்றது.

இலங்கையின் சுபீட்சத்திற்கும் அமைதிக்கும் பிராந்திய வல்லரசான இந்தியாவுடனான உறவு மிக அவசியம் என்பதை உணர்ந்துள்ள ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஸ அதற்கு மிகவும் முக்கியத்துவம் கொடுத்து செயற்படுகின்ற நிலையிலேயே இந்த நியமனம் இடம்பெறவுள்ளது. 

தூதுவர் தரத்திலான  பதவிநிலைகளுக்கு நியமிக்கப்படும் போது அதற்கு உயர் பதவிகளுக்கான பாராளுமன்றக்குழுவின் அங்கீகாரம் கிடைப்பது கட்டாயமாகையால் விரைவில் அந்தக்குழுவிற்கு முன்பாக அவர் முன்னிலையாகவுள்ளதாக அறியவருகின்றது..

  இந்திய மத்திய அரசாங்கத்துடனான உறவுகளைப் பலப்படுத்துவதுடன் கோட்டபாய ராஜபக்ஸ தலைமையிலான இலங்கை அரசாங்கம், நான்கு தென்னிந்திய மாநிலங்களுடனான உறவுகளையும் வலுப்படுத்துவதில் அதிக அக்கறையை வெளிப்படுத்திவரும் நிலையில்  சென்னையைத் தளமாகக் கொண்ட தென் இந்தியாவிற்கான துணைத் தூதுவராக கலாநிதி வி.கே. வல்சன் நியமிக்கப்படவுள்ளதாகவும் அறியமுடிகின்றது. கலாநிதி. வி.கே. வல்சன் கொழும்பிலுள்ள நிப்போன் ஹோட்டலின் உரிமையாளர்களில் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது.

ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஸவின் நம்பிக்கைக்கு பாத்திரமானவர்களின் ஒருவரான மிலிந்த மொரகொட இந்தியாவிற்கான இலங்கைத்தூதுவராக நியமிக்கப்பட்டாலும் தொடர்ந்தும் ஜனாதிபதிக்கு ஒத்தாசையாக செயற்படுவார் என அறியமுடிகின்றது.

1964ம் ஆண்டில் பிறந்த அசோக மிலிந்த மொரகொட சர்வதேச விவகாவரரங்களில் சிறந்த அனுபவம் உடையவராக கருதப்படுகின்றார். 2001ம் ஆண்டு முதல் 2010ம் ஆண்டுவரை பாராளுமன்ற உறுப்பினராக இருந்த அவர் நீதி மற்றும் சட்ட மறுசீரமைப்பு அமைச்சராக 2009 முதல் 2010ம் ஆண்டுவரையும் சுற்றுலாத்துறை அமைச்சராக 2007ம் ஆண்டு முதல் 2009 ஆண்டு வரையும் அதற்கு முன்பாக பொருளாதார மறுசீரமைப்பு ,விஞ்ஞானம் தொழில்நுட்ப அமைச்சராகவும் இருந்துள்ளார். 

இலங்கை அரசாங்கத்திற்கும்  விடுதலைப்புலிகள் இயக்கத்திற்கும் இடையே நோர்வேயின் அனுசரணையில் 2002ம் ஆண்டு முதல் 2004ம் ஆண்டுவரை இடம்பெற்ற பேச்சுவார்த்தைகளின் போது முக்கிய பேச்சுவார்த்தையாளர்களில் ஒருவராக மிலிந்த மொரகொட விளங்கியிருந்தார். 

அவர் கடைசியாக கொழும்பு மாநகர சபையின் எதிர்க்கட்சித்தலைவராகவும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவின் ஆலோசகராகவும் பதவிவகித்திருந்தமை குறிப்பிடத்தக்கது. 


மைத்திரிபால சிறிசேன: செல்லாக்காசா? சிரிப்புப்பீஸா? அன்றேல் சீரியஸாக எடுக்கப்படவேண்டியவரா?

 





புதிய அரசாங்கத்தின் அமைச்சரவையில் இடம்பெறாத நிலையில் இன்று சமூக ஊடகங்களில் அதிகமான கிண்டலுக்கு உள்ளாகிவரும் அரசியல்வாதியாக முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இருக்கின்றார் என்பதில் சந்தேகமில்லை.

பல கேலிச்சித்திரக் கலைஞர்களுக்கும் மீம்ஸ் படைப்பாளிகளுக்கும், ; அண்மைக்காலத்தில் தனது செய்கைகளால் பார்வைகளால் பதிவுகளால் ஏராளமான கருப்பொருட்களை வாரிக்கொடுத்துக்கொண்டிருக்கின்றார் சிரா ஆமா சிறிசேன!

 


அமைச்சரவையில் சிறிசேன இடம்பெறாதது ஏன்?

இந்தக் கேள்விக்கு இம்மாதம் 12ம் திகதி அமைச்சரவை நியமிக்கப்பட்டது முதலாக பதில்களைத் தேடியபோதும் இவ்வார முற்பகுதிவரை தெளிவற்ற நிலையே காணப்பட்டது. சிறிசேனவிற்கு உபபிரதமர் பதவி வழங்கப்படவுள்ளமையினாலே அவர் உள்வாங்கப்படவில்லை என்று ஆரம்பத்தில் தகவல்கள் உலவின. துணைப் பிரதமரை நியமிக்க எந்த தீர்மானமும் எடுக்கப்படவில்லை,20வது திருத்தத்தில் உபபிரதமர் பதவிதொடர்பாக ஏதும் பரிசீலிக்கப்படவில்லை என பொதுஜன பெரமுனவின் தவிசாளரும் கல்வி அமைச்சரும் அரசியல் சாசன நிபுணருமான பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் சில நாட்களுக்கு முன்னர் நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் கூறியிருந்தார். இதனை உறுதிப்படுத்தும் வகையில் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் பொதுச் செயலாளரும் இராஜாங்க அமைச்சருமான தயாசிறி ஜயசேகர நடத்திய ஊடகவியலாளர் மாநாட்டில் கருத்துவெளியிட்டிருந்தார்.இதிலிருந்து தெளிவான விடயம் மைத்திரிபால சிறிசேன உபபிரதமர் பதவிக்கு மட்டுமல்ல அமைச்சர் பதவிக்கு கூட கருத்திற்கொள்ளப்பட்டவில்லை என்பதாகும்.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸவிற்கு மூன்றில் இரண்டு பெரும்பான்மையைப் பெற்றுக்கொடுக்க வேண்டும் என பகிரங்கமாக அறிவித்து தேர்தல் காலங்களில் பிரசாரங்களை முன்னெடுத்திருந்தார் சிறிசேன.  இம்முறை பொதுஜன பெரமுணவின் தாமரை மொட்டு சின்னத்தில் போட்டியிட்டு பொலநறுவை மாவட்டத்தில் 110,000 அதிக விருப்பு வாக்குகளுடன் பாராளுமன்றத்திற்கு தெரிவாகியிருந்தார்.

இருந்தபோதும் அவரை அமைச்சரவையில் உள்ளடக்கவில்லை. ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் தலைவரான அவருக்கு ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சிக்கு வழங்கப்படும் அமைச்சுக்களில் ஒன்று வழங்கப்பட்டிருக்கவேண்டும் என்பதே எதிர்பார்ப்பாக இருந்தது. ஆனால் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி சார்பாக அமைச்சர் பதவிக்காக சிபார்சு செய்யப்பட்டிருந்தவர்களின் பட்டியலில் கூட சிறிசேன இடம்பெற்றிருக்கவில்லை. அதில் நிமல் ஸ்ரீபால டி சில்வா ,மஹிந்த அமரவீர மற்றும் தயாசிறி ஜயசேகர ஆகியோரின் பெயர்களே இடம்பெற்றிருந்தன என்ற தகவல் ஏற்கனவே வெளியாகியிருந்தது.

ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சிக்கு மைத்திரிபால சிறிசேன தலைவராக இருக்கின்றபோதும் அவருக்கு கட்சிக்குள்ளேயே மதிப்போ விசுவாசமோ கிடையாது உள்ளிருக்கின்றவர்கள் தத்தமது எதிர்காலத்தைப் பற்றியே சிந்தித்துக்கொண்டிருக்கின்றனர் என கட்சிக்கு நெருக்கமான ஒருவரது கருத்து. 




சிறிசேன உள்வாங்கப்படாமைக்கான காரணங்கள் யாவை?


போர் வெற்றிக்கு பின்னர் பல தசாப்தங்களுக்கு  அசைக்க முடியாது நாட்டை ஆளமுடியும் என மனக்கோட்டை கட்டியிருந்த ராஜபக்ஸ தரப்பினர் 2015ம் ஆண்டு ஏற்பட்ட ஆட்சிமாற்றத்தை எதிர்பார்த்திருக்கவில்லை. தனது அமைச்சரவையில் சுகாதார அமைச்சராக இருந்த சிறிசேன  தன்னை எதிர்த்துப் போட்டியிடுவார் என மஹிந்த ராஜபக்ஸ கனவிலும் நினைத்திருக்கமாட்டார்.  முன்னைய தினத்தில் தன்னோடு ஒன்றாக சேர்ந்து அப்பம் சாப்பிட்டு விட்டு ஆட்சிக்கு ஆப்புவைத்த சிறிசேனவின் செயலை ராஜபக்ஸ தரப்பினர் பெருந்துரோகமாக இன்னமும் கருதுகின்றனர். அவர்கள் இன்னமும் அதனை மறக்கவும் இல்லை மன்னிக்கவும் இல்லை என்பதற்கு சான்றுதான் தற்போது சிறிசேனவிற்கு நடக்கும் அலைக்கழிப்பு என்ற கருத்தும் அரசியல் அவதானிகளிடம் உள்ளது. 

பொது வேட்பாளராக அறிவிக்கப்பட்டபோது ராஜபக்ஸ ஆட்சிக்காலத்தில் குடும்ப ஆட்சியின் ஆதிக்கத்தினால் உள்ளே அடக்கிவைத்திருந்த ஆதங்கங்களை கொட்டித்தீர்த்து சிங்கம் போன்று ஊடக சந்திப்புக்களிலும் மேடைகளிலும் பேசிய சிறிசேன, இந்நாட்களில் மிகவும் அமைதிகாக்கின்றார். அவரது கட்சியினர் தம்மை நடத்துவிதம் தொடர்பாக மனக்கவலைகளை வெளிப்படுத்தியிருந்தபோதும் சிறிசேன ஒரே ஒரு ஃபேஸ்புக் பதிவை மாத்திரமே போட்டிருந்தார்.

 වෙහෙසකර අභියෝගයක් සාර්ථකව ජය ගත් පසු එහි අග්ර ඵලය ලබන්න නිහඬව ටික කලක් බලා සිටිය යුතුයි



ராஜபக்ஸ அரசாங்கத்தினர்  அரசியல்யாப்பில் முக்கியமான திருத்தங்களை மேற்கொண்டு தமது திட்டங்களை நிறைவேற்றுவதற்கு  தேவையான  மூன்றில் இரண்டு பெரும்பான்மையைத் தீர்மானத்தில் சிறிசேன தலைமைதாங்கும் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் ஆசனங்கள் முக்கியமானவை. தேசியப்பட்டியல் அடங்கலாக அக்கட்சிக்கு 15 ஆசனங்கள் உள்ளன. இதை பேரம் பேசும் சக்தியாக வைத்து 20வது அரசியல்யாப்புத்திருத்தத்தின் போது தாம் ஆசைப்படும் சிங்கப்பூரில் உள்ளதைப் போன்ற துணைப்பிரதமர் பதவியை சிறிசேன பெறுவாரா என்பது அவரது கட்சியைச் சேர்ந்தவர்கள் வழங்கும் ஆதரவிலேயே தங்கியுள்ளது. 

சிறிசேனவிற்கு எதிராக தற்போது முன்னெடுக்கப்படுகின்ற ஈஸ்டர் தாக்குதல்  தொடர்பான விசாரணைகள் அவரது அடுத்த நகர்வுகளுக்கு கடிவாளம் போடும் முயற்சியாகவும் அரசியல் வட்டாரத்தில் பேசப்படுகின்றது. 

நன்றி . பிரதீப்- தி சன்டே மோர்னிங்


தற்போதைய நிலையில் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் தலைவராக இருக்கும் மைத்திரிபால சிறிசேனவிற்கு கட்சிக்குள் மதிப்பு இல்லை என்றபோதும் கட்சியைச் சேர்ந்த ஏனையவர்களுக்கும்  ராஜபக்ஸ அரசாங்கத்தில் சரியான மதிப்பும் பெறுமதியான அமைச்சுப்பதவிகளும்  கிடைக்காத நிலையில் மிகவும் அதிருப்தியில் உள்ளமையால் அடுத்துவரும்  நாட்கள் தீர்மானமிக்கதாக அமைய வாய்ப்புக்கள் உள்ளன. 

அரசியல் களத்தில் இனிவரும் நாட்களில் இடம்பெறவுள்ள நகர்வுகளில் சிறிசேனவின் பங்கு முக்கியத்துவம் பெறக்கூடிய ஏதுநிலை காணப்படுவதுடன் இறுதிப் புன்னகையையும்  தற்போது நகைப்பிடமாகியிருக்கும் சிறிசேனவின் முகத்தில் காணமுடிந்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை என்று அரசியல்வட்டாரத்தில் பேச்சுக்கள் உள்ளன.


நன்றி நாமல் அமரசிங்க- தமிழ் மிரர்




இந்தக்கட்டுரையை மீளப்பிரசுரிப்பதாயின்  இது முதலில் www.globetamil.com ல் பதிவேற்றப்பட்டது எனக் குறிப்பிடுவது ஊடக நாகரிகத்திற்கு ஏற்புடையது.-

அருண் ஆரோக்கியநாதர் 

Wednesday, August 26, 2020

அரசியலமைப்பில் ஒற்றையாட்சியிலும் இறுக்கமான பதம் வேண்டும்- வலியுறுத்துகின்றார் எல்லே குணவங்ஸ தேரர்

 



இலங்கையின் இறையாண்மையும் ஆட்புல ஒருமைப்பாட்டையும் பாதுகாப்பதற்கு தற்போதுள்ள ஒற்றையாட்சி என்ற பதத்திலும் இறுக்கமான பதம் அவசியம் என எல்லே குணவங்ஸ தேரர் தெரிவித்துள்ளார்.

ஜே. ஆர். ஜெயவர்த்தன நாட்டின் நிறைவேற்று அதிகாரமுள்ள ஜனாதிபதியாக இருந்தபோது 'ஒற்றை' என்ற வசனத்தை அரசியல்யாப்பிற்குள் தாமே கொண்டுவந்ததாக உரிமைகோரும்  எல்லே குணவங்ஸ தேரர் அரசியல்யாப்பு திருத்தம் தொடர்பாக கருத்துவெளியிடும் போதே இவ்விடயங்களைத் குறிப்பிட்டுள்ளார். 

ஶ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினர்களான கெவிந்து குமாரதுங்க மற்றும் அனுப பெஸ்குவல் ஆகியோர் இன்று கொழும்பில் எல்லே குணவங்ச தேரரை சந்தித்தனர்.

இதன்போது, அரசியலமைப்பை பகுதி பகுதியாகக் கழட்டி, மீள பொருத்தி, திருத்த முயற்சிக்க வேண்டாம் மாறாக முழுமையான அரசியலமைப்பு திருத்தத்தை மேற்கொள்ள வேண்டும் என  தேரர் வலியுறுத்தினார்.என எல்லே குணவங்ச தேரர் குறிப்பிட்டார்.

இதன் போது அவர் கருத்துவெளியிடுகையில், "பூரண அரசியலமைப்பொன்றை நாம் உருவாக்க வேண்டும். அதில் பிரச்சினை இல்லை. சில சரத்துக்கள் உள்ளன. அவற்றை மாற்ற வேண்டும். 83 ஆம் ஆண்டு ஜே.ஆர். ஜயவர்தனவின் ஆட்சியில் கலவரம் இடம்பெற்ற சந்தர்ப்பத்தில் அந்த ‘ஒற்றை’ என்ற சொற்பதத்தை அரசியலமைப்பிற்குள் நானே உள்ளடக்கினேன். ​ஆனால் அதுவும் வலுவானது அல்லவென தற்போது உணர்கின்றேன். ஆகவே, மரத்தின் கிளைகளைப் பாதுகாக்காமல் மரத்தின் வேரை பாதுகாப்பதற்கு திடசங்கற்பம் பூண வேண்டும் என உங்கள் இருவருக்கும் கூற விரும்புகிறேன். வேர் பாதுகாக்கப்பட்டால் கிளைகளும் பாதுகாப்பாக இருக்கும்."என அவர் குறிப்பிட்டார்.

மேலும், சிங்கள பௌத்த வாக்குகளால் மூன்றில் இரண்டு பெரும்பான்மை கிடைத்துள்ளது என்பதை நினைவில் கொள்ளுமாறும் தேரர் கூறினார்.

 'இந்த நிலைமை ஏற்படக் காரணம் தேரர்களும் சிங்கள பௌத்த மக்களும் என நாட்டின் தலைவர் என்ற வகையில் கோட்டாபய ராஜபக்ஸ கூறுகின்றார். அது வரவேற்கத்தக்கது. 48 ஆம் ஆண்டு சுதந்திரம் கிடைத்ததன் பின்னர் அரச தலைவர் ஒருவர் முதற்தடவையாக அவ்வாறு கூறியுள்ளார் 'என தேரர் சுட்டிக்காட்டினார்.

அரசியலமைப்பில் தாம் கூறுகின்றவை மாத்திரமே உள்ளடக்கப்பட வேண்டும் எனவும் வேறு எதுவும் தேவையில்லை எனவும் குறிப்பிட்ட அவர், அவ்வாறு செய்தால் தான் ஆதரவளிப்பதாகவும் கூறினார்.

பொருளாதார அபிவிருத்தியே பிரதான கரிசனை - பிரதமர் மஹிந்த பிரித்தானிய பதில் தூதுவரிடம் எடுத்துரைப்பு



கொவிட்-19 பிந்திய காலப்பகுதிக்கு  உலகம் தயாராகிவரும் நிலையில் பொருளாதார அபிவிருத்தியே  நாட்டிற்கு முன்பாக உள்ள பிரதான கரிசனையாகவுள்ளது என பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.

வர்த்தக உறவுகளை மேம்படுத்துதல் சிறிய மத்திய தொழில்முயற்சிகளில் முதலீடுகளை ஊக்குவித்தல் விவசாயம் வறுமை ஒழிப்பு ஆகியனவே முக்கிய கரிசனைகள் என பிரதமர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இன்று (புதன்கிழமை) காலை அலரிமாளிகையில்  தன்னை சந்திக்க வந்த.இலங்கைக்கான பிரித்தானிய பதில் தூதுவர் லீஸா வன்ஸ்டேலிடம், பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ இந்தக்கருத்துக்களைக் கூறியுள்ளார். 

 இதன் போது இலங்கையுடனான உறவை மேலும் வலுப்படுத்த பிரித்தானியா அரசாங்கம் ஆர்வமாக இருப்பதாக இலங்கைக்கான பிரித்தானிய பதில் உயர் ஸ்தானிகர் லிசா வன்ஸ்டல் தெரிவித்துள்ளார்.

தற்போது ஏற்பட்டுள்ள கொரோனா தொற்றின் நிலைமை கட்டுப்பாட்டுக்குள் வந்தபின்னர் இலங்கையுடன் உறவுகளைப் பேணுவதில் பிரித்தானிய அரசாங்கமும் அமைச்சர்களும் ஆர்வமாக உள்ளனர் என பிரித்தானிய பதில் உயர் ஸ்தானிகர் மேலும் குறிப்பிட்டார்.

மேலும் பிரித்தானியாவின் சர்வதேச வர்த்தக அமைச்சர் ரணில் ஜெயவர்தன இரு நாடுகளுக்கும் இடையிலான வர்த்தகத்தை மேலும் மேம்படுத்துவதில் ஆர்வமாக உள்ளார் என்றும் பதில் உயர் ஸ்தானிகர் தெரிவித்துள்ளார்.

அத்தோடு இந்த சந்திப்பின்போது இருவரும் துறைமுக நகரத்தின் முன்னேற்றம், முதலீட்டை ஈர்த்தல், கிராமப்புற பொருளாதாரம் மற்றும் நிலையான விவசாயம் தொடர்பாகவும் பேசப்பட்டதாக பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

பார்ஸிலோனா கழகத்தில் இருந்து வெளியேறுகின்றாரா லயனல் மெஸி?

  

உலகின் புகழ்பெற்ற கால்பந்தாட்ட வீரர்களில் ஒருவரான லயனல் மெஸி, பார்ஸிலோனா கழகத்தில் இருந்து வெளியேறுதவற்கு விரும்புவதாக அக்கழகத்திற்கு  எழுத்து மூலம் அறிவித்துள்ளதாக  மெஸிக்கு நெருக்கமான தரப்பினர் சி.என்.என் செய்திச் சேவைக்கு உறுதிப்படுத்தியுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

  பார்ஸிலோனா கால்பந்தாட்டத்தில் இருந்து மெஸி உடனடியாக வெளியேறுவதற்கு விருப்பம் வெளியிட்டுள்ளதாக வெளிவந்துள்ள தகவல்கள் அந்தக்கழகத்தின் தீவிர ஆதரவாளர்களுக்கு அதிர்ச்சியளித்திருக்கும் என்பதில் ஆச்சரியமில்லை.

தற்போது விளையாடிவரும் வீரர்களில் ஆற்றல்களின் அடிப்படையில் உலகின் மிகச்சிறந்த கால்பந்தாட்டவீரராக லயனல் மெஸி கருதப்படுகின்றார். ஆர்ஜன்டீன நாட்டவரான மெஸி ஸ்பெயினிலுள்ள பார்ஸிலோனா கழகத்தில் பயிற்சிகளுக்காக 2000ம் ஆண்டிலேயே இணைந்துகொண்டு கனிஷ்ட அணிகளில் விளையாடி  2004ம் ஆண்டு முதல் பார்ஸிலோனா கழகத்தின் சிரேஷ்ட அணிக்காக விளையாடிவருகின்றார்.

2017ம் ஆண்டில் மெஸியை 2021ம்ஆண்டு ஜுன் 30ம் திகதிவரை  வரை பார்ஸிலோனா கழகத்தில் தக்கவைக்கும் ஒப்பந்தத்தில் பார்ஸிலோனாவும் மெஸியும் கையொப்பமிட்டிருந்தனர். அந்த ஒப்பந்தத்திற்கு அமைய அவரது வாராந்த சம்பளத்தின் பெறுமதி 645,000 அமெரிக்க டொலர்கள் எனக்குறிப்பிடப்பட்டது. 

சம்பியன்ஸ் லீக் தொடரின் கால் இறுதிப்போட்டியில் பேயர் முனிச் கழகத்திற்கு எதிராக 8ற்கு 2 என்ற கோல்கள் கணக்கில் அடைந்த அவமானகரமான தோல்வியை அடுத்து கருத்துவெளியிட்டிருந்த கழகத்தின் தலைவர் Josep Maria Bartomeu பார்சிலோனாவிலே தனது விளையாட்டு வாழ்க்கையை முடிவுறுத்த விரும்புவதாக மெஸி பல தடவைகள் கூறியிருந்ததாக குறிப்பிட்டிருந்தார்.

'அவர் இன்னமும் மிகச் சிறந்த வீரராக  இருக்கின்றார். ஆனால் ஒரு சக்கரம் முடிவிற்கு வருகின்றது. இன்னுமொன்று ஆரம்பமாகின்றது. ஆனால் அது மெஸியின் யுகத்தில் "என்று கூறியிருந்தார்.

உலகின் மிகச்சிறந்த வீரருக்கான  Ballon d'Or விருதை ஆறுதடவைகள் வென்றெடுத்துள்ள மெஸி  10 தடவைகள் லாலீகா கிண்ணத்தை பார்ஸிலோனா வென்றெடுப்பதற்கு பங்களித்துள்ளதுடன் 4 முறை ஐரோப்பிய சம்பியன்ஸ் லீக் கிண்ணத்தை வென்றெடுப்பதற்கும்  வழிவகுத்துள்ளார்.

33வயதுடைய மெஸி பார்ஸிலோனாவிலிருந்து வெளியேறும் இடத்து இங்கிலாந்தின் மென்செஸ்டர் சிற்றி அன்றேல் ஜேர்மனியின் பரிஸ் செயின்ற் ஜேர்மன் அணிகள் அவரது அடுத்த கழகங்களாக இருக்கும் என கருத்துக்கள் வெளியாகியுள்ளன. 



Tuesday, August 25, 2020

600 விக்கட்டுக்களைக் கைப்பற்றிய முதலாவது வேகப்பந்துவீச்சாளர் என்ற அபாரபந்து வீச்சு சாதனை நிலைநாட்டினார் ஜேம்ஸ் அன்டர்ஸன்!


டெஸ்ற் கிரிக்கட் போட்டிகளிலே முதன் முறையாக 600 விக்கட்டுக்களைக் கைப்பற்றிய வேகப்பந்துவீச்சாளர் என்ற அபூர்வ சாதனையை இங்கிலாந்து வீரர் ஜேம்ஸ் அன்டர்சன்  நிலைநாட்டியுள்ளார்.

பாகிஸ்தான் அணிக்கெதிராக நடைபெற்றுவரும் மூன்றாவதும் இறுதியுமான டெஸ்ற் போட்டியின் ஐந்தாம் நாளான இன்று பாகிஸ்தான் அணித்தலைவர் அஸார் அலியின் விக்கட்டைக் கைப்பற்றியதன் மூலமே 38வயதுடைய அன்டர்சன் இந்தச் சாதனையைப் புரிந்தார்.

அன்டர்சனுக்கு முன்னர் 600 விக்கட்டுக்களை கைப்பற்றியோர் பட்டியலிலுள்ள மூவரும் சுழற்பந்துவீச்சாளர்களாவர். இதில் இலங்கை வீரர் முத்தையா முரளிதரன் 800 விக்கட்டுக்களைக் கைப்பற்றி முதலிடத்தில் உள்ள அதேவேளை அவுஸ்திரேலியாவின் ஷேன் வோர்ன் 708 விக்கட்டுக்களுடன் 2வது இடத்தையும் இந்தியாவின் அனில் கும்ளே 619 விக்கட்டுக்களுடன் மூன்றாவது இடத்திலும் உள்ளமை குறிப்பிடத்தக்கது. 

80 வருடங்களில் இலங்கையின் சனத்தொகை சரிபாதியாகக் குறைந்துவிடும்- அதிர்ச்சிதரும் எதிர்வுகூறல்


இலங்கையின் சனத்தொகை தற்போதுள்ள  எண்ணிக்கையுடன் ஒப்பிட்டு நோக்கும் போது 2100ம் ஆண்டளவில் அதாவது இன்னமும் 80 ஆண்டுகளில் சரிபாதியாக குறைவடைந்தவிடும் என எதிர்வுகூறப்பட்டுள்ளது.

இலங்கையின் குழந்தைகள் பிறப்புவீதம், இறப்பு எண்ணிக்கை, குடிப் பெயர்வு மற்றும் சனத்தொகையில் தாக்கம் ண்தக்கூடிய ஏனைய காரணிகள் ஆகியவற்றை அடிப்படையாகக்கொண்டு 195 நாடுகளில் நடத்தப்பட்ட உலகளாவிய ஆய்வின்  நிறைவில் தி லான்செற் “the Lancet”என்ற முன்னணி ஜேர்னல் இதழ் இந்த எதிர்வுகூறலை விடுத்துள்ளது.

இந்த ஆய்விற்கமைய 2100ம் ஆண்டில் இலங்கையின் சனத்தொகை 10.45 மில்லியன்களாக அதாவது ஒரு கோடி 450 ஆயிரமாக குறைவடையும் என்ற அதிர்ச்சியளிக்கும் எதிர்வுகூறல் வெளியாகியுள்ளது.

2017ம் ஆண்டில் இலங்கையின் சனத்தொகை 21.60 மில்லியன்களாக அதாவது இரண்டு கோடியே 600 ஆயிரமாக காணப்பட்டது. 2031ம் ஆண்டளவில் இலங்கையின் சனத்தொகை அதிக பட்சமான உச்சத்தை தொடும் என ஆய்வில் கூறப்பட்டுள்ளதுடன் அப்போது 22.34 மில்லியன்களாக அதாவது இரண்டு கோடியே 23 லட்சத்து 400 ஆயிரமாக காணப்படும் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. 

இந்த ஆய்வறிக்கையின் படி 2017ம் ஆண்டில் இலங்கையிலுள்ள பெண்ணொருவர் சராசரியாக பெற்றெடுத்துள்ள பிள்ளைகளின் அளவு 1.80 ஆக கணக்கிடப்பட்டுள்ளது. ஆனால் இந்த எண்ணிக்கை 80 ஆண்டுகளில் 1.46 ஆக குறைவடையும் என மதிப்பிடப்பட்டுள்ளது. 

உலக சுகாதார பரிந்துரைகளின் குழந்தைகள் பிறப்பு வீதம் 2.1 என்ற சராசரி எண்ணிக்கையை காணப்படின் அந் நாட்டின் சனத்தொகை வீழ்ச்சிகாணும் என  தெரிவிக்கப்படுகின்றது. 

முழுமையான  அறிக்கையை வாசிக்க

Full report: https://www.thelancet.com/article/S0140-6736(20)30677-2/fulltext

Sunday, August 23, 2020

டிக் டொக் மீதான தடையால் பயனாளர்கள் இழப்பது என்ன?



 தற்போதைய நிலையில் அமெரிக்காவிலுள்ள டிக்டொக் TikTok சமூக வலைத்தள பயனாளர்கள் கலகத்தில் உள்ளனர்.  செப்டம்பர் மாத நடுப்பகுதியில் தமது விருப்பத்திற்குரிய செயலி  தமது திறன்பேசிகளில் இருந்து இல்லாமல் போய்விடுமோ என்ற கலக்கமே அதுவாகும்.


மைக்ரோசொப்ட் நிறுவனத்திற்கோ வேறு உள்ளூர் அமெரிக்க நிறுவனத்திற்கோ டிக்டொக் செயலியை விற்பதற்கு தவறுமிடத்து 45 நாட்களுக்குள் அது தடைசெய்யப்படும் என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் இம்மாத முற்பகுதியில் அறிவித்திருந்தார்.


இந்தியாவின் டிக்டொக்  பயனாளர்கள் கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக தமது விருப்பத்திற்குரிய செயலி இல்லாமல் வாடிக்கொண்டிருக்கின்றனர். 

கடந்த ஜுன் மாதம் 29ம் திகதி முதல் டிக்டொக் செயலியை இந்திய அரசாங்கம் உத்தியோகபூர்வமாக தடைவிதிக்க எடுத்த தீர்மானத்தை அடுத்தே இந்த நிலை ஏற்பட்டது. 

இந்தியாவில் டிக் டொக் மீது தடை விதிக்கப்பட்ட இரண்டாவது சந்தர்ப்பம் இதுவாகும். முதன் முறை விதிக்கப்பட்ட தடை நீதிமன்ற உத்தரவை அடுத்து ஆறுநாட்களுக்குள் நீக்கப்பட்டது. ஆனால் இம்முறை அது ஒரு மாதத்தை தாண்டியும் நீடித்துக்கொண்டிருக்கின்றது பயனாளர்களுக்கு கவலைதரும் விடயமாகும்.

பல குறைபாடுகள் இருந்தாலும் டிக்டொக்கின் ஆதிக்கம் இந்தியர்கள் மத்தியில் வலுப்பெற்றதற்கு மத்திய வர்க்கத்தினர் மற்றும் பொருளாதார நிலையில் கீழ் நிலையில் உள்ளவர்களாலும் அதனைப் பயன்படுத்தி படைப்பாற்றலைக் காண்பிக்க முடிந்ததுடன் மகிழ்ச்சியடைய முடிந்தமையும் காரணமாகும்.


இந்தியா போன்ற பல தரப்பு வேறுபாடுகளைக் கொண்ட நாட்டில் டிக்டொக் என்பது சாதிகள் மதங்கள் மொழிகள் என்பன வேற்றுமைகளைக் கடந்து ஒருவரொருவரின் உதட்டசைவு காணொளிகளையும் குறுகிய நேர திறன் வெளிப்பாட்டு நகைச்சுவை சிதறல்களையும் கண்டுகளிக்கும் தளமாக செயற்பட்டது. 

இந்திய அரசாங்கம் அதனைத் தடைவிதித்தபோது அப்பிள் மற்றும் கூகுள் அப்ஸ்டோஸில் இருந்து டிக்டொக் நீக்கப்பட்டது. இதனால் டிக்டொக் வீடியோக்களை பயனாளர்கள் பதிவேற்றம் செய்ய முடியாது போனது மட்டுமன்றி பார்க்க முடியாது போனது. இதனால் அவர்களுக்கான பொழுது போக்குக்கான முக்கியமானதொரு அம்சம் கைவிட்டுப்போயுள்ளது. 

தொலைக்காட்சிகள் மற்றும் சினிமாக்களின் ஏறத்தாழ ஒரே வகையான பொழுதுபோக்கு ஏகபோகத்திமலிருந்து தமக்கு வேண்டிய பலவிதமான  ரசனைகளைக் கண்டுமகிழும் சந்தர்ப்பம் மட்டுமன்றி அதன் மூலம் சம்பாதிக்கும் சந்தர்ப்பம் பலருக்கு இல்லாமல் போயுள்ளது.

இந்தியாவில் முதன் முறையாக டிக் டொக் தடைசெய்யப்பட்டமைக்கு அதிலுள்ள சட்டபூர்வமற்றதும்  தீங்கு மிக்கதுமான உள்ளடக்கங்களை அதிகாரிகள் காரணமாகக் காண்பித்திருந்தனர். இதன் போது அவ்வாறான மில்லியன் கணக்கான காணொளிகளை தமது செயலியில் இருந்து நீக்கியும்  அடையாளப்படுத்தியும் டிக்டொக் நிர்வாகம் நடவடிக்கை எடுத்திருந்தது.


ஆனால் கடந்த ஜுன் மாதத்தில் இந்திய-சீன எல்லைப்பகுதியில் இருநாட்டு இராணுவத்தினருக்கும் இடையே ஏற்பட்ட மோதல்களின் எதிரொலியாக இந்திய அரசாங்கம் எடுக்க நடவடிக்கைகளில் ஒன்றாக சீனாவை தளமாகக்கொண்ட  டிக் டொக்குடன் சேர்த்து 59  செயலிகளும் தடைசெய்யப்பட்டிருந்தன . அதனைத் தொடர்ந்து மேலும் 60 செயலிகளுக்கும் தடைவிதிக்கப்பட்டது

இவ்வாறாக நூற்றுக்கு மேற்பட்ட செயலிகள் தடைசெய்யப்பட்டாலும் டிக்டொக்கின் தடை உணரப்படுவதற்கு காரணம் அது மக்களின் உணர்வுகளோடு பின்னிப்பிணைந்திருப்பதனாலாகும்.தடைக்கு முன்னர் இந்தியாவைப் பொறுத்தவரை டிக் டொக்கின் பிரசன்னம் மிகப்பிரமாண்டமானதாகும். அதற்கு விதிக்கப்பட்டுள்ள தடைகாரணமாக ஒப்பீட்டளவில் அதனையொத்த சமூக வலைத்தளம் இன்றி மில்லியன்கணக்கானோரை வெறுமைக்குள் தள்ளிவிட்டுள்ளது.

கடந்த ஏப்ரல் மாதம் மேற்கொள்ளப்பட்ட ஆய்வின் அடிப்படையில் இந்தியாவில் டிக்டொக் செயலி 610 மில்லியன் தடவை பதிவிறக்கம் செய்யப்பட்டுள்ளதுடன் 600மில்லியன் பேர் அதனை அடிக்கடி பயன்படுத்துவோராக இருந்துள்ளனர்.உலகில் டிக்டொக்கை அடிக்கடி பயன்படுத்துவோர் எண்ணிக்கையில்  44 சதவீதமானவர்கள் இந்தியர்களாக இருந்தமை இந்தியாவில் அதன் தாக்கத்தின் பரிணாமத்தை எடுத்துணர்த்துகின்றது.

இந்தியர்கள் டிக் டொக் காணொளிகளை விரும்பி இரசித்து பொழுது போக்குவது மாத்திரமன்றி அண்மைக்காலமாக சமூக ஆர்ப்பாட்டங்களுக்கான அணிதிரட்டல் மற்றும் சமூக விழிப்புணர்வுக் கல்வி போன்ற வற்றிற்கான தளமாகவும் திகழ்ந்துள்ளது. 

கொரோனா காரணமாக வீடுகளுக்குள் மக்கள் முடங்கியிருந்த காலப்பகுதயில் குறிப்பாக  இளைஞர்கள் தமது பொழுதைக் கழிப்பதற்கு மாத்திரமன்றி தமது ஆற்றலை வெளிப்படுத்தவும் வழிகோலிய விடயங்களில் டிக்டொக்கிற்கு முக்கிய பங்குள்ளது. 
டிக் டொக் தளத்தில் இலங்கையில் அதிகமான அதிக ரசிகர்களைக் கொண்டுள்ளவர்களில் ஒருவரான கலைஞர் காயத்ரி சான். அவருக்கு தற்போது 25 லட்சம் ரசிகர்கள் உள்ளனர்.

இலங்கையில் டிக் டொக் தடைசெய்யப்படுவதற்கு அதுவும் இனிமேல் தடைசெய்யப்படுவதற்கான சந்தர்ப்பம் மிகமிகக் குறைவானதாகும். ஏனெனில் சீனாவின் ஆதிக்கம் இலங்கையில் வலுவாக உள்ள நிலையிலும் சீனாவுடன் நெருக்கமான தொடர்புகளைக் கொண்டிருக்கும் ராஜபக்ஸவினர் ஆட்சியில் உள்ளநிலையிலும் டிக்டொக் இங்கு இனிமேல் செழித்தோங்கவே வாய்ப்புக்கள் அதிகம்.

மறு முனையில் அமெரிக்க ஜனாதிபதித் தேர்தலில் தற்போது கருத்துக்கணிப்புக்களில் பின்தங்கியுள்ள ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் சீனாவுடனான மோதல் போக்கைக் காண்பித்து நாட்டுப்பற்றுமிக்க அமெரிக்க மக்களின் ஆதரவை பெறுவதற்கு வியூகம் வகுத்துச் செயற்படுவதனால் தற்போதைக்கு டிக்டொக் உட்பட சீனாவைத் தளமாக கொண்ட வர்த்தகங்களுக்கு நெருக்கடிகள் இருக்கவே வாய்ப்புண்டு. எதிர்வரும் நவம்பர்  மாத தேர்தலுக்கு பின்னர் இந்த  நிலையில் தெளிவுகிடைக்கும். 

இந்தியாவைப் பொறுத்தவரை கொரோனா வைரஸ் பரவல் கட்டுக்கடங்காது அதிகரித்துச் செல்வதால் அரசாங்கத்தின் மீது மக்களின் கடுமையான கோபமும் விமர்சனங்களும் பதிவாகிவருகின்றது. இந்தநிலையில் மடைமாற்றும் தந்திரமாக சீனாவிற்கு எதிரான  பிரசாரங்களை இந்தியா முடுக்கிவிட்டுள்ளது. அதில் ஒன்றாகக்கூட டிக்டொக் உட்பட சீன செயலிகளுக்கு எதிரான தடையையும் கருதமுடியும். ஆக கொரோனா கோரத்தாண்டவம்  ஆடும் வரையில் இந்தியாவில் டிக்டொக் மீண்டும் கோலோச்ச வாய்ப்பில்லை.  உலகின் க்தொகையில் இரண்டாவதாக அதிக மக்களைக் கொண்ட இந்தியாவில் அதிகமானவர்கள் இளைஞர்களாக இருக்கின்றனர். 

இப்படியான இளைஞர்கள் மத்தியில் மிகவும் பிரபலமான டிக்டொக் தடைசெய்யப்பட்டிருப்பது அவர்கள் மத்தியில்  அரசாங்கம் தொடர்பாக பாதகமான சிந்தனையை வளர்க்கவே வழிகோலும் என்று இந்தியாவில் சில ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.  பெரும் எதிரிகள் மோதிக்கொள்ளும் போது அங்கே பலிக்கடாவாவது அதோடு தொடர்பற்ற தரப்பினர் என்ற கருத்துள்ளது. அதுபோன்றே  ஆளுந்தரப்பினரின் அதிகார வேட்கைக்காக டிக்டொக் போன்ற பயன்மிகு செயலி பலிக்காடாவாக்கப்பட்டுள்ளது என்பதில் சந்தேகமில்லை. 

வீரசேகரி வாரமஞ்சரிக்காக அருண் ஆரோக்கியநாதர் எழுதிய கட்டுரை

இந்தக்கட்டுரையை மீளப்பிரசுரிப்பதாயின்  இது முதலில் www.globetamil.com ல் பதிவேற்றப்பட்டது எனக் குறிப்பிடுவது ஊடக நாகரிகத்திற்கு ஏற்புடையது.

==========================================================

ஃபேஸ்புக் ,டிக் டொக் ,டுவிட்டர் போன்ற சமூக வலைத்தளங்களில் ஏற்பட்டுவரும் புதிய மாற்றங்கள் போலிச் செய்திகள் பற்றிய விழிப்புணர்வு காணொளிகளைக் காண https://www.youtube.com/c/GlobeTamil ஐ தயது செய்து  Subscribe பண்ணி ஊக்குவிக்கவும்
========


ஒகஸ்ற் 17ம் திகதி இலங்கை முழுவதும் மின்சாரம் தடைப்பட்டதற்கு காரணம் என்ன? வெளியானது அறிக்கை

 


கடந்த 17ம் திகதி நாடு முழுவதும் ஏற்பட்ட மின்சாரத் தடைக்கு காரணம் என்ன என்பது தொடர்பாக மக்கள் மத்தியில் இன்னமும் பல கேள்விகள் உள்ளன.  அவர்களுக்கு தெளிவைப் பெற்றுக்கொடுக்கும் நோக்குடன் இந்த அறிக்கையை முழுவதுமாக பிரசுரிக்கின்றோம்



தேசிய மின் கட்டமைப்பில் ஏற்பட்ட தடை குறித்து ஆராய மின்சாரத் துறை  அமைச்சரால் நியமிக்கப்பட்ட நிபுணர் குழுவுக்கு சுருக்கமாக உண்மைகளை சமர்ப்பித்தல்

 


 

·          2020 ஆகஸ்ட் 17 அன்று இலங்கை மின்சாரசபையினால் தேசிய மின் கட்டத்தில் ஏற்படுத்தப்பட்ட மின் தடை குறித்து ஆய்வு செய்ய கௌரவ மின்சார மற்றும் எரிசக்தி அமைச்சரால் நியமிக்கப்பட்ட நிபுணர் குழுவில் கருத்து தெரிவிக்க எங்கள் சங்கத்திற்கு ஒரு வாய்ப்பு வழங்கப்பட வேண்டும் என்று நாங்கள் கேட்டுக்கொண்டோம். அதன்படி பதிலளிக்க, நிபுணர் குழுவிடம் கருத்து தெரிவிக்க எமது சங்கத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. மேலும் தேசிய மின் கட்டமைப்பில் ஏற்படுத்தப்பட்ட மின் தடை மற்றும் அதன் விளைவாக எழுந்த பிரச்சினைகள் குறித்து எங்களது கருத்துக்களை எழுத்து மூலமாக சமர்ப்பிக்குமாறு நிபுணர் குழு எம்மை கேட்டுக்கொண்டது. அதன்படி சுருக்கமாக குழுவினருக்கு  சமர்ப்பித்த விடங்கள் கீழே குறிப்பிடப்பட்டுள்ளன.

 

1.     மின் உற்பத்தி நிலையங்கள் மற்றும் விநியோக அமைப்புகளின் பராமரிப்பு தொடர்பாக அங்கீகரிக்கப்பட்ட முறையான நடைமுறையை செயல்படுத்துவதில் தோல்வி

 

தற்போது இந்த அமைப்பின் பராமரிப்புப் பணிகளில் பெரும்பாலானவை இலங்கை மின்சார சபையின் கண்காணிப்பாளர்கள் மற்றும் பிற தொடர்புடைய ஊழியர்களால் அவர்களின் முன் அனுபவம் மற்றும் செயல் திறன்கள் அடிப்படையில் செய்யப்படுகின்றன. இது தொடர்பாக நிறுவனம் ஒரு குறிப்பிட்ட அங்கீகரிக்கப்பட்ட நெறிமுறையை அறிமுகப்படுத்தவில்லை. குறிப்பிட்ட பணிப் பகுதிகளை ஆய்வு செய்வதற்கும், அங்கீகரிப்பதற்கும், கண்காணிப்பதற்கும் பொதுவான வழிமுறை இல்லாததால், இந்த நடவடிக்கைகள் ஒவ்வொரு துணை அலகுக்கும் தனித்துவமான வெவ்வேறு முறைகளில் மேற்கொள்ளப்படுகின்றன. மின்சார கண்காணிப்பாளர்களைத் தவிர மற்ற அதிகாரிகளுக்கு உள்ளூர் மற்றும் வெளிநாட்டு தொழில்நுட்ப பயிற்சித் திட்டங்கள் நடத்தப்படுகின்றன, ஆனால் நடைமுறையில் குவிந்துள்ள அறிவு மற்றும் அனுபவத்தைத் தவிர தொழில்நுட்ப கடமைகளில் உண்மையில் ஈடுபட்டுள்ள மின்சார கண்காணிப்பாளர்களுக்கு அத்தியாவசிய தொழில்நுட்ப பயிற்சி வழங்கப்படவில்லை.    மின்சார அமைப்பை பராமரிப்பதற்கு உகந்த சூழலை உருவாக்குவது நிர்வாகத்தின் பொறுப்பாகும், இதனால் ஆபத்து முற்றிலுமாக அகற்றப்படும். பராமரிப்பை மிகுந்த பொறுப்புடனும் மேற்பார்வையுடனும் மேற்கொள்ள சரியான கண்காணிப்பு முறையுடன் அங்கீகரிக்கப்பட்ட நடைமுறை இன்னும் அறிமுகப்படுத்தப்படவில்லை என்ற உண்மையை இந்த குழு ஆராயுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். ஒரு முறையான நடைமுறையை அறிமுகப்படுத்துவதில் தாமதம் திடீர் மின் தடை மற்றும் எதிர்காலத்தில் பெரிய விபத்துக்களுக்கு வழிவகுக்கும். கண்காணிப்பாளர்களை அகற்றுதல் மற்றும் பொறியியலாளர்களை நிறுத்துவதற்கான ஆரம்ப நடவடிக்கைகளுக்கு அப்பால் செல்லவும், முறையான நடைமுறைகள் மற்றும் பராமரிப்புக்கான வழிகாட்டுதல்களை விரைவாக அறிமுகப்படுத்த பரிந்துரைக்கவும் இந்த குழுவை நாங்கள் கேட்டுக்கொள்கிறோம். இந்த நடைமுறைகளை அறிமுகப்படுத்த தாமதப்படுத்தும் அதிகாரிகள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் நாங்கள் முன்மொழிகிறோம். இதுபோன்ற சம்பவங்களின் சாத்தியக்கூறுகளைக் குறைக்க பொருத்தமான பாதுகாப்பு அமைப்பு விவரக்குறிப்புகளைப் புதுப்பிக்கவும் நாங்கள் பரிந்துரைக்கிறோம் (எ.கா. பெரும்பாலான ஏபிபி ஜிஐஎஸ் கணினிகளில் மின்னழுத்த மின்மாற்றி மூலம் மின்னழுத்தம் கண்டறியப்படும்போது இன்டர்லக் பைபாஸ் பயன்முறையில் கூட BUS BAR தரையிறக்கம் தடுக்கப்படுகிறது).

 

2.        கெரவலபிட்டிய துணை மின்நிலையத்திற்கும் நுரைச்சோலை துணை மின்நிலையத்திற்கும் இடையில் பாதுகாப்பு மண்டலங்கள் செயற்படாமை 

 

கெரவலபிட்டிய துணை மின்நிலையத்தில் உள்ளதைப் போன்ற ஒரு BUS BAR Earth தவறு ஏற்பட்டால், பரிமாற்ற அமைப்பின் பிற பகுதிகள் பாதிக்கப்படாமல் தடுக்க பல பாதுகாப்பு மண்டலங்கள் உள்ளன. முதலாவதாக, இந்த  கட்டம் துணை மின்நிலையத்தை வெளிப்புற தாக்கத்தை ஏற்படுத்துவதைத் தடுக்கிறது (BUS BAR பாதுகாப்புத் திட்டம்) மற்றும் அது வேலை செய்யவில்லை என்றால், இந்த தவறானது அருகிலுள்ள கட்டம் துணை மின்நிலையத்தின் பரிமாற்ற வரி பாதுகாப்பு அமைப்பு (Remote end) மூலம் அகற்றப்படுகிறது. இருப்பினும், கெரவலப்பிட்டியவிலிருந்து நுரைச்சோலை வரையிலான கொட்டுகொட, வேயங்கொட மற்றும் சிலாபத்தில் உள்ள கட்டம் துணை மின்நிலையத்தில் பல செயல்பாட்டு பாதுகாப்பு அமைப்புகள் மூலம் நுரைச்சோலை மின் நிலையத்தை இந்த தவறு பாதிக்கவில்லை. எனவே இவை இரண்டு நிகழ்வுகள். அந்த இடங்களில் உள்ள பாதுகாப்பு அமைப்புகள் செயல்படவில்லை என்றால், அவை விரைவில் விசாரிக்கப்பட வேண்டும். இல்லையெனில், தவறான பாதுகாப்பு அமைப்புகளால் இன்னும் கடுமையான தனிப்பட்ட மற்றும் சொத்து சேதம் ஏற்படலாம். அந்த பாதுகாப்பு அமைப்புகள் முறையாக பராமரிக்கப்பட்டு வந்தனவா, இல்லையென்றால் அவற்றுக்கு யார் பொறுப்பு என்பது குறித்து முறையான விசாரணை இருக்க வேண்டும். அதன்படி, கெரவலபிட்டியவிற்கும் நுரைச்சோலைக்கும் இடையிலான பாதுகாப்பு மண்டலங்களின் செயல்பாடுகள் மற்றும் இந்த மின்தடை பாதுகாப்பு அமைப்புகள் பதிலளித்த விதம் குறித்து ஆராயப்பட வேண்டும் என்று இந்த குழுவுக்கு நாங்கள் பரிந்துரைக்கிறோம். அந்த பாதுகாப்பு அமைப்புகள் முறையாக பராமரிக்கப்படாவிட்டால், அதற்கு காரணமான அதிகாரிகளும் இந்த மின்தடைக்கு முழு பொறுப்பையும் ஏற்க வேண்டும்.

 

 

 

 

 

3.     கெரவலபிட்டி மற்றும் நுரைச்சோலை  BUS BAR  ஆகிய இரண்டிலும் நிலத்தடியில் பிரச்சினை

 

எங்களுக்கு கிடைத்த தகவல்களின்படி, கெரவலபிட்டியவிலும், நுரைச்சோலை BUS BAR இல் நிலத்தொடர்பு இல்லை. கெரவலபிட்டிய துணை மின்நிலையத்தில் நிலத்தடி பிரச்சினை இருந்தால், இதன் விளைவால் நுரைச்சோலை மின்நிலையம் செயலிழக்காது என்பது தர்க்கரீதியானது. அப்படியானால், இந்த இரண்டு இடங்களிலும் உள்ள பிழைகள் ஒன்றுக்கொன்று சுயாதீனமாக இருக்கும். அதன்படி, கெரவலபிட்டி துணை மின்நிலையத்தில் ஏற்பட்ட தவறு நுரைச்சோலை மின் உற்பத்தி நிலையத்தின் மின்னுற்பத்தியை பாதிக்கவில்லை என்று தெரிகிறது. நுரைச்சோலை மின் உற்பத்தி நிலையத்தின் பிரச்சினை அதன் தனிப்பட்ட தவறு என்று நாங்கள் சந்தேகிக்கிறோம். அதன்படி, மின் தடை ஏற்பட்ட பின்னர்  நாடு முழுவதும் மின் தடை ஏற்பட்டதற்கு நுரைசோலை மின் உற்பத்தி நிலைய செயலிழப்பு தான் காரணம் என்று சந்தேகிக்க முடியும். நுரைச்சோலை மின் உற்பத்தி நிலையத்துடன் தொடர்புடைய பாதுகாப்பு அமைப்புகள் மற்றும் வருகை அமைப்புகளின் ஒருங்கிணைப்பை இந்த குழுவால் மதிப்பாய்வு செய்ய வேண்டும் என்றும் நாங்கள் முன்மொழிகிறோம். மின் தடைக்கான உண்மையான காரணம் கெராவலபிட்டிய துணை மின்நிலையத்தில் உள்ள விநியோகஅமைப்பில் ஏற்பட்ட பிழையா அல்லது நுரைச்சோலை மின் நிலையத்தில் ஏற்பட்ட பிழையா என்பதை இது தெளிவாக தீர்மானிக்க முடியும். மின்தடைக்கான காரணம் நுரைச்சோலை மின் நிலையத்தில் ஒரு தவறு என்றால், அந்த கட்டமைப்புகளுக்கு பொறுப்பான நுரைச்சோலை மின் உற்பத்தி நிலைய அதிகாரிகள் பொறுப்பு. குழுவின் விசாரணைகளுக்குப் பிறகு அவர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று நாங்கள் பரிந்துரைக்கிறோம். கெரவலபிட்டி கட்ட துணை மின்நிலைய செயலிழப்பு நோரோச்சோலை மின் உற்பத்தி நிலையத்தின் செயலிழப்புக்கு காரணமென சில தரப்பு ஏற்கனவே பரிந்துரைத்துள்ளன. எந்தவொரு தொழில்நுட்ப ஆய்வும் இல்லாமல் அத்தகைய முடிவுக்கு வருவது சரியானதல்ல. கெரவலபிட்டி சம்பவத்தின் செயலிழப்புக்கும் நோரோச்சோலை மின் நிலையத்தின் செயலிழப்புக்கும் இடையே தொடர்பு இருந்தால், அதை ஒரு தொழில்நுட்ப ஆய்வு மூலம் உறுதிப்படுத்த தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு தயவுசெய்து கேட்டுக்கொள்கிறோம்.

 

4.     இதற்கு முன்னர் நாடு முழுவதும் ஏற்பட்ட மின் தடை குறித்து நியமிக்கப்பட்ட குழுவின் பரிந்துரைகள் செயல்படுத்தப்பட்டுள்ளனவா?

 

அக்டோபர் 2009, செப்டம்பர் 2015, பிப்ரவரி 2016 மற்றும் மார்ச் 2016 இல் இந்த வகையான மின் தடைகள் ஏற்பட்டன. அந்த சந்தர்ப்பங்களில், இலங்கை பொது பயன்பாடுகள்  ஆணைகுழு தமது பரிந்துரைகளை வெளியிட்டது. மேலும், 2016 மின் தடை குறித்து ஜனாதிபதியால் நியமிக்கப்பட்ட அமைச்சரவை துணைக்குழுவும் தமது பரிந்துரைகளை வழங்கியிருந்தது. இந்த பரிந்துரைகள் அனைத்திற்கும் இலங்கை மின்சாரசபையின் நிர்வாகம் மேற்கொண்ட நடவடிக்கைகள் குறித்து குழு ஆராய வேண்டும் என்று நாங்கள் பரிந்துரைக்கிறோம்.

 

 

5.   திடீர் செயலிழப்பு ஏற்பட்டால் குளிரூட்டும் முறைகளின் தொடர்ச்சியான செயல்பாட்டிற்காக நுரைச்சோலை மின் நிலையத்தில் இரண்டு ஜெனரேட்டர்கள் நிறுவப்பட்டுள்ளன. இவ்வாறு திடீரென செயலிழந்த நேரத்தில் இந்த ஜெனரேட்டர்கள் இயங்கியிருந்தால், ஆகஸ்ட் 17 ஆம் திகதியின்போது அலகுகள் 2 மற்றும் 3 (Unit 2 & 3 ) இல் உள்ள குளிரூட்டும் அமைப்புகளுக்கு சேதம் ஏற்படுவதைத் தடுக்க முடியும். அவ்வாறான நிலையில், இரண்டு மின் உற்பத்தி நிலையங்களும் குறைந்த நேரத்தில் மீண்டும் செயல்படுத்தப்பட்டு மின்வெட்டு தவிர்க்கப்பட்டிருக்கலாம். குளிரூட்டும் முறைக்கு பொருத்தப்பட்ட ஜெனரேட்டர்களை வேலை செய்யும் நிலையில் வைத்திருக்க இயலாமையை இந்த குழு விசாரிக்குமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம்.

 

6.  செயலிழப்புக்கு பின்னர் தேசிய மின் கட்டத்தை மீண்டும் செயல்படுத்த மத்திய கட்டுப்பாட்டு மையம் செயல்பட்ட விதம் ஒருபோதும் திருப்தி அடைய முடியாதுள்ளது. ஒரு கட்டுப்பாட்டு மையத்தை அமைப்பதற்கும் உயர் தொழில்நுட்ப முறைகளை அறிமுகப்படுத்துவதற்கும் ஒரு பெரிய தொகை செலவிடப்பட்டிருந்தாலும், இந்த  அனுபவம் வாய்ந்த ஊழியர்கள் பணியாற்றாததே இதற்குக் காரணம் என்று நாங்கள் நம்புகிறோம். மத்திய கட்டுப்பாட்டு மையத்தில் பணிபுரியும் 15 ஆண்டுகளுக்கும் மேலான நடைமுறை அனுபவமுள்ள மின் கண்காணிப்பாளர்கள் மற்றும் அதிகாரிகள் பிற பணியிடங்களுக்கு மாற்றப்பட்டுள்ளனர், மேலும் அவர்களுக்கு பதிலாக புதிய பொறியாளர்கள் பணியமர்த்தப்பட்டுள்ளனர். எனவே, மேற்கூறிய நடைமுறை அனுபவம் வாய்ந்த மின் கண்காணிப்பாளர்களும் இந்த அமைப்பு கட்டுப்பாட்டு மையத்தின் கால சேவையுடன் இணைக்கப்பட வேண்டும் என்று பரிந்துரைக்க பரிந்துரைக்கிறோம்.

 

7.  புதிய ஜனாதிபதியின் தலைமையிலான புதிய அரசாங்கத்தின் “செளபாக்கிய தெக்ம” திட்டத்திற்கு ஏற்ப புதுப்பிக்கத்தக்க எரிசக்தியை மேம்படுத்துவதற்கு வழங்கப்படும் முன்னுரிமையை புறக்கணித்து, மின்சார சபையின் முன் ஒப்புதல் மற்றும் மேற்பார்வையின் கீழ் வீடுகளின் கூரைகளில் நிறுவப்பட்ட சோலார் பெனல்கள் காரணமாக தேசிய மின் கட்டமைப்பு சூரிய சக்தியில் இயங்க செய்யாமல், எந்த தொழில்நுட்ப அடிப்படையுமின்றி செய்யப்பட்ட அறிக்கைகள் ஏற்கத்தக்கவை அல்ல.

 

8.  சமீபத்திய மின் தடை, மின் வெட்டுகள் மற்றும் தற்போதைய மின்சார பிரச்சினைகள் ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு, புதிய அரசாங்கத்தையும் புதிய மின்சார மற்றும் எரிசக்தி அமைச்சரையும் கைப்பற்றி ஆட்கொள்ள சில கட்சிகள் சதி செய்கிறதா என்பதை ஆராயுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

 

 

பிரதம செயலாளர்,

இலங்கை மின்சார சபையின் தொழில்நுட்ப பொறியாளர்கள்

மற்றும் மேற்பார்வையார்களின் சங்கம்                                                                   

2020-08-22

நகல்:

மேதகு ஜனாதிபதி கோதபய ராஜபக்ஷ

கெளரவ. டலஸ் அலகபெருமமின்சாரம் மற்றும் எரிசக்தி அமைச்சர்

கெளரவ.  துமிந்த திசாநாயக்கஇராஜாங்க அமைச்சர் 

அமைச்சின் செயலாளர் - மின்சாரம் மற்றும் எரிசக்தி அமைச்சர் 

தலைவர் - இலங்கை மின்சார சபை

தலைவர் - பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு 

பொது முகாமையாளர் - இலங்கை மின்சார சபை