Monday, May 3, 2010

நியூயோர்க் டைம்ஸ் சதுக்கத்தில் ...........

"சு‌ற்றுலா ப‌ய‌ணிகளா‌ல் அ‌திக பரபர‌ப்புட‌ன் காண‌ப்படு‌ம் அமெ‌ரி‌க்கா‌வி‌ன்
நியூயோர்க் டைம்ஸ் சது‌க்‌க‌த்‌தி‌ல் ‌நிறு‌த்‌தி வை‌க்‌க‌ப்ப‌ட்டிரு‌ந்த கா‌ரி‌ல் இரு‌ந்து செய‌‌லிழ‌ந்த வெடிகு‌ண்டுக‌ளை நே‌ற்று காவ‌ல்துறை‌யின‌ர் க‌ண்டு‌பிடி‌த்தன‌ர்.


நியூயோர்க்  டைம்ஸ் சதுக்கம் அருகே கார் குண்டு கண்டுபிடிக்கப்பட்டதைத் தொடர்ந்து டைம்ஸ் சதுக்கம் மூடப்பட்டு தீவிர சோதனை மேற்கொள்ளப்பட்டது.


டைம்ஸ் சதுக்கம் அருகே நின்றிருந்த ஒருகாரில் தீ விபத்து ஏற்பட்டது.இதையடுத்து விரைந்து வந்த காவல்துறையினர் காரில் ஏற்பட்ட தீயை அணைத்து காரைப் பரிசோதித்தனர். அப்போது பின் சீட்டில் வெடிகுண்டு போன்ற மர்மமான பொருள் சிக்கியது.


இதையடுத்து உடனடியாக அந்தப் பகுதி சீல்வைக்கப்பட்டது. அங்கிருந்தவர்கள் வெளியேற்றப்பட்டனர்.


வெடிகுண்டு நிபுணர்கள்இ எப்பிஐ அதிகாரிகள் விரைந்து வந்து தீவிர சோதனை நடத்தினர். அத்துடன் ரோபோட் ஒன்றை வைத்து காரிலிருந்து மீட்கப்பட்ட பொருளை அதிகாரிகள் ஆராய்ந்தனர். இதில் அது வெடிகுண்டு என தெரிய வந்தது.


இந்த பதற்றம் காரணமாக அங்கு போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது. அப்பகுதியில் பொதுமக்கள் நடந்து செல்லவும் தடை விதிக்கப்பட்டது.


கார் குண்டு மூலம் அங்கு குண்டுவெடிப்பை நிகழ்த்த நடந்த சம்பவம்
நியூயோர்க்கில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது."



நியூயோர்க் டைம்ஸ் சதுக்கத்தில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த காரில் குண்டுகளை பொலிஸார் கைப்பற்றிய நிலையில் அந்த சுற்றுலாப்பயணிகளால் நிரம்பிவழியும் அந்த சதுக்கம் மூடப்பட்டதாக வந்த செய்திகள் என் நினைவுகளை நியூயோர்க் நகரம் நோக்கி இழுத்துச்சென்றது

No comments:

Post a Comment