Wednesday, August 14, 2019

கல்வி நிறுவனங்களை நடத்தும் போர்வையில் பயங்கரவாதிகள் !- இலங்கையை எச்சரிக்கிறார் துருக்கி தூதுவர்

இலங்கையில் உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல்கள் இடம்பெற்று மூன்று மாதங்கள் அண்மையில் நிறைவுபெற்ற நிலையில் பயங்கரவாதத்தின் பாரதூரத்தன்மை தொடர்பாக இலங்கைக்கான துருக்கி தூதுவர் துன்ஜா ஒஸ்சுஹதார் எச்சரிக்கை விடுத்துள்ளார்.




துருக்கி அரசாங்கத்தை 2016ம் ஆண்டில் கலைத்து ஆட்சியைப் பிடிப்பதற்கு இராணுவப் புரட்சியை மேற்கொண்ட .ஃபெட்டோ( FETO) பயங்கரவாத அமைப்பின் முதுகெலும்பு துருக்கியில் நொருக்கப்பட்டுள்ளபோதும் அந்த அமைப்பு இலங்கை உட்பட 160 நாடுகளில் பல கல்வி
 நிறுவனங்கள், வர்த்தகங்கள் மற்றும் ஏனைய நிறுவனங்களை நடத்திநடத்தும் போர்வையில்

 அதன் செயற்பாடுகளை முன்னெடுத்துவருவதாக துருக்கி தூதுவர் சுட்டிக்காட்டினார்.


நியுஸ்லைனுக்கு வழங்கிய விசேட நேர்காணலின் போதே அவர் இந்தக்கருத்துக்களை வெளியிட்டார். 
இலங்கையில் மூன்று வருடங்களுக்கு மேலாக சேவையாற்றிவருகின்ற துருக்கி தூதுவர் அழகான இந்த நாடு எதிர்கொண்டுள்ள பிரச்சனைகள் நெருக்கடிகள் அவசியமற்றவை அனாவசியமானவை என்றும் கூறினார்.
இலங்கையில் முஸ்லிம்களுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்டுவருகின்ற வன்முறைகள் தொடர்பாக மிகவும் கரிசனையை வெளிப்படுத்திய துருக்கி தூதுவர் 57 நாடுகள் அங்கம் வகிக்கும் இஸ்லாமிய நாடுகளின் அமைப்பில் துருக்கி முக்கிய வகிபாகத்தை ஆற்றிவருவதாக குறிப்பிட்டார்.


No comments:

Post a Comment