Friday, January 7, 2011

மங்கிவரும் மகளிர் டென்னிஸ்


உலகிலுள்ள பல்வேறு விளையாட்டுக்களின் ரசிகர்களுக்கும் மகளிர் டென்னிஸ் மீது ஒரு அலாதிப்பிரியம் உண்டு.

இதற்கு ஸ்டெபி கிராப் -கப்ரியேல்லா சபாடினி- கிறிஸ் எவர்ட் - மார்ட்டினா நவரெட்டிலோவா –ஜெனிபர் கப்ரியாட்டி – மொனிகா செலஸ் போன்ற வீராங்கனைகள் மகத்தான டென்னிஸ் ஆற்றலுடன் அழகியலையும் இணைத்து விளையாடியமையே காரணமாக அமைந்தது.

ஆனால் நிகழ்காலப்பகுதியிலோ மகளிர் டென்னிஸ் மீதான ரசிகர்களின் ஆர்வம் படிப்படியாக குறைந்துகொண்டே செல்கின்றது என்பது உணரப்பட்டுள்ள உண்மையாகும் .

தற்போதைய காலத்திலும் அழகுமிக்க வீராங்கனைகள் கவர்ச்சியாக விளையாடுவதை அவதானிக்க முடிந்தாலும் 1980ம் ஆண்டு காலப்பகுதியில் இந்தக்கட்டுரையின் ஆரம்பத்திலேயே நான் குறிப்பிட்ட வீராங்கனைகள் வெளிப்படுத்திய ஆற்றல்களை தற்போதுள்ளவர்கள் வெளிப்படுத்துவதில்லை என்பதை சாதாரண ரசிகர்களால் கூட புரிந்துகொள்ளமுடியும் .1980களிலுள்ள வீராங்கனைகளை ஒப்பிடக்காரணம் அந்த வீராங்கனைகளையே அறிவுபெற்ற காலப்பகுதியில் சிறுவயதில் காணக்கிடைத்தது

அவர்களுக்கு முன்னர் விளையாடிய பெரும் வீராங்கனைகளான பிலி ஜீன் கிங் - மாங்கிரட் கோர்ட் போன்ற வீராங்கனைகளின் ஆற்றல்களை தொலைக்காட்சிகளுடாக கூட காணக்கிடைக்கவில்லை என்பதால் தால் அவர்களை இங்கே ஒப்பிடவில்லை

தற்போது விளையாடிவரும் வில்லியம்ஸ் சகோதரிகள் அவ்வப்போது சம்பியன் பட்டங்களைக் கைப்பற்றுவது உண்மைதான் .அவர்கள் கவர்ச்சியைக் கிளறும் ஆடைகளை அணிந்து ரசிகர்களை கவர முற்படுவதையும் உணர்ந்துகொள்ளமுடிகின்றது .ஆனால் எனது பார்வையின் வில்லியம்ஸ் சகோதரிகள் பட்டங்கள் பலவற்றை கைப்பற்றியிருந்தாலும் அவர்கள் தமது உடற்பலத்தினை வைத்துக்கொண்டு ''Power Tennis" விளையாடுகின்றனரேயன்றி நுட்பத்திறனுடன் விளையாடிய ஸ்டெபி கிராப் போன்றவர்களின் ஆற்றல்வெளிப்பாடுகளை அவர்களிடத்தில் காணமுடியவில்லை

மரியா ஷரபோவா ஜஸ்ரின் ஹெனின் கிம் கிளைஸ்டர்ஸ் போன்ற வீராங்கனைகள் தற்போதும் விளையாடினாலும் அவர்களிடத்தில் ஆற்றலின் உச்சத்தில் தொடர்ச்சியாக நிலைத்து நின்று அடுத்தடுத்து சம்பியன் பட்டங்களை வெல்லும் திறன் காணப்படவில்லை.

 முதற்தர டென்னிஸ் போட்டிகளில் எத்ததைய சம்பியன் பட்டங்களையும் வெற்றிகொள்ளாமலேயே பலகோடிருபாவை சம்பாதித்த ரஷ்ய வீராங்கனை அனா கோர்னிகோவா போலன்றி மரியா ஷரபோவா தனது டென்னிஸ் வாழ்வில் மூன்று கிராண்ட்லாம் பட்டங்கள் உட்பட பல பட்டங்களை வென்றிருந்தாலும் தற்போது அவரது கவனமும் ஃபெஷன் மொடலிங் எனக்குவிந்துள்ளதால் தற்போது டென்னிஸ் ஆற்றல் வெளிப்பாடுகள் குறைந்துவிட்டன

ரொஜர் பெடரர் ரவேல் நடால் போன்ற வீரர்களின் அபரீதமான ஆற்றல்வெளிப்பாடுகளால் பீற் சாம்பிரஸ் அன்ட்றே அகாஸி; போன்ற ஜாம்பவான்களின் வெளியேற்றத்திற்கு பின்னரும் ஆடவர் டென்னிஸ் மீதான ரசிகர்களின் ஆர்வம் அதிகரிக்கின்றபோதும் மகளிர் டென்னிஸ் மீதான ஆர்வம் மங்கிவருவதற்கு டென்னிஸ் ஆட்டத்தில் அன்றி வேறு துறைகளில் அவதானம் சிதறுவதே காரணமாகும்

No comments:

Post a Comment