Saturday, May 30, 2009







Wednesday, May 20, 2009

கடைசிநாட்களில் உண்மையில் என்ன நடைபெற்றது என்பதை விளங்கிக்கொள்வது சர்வதேச சமூகத்திற்கு மிகவும் முக்கியமானது -அமெரிக்க தூதுவர் ரொபர்ட் பிளேக்







விடுதலைப்புலிகளுக்கு எதிரான யுத்தத்தின் கடைசிநாட்களில் உண்மையில் என்ன நடைபெற்றது என்பதை விளங்கிக்கொள்வது சர்வதேச சமூகத்திற்கு மிகவும் முக்கியமானது என் இலங்கைகான அமெரிக்க தூதுவர் ரொபர்ட் பிளேக் தெரிவித்தார்

யுத்த மீறல்கள் நடைபெற்றிருப்பதாக தாம் கருதுவதாகவும் இதனை விளங்கிக்கொள்வதற்கு அந்தப்பகுதிக்கு செல்வதற்கான அனுமதி முக்கியமானது எனவும் அவர் குறிப்பிட்டார்


இலங்கைக்கான அமெரிக்க தூதுவராக கடந்த மூன்றாண்டுகள் பணியாற்றிய நிலையில் தனது பதவிக்காலத்தை ப+ர்த்திசெய்து இன்று விடைபெற்றுச்செல்லும் முன்பாக நடத்திய இறுதி ஊடகவியலாளர் மாநாட்டிலேயே அவர் இதனைத்தெரிவித்தார்


இதன்போது யுத்தத்தில் படையினர் கடைசிநாட்களில் மிகவும் நேர்த்தியாக தொழில்ரீதியான ராணுவமாக நடந்துகொண்டது தொடர்பில் என்ன கூறவிரும்புகின்றீர்கள் என ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த அமெரிக்க தூதுவர்


படவிளக்கம்

(இந்த கேள்விக்கு பதிலளிப்பது என்னைப்பொறுத்தவரையில் கடினமானது யுத்தத்தின் கடைசிநாட்களை உண்மையாக புரிந்துகொள்வதற்கு யாருக்குமே பாதுகாப்பு வலயத்திற்கு செல்வதற்கான அனுமதியிருக்கவில்லை அமெரிக்கா தொடர்ச்சியாக பலதடவைகள் பாதுகாப்பு வலயத்தில் சிக்குண்டிருந்த பொதுமக்களின் நலன்கள் தொடர்பில் அக்கறையை வெளிப்படுத்திவந்தது அவர்கள் விடுதலைப்புலிகளால் தடுத்துவைக்கப்பட்டிருந்தார்கள் என்பதை நீங்கள் அனைவரும் அறிவீர்கள் அவர்கள் மனிதக்கேடயங்களாக பயன்படுத்தப்பட்டிருந்தார்கள் அதேவேளையில் நாம் அரசாங்கத்திடமும் பாதுகாப்பு வலயத்தின் மீது கனரக ஆயுதங்களை பயன்படுத்துவதில்லை போன்ற உறுதிமொழிகளுக்கு கட்டுப்பட்டுநடக்குமாறு கோரியிருந்தோம் இந்த விடயத்தில் யுத்த மீறல்கள் இடம்பெற்றிருப்பதாக நான் கருதுகின்றேன் நான் முன்னமே குறிப்பிட்டவாறு உண்மையில் அங்கு என்ன நடைபெற்றது என்பதை விளங்கிக்கொள்வதற்கு அந்தப்பகுதிக்கு செல்வதற்காக அனுமதி முக்கியமானது )
(இந்தப்புதிய யுகத்தின் ஆரம்பம் வழங்குகின்ற நம்பிக்கையை அடைவதற்கும் பயங்கரவாதத்திற்கு இறுதிமுடிவுகட்டுவதற்கும் அதிகாரத்தை பகிர்ந்துகொள்வதற்கான உறுதியான நடவடிக்கைகள் தேவைப்படுவதுடன் இலங்கையிலுள்ள அனைத்து இனங்களுக்கும் நம்பிக்கை மதிப்புணர்வு கண்ணியம் மிக்க எதிர்காலம் உறுதிசெய்யப்படவேண்டும் அப்படியான நடவடிக்கைகளினூடாகவே ஒரு உண்மையான இலங்கை உருவாக முடியும் ஜனநாயகத்திலும் சகிப்புத்தன்மையிலும் ஆழவேருண்டியதும் மனித உரிமைகளுக்கு மதிப்பளிக்கப்படுவதும் ஊடகங்கள் சுதந்திரமாகவும் சுயாதீனமாகவும் செயற்படக்கூடியதும் அனைத்து இலங்கையர்களும் நாட்டை எங்கனம் முன்னெடுத்துச்செல்ல முடியும் என்ற பகிரங்க கலந்துரையாடலில் சுதந்தரமாக பங்கேற்கக்கூடியதுமான நிலைகாணப்பட்டாலே ஒரு உண்மையான இலங்கை உருவாகமுடியும் வெற்றிகரமான நல்லிணக்க நடவடிக்கையும் காயங்களை ஆற்றுகின்ற முயற்சியும் இலங்கையில் பயங்கரவாதத்திற்கு இறுதியாக முடிவுகட்டுவதற்கு துணைபுரியும் இதன்மூலமாகவே அனைத்து இலங்கையர்களுக்கும் சுபீட்சம் நம்பிக்கை மற்றும் சந்தர்ப்பங்கள் நிறைந்த எதிர்காலத்திற்கான பாதை உருவாக்கப்படும் )

புலிகளுக்கு ஆதரவாக பேசபவர்களுக்கும் இதே கதிதான்-அனுர பிரியதர்ஷன யாப்பா




விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் உயிரிழக்கவில்லையென இன்னும் சிலர் வெளிநாடுகளில் இருந்தவாறு கூறிக் கொண்டிருக்கின்றனர். அவர்கள் அனைவருக்கும் ஒன்றைக் கூறிக்கொள்ள விரும்புகிறேன். அதாவது இதற்குப் பின்னரும் புலிகளுக்கு ஆதரவாக பேசபவர்களுக்கும் இதே கதிதான் ஏற்படும். இதனை மறந்து விடக்கூடாது என அமைச்சரவைப் பேச்சாளரும் அமைச்சருமான அனுர பிரியதர்ஷன யாப்பா தெரிவித்தார்.



அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று மாலை இடம்பெற்ற செய்தியாளர் மாநாட்டிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் அங்கு மேலும் கூறியதாவது:



ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷஇ பாதுகாப்பு செயலாளருடன் இணைந்து முப்படைகளை சிறப்பாக வழிநடத்தி முப்பது வருடங்கள் நாட்டுக்கு அச்சுறுத்தலாக விளங்கிய பயங்கரவாதத்தை இரண்டு வருடங்கள் இரண்டு மாதங்களில் முற்றாக ஒழித்துள்ளார். விடுதலைப் புலிகள் பயங்கரவாதம் தொடர்பில் உலகத்தில் புதிய அத்தியாயம் ஒன்றை உருவாக்கியவர்கள். முதன் முதலாக மனித வெடிகுண்டு என்ற அழிவு முன்மாதிரியை வெளிக்காட்டியவர்கள். எனது இளமைக் காலம் அரசியல் தலைவர்கள்இ பாதுகாப்பு அதிகாரிகள் முக்கியமாக சிவிலியன்களை புலிகள் கொலை செய்தனர். மாற்றுக் கருத்துக்கு இடமளிக்கவில்லை. தமிழ் மக்களுக்கே துரோகம் இழைத்தனர். இலங்கையின் பொருளாதார மையங்களை அழித்தனர். புலிகளின் அழித்தல் தொடர்பான விடயங்களை கேள்வியுற்றவாறே எனது இளமை காலம் கழிந்தது. எப்போதும் நிம்மதியற்ற வகையிலேயே காலத்தை கழித்தோம். ஆனால்இ தற்போது எதிர்கால சந்ததியினருக்கு நாம் அதனை விட்டு வைக்கவில்லை. இன்னும் புலிகளுக்கு சிலர் வக்காளத்து வாங்குவதாகவே தெரிகிறது. பிரபாகரன் இன்னும் உயிரிழக்கவில்லையென சர்வதேச மட்டத்தில் சிலர் தெரிவித்துள்ளனர். இதற்குப் பின்னரும் புலிகளுக்கு ஆதரவாக யாராவது செயற்படின் அவர்களுக்கும் இதே கதிதான் ஏற்படும்.


இந்த ஊடகவியலாளர் மாநாட்டில் இறுதியாக நடைபெற்றது என்ன என ஊடகவியலாளர் ஒருவர் அமைச்சர் கெகலிய ரம்புக்வெல்லவிட ம் வினவியபோது ?

நாம் எதிர்கொள்வது என தீர்மானித்தோம் இறுதியாக பயங்கரவாதிகளை 300 சதுரமீற்றர் பகுதிக்குள் முடக்கினோம் அந்தவேளை நாம் முற்றாக துடைத்தளிப்பதற்கு முன்செல்லவேண்டும் எனத்தீர்மானித்தோம் பயங்கரவாதத்தை அழித்தொழிப்பது என்ற நாம் தீர்மானத்தில் நிலைத்திருந்தோம் எமது முக்கிய நோக்கமாக இருந்தது அனைத்து பொதுமக்களையும் விடுவித்ததை உறுதிசெய்தோம் இந்தக்காலப்பகுதியில் 62ஆயிரத்திற்கும் அதிகமானவர்களை விடுவித்தோம் இதன்போது பொதுமக்கள் எவரும் அங்கு இல்லை என்பதை உறுதிப்படுத்திக்கொண்டோம் இதனைத்n;தாடாந்து முற்றுமுழுதான தாக்குதலைத்தொடுத்தோம் தொடர்ந்து சண்டையிட்டு அனைத்து பயங்கரவாதிகளையும் கொன்றொழித்தோம் இதன்போது 300ற்கு மேற்பட்டோரின் சடலங்களைக் கண்டெடுத்தோம் இதில் பிரபாகரனின் சடலமும் இருந்தது

தெளிவாக கூறுங்கள் என வினவியபோது


நேற்றையதினம் மோதல்கள் நீடித்தது ( எத்தனை மணிவரை மோதல்கள் இடம்பெற்றது என அருகிலிருந்த அமைச்சர் அநுர பிரியதர்சன யாப்பாவிடம் வினவுகின்றார் )

பின்னர் தொடர்ந்தும் பதிலளித்த அமைச்சர் கெகலிய
மோதல்கள் நேற்று இடம்பெற்றது பின்னர் அங்கு பல சடலங்கள் அங்குமிங்குமாக சிதறிக்கிடப்பதை கண்டோம்

அப்போது சரியாக பதில் தெளிவில்லை என ஊடகவியலாளர் ஒருவர் தெரிவித்தார்

இதற்கு நான் மேலும் தெளிவாக கூறவான என தெரிவித்த கெகலிய

நேற்றையதினம் மோதல்கள் இடம்பெற்றது மரணமும் நேற்றையதினமே இடம்பெற்றது ஆனால் சடலம் இன்றையதினமே அடையாளம் காணப்பட்டது எனத்தெரிவித்தார்

Friday, May 15, 2009

இலங்கைப்பிரச்சனையை ராஜபக்ஸ அரசாங்கமானது இன்னுமொரு பரிமாணத்திற்கு கொண்டுசென்றுவிட்டுள்ளது - மங்கள

இலங்கைப்பிரச்சனையை ராஜபக்ஸ அரசாங்கமானது இன்னுமொரு பரிமாணத்திற்கு கொண்டுசென்றுவிட்டுள்ளதாக ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி மக்கள் பிரிவின் தலைவர் மங்கள சமரவீர தெரிவிக்கின்றார் .

முல்லைத்தீவின் ஒருபகுதிக்குள்ள ஏதோவகையில் யுத்தத்தை முடிவிற்கு கொண்டுவந்தாலும் இந்த பிரச்சனை முடிவுறாது என்றே கருதுவதாக அவர் மேலும் குறிப்பிட்டார் .
கொழும்பிலுள்ள ஐக்கியதேசியக்கட்சியின் பணிமனையில் இடம்பெற்ற செய்தியாளர் மாநாட்டின் போதே அவர் இதனைத்தெரிவித்தார் .


(இந்த யுத்தத்தை முல்லைதீவுக்காட்டுக்குள் ஏதோ வெற்றியுடன் முடிவுக்கு கொண்டுவந்தாலும் யுத்தம் முடிவுறப்போவதில்லை என்றே நான் நினைக்கின்றேன் உண்மையில் இந்த ராஜபக்ஸ அரசாங்கமானது இந்த நாட்டுப்பிரச்சனையை இன்னுமொரு பரிமாணத்திற்கு இன்னுமொரு மட்டத்திற்கு கொண்டுசென்றுவிட்டுள்ளது வரலாறு தெரிந்தவர்கள் குறிப்பாக தெரிந்துவைத்துள்ளதென்னவென்றால் சிங்கள கடும் போக்காளர்களும் சிங்கள யுத்தவெறியர்களும் சிங்கள இனவெறியர்களும் பலம்பெற்ற வேளைகளில் தாம் இந்த நாட்டில் தமிழ் கடும்போக்காளர்கள் பலம்பெற்றுள்ளனவர் என்பது தெளிவாகும் பயங்கரவாதத்தை அழிக்கின்ற போர்வையில் இனவாதத்தையும் கடும்போக்கையும் அரச கொள்கையாக்கொண்ட ராஜபக்ஸ அரசாங்கம் உண்மையில் இந்தப்பிரச்சனையை தீர்ப்பதற்கு பதிலாக மிகவும் கடுமையான பரிணாமத்திற்கு இந்தயுத்தத்தை தள்ளிவிட்டுள்ளனர் சாதாரண தமிழ் மக்களையும் விடுதலைப்புலிகளையும் தனித்தனியே விளங்கிக்கொள்ளமுடியாத இந்த இனவெறி அரசாங்கமானது விடுதலைப்புலிகள் என்ற கூடைக்குள் தனிநாட்டை ஒருபோதுமே கேட்காத விடுதலைப்புலிகளின் பயங்கரவாதத்தை நிராகரித்த சாதாரண அப்பாவி தமிழ்மக்களை ஒன்றுசேர்த்து நடத்துகின்ற தாக்குதல்களினால் பிரிவினைவாத போராட்டமானது முன்னெப்போதுமில்லாத வகையில் பலம் பெற்றுள்ளதென்றே நான்நினைக்கின்றேன் ஒரு பக்கத்தில் இந்த அநியாயம் காரணமாக பிரிவினைவாதத்திற்கு எதிராகவிருந்த சாதாரண தமிழ் மக்களை நாம் அந்த பிரிவினைவாத எண்ணப்பாட்டின் பின்னால் தள்ளிவிட்டுள்ளோம் மறுமுனையில் சாதாரண தமிழ்மக்களுக்கு எதிராக மேற்கொள்ளப்படும் பெரும் அநியாயம் காரணமாக இலங்கைத்தமிழர்கள் மட்டுமன்றி சர்வதேச தமிழ்சமூகம் அதாவது இலங்கையைச்சேர்ந்த தமிழர்கள் மட்டுமன்றி தென்னிந்தியாவைச்சேர்ந்த தமிழர்கள் மட்டுமன்றி மொரிசியஸ் தென்னாபிரிக்கா இப்படி உலகெங்கிலும் வாழும் தமிழர்களும் இலங்கையில் இந்த அப்பாவித்தமிழ் மக்கள் படும் துன்பங்களைக்கண்டு இந்தநாட்டில் ஈழம் பெற்றுத்தரப்படவேண்டும் என்ற ஒரே நிலைப்பாட்டிற்குள் வந்துள்ளனர் இந்தமக்கள் படும் துன்பங்களை 24மணிநேரமாக ஒளிபரப்பாகும் செய்மதி தொலைக்காட்சிகள் வாயிலாக அறிந்துகொள்ளமுடியும் எப்போதுமே விடுதலைப்புலிகள் இயக்கத்திற்கு எதிராகநின்றவரும் பிரபாகரனுக்கு அச்சமின்றி தென்னிந்தியாவில் பெரும் குரலெழுப்பியவருமான ஜெயலலிதா போன்ற தமிழ்நாட்டுத்தலைவர்கள் தற்போது இலங்கைத்தமிழ்மக்களுக்கு ஈழம்பெற்றுத்தரவேண்டும் என நிலைப்பாட்டிற்கு தள்ளிவிட்டுள்ளது வேறுயாருமல்ல இந்த ராஜபக்ஸ அரசாங்கமும் அதிலுள்ள கடும் போக்காளர்களுமே என்பதை நான் தெளிவாக கூறிக்கொள்கின்றேன் )














இலங்கைப்பிரச்சனை மிகவும் சர்வதேசமயமாகியுள்ளது

-கலாநிதி ஜெஹான் பெரேரா
இலங்கைப்பிரச்சனை மிகவும் சர்வதேசமயமாகியுள்ளதையே அண்மைய நிகழ்வுகள் எடுத்துக்காட்டுவதாக தேசிய சமாதானப்பேரவையின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கலாநிதி ஜெஹான் பெரேரா தெரிவித்தார்.
ஐநா பாதுகாப்புச்சபையில் முதன் முறையாக இலங்கைபிரச்சனை ஆராயப்பட்டுள்ளமை அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமா உத்தியோபூர்வமாக அறிக்கைவிடுத்துள்ளமையானது எதனைக்காட்டுகின்றது என வினவியபோதே அவர் இதனைத்தெரிவித்தார் .
கலாநிதி ஜெஹான் பெரேரா மேலும் கருத்துவெளியிடுகையில் தெரிவித்ததாவது
(இலங்கைப்பிரச்சனையானது மிகவும் சர்வதேசமயமாகியுள்ளதென்பதனையே இவை காண்பிக்கின்றது இதனை அரசாங்கம் உண்மையில் விரும்பாது ஏனெனில் அரசாங்கம் தன்னால் முடிந்தளவில் இதனை முடிவிற்கு கொண்டுவரவே முயற்சிக்கும் பொதுவாக அரசாங்கங்கள் உள்ளகப்பிரச்சனைகளை ஒருதலைப்பட்டசமான முறையிலேயே தீர்ப்பதற்கு முயற்சிப்பதுண்டு பிரச்சனைகள் சர்வதேசமயப்படுவதை விரும்புவதில்லை இலங்கை அரசாங்கம் ஒருதலைப்பட்டசமான பாதையில் சென்று இந்தப்பிரச்சனைக்கு இலங்கையின் பல்வேறு அரசியற்கட்சிகள் அன்றேல் சமூகங்கள் திருப்தியடைவதைவிடவும் தனக்கு திருப்திகரமான வகையில் தீர்வுகாண்பதற்கே அரசாங்கம் முயற்சிக்கின்றது என்பது தெளிவாக விளங்குகின்றது இந்தப்பிரச்சனை சர்வதேச மயப்படுத்தப்பட்டுள்ளமையானது எதைக்காண்பிக்கின்றதென்றால் இலங்கை எப்போமே நல்லவிடயத்திலும் மோசமான விடயத்திலும் ஒரு முன்மாதிரியாக பார்க்கப்படும் ஒரு தரப்பினர் எவ்வாறு ஒரு மோதலை முடிவிற்கு கொண்டுவருகின்றனர் என்பது ஒருவித ஆர்வத்;துடன் உன்னிப்பாக அவதானிக்கப்படும் மக்கள் உண்மையில் பணயக்கைதிகளாக வைக்கப்பட்டிருப்பதாக கூறப்படும் நிலையிலும் அவர்கள் வெளியே செல்ல அனுமதிக்கப்படுவதில்லை என்றநிலையிலும் இராணுவத்தினர் உள்நுழைய முயற்சிக்கின்ற நிலையிலும் இது உண்மையில் மிகவும் சிக்கலான விடயம் இது எப்படி நடைமுறைச்சாத்தியமாகும் என்பதைப்பார்க்க பல தரப்பினரும் முனையக்கூடும் இந்தப்பிரச்சனை சர்வதேச மயமாக்கப்பட்டுள்ளமை காரணமாகவும் மோதல்களால பாதிக்கப்பட்டவர்கள் மீதான மக்களின் அனுதாபம் காரணமாகவும் இயன்றவரை விரைவாக சர்வதேச சமூகம் எமக்கு உதவும் அதிகமதிகமான மனிதாபிமான உதவிகளை வழங்கும் என நான் நினைக்கின்றேன் இலங்கையில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவவேண்டும் என பல நாடுகளில் மக்கள் அபிப்பிராயம் ஏற்படக்கூடும் சர்வதேச மயப்படுத்தப்பட்டு;ள்ளமையால்இராணுவரீதியில் இலங்கை விவகாரம் நோக்கப்படும் எவ்வாறு இலங்கை அரசாங்கம் மிகவும் சக்திவாய்ந்த போராளிக்குழுவினை குறுகிய காலப்பகுதிக்குள்ளாக எதிர்கொண்டதென இராணுரீதியல் பார்ககப்படும் சர்வதேச மயப்பட்டுள்ள இலங்கைப்பிரச்சனையால் மூன்றாவது விடயமாக சர்வதேச மனித உரிமைகள் சட்டம் சர்வதேச சட்டம் என்பது குறித்து நோக்கப்படும் சர்வதேச மனித உரிமைகள் முறைமையின் கோரிக்கைகளுக்கு வலுவ+ட்டுவதாக இது அமையும் இலங்கையும் அதன் வீச்சுக்குள் வருகின்றது இலங்கையின் பிரச்சனை சர்வதேசமயப்படுத்தப்பட்டுள்ளமை காரணமாக ஏற்கனவே நாடுகள் இலங்கை இராணுரீதியில் ஆராயத்தலைப்பட்டுள்ளன சில நாடுகள் ஏற்கனவே அதனைப்பின்பற்றத்தொடங்கியுள்ளன மனிதாபிமான உதவிகளும் விரைவில் முன்னெடுக்கப்படும் சாத்தியமுள்ளன அதாவது சூழ்நிலை அனுமதிக்குமானால் சர்வதேச மனிதாபிமான சமூகம் இதுவிடயத்தில் உதவும் ஆனால் மனித உரிமைகள் சார்ந்த விடயத்திற்கு சில காலப்பகுதி செல்லும் ஆனால் இன்னும் 5வருட பத்துவருடகாலப்பகுதிக்குள்ளாக இலங்கை ஒரு மனித உரிமைகள் சவாலை எதிர்கொள்ளும் என நான் உணர்கின்றேன் இது தற்போது சர்வதேச மயமாகியுள்ளபிரச்சனையால் வலுப்பெறும் என நான் கருதுகின்றேன் )

போர்நிறுத்தத்திற்கு செல்வதா என்பது தற்போது கேள்விக்குரியதல்ல !

- மனித உரிமைகள் அமைச்சர் மஹிந்த சமரசிங்க
போர்நிறுத்தத்திற்கு செல்வதா என்பது தற்போது கேள்விக்குரியதல்ல மாறாக பயங்கரவாதிகளின் பிடியில் இருந்து மக்களை விடுவித்து அவர்கள் ஜனநாயகக் கட்டமைப்பிற்குள் வாழ்வதற்காக உரிமையைப்பெற்றுத்தருவதே பிரதான நோக்காகும் என மனித உரிமைகள்
அமைச்சா மஹிந்த சமரசிங்க தெரிவித்தார்
எமக்களித்த பிரத்தியேகப்பேட்டியின் போதே அவர் இதனைத்தெரிவித்தார்

மக்களின் மனிதாபிமான விடயமே முதன்மைக்குரிய முக்கிய விடயம் என குறிப்பிடும் நீங்கள் ஏன் சர்வதேச சமூகத்தினதும் ஏனைய பல்வேறு தரப்பினரதும் போர்நிறுத்தக்கோரிக்கைகளை நிராகரிக்கின்றீர்கள் இதில் முரண்பாடுகள் உள்ளதாக தோன்றுகின்றதே இது பற்றி விளக்கிக்கூறுங்கள் என அமைச்சர் மஹிந்த சமரசிங்கவிடம் வினவியபோது ?
(நாம் யுத்தநிறுத்தத்திற்கு செல்வதா மோதல்தவிர்ப்பை மேற்கொள்வதா அன்றேல் தற்காலிக மோதல் இடைநிறுத்தத்தை மேற்கொள்வதா என்பது தற்போது கேள்விக்குரியதல்ல தற்போதைய நிலையில் இந்த அப்பாவிப்பொதுமக்களை மிகவும் கொடுரமான பயங்கரவாதிகளின் பிடியில் இருந்து விடுவித்து தென்பகுதியிலுள்ள அவர்களது சகோதரர்களும் சகோதரிகளும் பலவருடகாலமாக மகிழ்ந்துணர்வதைப்போன்ற வாழ்க்கையை பெற்றுத்தருவதே மிகவும் முக்கியமான விடயமாகும் வலுக்கட்டாயமாக தடுத்துவைக்கப்பட்டுள்ள இந்தப்பொதுமக்களது சுதந்திர நடமாட்டத்திற்கான உரிமை மறுக்கப்பட்டுள்ளதுடன் பேச்சுச்சுதந்திரமும் மறுக்கப்பட்டுள்ளது அதேபோன்று தாம் விரும்பியவர்களைத்தேர்ந்தெடுப்பதற்காக வாக்களிக்கும் உரிமையும் மறுக்கப்பட்டுள்ளது பலகட்சிகளைக்கொண்ட பன்மைவாதம் அந்தப்பகுதிகளில் ஒருபோதுமே இருந்ததில்லை நாட்டின் ஏனைய பாகங்களில்ஏனையோர் அனுபவித்துமகிழ்வதைப்போன்ற ஜனநாயக உரிமைகள் ஏதும் அங்கே கிடையாது அந்தவகையில் பயங்கரவாதத்தை ப+ண்டோடழித்தொழிப்பதற்கான எமது செயற்பாடு வெறுமனே பயங்கரவாதத்தை அழிப்பதுடன் நிறுத்திக்கொள்வதா மட்டுமன்றி இந்த மக்களை விடுவித்து ஜனநாயகக் கட்டமைப்பிற்குள் வாழ்வதற்கான உரிமையை பெற்றுத்தருவதுடன் அவர்களது உண்மையான சமூக பொருளாதார அரசியல் பிரச்சனைகளுக்கு அதிகார பகிர்வு ஏற்பாட்டினூடாக அரசியல் தீர்வுமூலமாக தீர்வுகாண்பதுடன் அந்தப்பகுதிகளை அபிவிருத்திசெய்தன் மூலமாக அவர்களது வாழ்க்கையை மீளநிலைநிறுத்துவடன் அவர்களது பிள்ளைகளுக்கு எதிர்காலம் கிடைக்கக்கூடியாதாகவிருக்கும் )
உலகில் வேறு எங்குமே நிகழ்ந்திராத படிக்கு சாட்சியங்கள் ஏதுமின்றி வன்னியில் இனப்படுகொலை இடம்பெறுவதாக தமிழ்த்தேசியக்கூட்டமைப்பு தெரிவித்துள்ளமை பற்றி அமைச்சர் மஹிந்த சமரசிங்க விடம் வினவியபோது ?
(திரு சம்பந்தனைப்பொறுத்தவரை அவர் எதிர்கொண்டுள்ள அழுத்தங்களை என்னால் புரிந்துகொள்ள முடிகின்றது எப்போதெல்லாம் அவர் உரையாற்றுகின்றபோதும் குறிப்பாக அவசரகால சட்ட நீடிப்பின் மீதான வாக்கெடுப்பு நடைபெறும் நாளிலும் தமிழ்த்தேசியக்கூட்டமைப்பு சார்பாக அவர் உரையாற்றுகின்றபோது அவர் குறிப்பாக அவர் கூறுகின்ற விடயங்களை கூறுமாறு அழுத்தங்களுக்கு மத்தியில் உரையாற்றுவதனை நாம் அறிவோம் அனுபவமிக்க கல்விகற்ற அரசியல் வாதியான சம்பந்தன் போன்றவர்கள் இனப்படுகொலை என்பதன் அர்த்தத்தை அறிவர் இனப்படுகொலை என்பதன் அர்த்தத்தை அறிவார்களேயானால் புத்திஉணர்வுள்ள எந்தமனிதரும் எமது படையினரையோ அன்றேல் இலங்கை அரசாங்கத்தையோ இனப்படுகொலையில் ஈடுபடுவதாக குற்றஞ்சாட்டமாட்டார்கள் இன்றைய நிலையில் கொழும்பு நகரின் சனத்தொகையைப்பாருங்கள் இங்கு சிங்கள மக்களின் சனத்தொகை மொத்த தொகையில் 27சதவீதமேயாகும் சில ஆண்டுகளுக்கு முன்பாக கொழும்பு நகரில் சிங்கள மக்களின் தொகை 70 இ80 சதவீதங்களில் பிற்பகுதியில் அதிகரித்துக்காணப்பட்டிருந்தது எம்மத்தியில் இனப்படுகொலை கொள்கை இருக்குமானால் தலைநகரில் தமிழர்களும் முஸ்லிம்களும் சிங்களவர்களுக்கு மத்தியில் வாழமுடியுமா கடந்த வருடங்களில் மக்கள் இங்கு வாழ்வதற்காக தேர்ந்துவந்துள்ளார்கள் நாம் எமது மக்களை ஒன்றிணைக்க முயற்சிக்கின்றோம் நாம் எமது மக்களை பயங்கரவாதத்தில் இருந்து விடுவிக்க முயற்சிக்கின்றோம் அவர்களுக்கு உரிமைகளைக்கொடுக்க முயல்கின்றோமே தவிர அவர்களை கொல்வதற்கோ அன்றேல் பாராபட்சம் காண்பிக்கவே முயலவில்லை இது சாதாரண மக்களுக்கு எதிரான மோதல் கிடையாது மாறாக பொதுமக்களை விடுவிப்பதற்காக பயங்கரவாதத்துடன் மோதலையை மேற்கொள்கின்றோம் )

அரசாங்கத்திற்கு எவ்வித பிரச்சனையும் கிடையாது

-ஊடகத்துறை அமைச்சர் லக்ஸ்மன் யாப்பா அபேவர்த்தன

ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு சபையில் இலங்கை விவகாரம் ஆராயப்பட்டமை தொடர்பில் அரசாங்கத்திற்கு எவ்வித பிரச்சனையும் கிடையாது அவர்கள் அறிக்கை வெளியிட்டுள்ளார்கள் வழமையாக அறிக்கை வெளியிடுவதானே வழமை என இலங்கையின் ஊடகத்துறை அமைச்சர் லக்ஸ்மன் யாப்பா அபேவர்த்தன தெரிவித்தார்

அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் மாநாட்டின் எழுப்பப்பட்ட கேள்வியொன்றுக்கு பதிலளித்தபோதே அவர் இதனைத்தெரிவித்தார்
படையினரின் இழப்புக்கள் தொடர்பான புள்ளிவிபரங்கள் நீண்டநாட்களாக வெளியிடப்படவில்லையே என ஊடகவியலாளர் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த அமைச்சர்
(யுத்தத்தின் போது அனைத்தையும் குறிப்பாக அதனை வெளியிடுவதில்லை ஆனால் விடுவிக்கும் முயற்சியலமுன்னெப்போதிலும் பார்க்க காயமேற்படுதல் அதிகரித்துள்ளது படையினரைப்பொறுத்தவரையில் உயிரிழப்புக்களல்ல அதிகரித்த அளவில் காயமேற்படுதல் அதிகரித்துள்ளது கனரக ஆயுதங்களால் தாக்குதல் நடத்தியபோது எமக்கு இந்தப்பிரச்சனை இருக்கவில்லை ஆனால் தற்போது கனரக ஆயுதங்களால் தாக்குதல் நடத்துவதில்லை ஆப்கானிஸ்தானில் இதனைச்செய்யமுடியும் தலிபான்களுக்கு எதிராக செய்யமுடியும் ஈராக்கிற்கு சென்று அமெரிக்காவினால் எந்தவித ஈவிரக்கமுமின்றி தாக்குதல் நடத்தமுடியும் ஆனால் எமது நாட்டு மக்கள் மீது எங்களால் தாக்குதல் முடியாதல்லவா ஒன்றாக சேர்ந்து சுதந்திரத்தை வென்றெடுத்த இந்த நாட்டின் பிரஜைகள் மீது ஒன்றாக வாழ்ந்த மக்கள் மீது அவ்வாறு கனரக ஆயுதங்களைப்பயன்படுத்தி தாக்குதல் நடத்தமுடியாது அல்லவா பயங்கரவாதிகள் மீது தாக்குதல் நடத்தினாலும் மக்கள் மீது தாக்குதல் நடத்தமுடியாது என்ற உறுதியான நிலைப்பாட்டில் அரசாங்கம் உள்ளது வெளிநாட்டு அழுத்தங்கள் வந்தாலும் வராவிட்டாலும் அரசாங்கம் உறுதியான நிலைப்பாட்டில் உள்ளது இதுதொடர்பில் அழுத்தங்கள் கொடுக்க வேண்டிய அவசியம் இல்லை இல்லாவிட்டால் இரண்டு மணித்தியாலங்களில் இதற்கு முற்றுப்புள்ளி வைப்பதற்கு அரசாங்கத்திற்கு முடியுமல்லவா பாகிஸ்தானில் சுவட் பள்ளத்தாக்கில் தாக்குதல் நடத்திய போது யாரும் கணக்கு கேட்கவில்லையல்லவா யாரும் சென்று அங்கு புகைப்படமெடுக்கவில்லையல்லவா வேறு பேச்சுவார்த்தைகள்நடத்தப்படவில்லையல்லவா பாதுகாப்புச்சபைக்கு யோசனை சமர்ப்பிக்கப்படவில்லையல்லவா இருப்பினும் ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்துள்ளார்கள் லட்சக்கணக்கானோர் அகதிகளாகியுள்ளனர் அங்கு தாக்குதல் நடத்தியபோது எந்தவொரு உலக நாடுகளும் பேசவில்லை அங்கு சமாதான படைகளை அனுப்பவேண்டும் என்று கோரினார்களா ? எது எப்படியிருப்பினும் இந்தப்பிரச்சனையில் பொதுமக்களுக்கு எவ்வித இழப்புக்களும் ஏற்படாதிருப்பதென்ற நிலைப்பாட்டில் நாம் உறுதியாகவுள்ளோம் )






இங்கு ஐநா பாதுகாப்புச்சபையில் இலங்கை விவகாரம் ஆராயப்பட்டமை தொடர்பில் இலங்கை அரசாங்கத்தின் நிலைப்பாடு பற்றி ஊடகவியலாளர் ஒருவர் வினவியபோது பதிலளித்த அமைச்சர் அது பற்றி தமக்கு ஒரு பிரச்சனையும் கிடையாது ஒரு பிரச்சனையும் கிடையாது அவர்கள் அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளனர் வழமையாக அவர்கள் அறிக்கை வெளியிடுவதுண்டு தானே எனப்பதிலளித்தார்



Wednesday, May 13, 2009

சர்வதேசம் தலையிடுவதற்கான தருணம் இதுவே

-தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு



இலங்கையின் வன்னிப்பகுதியில் இடம்பெறும் மனிதப்பேரவலத்தை தடுத்துநிறுத்துவதற்கு இனிமேலும் தாமதிக்காமல் சர்வதேச சமூகம் தலையிடவேண்டும் இதுவே இறுதித்தருணம் என தமிழ்த்தேசியக்கூட்டமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது .

கொழும்பு ஜனாகி ஹோட்டலில் இடம்பெற்ற செய்தியாளர் மாநாட்டின் போதே இந்த அவசரக்கோரிக்கை விடுக்கப்பட்டது



இங்கு உரையாற்றிய தமிழ்த்தேசியக்கூட்டமைபின் பாராளுமன்றக்குழுத்தலைவர் இரா சம்பந்தன் தெரிவித்ததாவது
(மக்கள் சாவதற்கு இரண்டு காரணங்கள். ஒன்று அரச படைகளால் நடைபெறுகின்ற தாக்குதல்கள் மற்றது உணவில்லாமல் இருக்கின்ற நிலைமை அதனால் இதுவொரு மிகவும் பாரதூரமான நிலைமை தொடர்ந்தும் இந்த தாக்குதல் நடைபெறுமாக இருந்தால் உயிரிழப்புக்கள் இற்றைவரையிலும் நடந்ததைப்பார்க்க மிகவும் கூடுதலாக இருக்கலாம் அதைநாங்கள் ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது இந்தமக்கள் பாதுகாக்கப்படவேண்டும் இந்த மக்களுடைய உயிரைப்பாதுகாப்பதற்கு அரசாங்கத்திற்கு ஒரு கடமை இருக்கின்றது எல்ரீரீஈக்கு ஒரு கடமை இருக்கின்றது நிச்சயமாக மக்கள் பாதுகாக்கப்பட வேண்டும் )


இங்கு கருத்துவெளியிட்ட பாராளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிரேமசந்திரன் தெரிவித்ததாவது
( இப்படியொரு நாட்டில் இருக்கக்கூடிய மக்கள் அந்த நாட்டின் அரசாங்கத்தாலேயே ஆயிரக்கணக்கில் கொலைசெய்யப்படுவதை நாங்கள் ஒரு இனப்படுகொலையாகவே பார்க்கின்றோம் இட் இஸ் எ ஜெனசைட் இட் இஸ் எ ஜெனசைட் இதுவொரு இனப்படுகொலை இதுவொரு இனப்படுகொலை மூன்று மாசத்திற்குள் பத்தாயிரத்திற்கு மேற்பட்ட மக்கள் கொலைசெய்யப்பட்டு இருபதினாயிரத்திற்கு மேற்பட்ட மக்கள் காயப்பட்டுள்ளனர் ஆகவே அப்படியான ஒருசந்தர்ப்பத்தில் நிச்சயமாக இலங்கை அரசாங்கம் இந்த மக்களைப் பாதுகாக்கத் தவறினால் யாருக்கும் பாதுகாப்பதற்கான உரிமை ரைட்டு புரொடெக்ற் இந்தியாவிற்கும் அந்த உரிமை இருக்கின்றது சர்வதேச சமூகத்திற்கும் அந்த உரிமை இருக்கின்றது இவர்களைப்பாதுகாக்க வேண்டிய கடமை நிச்சயமாக சர்வதேச சமூகத்திற்கு இருக்கின்றது இதுக்கு பிறகு இன்னுமொரு ஐயாயிரம் பத்தாயிரம் மக்கள் செத்ததற்கு பின்பு எங்களோட சேர்ந்து அவர்களும் அழாமல் அப்படியான கொலைகள் நடப்பதற்கு முன்பு அவர்கள் பாதுகாக்கப்பட வேண்டும் என்றே நாங்கள் விரும்புகின்றோம் )





Monday, May 4, 2009

பொதுமக்கள் கௌரவத்துடனும் மனித உரிமைகளுடனும் வாழ்வது உறுதிசெய்யப்படவேண்டும்



- சர்வதேச ஒத்துழைப்பிற்கான கனடிய அமைச்சர் பெவர்லி ஜே ஒடா

(ஆ.அருண்)


பொதுமக்களின் பாதுகாப்பு உறுதிசெய்யப்படுவதுடன் அவர்கள் கௌரவத்துடனும் மனித உரிமைகளுடனும் இலங்கையில் வாழவேண்டும் என்பதே கனடிய அரசாங்கத்தின் எதிர்பார்ப்பாகும் என இலங்கைக்கு விஜயம் செய்துள்ள சர்வதேச ஒத்துழைப்பிற்கான கனடிய அமைச்சர் பெவர்லி ஜே ஓடா தெரிவித்துள்ளார்

பொதுமக்களும் யுத்தத்தால் பாதிக்கப்பட்டவர்களும் பாதுகாப்பான பகுதிகளுக்கு வருவதற்கு வழிவகுக்கும் வகையிலேயே மோதல்களில் ஈடுபட்டுள்ள தரப்பினரிடம் யுத்தநிறுத்தத்திற்கு செல்லுமாறு கோரிக்கை விடுப்பதாக அவர் மேலும் குறிப்பிட்டார்

இலங்கைக்கு ஒருநாள் விஜயத்தை மேற்கொண்டு வருகைதந்த சர்வதேச ஒத்துழைப்பிற்கான கனடிய அமைச்சர் பெவர்லி ஜே ஒடா இலங்கை வெளிவிவகார அமைச்சர் ரோஹித போகொல்லாகமவை வெளிவிவகார அமைச்சில் நேற்று மதியம் சந்தித்து சுமார் ஒருமணிநேரம் பேச்சுவார்த்தைகளை நடத்தினார்

இதன்போது இலங்கைக்கான கனடிய தூதுவர் உட்பட முக்கியஸ்தர்கள் பலரும் பங்கேற்றனர்
இங்கு கருத்துவெளியிட்ட கனடிய அமைச்சர்

(இலங்கையிலுள்ள மக்கள் யாவரும் சமாதானத்துடனும் நல்லுடலாரோக்கியத்துடனும் அவர்களது பிள்ளைகளுக்கான எதிர்காலம் உறுதிசெய்யப்பட்டிருப்பதான காலம் உருவாகும் என கனடியர்கள் நம்பிக்கைகொண்டுள்ளனர் தற்போதைய நிலைமை குறித்து நாம் கவலைகொண்டுள்ளோம் பொதுமக்களும் பாதிப்பிற்குள்ளானவர்களும் பாதுகாப்பினைத்தேடிக்கொள்ள வழிவகுப்பதற்காகவே நாம் இருதரப்பினரிடமும் யுத்தநிறுத்தினைக்கோரிவருகின்றோம் அமைச்சர் கூறிப்பிட்டதுபோன்று எம் இருநாடுகளுக்கும் இடையே நீண்டகால நட்புறவு இருந்துவந்துள்ளதுடன் மக்களும் இணைந்துபணியாற்றிவந்துள்ளனர் நாம் எதிர்காலத்தில் முன்னோக்கிச்செல்வதை உறுதிப்படுத்தவேண்டும் இலங்கையிலுள்ள அனைத்துமக்களிடமிருந்தும் நாம் எப்போதுமே இலங்கை அழகிய நாடு என்பதை கூறக்கேட்டுள்ளோம் இங்கு மக்கனைவரும் கௌரவத்துடனும் மனித உரிமைகளுடனும் வாழ்வதையும் பிள்ளைகளும் எதிர்காலச்சந்தியினரும் நட்புறவைப்பகிர்ந்து அனைவருக்குமே எதிர்காலத்தை உறுதிப்படுத்தியிருப்பதை எதிர்பார்க்கின்றோம் )

கனடாவில் விடுதலைப்புலிகளுக்கு ஆதரவான பிரசாரங்கள் முன்னெடுக்கப்படுவது பற்றி கேள்வி எழுப்பப்பட்டபோது பதிலளித்த கனடிய அமைச்சர் 2006 ஆண்டிலேயே விடுதலைப்புலிகள் இயக்கத்தை கனடிய அரசாங்கம் தடைவிதித்திருந்ததாக குறிப்பிட்ட அவர் கனடாவில் பெரும் எண்ணிக்கையிலான தமிழ்மக்கள் வாழ்வதாகவும் அவர்களில் பெரும்பாலானோர் சிறந்த குடிமக்கள் எனவும் குறிப்பிட்டார் அவர்கள் தாயகத்திலுள் தமது சொந்தங்களுடன் நெருங்கிய தொடர்புகளைப்பேணிவருவதை தாம் அறிந்துவைத்துள்ளதாக தெரிவித்த அவர் எனினும் ஒருசில விரும்பத்தகாத சக்திகள் மேற்கொண்டுவருகின்ற நடவடிக்கைதொடர்பாக அவர்களை இனங்கண்டுகொண்டுள்ளதாகவும் தெரிவித்தார் அத்தகைய தரப்பினரின் செயற்பாடுகளை கனடா சகித்துக்கொள்ளமாட்டாதெனத்தெரிவித்தார்


இலங்கை வெளிவிவகார அமைச்சர் ரோஹித போகொல்லாகம இங்கு கருத்துவெளியிடுகையில்

(இலங்கையில் இன்று பயங்கரவாதத்தை தோற்கடித்து ஜனநாயகத்தை நிலைநாட்டுவதற்காக வடக்கில் முன்னெடுக்கப்படுகின்ற மனிதநேய நடவடிக்கையில் வடக்கிலிருந்து இடம்பெயர்ந்தவர்களை மீண்டும் நிரந்தரமாக குடியேற்றுவதற்கு நாம் அவர்களின் ஒத்துழைப்பை எதிர்பார்த்துள்ளோம் இடம்பெயர்ந்தவர்களில் நூற்றுக்கு 80வீதமானவர்களை இந்த இந்த வருடஇறுதிக்குள்ளாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவின் வழிநடத்தலில் அவர்களை அவர்களது சொந்த நிலங்களில் குடியேற்றுவது தொடர்பாக இந்தப்பேச்சுவார்த்தைகளின் போது ஆராய்ந்தோம் அதேபோன்று தற்காலிகமாக இடம்பெயர்ந்தவர்களது தேவைகளை நிறைவேற்றுவதற்காக அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்படுகின்ற மனிதாபிமான நடவடிக்கை தொடர்பாக இந்தப்பேச்சுவார்த்தைகளின் போது விரிவாக எடுத்துணர்த்தினோம் இதேபோன்று கனடாவில் வாழும் பெருந்தொகையான இலங்கையர்கள் குறிப்பாக தமிழ்மக்கள் தொடர்பாகவும் அவர்களுக்கு இலங்கை அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்படுகின்ற மனித நேயநடவடிக்கை தொடர்பாகவும் எடுத்துரைப்பதற்கான வாய்ப்பானகவும் இந்த அமைச்சரின் விஜயத்தை நான் கருதுகின்றேன் )

இதன்போது ஊடகவியலாளர் ஒருவர் இந்தச்சந்திப்பின் போது யுத்தநிறுத்தம் தொடர்பாக கலந்துரையாடப்பட்டதா என இலங்கை வெளிவிவகார அமைச்சரிடம் வினவியபோது அவர் உறுதியான வகையில் இல்லை அதுதொடர்பாக ஆராயப்படவில்லை எனக்குறிப்பிட்டார்