Monday, August 26, 2019

ஜனாதிபதி தேர்தல் வெற்றி கணக்கு!



'தேர்தல்களில் யாருக்கு வாக்களிப்பது எனத் தீர்மானிக்காமல் இருப்பவர்களின் வாக்குகளே வெற்றிதோல்வியைத் தீர்மானிக்கும் காரணியாகும்.'- அமெரிக்க நகைச்சுவை எழுத்தாளர் இவான் இஸார்




எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களை பொதுஜன பெரமுணவும் ஜனதா விமுக்தி பெரமுணவும் ( ஜேவிபி) ஏற்கனவே அறிவித்துவிட்டன. ஜனாதிபதி வேட்பாளர் யார் என்ற இழுபறி ஐக்கிய தேசியக்கட்சிக்குள் நீடித்துக்கொண்டே செல்கின்றது. பிரதான கட்சிகளைத் தவிர சுயேட்சையாகவும் நாகனந்த கொடிதுவக்கு போன்றவர்கள் போட்டியிடலாம் என்ற ஊகங்கள் இருக்கின்றன. 



கடந்த தேர்தலிலும் பார்க்க அதிகவேட்பாளர்களைக் கொண்டதாக ஜனாதிபதி தேர்தல்களம் அமைந்தாலும் யார் இறுதியில் வெற்றிபெறுவதற்கு அதிக சாத்தியம் உள்ளதென்பதை கடந்த கால தரவுகளை முன்னிறுத்தி ஆராய்வோம்.

கடந்த தேர்தலில் ஜக்கிய தேசியக் கட்சியைப் பிரதான கட்சியாகக்கொண்ட புதிய ஜனநாயக முன்னணியின் சார்பில் பொதுவேட்பாளராகப் போட்டியிட்ட மைத்திரிபால சிறிசேன 6,217,162 வாக்குகளையும் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் சார்பில் போட்டியிட்ட மஹிந்த ராஜபக்ஷ 5,768,090  வாக்குகளையும் தேசப்பற்றுள்ள தேசிய முன்னணியின் சார்பில் போட்டியிட்ட ரத்னாயக்க ஆராச்சிகே சிறிசேன 18.174 வாக்குகளையும் எமது தேசிய முன்னணியின் சார்பில் போட்டியிட்ட நாமல் அஜித் ராஜபக்ஷ 15,726 வாக்குகளையும் பெற்றிருந்தனர். 


2015 ஜனாதிபதி தேர்தல் முடிவுகள்
வேட்பாளர் பெயர்
 போட்டியிட்ட கட்சி 
பெற்ற வாக்குகள்
மைத்திரிபால சிறிசேன
புதிய ஜனநாயக முன்னணி
6,217,162
மஹிந்த ராஜபக்ஷ
ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு
5,768,090  
ரத்னாயக்க ஆராச்சிகே சிறிசேன 
தேசப்பற்றுள்ள தேசிய முன்னணி
18,174
நாமல் அஜித் ராஜபக்ஷ 
எமது தேசிய முன்னணி 
15,726


கடந்த ஏப்ரல் மாதத்தில் உக்ரேய்ன் நாட்டில் இடம்பெற்ற தேர்தலில் அரசியல் கட்சிகளைச் சேராத அரசியலுக்கு முற்றிலும் வெளியே இருந்து போட்டியிட்ட நகைச்சுவை நடிகர் வொளோடிமிர் ஷெலன்ஸ்கி மகத்தான வெற்றியைப் பெற்றிருந்தார். அப்படியானதொரு ஆச்சரியம் அண்மைய எதிர்காலத்தில் இலங்கையில் நடப்பதற்கு வாய்ப்பில்லை என்று அரசியல் ஆய்வாளர்களுடனான கலந்துரையாடல்களின் போது உணரமுடிந்தது. L


இலங்கையின் கடந்த கால ஜனாதிபதித் தேர்தல்களை ஆராய்ந்தால் ஐக்கிய தேசியக் கட்சி அன்றேல் அதனைத் தலைமையாகக்கொண்ட கூட்டணி அதேபோன்று ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி அன்றேல் அதனைத் தலைமையாகக்கொண்ட கூட்டணியே வெற்றிபெற்றிருந்தது. இம்முறை ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் இடத்தில் பொதுஜன பெரமுண இருக்கின்றது.. அந்தவகையில் பொதுஜன பெரமுண தலைமையிலான கூட்டணி அன்றேல் ஐக்கிய தேசியக் கட்சி தலைமையிலான கூட்டணியிலிருந்து போட்டியிடுகின்ற வேட்பாளருக்கே இறுதி வெற்றிக்கான வாய்ப்பு இருக்கின்றது. 








இம்முறை தேர்தலில் களமிறங்கியிருக்கும் ஜே.வி.பி தலைவர் அநுர குமார திஸாநாயக்க மற்றும் களமிறங்கக்கூடும் என எதிர்பார்க்கப்படும் சட்டத்தரணி சமூக செயற்பாட்டாளர் நாகனந்த கொடித்துவக்கு ஆகியோhர் கடந்த தேர்தலில் சிறிசேனவிற்கு வாக்களித்த தரப்பினரின் வாக்குகளிலேயே அதிக தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும் என்ற அரசியல் விமர்சகர்கள் சுட்டி;க்காட்டுகின்றனர்.  2018ம் ஆண்டு பெப்ரவரி மாதம் இடம்பெற்ற உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் ஜேவிபிக்கு 710,932 வாக்குகள் கிடைத்திருந்தன. அநுர குமார திஸாநாயக்க என்ற ஆளுமைமிக்க அரசியல் வாதியின் மீது மக்களுக்கு நம்பிக்கையிருந்தாலும் அவர் சார்ந்து நிற்கின்ற ஜேவிபியிடம் நாட்டின் எதிர்காலத்தை கொடுப்பதற்கு பெரும்பான்மையான மக்கள் இன்னமும் தயாராகவில்லை. அப்படிபபார்க்கையில் எதிர்வரும் தேர்தலில் அநுர குமார திஸாநாயக்கவால் கடந்த உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் பெற்ற வாக்குகளைத் தாண்டிப் பெறுவதற்கு வாய்ப்பில்லை. கடந்த 2015பாராளுமன்றத் தேர்தலில் ஜேவிபி 543,944 வாக்குகளைப் பெற்றிருந்தது. ஜனாதிபதித் தேர்தல் என்று வருகின்ற போது யாரால் இறுதி வெற்றியைப் பெறமுடியும் என்ற எண்ணத்திலேயே அதிகமானவர்கள் வாக்களிப்பதனால் உள்ளூராட்சி மன்றத்தேர்தலில் ஜேவிபி பெற்ற வாக்குகளை விடவும் குறைவான வாக்குகள் அநுர குமார திஸாநாயக்கவிற்கு கிடைத்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. தற்போதைய நிலைவரப்படி அநுர குமார திஸாநாயக்கவால் சுமார் ஐந்து லட்சம் வாக்குகளையே அதிகபட்சமாகப் பெறமுடியும் என அரசியல் அவதானிகளின் கருத்துக்கள் மூலம் அறிந்துகொள்ளமுடிகின்றது. 

சமூகத்தின் மீது அக்கறை கொண்டவர் கறைபடியாத கரங்களுக்கு சொந்தக்காரர் என பேசப்படும் சட்டத்தரணி நாகனந்த கொடித்துவக்கு தேர்தலில் போட்டியிட்டால் அவருக்கு அதிருப்தி வாக்காளர்களிடம் இருந்து கிடைக்கக்கூடிய அதிகபட்ச வாக்குகளின் எண்ணிக்கை ஒரு லட்சத்தையும் தாண்டுவதற்கு வாய்ப்பில்லை என்பதே அரசியல் ஆய்வாளர்களின் எதிர்வுகூறலாக இருக்கின்றது.


கடந்த தேர்தலில் போட்டியிட்ட வடக்கு கிழக்கு தமிழ் வாக்காளர்களைப் பொறுத்தவரையில் அவர்கள் யாருக்கு வாக்களித்து வெற்றியைப் பெற்றுக்கொடுப்பது என்பது தொடர்பில் இன்னமும் தீர்மானமின்றி இருந்தாலும் யார் வரக்கூடாது என்பதில் திட்டவட்டமான முடிவுடன் இருப்பதாக கருத்தாடல்களின் போது உணர்ந்துகொள்ளமுடிகின்றது. மஹிந்த ராஜபக்ஸவிற்காவது ஒரு ஜனநாயக முகம் இருக்கின்றது அவர் மக்களை வசீகரிக்கக்கூடிய ஆகர்ஸியம் மிக்க தலைவர். ஆனால் கோத்தபாய என்று வரும் போது அவரை இராணுவ முகத்துடனே மாத்திரமே மக்கள் பார்பார்கள். கடந்த தேர்தலில் மஹிந்தவிற்கு வடக்கு கிழக்கில் கிடைத்த வாக்குகள் கூட எதிர்வரும் தேர்தலில் கோத்தபாயவிற்கு கிடைப்பதற்கு வாய்ப்பில்லை என்று சுட்டி;காட்டப்படுகின்றது. இலங்கையில் மிக அண்மையில் இடம்பெற்ற தேர்தலான உள்ளூராட்சி மன்றத் தேர்தல்களை அளவுகோலாக் கொண்டு தமிழ் தேசியக் கூட்டமைப்பிற்கு கிடைக்கக்கூடிய வாக்குகளை பார்க்கின்றபோது அந்த தேர்தலில் அவர்களுக்கு கிடைத்த 337,877 வாக்குகள் கிடைத்திருந்தன.  கடந்த பாராளுமன்றத்தேர்தலில் 515,963  வாக்குகள் கிடைத்திருந்தன.  நல்லாட்சி அரசாங்கம் அளித்த வாக்குறுதிகளை முற்றாக நிறைவேற்றவில்லை என்ற அதிருப்தி மக்கள் மத்தியில் காணப்பட்டபோதும் ராஜபக்ஸ தரப்பினர் மீண்டும் வந்துவிடுவார்கள் அப்படி வந்தால் நல்லாட்சியில் காணப்பட்ட நிம்மதியான வாழ்க்கை பறிபோய்விடும் என்ற அச்சம் காணப்படுகின்றது. அந்தவகையில் ராஜபக்ஷவின் கடந்த காலத்தை நினைவூட்டினாலேயே தமிழ் மக்களின் வாக்குகளை மீண்டும் தக்கவைத்துக்கொள்வதற்கு அதிக வாய்ப்புக்கள் தமிழ்த் தேசியக்கூட்டமைப்பிற்கு உள்ளது.  தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி தேசிய தேர்தல்களில் இன்னமும் காத்திரமான சக்தியாக உருமாறவில்லை. ஈபிடிபி அதற்குரிய வாக்குவங்கியை தொடர்ந்து தக்கவைத்துவருகின்றபோதும் அது ஒட்டுமொத்த வாக்களில் வெறுமனே அரைச்சதவீதத்தையும் தொடவில்லை.  

முஸ்லிம் வாக்குகளைப் பொறுத்தவரை 2015ம் ஆண்டு தேர்தலில் மஹிந்த ராஜபக்ஸவிற்கு வாக்களித்த தரப்பினர் ஈஸ்டர் தாக்குதல்களின் பின்னர் எழுந்த சூழ்நிலைகளால் தொடர்ந்தும் அதே நிலைப்பாட்டில் இருப்பார்கள் என்று எதிர்பார்க்கமுடியாது. 

சிங்கள மக்களைப் பொறுத்தவரையில் ஈஸ்டர் தாக்குதல்களின் பின்னர் ஏற்பட்ட சூழல் தேசிய பாதுகாப்பு விடயத்தில் கரிசனையை உருவாக்கிவிட்டுள்ளது. இதனால் தேசியவாதத்தை முன்னிறுத்தும் தரப்பினருக்கு அவர்களில் பெரும்பான்மையான வாக்குகள் அளிக்கப்பட வாய்ப்புண்டு. ஈஸ்டர் தாக்குதலில் நேரடியாக பாதிக்கப்பட்ட மக்கள்மத்தியில் அரசாங்கத்தின் மீதும் ஜனாதிபதியின் மீதும் வெறுப்பு இருந்தாலும் ஒட்டுமொத்த கத்தோலிக்க கிறிஸ்தவ மக்களும் அதே நிலைப்பாட்டில் இல்லை.

தமிழ் முஸ்லிம் மக்களின் பெரும்பான்மையான வாக்குகள் 2015ம் ஆண்டு போன்றே இம்முறையும் ஐக்கிய தேசியக்கட்சி தலைமையிலான கூட்டணி வேட்பாளருக்கு கிடைக்கும் என்ற எடுகோளின் அடிப்படையில் அநுர குமாரவும் நாகனந்தவும் சுமார் ஆறுலட்சம் வாக்குகளை இந்தக்கூட்டணிக்கு கிடைக்கக்கூடிய வாக்குகளில் இருந்து பிரித்துச் சிதறிடித்துவிடுவார்கள் என்ற எடுகோளின் அடிப்படையிலும் நோக்கினால் எவ்வாறு இக்கூட்டணியால் வெற்றிபெறமுடியும் என்பது எமக்கு முன்பாக உள்ள கேள்வியாகும். 

இந்த நிலையில் கடந்த தேர்தலின்  பின்னர் புதிய வாக்காளர்களாக பதிவுசெய்யப்பட்டிருக்கின்ற 12 லட்சம் இளம் வாக்காளர்களின் வாக்குகள் யாருக்கு கிடைக்கப்போகின்றது என்பதும் எதிர்வரும் தேர்தலில் தாக்கம் செலுத்தக்கூடிய மிகப்பெரும் காரணிகளில் ஒன்றாகும். இந்தப்புதிய வாக்குகளை ஈர்ப்பதற்கு கட்சிகள் என்ன வியூகங்களைக் கையாளப்போகின்றன என்பதிலேயே தேர்தலின் இறுதி வெற்றி தோல்விகள் தங்கியுள்ளன.  தேர்தலில் வெற்றி பெறுவதென்பது ஒரு கலை.  சிறப்பான முறையில் பிரசார உத்திகளை வகுத்து செயற்படுகின்றவர்கள் மக்கள் அலையை உருவாக்கி இறுதிவெற்றியை தம்வசப்படுத்துவதைக் கண்ணுற்றிருக்கின்றோம். இளம் வாக்காளர்கள் அதிகமாக சமூக வலைத்தளங்களில் உலாவருபவர்களாக உலகின் பல பாகங்களிலும் நடைபெறுகின்ற விடயங்களை உடனுக்குடனே அறிந்துகொள்பவர்களாக இருப்பதனால் சமூக வலைத்தளங்களில் முன்னெடுக்கப்படும் பிரசாரங்கள் புதிய வாக்காளர்களான இளம் தலைமுறையினரை ஈர்ப்பதற்கு உதவும். 

ஆகமொத்தத்தில் ஜனாதிபதித் தேர்தல் வெற்றியென்பது புதிய வாக்காளர்களை தம்வசப் படுத்துவதிலேயே தங்கியிருக்கப்போகின்றது என்பது திண்ணம்.

அருண் ஆரோக்கியநாதர்


இலங்கையிலிருந்து ஐரோப்பா வரை - சுவடுகளை இழக்கின்றோமா? - விபரிக்கிறார் க...


தமிழ் மொழி போல் இனிதாவதொன்றும் இல்லை - பெருமிதம் கொள்ளும் பன்மொழி அறிஞர்.



Saturday, August 17, 2019

எழுத்தாளர் அசோகமித்திரன் பற்றி அவரது புதல்வர்


காலநிலை மாற்றம் பொருளாதாரத்தில் செல்வாக்கு செலுத்துகின்றதா?


வடக்கு, கிழக்கு மாகாணங்கள் இணைக்கப்பட வேண்டும் - அருண் தம்பிமுத்து


அரசியல் தீர்வை அடைவது எமது அபிலாஷை- அமைச்சர் மனோ கணேசன்


நம்பிக்கை இல்லாப் பிரேரணை – மஹிந்தவின் பதவி பறிக்கப்படுமா..?


ஜனநாயகத்தை பாதுகாக்கக் கோரி மக்கள் வீதியில்


பிரதமர் ஆசனம் யாருக்குரியது? போராட்டங்களுக்கு மத்தியில் சபாநாயகரின் அறிவிப்பு|


எம்மை விமர்சித்தவர்கள் இன்று புரிந்துகொண்டுள்ளனர் - M.A.சுமந்திரன்


இயலாமையின் வெளிப்பாடே ஜனாதிபதியின் அண்மைய கருத்துக்கள்: சட்டத்தரணி ஐங்கரன்


இளைஞர்கள் மத்தியில் மாற்றம் வேண்டும்


இலங்கையிலிருந்து ஐரோப்பா வரை - சுவடுகளை இழக்கின்றோமா? - விபரிக்கிறார் கலாநிதி சுபாஷினி கனகசுந்தரம்


இலங்கை வரலாற்றில் கறைபடிந்த தினமான சர்வதேசத்தால் அவதானிக்கப்பட்ட நேற்றைய நாள்


உதவித் தேர்தல் ஆணையாளருடனான நேர்காணல்


எழுத்தாளர் வெற்றிச்செல்வியுடனான நேர்காணல்


இலங்கையில் இடம்பெற்றுவரும் அரசில் குழப்பநிலையால் ஏற்பட்ட நாடாளுமன்ற அமளி


வரலாற்றில் இடம்பெற்ற உயர் நீதிமன்றத்தீர்ப்பு


Friday, August 16, 2019

தமிழ் அரசியல் கைதிகளின் நிர்க்கதி நிலைக்கு யார் பொறுப்பு- அருட்தந்தை சக்திவேல்


நம்பிக்கை தருமா மனித உரிமை கூட்டத்தொடர்? - நிலைவரம்


ஊழலுக்கு எதிரான எனது குரலை பதவியால் நசுக்க முடியாது: அசாத் சாலி


ஜெனிவா தீர்மானத்தினை இலங்கை அரசாங்கம் நிறைவேற்றுமா..?


இலங்கையின் பதற்ற நிலை இன்னும் முடிவுக்கு வரவில்லை - நிலைவரம்


உறவுகளை தொலைத்தோரின் ஆறாத வடுக்கள்


மத்திய கிழக்கு நாடுகளைப் போல இலங்கையின் வெப்பநிலை – நிலைவரம்


இந்தியாவில் நாடாளுமன்றத்தேர்தலின் முதற்கட்ட வாக்கெடுப்பு முடிவுக்கு வந்துள்ளது - நிலைவரம்


பத்திரிகையாளர் தனபாலசிங்கம் அவர்களுடான ஓர் நேர்காணல்


VPN மூலம் இணையத்தை இயக்குவது சட்டவிரோதமானதா ? - நிலைவரம்


ஐ.தே.க. அரசாங்கத்திற்கு தேவையான சந்தர்ப்பத்தில் கூட்டமைப்பு கரம் கொடுக்கும்: சுமந்திரன்



இலங்கையின் அனைத்துப் பகுதிகளிலும் சித்திரவதைகள் தொடர்கின்றன: மனித உரிமை ஆணைக்குழு


ஒரு இரத்தக்கறைகூட என்மீது படவில்லை- அருட்தந்தை ஜோய் அற்புதசாட்சி

 ஏப்ரல் 21ம் திகதி உயிர்த்த ஞாயிறு தினத்தன்று  இலங்கையின் பல பாகங்களிலும் தற்கொலைத்தாக்குதல்கள் இடம்பெற்றன. கொழும்பு கொச்சிக்கடை புனித அந்தோனியார் தேவாலயத்தின் மீதே முதலாவது தாக்குதல் நடத்தப்பட்டது. இதன்போது தேவாலயத்தில் திருப்பலியை ஒப்புக்கொடுத்துக்கொண்டிருந்த அருட்தந்தை ஜோசப் ஜோய் மரியரட்ணம் ஆதவனுக்கு வழங்கிய நேர்காணல்

இலங்கையின் புதிய யுத்தம்


கடந்த ஏப்ரல் 21ம் திகதி உயிர்த்த ஞாயிறு தினத்தன்று இலங்கையில் இடம்பெற்ற தற்கொலைத் தாக்குதல்களை அடுத்து அல்ஜசீரா இங்கிலிஷ் ஆங்கில செய்திச் சேவையின் 101 EAST என்ற விபரணத் தொகுப்பில் இது பற்றி ஓர் புலனாய்வு இடம்பெற்றது. இந்த விபரணத்தொகுப்பில் இலங்கையின் உள்ளுர் தயாரிப்பாளாராக /NEWS FIXER ஆக பங்காற்றுவதற்கு கிடைத்திருந்தது.

விடுதலைப் புலிகளை குறைகூறும் அருகதை எனக்கில்லை: ஒஸ்லோ பிரதி மேயர்


Wednesday, August 14, 2019

கல்வி நிறுவனங்களை நடத்தும் போர்வையில் பயங்கரவாதிகள் !- இலங்கையை எச்சரிக்கிறார் துருக்கி தூதுவர்

இலங்கையில் உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல்கள் இடம்பெற்று மூன்று மாதங்கள் அண்மையில் நிறைவுபெற்ற நிலையில் பயங்கரவாதத்தின் பாரதூரத்தன்மை தொடர்பாக இலங்கைக்கான துருக்கி தூதுவர் துன்ஜா ஒஸ்சுஹதார் எச்சரிக்கை விடுத்துள்ளார்.




துருக்கி அரசாங்கத்தை 2016ம் ஆண்டில் கலைத்து ஆட்சியைப் பிடிப்பதற்கு இராணுவப் புரட்சியை மேற்கொண்ட .ஃபெட்டோ( FETO) பயங்கரவாத அமைப்பின் முதுகெலும்பு துருக்கியில் நொருக்கப்பட்டுள்ளபோதும் அந்த அமைப்பு இலங்கை உட்பட 160 நாடுகளில் பல கல்வி
 நிறுவனங்கள், வர்த்தகங்கள் மற்றும் ஏனைய நிறுவனங்களை நடத்திநடத்தும் போர்வையில்

 அதன் செயற்பாடுகளை முன்னெடுத்துவருவதாக துருக்கி தூதுவர் சுட்டிக்காட்டினார்.


நியுஸ்லைனுக்கு வழங்கிய விசேட நேர்காணலின் போதே அவர் இந்தக்கருத்துக்களை வெளியிட்டார். 
இலங்கையில் மூன்று வருடங்களுக்கு மேலாக சேவையாற்றிவருகின்ற துருக்கி தூதுவர் அழகான இந்த நாடு எதிர்கொண்டுள்ள பிரச்சனைகள் நெருக்கடிகள் அவசியமற்றவை அனாவசியமானவை என்றும் கூறினார்.
இலங்கையில் முஸ்லிம்களுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்டுவருகின்ற வன்முறைகள் தொடர்பாக மிகவும் கரிசனையை வெளிப்படுத்திய துருக்கி தூதுவர் 57 நாடுகள் அங்கம் வகிக்கும் இஸ்லாமிய நாடுகளின் அமைப்பில் துருக்கி முக்கிய வகிபாகத்தை ஆற்றிவருவதாக குறிப்பிட்டார்.


பகையைத் தூண்டும் சிங்களவரின் உரைகளுக்கு தண்டனை ஏதுமில்லை

பகையைத் தூண்டும் சிங்களவரின்
உரைகளுக்கு தண்டனை ஏதுமில்லை

- இலங்கை வந்த ஐ.நா. விசேட அறிக்கையாளர் இடித்துரைப்பு






"இலங்கையில் பெரும்பான்மைச் சமூகத்தினரால் பகைமையைத் தூண்டும் உரைகளுக்குத் தண்டனைகள் வழங்கப்படுவதில்லை. 2007ஆம் ஆண்டு கொண்டு வரப்பட்ட சட்டத்தின் கீழ் பகைமை உணர்ச்சியைத் தூண்டும் உரைகளைத் தடுப்பதற்கான சட்ட ஏற்பாடுகள் இருப்பினும், பாரபட்சமற்ற முறையில் அவை வலியுறுத்தும் வகையில் அமையவில்லை."

- இவ்வாறு இலங்கைக்குப் பயணம் மேற்கொண்ட ஐ.நாவின் விசேட அறிக்கையாளர், கிளெமென்ட் நைலட்சோஸி வூல் தெரிவித்தார்.

தனது இலங்கைப் பயணத்தின் முடிவில் நேற்றுக் கொழும்பில் நடத்திய ஊடக சந்திப்பிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது:-

"ஜனநாயகத்தின் பின்னடைவு தொடர்பில் அனைத்துத் தரப்பினராலும் கருத்துத் தெரிவிக்கப்பட்டது. அது என்னைக் கவலையடையச் செய்துள்ளது. சுதந்திரத்துக்கான மக்களின் வேணவாக்களையும், சட்டத்தின் ஆட்சியையும், ஜனநாயகத்தையும் நாட்டின் அரசியல் தலைவர்கள் நிராகரிக்கக் கூடாது. போராடிப் பெற்ற ஜனநாயக உரிமைகள் தொடர்பான முன்னேற்றத்தைக் குறைத்து மதிப்பிடுதல் போன்ற விடயங்களை எதிர்வரும் தேர்தல்களின்போது அரசியல் தலைவர்கள் மேற்கொள்ளக்கூடாது.

காணாமல் ஆக்கப்படுதல், காணி உரிமைகள், வாழ்வாதாரம், வளங்களையும் அபிவிருத்தி திட்டங்களையும் அணுகுதல் என்பவை தொடர்பாக பாரபட்சமான முறையில் சட்டங்கள் பிரயோகிக்கப்படுவது மீதும் எனது கவனம் ஈர்க்கப்பட்டுள்ளது.

ஆர்ப்பாட்டங்களுக்கான காரணங்களையும், ஆர்ப்பாட்டங்களின் போது பங்குபற்றுந கள் முன்வைக்கும் பிரச்சினைகளையிட்டும் அரசு கவனம் செலுத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும்.





ஏப்ரல் மாதத்தில் பேரழிவையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்திய பயங்கரவாதத் தாக்குதல், அதேசமயம் சென்ற ஆண்டு அரசமைப்பு ரீதியான நெருக்கடிகள் என்பன ஏற்பட்ட ஒரு சூழமைவில் அதற்கு மேலதிகமாக தற்போதைய அவசரகாலச் சட்டங்களின் பிரயோகம் என்பன மன அழுத்தங்களை அதிகரிக்கச் செய்துள்ளது.

சிவில் சமூகத்தின் சில உறுப்பினர்கள் தமது நடவடிக்கைகளை முன்னெடுப்பதிலும் அமைதியாக ஒன்று கூடுவதிலும் பல கஷ்டங்களை எதிர்நோக்குகின்றனர். இத்தகையப் பிரச்சினைகளை நாடு எதிர்நோக்கியுள்ள ஒரு காலகட்டத்திலேயே எனது பயணம் அமைந்துள்ளது.

2009ஆம் ஆண்டு ஓய்ந்த நீண்டகால அழிவுகரமான போரின் பின்னர் பாதுகாப்புத் துறையில் சீர்திருத்தங்கள் மேற்கொள்ளப்படாமை, சிவில் சமூகம் இயங்குவதில் கஷ்டங்களை ஏற்படுத்தியுள்ளது. ஆர்ப்பாட்டங்கள் தொடர்பாகவும் ஏனைய சிவில் சமூக நடவடிக்கைகள் பற்றியும் தொடர்ச்சியான புலனாய்வுக் கட்டமைப்புக்களைக் கண்காணிப்பில் ஈடுபடுத்துவதன் காரணமாக மனித உரிமைகள் பாதுகாவலர்கள் மீது தொந்தரவையும் அச்சுறுத்தலையும் ஏற்படுத்தியுள்ள நிலைமை அறிக்கையிடப்பட்டுள்ளது.

மக்கள் ஒன்றுகூடும் சுதந்திரத்திற்கான உரிமையையும் சங்கங்கள் அமைப்பதற்கான உரிமையையும் முன்னெடுக்கும் போது, நாட்டின் சில பிரதேசங்களில், நடந்த கடந்தகால நடைமுறைகள் நினைவூட்டப்படுகின்ற அதேவேளை, அச்சத்தையும் பீதியையும் மக்கள் மத்தியில் ஏற்படுத்தியுள்ளன.

குறிப்பாக ஏப்ரல் தாக்குதல்களின் பின்னர் நாட்டில் பரவலாகக் காணப்படும் பகைமை உணர்ச்சியைத் தூண்டக் கூடிய உரைகளின் வளர்ச்சி குறித்தும் கவனம் செலுத்தியுள்ளேன்" - என்றார்.

கோத்தா எளிதில் ஜனாதிபதியாகிட முடியுமா?


அருண் ஆரோக்கியநாதர்

பலரும் எதிர்பார்த்ததைப் போன்றே பொதுஜன பெரமுண கட்சியின் ஜனாதிபதி வேட்பாளராக கோத்தாபய ராஜபக்ஷவை முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ நேற்றைய தினம் பகிரங்கமாக அறிவித்துள்ளார்.

இந்தநிலையில் எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் வெற்றியீட்டுவது பொதுஜன பெரமுணவின் ஜனாதிபதி வேட்பாளர் கோத்தாபய ராஜபக்ஸவிற்கு மல்லிகைப் பூ தெளித்த மலர்ச்சாலையாக இருக்குமா ? அன்றேல் முட்கள் நிறைந்த கடினப்பாதையாக இருக்குமா ? என்ற கேள்வி சிறுபான்மை மக்கள் மத்தியில் எழுவதில் ஆச்சரியமில்லை. 

2015ம் ஆண்டு நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலை ஒரு அளவுகோலாக வைத்து எதிர்வரும் தேர்தலை நோக்கினால்  ராஜபக்ஸ தேர்தலில் வெற்றிபெற வேண்டுமானால்  பல விடயங்கள் ஒன்றுகூடிவரவேண்டியது அவசியமாகும்.



2015ம் ஆண்டு தேர்தலின் போது இலங்கையின் பெரும்பான்மையினராக விளங்கும் பௌத்த சிங்கள (70% ) மக்களில் பெரும்பான்மையினரின் ஆதரவைப் பெற்ற போதும் மஹிந்த ராஜபக்ஸவினரால் தேர்தலை வெல்ல முடியவில்லை. அந்த தேர்தலில்  சிறிசேன 6,217,162 (51.28%) வாக்குகளைப் பெற்ற அதேவேளை மஹிந்த ராஜபக்ஸவால்  5,768,090 (47.58%)வாக்குகளையே பெறமுடிந்தது.

ஏப்ரல் மாதத்தில்  இடம்பெற்ற உயிர்த்த ஞாயிறு தாக்குதலை அடுத்து  சிங்கள பௌத்த தேசியவாதம் நாட்டில் அலையாக உருவெடுத்த நிலையில் சிறுபான்மையினரின் வாக்குகள் இன்றியே தேர்தலில் வெற்றிபெறமுடியும் என்ற நம்பிக்கை ராஜபக்ஸ தரப்பினரிடையே ஏற்பட்டுள்ளது.

நாட்டில் முஸ்லிம்களுக்கு எதிரான வெறுப்புணர்வு சிங்களவர்கள் மத்தியில் அதிகமாக இன்னமும் இருக்கின்ற நிலையில்  சிங்கள மக்களில் 80 சதவீதமானவர்கள்  கோத்தபாயவிற்கு ஆதரவு வழங்குமிடத்து அவர் வெற்றிபெறுவதைத் தடுத்துவிடமுடியாது. ஆனால் சிங்கள மக்களிலும் ஜனநாயகத்தை மதிக்கின்ற உண்மையையும் பொய்மையையும் பிரித்தறியும் அறிவுடைய கணிசமானவர்கள் உள்ளனர்.  இந்த நிலையில் அவர்கள் கண்ணை மூடிக்கொண்டு வெள்ளைவான் கோத்தபாயவிற்கு வாக்களித்திட முன்வருவது சாத்தியமில்லை.

எதிர்வரும் காலத்தில் சிறுபான்மையினருக்கு எதிரான வெறுப்புணர்வை பெரும்பான்மை சிங்கள மக்கள் மத்தியில் அதிகரித்து அவர்களின் தேசிய உணர்வை என்பதிலும் துவேச உணர்வை  தூண்டிவிடும்  நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படலாம். இதன் மூலம் சிங்கள மக்களில் பெருமளவானோரின் வாக்குகளை பெற்றுக்கொள்ளும் நோக்கம் இருக்கலாம் . அது நடந்தால் கோத்தபாய சிறுபான்மையினரின் வாக்குகள் இன்றியே வெற்றிபெற்றுவிடலாம். உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் இடம்பெற்று மூன்றுமாதங்கள் மாத்திரமே நிறைவடைந்துள்ள நிலையிலும் அதற்கான சாத்தியங்கள் குறைவாகவே உள்ளன. 

சிறுபான்மையினரிடையே குறிப்பாக தமிழ் மக்களிடையே கோத்தபாய என்ற பெயரைக் கேட்டாலே அச்சம் அவர்களை ஆட்கொள்வது இயல்பானது. இதற்கு அவரது காலத்தில் அரங்கேறிய வெள்ளைவான் கடத்தல் படுகொலைகள் இறுதிப்போர் கொடூரங்களை நினைத்தாலே போதுமானது. அவ்வாறானவரை தமிழ் மக்கள் ஒருபோதும் ஆதரிக்கப்போவதில்லை.

  ராஜபக்ஸவினரோடு இணைந்துநிற்கின்ற சில தமிழ் கட்சிகளுக்காக சில ஆயிரம் வாக்குகள் வேண்டுமானால் கிடைக்கக்கூடும். ஆனால் அது இறுதிவெற்றிக்குத் தேவையான ஆதரவாக பரிணமிக்க வாய்ப்பில்லை. மற்றைய முக்கிய வாக்குவங்கியான முஸ்லிம்களைப் பொறுத்தவரையில் ஈஸ்டர் தாக்குதல்களையடுத்து அரங்கேறிய அடாவடி நடவடிக்கைகளும் வெறுப்புப்பிரசாரங்களும் அவர்கள் மத்தியில் இன்னமும்  வேதனைநிறைந்ததாகவும் விரக்தியைத்தருவதாகவும் அமைந்திருக்கின்றன. இந்த நிலையில் அவர்களது வாக்குகளும் கோத்தபாயவிற்கு கிடைப்பதற்கு வாய்ப்பில்லை.

முஸ்லிம்களின் கணிசமான வாக்குகளைப் பெறும் நோக்குடன் கோத்தபாய முஸ்லிம் கட்சிகள் சிலவுடன் உடன்படிக்கைக்கு செல்வதற்கு வாய்ப்புக்கள் இருப்பதாக தற்போது தகவல்கள் கிடைத்துள்ளன.


அதேபோன்று  வடமாகாணத்தின்  முன்னாள் முதலமைச்சர் உட்பட சிலரை வைத்து தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் வாக்குகளை உடைக்கும் திட்டத்தை ராஜபக்ஸதரப்பினர் வகுத்துள்ளதாகவும் தகவல்கள் வருகின்றன. அவர்களின் எண்ணம் ஈடேறினாலும் அது சில ஆயிரம் வாக்குகளையே சிதறடிக்கக்கூடும் . 

இப்படிப் பார்க்கையில் கோத்தபாய ராஜபக்ஸவின் ஜனாதிபதி கனவு நிறைவேறுவதற்கு இன்னமும் பல தடைகளைத் தாண்டியாகவேண்டியுள்ளது. 

ஒரு வீரனுக்கு அழகு இறுதிவரை போராடிப்பார்ப்பது. கோழைதான் உண்மையாக தோற்றுப்போகுமுன்பே தோல்விப்பயத்தில் தோல்வியை ஒப்புக்கொள்பவன்.  கோத்தபாய ராஜபக்ஸவின் பெயரை ஜனாதிபதி வேட்பாளராக பொதுஜன பெரமுண அறிவித்த பின்னரே ஏதோ அவர் ஜனாதிபதியாக தெரிவாகிவிட்டதாக  அனேகமான ஊடகங்களும் அடிவருடி அரசியல்வாதிகளும் காவடியெடுத்து ஆலவட்டம் வீசுகின்றதைக் காணமுடிகின்றது.

 2015ம் ஆண்டில்  நாட்டின் அரச இயந்திரம் பாதுகாப்பு படைகள் ஊடகங்கள் என அனைத்து முக்கிய விடயங்களும் கைவசம் இருந்தபோதும்  ராஜபக்ஸ தரப்பினர் ஜனநாயகத்தின் மீது நம்பிக்கை கொண்ட  மக்களின் ஆதரவோடு தோற்கடிக்கப்பட்டனர். அதேபோன்று கடந்தாண்டு ஒக்டோபர் மாதம் 26ம் திகதி முதல் 52 நாட்களுக்கு அரங்கேறிய  அரசியல் சதி  நடவடிக்கையும் ஜனநாயகத்தின் மீது அசையா நம்பிக்கை கொண்டவர்களின் ஆதரவோடு முறியடிக்கப்பட்ட வரலாறுகள் நம் கண்முன்னே நிழலாடுகின்றன. உண்மையாவே ஜனநாயகப்பற்றுணர்வோடு செயற்படும் இடத்து எதிர்வரும் தேர்தலிலும் ஜனநாயகத்திற்கு ஆதரவான  சக்திகள் வெற்றிபெறுவதற்கான வாய்ப்புகள் இன்னமும் முற்றுமாய் அற்றுப் போய்விடவில்லை என்பது திண்ணம்.