Friday, August 14, 2009

70வயதிலும் கல்வி :வாங்க படிக்கலாம் !!!!!!!!!!


எம்மவர்களில் பலருக்கோ நாற்பது வயதுகளிலேயே வாழ்க்கை முடிந்துவிடுகின்றது அதற்கு மேல் வாழ்க்கையில் எதுவித பிடிப்புமே இல்லாமல் ஏதோ பிறந்தோம் என இறக்கும்வரைக்கும் வாழ்ந்து தொலைப்போம் என்பதே அவர்களது நினைப்பாக இருக்கின்றது அதிலும் கல்வியை எடுத்துக்கொண்டால் சாதாரணதரப்பரீட்சை அன்றேல் உயர்தரப்பரீட்சை முடிந்தவுடனேயே அனைத்திற்கும் மூட்டைகட்டி விட்டு அறிவுத்தேடலை முடிவுக்கு கொண்டுவந்துவிடுகின்றனர் அனேகர்.இன்னும் பலருக்கு திருமணத்துடன் அவர்களது இலட்சியப்பயணமும் முடிந்துவிடுகின்றது இப்படியான நிலையில் 70வயதிலும் அளவில்லா ஆர்வத்துடன் கல்வி பயிலும் என் சக “மாணவி” திருமதி திருப்பதியின் கதை எடுத்துக்காட்டாகவும் ஆச்சரியமாகவும் விளங்கும் என்பதில் ஐயமில்லை !!!


மூன்றுவாரங்களுக்கு முன்னர் தான் தனது 70வயதைப்ப+ர்த்திசெய்த திருமதி திருப்பதி நாவலயில் அமைந்துள்ள திறந்த பல்கலைக்கழகத்தில் சமூக விஞ்ஞான இளமானி பட்டப்படிப்பினை மேற்கொள்வது மட்டுமன்றி இறுதியாண்டு மாணவியாகவும் திகழ்கின்றார் என்றால் சிலர் நக்கலாக சிரிக்க முனையக் கூடும் ஆனால் இது உண்மையில் எம்மை சிந்திக்கத்தூண்டவேண்டும் .


கல்வி அறிவுத்தேடல் சாதாரணதரத்துடனோ அன்றேல் உயர்தரப்பரீட்சையுடனோ முடிந்துவிடும் ஒருவிடயமல்ல அன்றேல் திருமணத்துடன் முற்றுப்பெறும் விடயமல்ல அதற்கு மேலும் வாழ்க்கை இருக்கின்றது என்பதற்கு இது நல்ல உதாரணமல்லவா ?

திருமதி திருப்பதி பெரும்பான்மை சமூகத்தை சேர்ந்த ஒரு பெண்மணி ஆனால் தமிழரொருவரை திருமணமுடித்ததாலேயே இந்தப்பெயருக்கு சொந்தக்காரர் .
ஆரம்பத்தில் இலங்கை வங்கியில் பணிபுரிந்தபோது அவர் காதலித்து திருமணம்செய்ததாக உரையாடலில் அறிந்துகொண்டேன் பின்னர் 1963ம் ஆண்டில் ஓரே குழந்தையை பெற்றெடுத்ததும் வேலைக்கு ஓய்வுகொடுத்த அவர் தனது பிள்ளை வளர்த்தெடுப்பதற்காக வேலைக்கு சுமார் 10வருடங்கள் வேலைக்கு போகவில்லை பின்னர் பிள்ளை ஓரளவு வளர்ந்தபின்னர் பணியில் இணைந்துகொண்ட அவர் அமைச்சர் காமினி திஸாநாயக்கவுடனும் பணியாற்றியதாக கூறினார் இதன்பின்னர் அரசசார்பற்ற நிறுவனங்களிலும் அவர் பணியாற்றி ஓய்வுபெற்றநிலையில் கணவரும் இறந்துவிட தனது மகளுடன் வாழ்;க்கை பயணம் தொடர்ந்தது ஆனால் மகள் திருமணம் முடிக்கவே தனித்துவாழவேண்டிய சூழல் ஏதோ வாழ்ந்துவிட்டுப்போவோம் என்றில்லாமல் சாதித்துக்காட்டவேண்டும் என்ற அவா இந்நிலையில் தான் குடும்ப நண்பர் ஒருவர் திறந்த பல்கலைக்கழக பட்டப்படிப்பை பற்றி கூறியிருக்கின்றார் தன்னிடம் உயர்தர பரீட்டை தகுதி இல்லை என்பதால் முதலில் யோசித்த போதும் பின்னர் தனது அனுபவம் மற்றும் முன்னமே செய்திருந்த டிப்ளோமா தகுதி என்பவற்றுடன் பட்டப்படிப்பை தொடர அனுமதி பெற்றிருக்கின்றார் திருமதி திருப்பதி

2006ம் ஆண்டில் திறந்த பல்கலைக்கழக பட்டநெறியில் தனது மகளுடன் திருமதி திருப்பதி இணைந்துகொண்ட மகளோ இந்தப்பாடநெறி சலிப்பாக இருப்பதாக கூறி சில நாட்களிலேயே நின்று விட்டபோதும் திருமதி திருப்பதி பாடத்தை தொடர்ந்தார் வகுப்புக்களில் அவர் இளைஞர் யுவதிகளுக்கு சரிக்கு சமனாக இல்லை இல்லை அதினிலும் ஆர்வமாக பங்கேற்பதும் கேள்விகளைத்தொடுப்பதும் ஏனையோருக்கு ஊந்துசக்தி பல மேற்கத்தேய நாடுகளில் முதியோர்கல்வி பற்றியெல்லாம் கேள்விப்பட்;டிருக்கின்றோம் ஆனால் அது எமதுநாட்டிலும் இருக்கவே செய்கின்றது ஆனால் அதில் உச்சப்பயனைப்பெறுவோர் தாம் மிகவும் சொற்பமாக உள்ளனர் உலகில் இதுகால வரையில் தோன்றிய விஞ்ஞானிகளிலேயே மிகச்சிறந்தவராக போற்றப்படும் அல்பேர்ட் ஐன்ஸ்ர்Pன் கூறிய ஒரு கூற்றை நான் அடிக்கடி அசைபோடுவதுண்டு அதுதான் “ Education is the progressive realisation of our ignorance" தமிழில் அந்தக்கூற்றை மொழிபெயர்ப்பதானால் எமது அறிவீனத்தை உணர்ந்துகொண்டு முற்போக்காக முன்னேறிச்செல்லுகின்ற முயற்சியே கல்வி என எடுத்துக்கொள்ளலாம் ஆகவே நண்பர்களே எமது வாழ்க்கையின் தேடல்கள் ஒருகுறித்த வயதுடனோ அன்றேல் பரீட்சையுடனோ இல்லை திருமணத்துடனோ நின்றுவிடக்கூடாது அது சாகும்வரைக்குமே தொடரவேண்டும் அதற்கு கல்வியறிவு இன்றியமையாதாது

பாராம்பரிய கல்வி நிறுவனங்களான பாடசாலைகள் பல்கலைக்கழகங்கள் இவற்றில் மட்டுமே கல்வி கிடைக்கும் என்று எண்ணுவோம் ஆனால் அது தவறானது மாறாக இலங்கை திறந்தபல்கலைக்கழகம் தொழில் நுட்ப கல்லூரிகள் போன்றவற்றிலும் கல்விநடவடிக்கையை மேற்கொள்ளமுடியும் இந்த நிறுவனங்களில் கல்வி கற்பதற்கு வயது ஒரு வரம்புகிடையாது என்பது மட்டுமன்றி சாதாரணதரப்பரீட்சை தகுதியோ உயர்தரப்பரீட்சைத்தகுதியோ தேவையில்லை என்பது தான் விசேட அம்சம்
ஆகவே வீதியில் கூடி அரட்டை அடிப்படைவிட்டுவிட்டு தொலைக்காட்சி தொடர்நாடகங்களில் அழுதுதொலைப்பதைவிட்டுவிட்டு அடுப்படியில் அடங்கிக்கிடப்பதை விட்டுவிட்டு அகிலத்தை அளக்கும் அறிவுத்தேடலில் ஈடுபடுங்கள்


குறிப்பு :திறந்தபல்கலைக்கழக இணைய முகவரி :http://www.ou.ac.lk/ தொழில்நுட்ப கல்லாரி இணையமுகவரி : http://www.nipunatha.gov.lk/Diplomas.jpg

No comments:

Post a Comment