Thursday, April 30, 2009

யுத்தநிறுத்தத்தினை அமுல்படுத்துமாறு இலங்கை அரசாங்கத்திடம் பிரித்தானியா பிரஞ்சு வெளிவிவகார அமைச்சர்கள் வலியுறுத்தல்


மோதல்கள் இடம்பெறும் வலயத்தில் சிக்குண்டுள்ள ஆயிரக்கணக்கான மக்கள் பாதுகாப்பாக தப்பிப்பதற்கு வழிகோலும் வகையில் மனிதாபிமான யுத்தநிறுத்தமொன்றை அமுல்படுத்துமாறு பிரஞ்சு மற்றும் பிரித்தானிய வெளிவிவகார அமைச்சர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர் .

இலங்கை அரசாங்கத்துடன் உடன்பாட்டிற்கு வரத்தவறிவிட்டதாக பிரித்தானிய மற்றும் பிரஞ்சு வெளிவிவகார சுட்டிக்காட்டியுள்ளனர் .

இங்கு கருத்துவெளியிட்ட பிரிதானிய வெளிவிவகார அமைச்சர் டேவிட் மிலிபாண்ட்

(சர்வதேச சமூகத்திலுள்ள எந்தவொருதரப்பினரும் போர்நிறுத்தம் மோதல் தவிர்பு;பு போன்ற கோரிக்கைகளை பிரபாகரனைக்காப்பாற்றுவதற்காக விடுக்கவில்லை பொதுமக்களின் நலன் தொடர்பாக ஒட்டுமொத்தமான கவலைகள் மற்றும் இலங்கையின் நீண்டகால அமைதி என்பவனவற்றை கருத்தில் கொண்டே சர்வதேச சமூகம் இந்தக்கோரிக்கைகளை விடுக்கின்றது பொதுமக்களைப்பாதுகாப்பது இந்தத்தருணத்தில் மிகவும் முக்கியமானது பொதுமக்கள் மோதல் பிரதேசத்தை விட்டு வெளியேறாவண்ணம் தடுப்பதை விடுதலைப்புலிகள் நிறுத்திக்கொள்ளவேண்டும்; மோதல்கள் கட்டாயம் நிறுத்தப்படவேண்டும ஜி8நாடுகளின் வெளிவிவகார அமைச்சர்கள் ஏகமனதாக கூறியபடி மோதல்கள் கட்டாயம் நிறுத்தப்படவேண்டிய நேரம் இதுவாகும் இந்த விஜயத்தின் போது தாம் மூன்று முக்கிய விடயங்கள் தொடர்பாக கவனம் செலுத்தியுள்ளோம் ஐநாவிற்கு செவிமடுப்பது அரச சார்பற்ற நிறுவனங்களுக்கு செவிமடுப்பது செஞ்சிலுவை சர்வதேச குழுவிற்கு செவிமடுப்பது எதிர்க்கட்சிகளுக்கு செவிமடுப்பது அரசாங்கத்திற்கு செவிமடுப்பது என்பன இதில் ஒருவிடயம் இரண்டாவது விடயம் யாதென்றால் மோதல்கள் இடம்பெறும்பகுதியிலுள்ள மற்றும் இடம்பெயர்ந்த முகாம்களிலும் இடம்பெயர்ந்த முகாம்களை நோக்கிவந்துகொண்டிருக்கும் பொதுமக்களது நிலைதொடர்பாக சர்வதேச சமூகத்தின் கவலைகளைப்பகிர்ந்துகொள்வது அடுத்ததாக எவ்வாறு இலங்கையுடன் இணைந்து சர்வதேச சமூகம் இணைந்து பணியாற்ற முடியும் என ஆராய்வது ஏனெனில் சர்வதேச சமூகத்திற்கு சில கடப்பாடுகளுள்ளன இலங்கைக்கும்ம கடப்பாடுகள் உள்ளன அந்தவகையில் இருவரும் இணைந்து பணியாற்றுவது எவ்வாறு என்பது அடுத்த விடயம். கடந்த ஆறுமாத காலப்பகுதியில் இராணுவத்தினர் அடைந்த முன்னேற்றங்கள் கவனத்தை ஈர்ப்பதாக அமைந்துள்ளன ஆனால் யுத்தத்தை வெல்வதை விடவும் சமாதானத்தை வென்றெடுப்பது மிகவும் முக்கியமானதாகும் )



பிரஞ்சு வெளிவிவகார அமைச்சர் பேர்னாட் குச்னர் மேலும் கருத்துவெளியிடுகையில்


(நாம் பொதுமக்களின் நிலைமை தொடர்பாக ஆழ்ந்த கவலைகொண்டுள்ளோம் ஏன்நாம் மிகவும் கவலைகொண்டுள்ளோமென்றால் கடந்த 25வருடகாலங்களுக்கு மேலாக நீடித்த இந்த கடினமான யுத்தத்தின் முடிவில் மனிதர்களே எமக்கு மிகவும் முக்கியமானவர்கள் முற்றுகைக்குள்ளாக்கப்பட்டுள்ள இந்த மக்களின் பாதுகாப்பானது மிகவும் இன்றியமையானது வலயப்பகுதியில் இருந்து வெளியேறிவரமுடிந்த 200 ஆயிரம் மக்கள் எனக்கு இந்த புள்ளிவிபரங்கள் குறித்து சரியாக தெரியாது ஆனால் இவர்களது நிலைதொடர்பாக பல கேள்விகள் எழுகின்றன இவர்களை முகாம்களுக்குள் வரவேற்கப்டுவதுடன் பின்னர் மீளக்குடியமர்த்தப்படவேண்டும் ஆனால் தொடர்ந்தும் அங்கு இருக்கும் மக்களின் எண்ணிக்கை 20ஆயிரமாக இருக்குமோ அன்றேல் சில அரசசார்பற்ற நிறுவனங்கள் கூறுவது போன்று 50ஆயிரமாக இருக்குமோ என எனக்குத்தெரியாது நாம் இவர்களின் கதிதொடர்பாக அதிக கரிசனைகொண்டுள்ளோம் இதுதொடர்பாக பிரான்ஸ்மட்டுமன்றி பிரித்தானியாவும் கோரிக்கை விடுத்துள்ளது மக்களுக்கு எவ்வித கட்டுப்பாடுகளுமின்றி மனிதாபிமான உதவிகள் கிட்டுவதற்கு அனுமதிக்குமாறு நாம் கோருகின்றோம் ஐக்கிய நாடுகள் தரப்பினருக்கும் செஞ்சிலுவை சர்வதேசக்குழுவிற்கும் அரசசார்பற்ற நிறுவனங்களுக்கும் மனிதாபிமான நிறுவனங்களுக்கும் பாதுகாப்பு வலயப்பகுதிக்குள்சென்று மனிதாபிமான உதவிகளை வழங்க வழிவிடுமாறு கோருகின்றோம் இதுமிகவும் முக்கியமானது எமது மக்களுக்கு பிரஞ்சு மற்றும் பிரித்தானிய மக்கள் மட்டுமன்றி உலகிலுள்ள மனிதாபிமானிகள் யாவரும் உதவுவதற்கு அனுமதிப்பது மிகவும் அவசியமானதாகும் )







No comments:

Post a Comment