Monday, May 4, 2009

பொதுமக்கள் கௌரவத்துடனும் மனித உரிமைகளுடனும் வாழ்வது உறுதிசெய்யப்படவேண்டும்



- சர்வதேச ஒத்துழைப்பிற்கான கனடிய அமைச்சர் பெவர்லி ஜே ஒடா

(ஆ.அருண்)


பொதுமக்களின் பாதுகாப்பு உறுதிசெய்யப்படுவதுடன் அவர்கள் கௌரவத்துடனும் மனித உரிமைகளுடனும் இலங்கையில் வாழவேண்டும் என்பதே கனடிய அரசாங்கத்தின் எதிர்பார்ப்பாகும் என இலங்கைக்கு விஜயம் செய்துள்ள சர்வதேச ஒத்துழைப்பிற்கான கனடிய அமைச்சர் பெவர்லி ஜே ஓடா தெரிவித்துள்ளார்

பொதுமக்களும் யுத்தத்தால் பாதிக்கப்பட்டவர்களும் பாதுகாப்பான பகுதிகளுக்கு வருவதற்கு வழிவகுக்கும் வகையிலேயே மோதல்களில் ஈடுபட்டுள்ள தரப்பினரிடம் யுத்தநிறுத்தத்திற்கு செல்லுமாறு கோரிக்கை விடுப்பதாக அவர் மேலும் குறிப்பிட்டார்

இலங்கைக்கு ஒருநாள் விஜயத்தை மேற்கொண்டு வருகைதந்த சர்வதேச ஒத்துழைப்பிற்கான கனடிய அமைச்சர் பெவர்லி ஜே ஒடா இலங்கை வெளிவிவகார அமைச்சர் ரோஹித போகொல்லாகமவை வெளிவிவகார அமைச்சில் நேற்று மதியம் சந்தித்து சுமார் ஒருமணிநேரம் பேச்சுவார்த்தைகளை நடத்தினார்

இதன்போது இலங்கைக்கான கனடிய தூதுவர் உட்பட முக்கியஸ்தர்கள் பலரும் பங்கேற்றனர்
இங்கு கருத்துவெளியிட்ட கனடிய அமைச்சர்

(இலங்கையிலுள்ள மக்கள் யாவரும் சமாதானத்துடனும் நல்லுடலாரோக்கியத்துடனும் அவர்களது பிள்ளைகளுக்கான எதிர்காலம் உறுதிசெய்யப்பட்டிருப்பதான காலம் உருவாகும் என கனடியர்கள் நம்பிக்கைகொண்டுள்ளனர் தற்போதைய நிலைமை குறித்து நாம் கவலைகொண்டுள்ளோம் பொதுமக்களும் பாதிப்பிற்குள்ளானவர்களும் பாதுகாப்பினைத்தேடிக்கொள்ள வழிவகுப்பதற்காகவே நாம் இருதரப்பினரிடமும் யுத்தநிறுத்தினைக்கோரிவருகின்றோம் அமைச்சர் கூறிப்பிட்டதுபோன்று எம் இருநாடுகளுக்கும் இடையே நீண்டகால நட்புறவு இருந்துவந்துள்ளதுடன் மக்களும் இணைந்துபணியாற்றிவந்துள்ளனர் நாம் எதிர்காலத்தில் முன்னோக்கிச்செல்வதை உறுதிப்படுத்தவேண்டும் இலங்கையிலுள்ள அனைத்துமக்களிடமிருந்தும் நாம் எப்போதுமே இலங்கை அழகிய நாடு என்பதை கூறக்கேட்டுள்ளோம் இங்கு மக்கனைவரும் கௌரவத்துடனும் மனித உரிமைகளுடனும் வாழ்வதையும் பிள்ளைகளும் எதிர்காலச்சந்தியினரும் நட்புறவைப்பகிர்ந்து அனைவருக்குமே எதிர்காலத்தை உறுதிப்படுத்தியிருப்பதை எதிர்பார்க்கின்றோம் )

கனடாவில் விடுதலைப்புலிகளுக்கு ஆதரவான பிரசாரங்கள் முன்னெடுக்கப்படுவது பற்றி கேள்வி எழுப்பப்பட்டபோது பதிலளித்த கனடிய அமைச்சர் 2006 ஆண்டிலேயே விடுதலைப்புலிகள் இயக்கத்தை கனடிய அரசாங்கம் தடைவிதித்திருந்ததாக குறிப்பிட்ட அவர் கனடாவில் பெரும் எண்ணிக்கையிலான தமிழ்மக்கள் வாழ்வதாகவும் அவர்களில் பெரும்பாலானோர் சிறந்த குடிமக்கள் எனவும் குறிப்பிட்டார் அவர்கள் தாயகத்திலுள் தமது சொந்தங்களுடன் நெருங்கிய தொடர்புகளைப்பேணிவருவதை தாம் அறிந்துவைத்துள்ளதாக தெரிவித்த அவர் எனினும் ஒருசில விரும்பத்தகாத சக்திகள் மேற்கொண்டுவருகின்ற நடவடிக்கைதொடர்பாக அவர்களை இனங்கண்டுகொண்டுள்ளதாகவும் தெரிவித்தார் அத்தகைய தரப்பினரின் செயற்பாடுகளை கனடா சகித்துக்கொள்ளமாட்டாதெனத்தெரிவித்தார்


இலங்கை வெளிவிவகார அமைச்சர் ரோஹித போகொல்லாகம இங்கு கருத்துவெளியிடுகையில்

(இலங்கையில் இன்று பயங்கரவாதத்தை தோற்கடித்து ஜனநாயகத்தை நிலைநாட்டுவதற்காக வடக்கில் முன்னெடுக்கப்படுகின்ற மனிதநேய நடவடிக்கையில் வடக்கிலிருந்து இடம்பெயர்ந்தவர்களை மீண்டும் நிரந்தரமாக குடியேற்றுவதற்கு நாம் அவர்களின் ஒத்துழைப்பை எதிர்பார்த்துள்ளோம் இடம்பெயர்ந்தவர்களில் நூற்றுக்கு 80வீதமானவர்களை இந்த இந்த வருடஇறுதிக்குள்ளாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவின் வழிநடத்தலில் அவர்களை அவர்களது சொந்த நிலங்களில் குடியேற்றுவது தொடர்பாக இந்தப்பேச்சுவார்த்தைகளின் போது ஆராய்ந்தோம் அதேபோன்று தற்காலிகமாக இடம்பெயர்ந்தவர்களது தேவைகளை நிறைவேற்றுவதற்காக அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்படுகின்ற மனிதாபிமான நடவடிக்கை தொடர்பாக இந்தப்பேச்சுவார்த்தைகளின் போது விரிவாக எடுத்துணர்த்தினோம் இதேபோன்று கனடாவில் வாழும் பெருந்தொகையான இலங்கையர்கள் குறிப்பாக தமிழ்மக்கள் தொடர்பாகவும் அவர்களுக்கு இலங்கை அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்படுகின்ற மனித நேயநடவடிக்கை தொடர்பாகவும் எடுத்துரைப்பதற்கான வாய்ப்பானகவும் இந்த அமைச்சரின் விஜயத்தை நான் கருதுகின்றேன் )

இதன்போது ஊடகவியலாளர் ஒருவர் இந்தச்சந்திப்பின் போது யுத்தநிறுத்தம் தொடர்பாக கலந்துரையாடப்பட்டதா என இலங்கை வெளிவிவகார அமைச்சரிடம் வினவியபோது அவர் உறுதியான வகையில் இல்லை அதுதொடர்பாக ஆராயப்படவில்லை எனக்குறிப்பிட்டார்

No comments:

Post a Comment