Wednesday, October 6, 2010

ஆண்டின் மிகச்சிறந்த கிரிக்கட் வீரராக சச்சின் டெண்டுல்கர் கௌரவம்

சர்வதேச கிரிக்கட் பேரவையின்(ஐ.சி.சி)  ஆண்டின் மிகச்சிறந்த கிரிக்கட் வீரருக்கான சேர் காபீல்ட் சோபர்ஸ் விருதை இந்திய நட்சத்திர கிரிக்கட் வீரர் சச்சின் டெண்டுல்கர் வென்றெடுத்துள்ளார்


இந்தியாவின் பெங்களுரில் இன்று மாலை இடம்பெற்ற 2010ம் ஆண்டிற்கான ஐசிசி விருதுவழங்கும் விழாவிலேயே சச்சினுக்கு இந்த உயர் விருது கிடைத்துள்ளது

சாதனைகளால் நிறைந்த சச்சின் டெண்டுல்கரின் கிரிக்கட் வாழ்;வில் இந்த விருது கிடைத்திருப்பது இதுவே முதல் முறையாகும்.

விருதுகளுக்காக கருத்தில் கொள்ளப்பட்ட கடந்தாண்டு ஓகஸ்ற் 24ம்திகதிமுதல் இவ்வாண்டு ஓகஸ்ற் 10ம்திகதிவரையிலான காலப்பகுதியில் வீரர்களும் அணிகளும் வெளிப்படுத்திய ஆற்றல் வெளிப்பாடுகளைக்கவனத்தில் கொண்டே விருதுகள் ஐசிசியால்  வழங்கப்பட்டது

இந்தக்காலப்பகுதியில் சச்சின் டெண்டுல்கர் 10டெஸ்ற் போட்டிகளில் விளையாடி 1064 ஓட்டங்களைக் குவித்திருந்த அதேவேளை 17 ஓருநாள் சர்வதேச போட்டிகளில் விளையாடி 914 ஒட்டங்களையும் குவித்திருந்தார் .இதில் சர்வதேச ஒருநாள் கிரிக்கட் வரலாற்றில் பெறப்பட்ட முதலாவது இரட்டைச்சதமும் அடங்கும் என்பது குறிப்பிடத்த்ககது



ஆண்டின் மிகச்சிறந்த கிரிக்கட் வீரருக்கான சேர் காபீல்ட் சோபர்ஸ் விருது ஆண்டின் சிறந்த டெஸ்ற் கிரிக்கட் வீரருக்கான விருது ஆண்டின் சிறந்த சர்வதேச ஒரு நாள் கிரிக்கட் வீரருக்கான விருது என மூன்று முக்கிய பிரிவுகளிலும் டெண்டுல்கர் பெயர் பரிந்துரைசெய்யப்பட்டிருந்தது

இதில் மிக உயர்விருதான ஆண்டின் சிறந்த கிரிக்கட் வீரருக்கான சேர் காபீல்ட் சோபர்ஸ் விருது சச்சின் டெண்டுல்கருக்கு கிடைத்த அதேவேளை சிறந்த டெஸ்ற் வீரருக்கான விருது இந்திய அணியின் ஆரம்பத்துடுப்பாட்டவீரர் வீரேந்தர் ஷேவாக்கிற்கும் ஆண்டின் சிறந்த ஓருநாள் சர்வதேச கிரிக்கட் வீரருக்கான விருது தென் ஆபிரிக்க மத்திய வரிசைத்துடுப்பாட்டவீரர் ஏபிடி விலியர்ஸிற்கும் வழங்கப்பட்டது

மக்களின் அபிமானம் பெற்ற (People's Choice Award)வீரருக்கான விருதும் சச்சின் டெண்டுல்கருக்கு வழங்கப்பட்டது இந்த விருதிற்காக மக்கள் இணையம் மூலமாக தமது வாக்கை பதிவுசெய்து விருப்பத்திற்குரிய வீரரை விருதிற்காக தெரிவுசெய்திருந்தனர்

வீரர்களும் அவர்கள் பெற்ற விருதுகளின் விபரங்களும் பின்வருமாறு

ஆண்டின் சிறந்த கிரிக்கட் வீரருக்கான சேர் காபில்ட் சோபர்ஸ் விருது
  -சச்சின் டெண்டுல்கர் (இந்தியா)

ஆண்டின் சிறந்த டெஸ்ற் வீரர் விருது
வீரேந்தர் ஷேவாக் (இந்தியா)

ஆண்டின் சிறந்த ஒருநாள் சர்வதேச கிரிக்கட் வீரர்
ஏபிரஹாம் டி விலியர்ஸ் (தென் ஆபிரிக்கா )


வளர்ந்துவரும் இளம் வீரருக்கான விருது (26வயதிற்குட்பட்ட வீரர்களுக்கு வழங்கப்படுவது )


ஸ்டீவன் பின் -STEVEN FINN( இங்கிலாந்து )



ஐசிசியின் இணை உறுப்பு நாடுகளில் சிறந்த வீரர்களுக்கான விருது ( டெஸ்ற் கிரிக்கட் விளையாடும் நாடுகளைத்தவிர்த்து ஐசிசியின் உறுப்புரிமை பெற்ற நாடுகளைச் சேர்ந்தவர்களுக்குரியது )

ரெயான் டென் டுயஸ்சாட்டே ( நெதர்லாந்து )

ஆண்டின் மிகச்சிறந்த டுவன்டி டுவன்டி சர்வதேச கிரிக்கட் ஆற்றல் வெளிப்பாடு

பிரன்டன் மக்கலம் (நியூஸிலாந்து )
அவுஸ்திரேலிய அணிக்கெதிராக ஆட்டமிழக்காது பெற்ற 116 ஓட்டங்கள்

ஆண்டின் மிகச்சிறந்த மகளிர் கிரிக்கட் வீராங்கனை


ஷெலி நிற்ஸ்செக் (அவுஸ்திரேலியா)

ஆண்டின் மிகச்சிறந்த நடுவர்
அலிம் டர் (பாகிஸ்தான் )

ஆண்டின் சிறந்த ஆர்வமிகு அணிக்கான (SPIRIT OF CRICKET) விருது

நியூஸிலாந்து


ஆண்டின் டெஸ்ற் கிரிக்கட் அணி


வீரேந்தர் ஷேவாக் - சைமன் கடிச் - ஹஸீம் அம்லா -சச்சின் டெண்டுல்கர்-  ஜக் கலீஸ் - குமார் சங்ககார -மஹேந்திரசிங் டோனி ( அணித்தலைவர் )  டேல் ஸ்டெய்ன் - கிரஹாம் ஸ்வான் -ஜேம்ஸ் அன்டர்ஸன் -டக் பொலிங்ஜர்




ஆண்டின் சிறந்த ஒருநாள் சர்வதேச அணி


சச்சின் டெண்டுல்கர் -ஷேன் வொட்ஸன் -ரிக்கி பொன்டிங் (அணித்தலைவர்)-மைக்கல் ஹஸி –ஏபி டி விலியர்ஸ் -போல் கொலிங்வுட் - மஹேந்திரசிங் டோனி –டானியல் வெட்டோரி -ஸ்டுவர்ட் புரோட் -டக் பொலிங்ஜர் -ரெயான் ஹரிஸ்


-----------------------------------------------------------------------------------------------------

சச்சினுக்கு விருதளித்து பெருமை சூடிக்கொள்ளுமா
ஐசிசி விருது வழங்கும் விழா

(இன்று -0610.2010வெளியான கேசரி SPORTS சஞ்சிகையில் வெளியான எனது ஆக்கம்)

சச்சின் பெறுவாரா உயர் விருதுகளை ?

இன்றையதினம் இந்தியாவின் பெங்களுரில் இடம்பெறுகின்ற சர்வதேச கிரிக்கட் பேரவையின் விருது வழங்கும் விழாவில் ஆண்டின் சிறந்த கிரிக்கட் வீரர் உட்பட மூன்று விருதுகளுக்கு சச்சின் டெண்டுல்கரின் பெயர் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது .

சச்சின் டெண்டுல்கர் இந்தப் பெயரை கடந்த இருபது வருடகாலத்தில் கிரிக்கட் ரசிகர்கள் உச்சரிக்காத அன்றேல் நினைவில் கொள்ளாத நாட்கள் குறைவாகத்தான் இருக்கும்.

1989ம் ஆண்டில் சர்வதேச கிரிக்கட்டிற்குள் பிரவேசித்த சச்சின் டெண்டுல்கர் 2010லும் ரசிகர்கள் மனங்களில் நிலைத்திருப்பதற்கு அவரது தொடர்ச்சியான ஆற்றல் வெளிப்பாடுகளே காரணமாகும்.

கடந்த காலப்பெருமைகளில் காலத்தை கடத்திவிடாது நிகழ்காலத்திலும் சாதித்துக்கொண்டிருப்பதே சச்சினை ஜாம்பவான் ஸ்தானத்தில் உயர்த்திவிட்டிருக்கின்றது.

கிரிக்கட் களத்தில் இளம் வீரர்களின் பிரவேசத்திற்கு மத்தியிலும் ஊழல் மோசடி சூதாட்டம் போன்ற மன உளைச்சல் தருகின்ற செய்திகளுக்கு மத்தியிலும் கிரிக்கட் அரங்கில் வெளிப்படுத்துகின்ற ஆற்றல் வெளிப்பாடுகளுக்காக 37வயதுகள் கடந்துவிட்டநிலையிலும் சச்சின் டெண்டுல்கர் நினைவுகூரப்படுவது அங்கீரிக்கப்பட்டு கௌரவிக்கப்படுவது ஏனைய வீரர்களுக்கும் எடுத்துக்காட்டாக அமைந்திருக்கின்றது

சச்சினது வாழ்வில் எத்தனையெத்தனையோ அங்கீகாரங்களையும் வாழ்;த்துக்களையும் பட்டங்களையும் விருதுகளையும் பெற்றிருக்கின்ற போதிலும் சர்வதேச கிரிக்கட் பேரவையின்( ஐசிசி) சிறந்த வீரருக்கான தனிநபர் விருது இதுவரையில் கிடைத்திருக்கவில்லை

டெண்டுல்கருக்கு அந்தவிருது இதுவரையில் கிடைக்கவில்லை என்பதற்காக அவரது கிரிக்கட் துறை மேதாவிலாசத்தை ஜாம்பவான் ஸ்தானத்தை எவருமே குறைத்து மதிப்பீடுசெய்ய முடியாது ஏனெனில் டெண்டுல்கரின் சாதனைகள் ஆற்றல் வெளிப்பாடுகள் வெறுமனே விருதுகளுக்கு அப்பாற்பட்டவையாக மிக உயர்ந்த நிலையில் காணப்படுகின்றது

ஐசிசி விருது சச்சினுக்கு கிடைத்தால் அது சச்சினுக்கு கிடைக்கின்ற பெருமை என்பதைவிடவும் அந்த விருதிற்கு கிடைக்கின்ற பெருமை என்றே கூறிக்கொள்ளவேண்டும் ஏனென்றால் சர்வதேச கிரிக்கட்டில் இமயத்தை தொடுகின்ற அவரது சாதனைளும் இதயத்தை தொடுகின்ற நடத்தையுமே இதற்கு காரணமாகும்

விருதுகள் என்பது மனித வாழ்வில் கிடைக்கின்ற அங்கீகாரங்கள் உண்மையான திறமைசாலிகளுக்கு வாழ்வில் விருதுகளே கிடைக்காமல் போனதும் போலிகள் புகழாரம் சூடிக்கொண்டதும் வரலாற்றில் உள்ளன..ஆனால் அனேகமான தடவைகளில் உண்மையான திறமைசாலிகளுக்கான அங்கீகாரம் ஏதோ ஒருவகையில் கிடைத்திருப்பதனையே கடந்தகாலம் கோடிட்டுக்காண்பிக்கின்றது .

அந்தவகையில் ஐசிசி விருதிற்காக மூன்று பிரிவுகளில் சச்சின் டெண்டுல்கரின் பெயர் பரிந்துரைக்கப்பட்டிருப்பது இன்றையதினம் நடைபெறவுள்ள விருதுவழங்கும் விழாவில் அவருக்கான வெற்றிவாய்ப்புக்களை பிரகாசப்படுத்திவிட்டுள்ளது

விருதுகளுக்காக கருத்தில் கொள்ளப்படுகின்ற கடந்தாண்டு ஓகஸ்ற் 24ம்திகதிமுதல் இவ்வாண்டு ஓகஸ்ற் 10;ம்திகதிவரையிலான காலப்பகுதியில்; வீரர்களும் அணிகளும் வெளிப்படுத்திய ஆற்றல் வெளிப்பாடுகளைக்கவனத்தில் கொண்டே விருதுகள் வழங்கப்படுகின்றன
இந்தக்காலப்பகுதியில் சச்சின் டெண்டுல்கர் 10டெஸ்ற் போட்டிகளில் விளையாடி 1064 ஓட்டங்களைக் குவித்திருந்த அதேவேளை 17 ஓருநாள் சர்வதேச போட்டிகளில் விளையாடி 914 ஒட்டங்களையும் குவித்திருந்தார் .இதில் சர்வதேச ஒருநாள் கிரிக்கட் வரலாற்றில் பெறப்பட்ட முதலாவது இரட்டைச்சதமும் அடங்கும் என்பது குறிப்பிடத்த்ககது

ஆண்டின் மிகச்சிறந்த கிரிக்கட் வீரருக்கான சேர் காபீல்ட் சோபர்ஸ் விருது ஆண்டின் சிறந்த டெஸ்ற் கிரிக்கட் வீரருக்கான விருது ஆண்டின் சிறந்த சர்வதேச ஒரு நாள் கிரிக்கட் வீரருக்கான விருது என மூன்று முக்கிய பிரிவுகளிலும் டெண்டுல்கர் பெயர் விருதிற்காக பரிந்துரைசெய்யப்பட்டுள்ளது


ஐசிசி விருதுவழங்கும் விழா வரலாறு

வருடந்தோறும் ஆண்டின் சிறந்த வீரர்கள் என விஸ்டன் விருதுகள் அறிவிக்கப்பட்டபோதிலும் அவை இங்கிலாந்து கிரிக்கட்டை மையமாக கொண்டவையாக காணப்பட்ட காரணத்தினால் ஐசிசி விருதுகள் வழங்கப்படும் வரையில் கிரிக்கட் வீரர்களது ஆற்றல் வெளிப்பாடுகளுக்கு அங்கீகாரமாக சியட் விருது வழங்கும் விழாவே பெரிதும் அறியப்பட்டிருந்தது

சிறப்பான முறையில் திறமைகளை வெளிப்படுத்துகின்ற வீரர்களையும் அணிகளையும் கௌரவிக்கின்ற வகையில் 2004ம் ஆண்டுமுதலாக சர்வதேச கிரிக்கட் பேரவை விருதுகளை வழங்கிவருகின்றது . முன்னைய வருடத்தின் ஒகஸ்ற் மாதம் முதல் நடப்பாண்டின் ஓகஸ்ற் மாதம் வரையிலான 12மாதகாலபகுதியை கணக்கில் கொண்டே இவ்விருதுகள் வழங்கப்படுகின்றன.





No comments:

Post a Comment