Friday, August 21, 2009

இலங்கை ஜிஎஸ்பி பிளஸ் சலுகைகளை பெற்றுக்கொள்ளக்கூடாது என நாம் ஒருபோதும் வாதிட்டதில்லை

கலாநிதி பாக்கியசோதி சரவணமுத்து















நேர்காணல்: அருண் ஆரோக்கியநாதர்




இலங்கை ஜிஎஸ்பி பிளஸ் சலுகைகளை பெற்றுக்கொள்ளக்கூடாது என நாம் ஒருபோதும் வாதிட்டதில்லை என மாற்றுக்கொள்கைகளுக்கான ஆய்வுநிலையத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கலாநிதி பாக்கியசோதி சரவணமுத்து தெரிவிக்கின்றார்.



கேள்வி :கடந்த காலத்திலும் இவ்வாறான அச்சுறுத்தல்கள் வந்துள்ளபோதும் தற்போது வந்துள்ள அச்சுறுத்தல் கடிதம் தொடர்பாக எவ்வாறு பார்க்கின்றீர்கள் ?

பதில் :
(இம்முறை ஆங்கில மொழியில் நன்கு பரிச்சயமான ஒருவரால் இந்தக்கடிதம் எழுதப்பட்டுள்ளது அந்தகடிதத்தின் உள்ளீட்டின் படி ஐரோப்பிய ஒன்றிய ஆணைக்குழுவின் வெளியுறவு ஆணையாளர் பெனிற்றா பெரேரோலொல்னருக்கு இலங்கையில் இடம்பெறும் மனித உரிமைமீறல்கள் பற்றிய தகவல்களை வழங்கும் முதன்மைநபராக நான் செயற்படுவதாக என்மீது குற்றஞ்சாட்டப்பட்டுள்ளதுடன் வரும் ஒக்டோபரில் ஜிஎஸ்பி பிளஸ் சலுகை நீடிப்பை இலங்கை பெறாதுதடுக்கும் வகையில் நான் பரி;ந்துபேசிவருவதாக அதில் குறிப்பிடப்பட்டுள்ளது இதன்காரணமாக அவர்கள் என்னைப்படுகொலைசெய்யப்போவதாகவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது இம்முறை ஜிஎஸ்பி பிளஸ் சலுகை நீடிப்பை பெறுவது பெரும் சாத்தியமற்றது எனவும் அந்தவகையில் எப்படியாவது படுகொலைசெய்யப்படுவேன் எனவும் அக்கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது )

கேள்வி : ஜி எஸ்பி பிளஸ் சலுகை நீடிப்பை பெறக்கூடாது என நீங்கள் பிரசாரங்களில் ஈடுபட்டுவருவதாக தெரிவிக்கப்படும் குற்றச்சாட்டுக்கள் உண்மையானதா?

பதில்: ஜி எஸ் பி பிளஸ் சலுகைகளானது சர்வதேச தொழிலாளர் தரநியமங்களின் 27மனிதஉரிமைசார் சரத்துக்களை நிறைவேற்றவேண்டும் என்ற நிபந்தனையை அடிப்படையாக கொண்டதாகவே அமைந்துள்ளது இலங்கையில் மனித உரிமைகளை வலுப்படுத்துகின்ற அதேவேளை ஜி எஸ் பி பிளஸ் சலுகை நீடிப்பை பெறும் வகையில் அனைத்துதரப்பினருக்கும் வெற்றி வெற்றி என்ற நிலை சாத்தியமானது என்பதே ஐp எஸ்பி பிளஸ் விடயத்தில் மாற்றுக்கொள்கைநிலையத்தின் நிலைப்பாடாக இருந்துவந்துள்ளது இதற்கு சில தேவைகள் ப+ர்த்திசெய்யப்படவேண்டியுள்ளது சட்டவரைவுகளை இயற்றுவது உட்பட சில நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவேண்டியுள்ளது இதற்கு ஆதரவு வழங்கப்படும் என எதிர்கட்சியும் கூறியுள்ளது அந்த வகையில் அது தொடர்பில் எவ்வித பிரச்சனையும் கிடையாது என்றே நான் பார்க்கின்றேன் மனித உரிமைவிடயத்தில் நீதிக்கு மதிப்பளிக்கும் விடயத்தில் ஏதேனும் சட்டரீதியான கட்டமைப்பு ரீதியான குறைபாடுகள் அன்றேல் ; இடைவெளிகள் இருக்குமேயானால் அதனை நிவர்த்தித்து மனித உரிமைகளை வலுப்படுத்துவதற்குள்ள சந்தர்ப்பமாக இதைக்கொள்ளமுடியும் என்பதுடன் ஜி எஸ்பி பிளஸ் சலுகை நீடிப்பையும் பெற்றுக்கொள்ளமுடியும் இலங்கை ஜிஎஸ்பி பிளஸ் சலுகைகளை பெற்றுக்கொள்ளக்கூடாது என நாம் ஒருபோதும் வாதிட்டதில்லை மாறாக நாம் ஆக்கப+ர்வமான நடவடிக்கைகளுடாக அனைத்துதரப்பினருக்கும் வெற்றி வெற்றி என்ற தீர்வு சாத்தியம் என்பதையே வலியுறுத்திவந்துள்ளோம்

கேள்வி: ஜி எஸ்பி பிளஸ் சலுகை நீடிப்பை இலங்கை பெறுமா?

பதில்: நேர்மையாக கூறுவதென்றால் எனக்கு இதுவிடயத்தில் என்ன நடக்கும் என்பது தெரியாது இந்த தீர்;மானம் ஐரோப்பிய ஒன்றியத்தாலேயே மேற்கொள்ளப்படவுள்ளது அவர்களது தீர்மானிக்கும் சிந்தனைப்போக்கு தொடர்பில் உள்ளார்ந்தமான அறிவேதும் எனக்குகிடையாது

கேள்வி: வெளிநாட்டிற்கு அரசியல் தஞ்சம் பெறுவதற்காகவும் விஸாக்களைப்பெறுவதற்காகவுமே நீங்களே உங்களுக்கு அச்சுறுத்தல் இருப்பதாக கூறி நாடகமாடுவதாக ஒருசில ஊடகங்களில் வெளியாகும் கருத்துக்கள் பற்றி?

பதில் : நான் விசாவை பெற்றுக்கொள்வதற்காக நாடகமாடுவதாக யாரேனும் கூறுவார்களேயானால் அவர்கள் முதலில் ஒருவிடயத்தை தெளிவாக புரிந்துகொள்ள வேண்டும் நான் வேறெங்கும் செல்லப்போவதில்லை நான் எந்தநாட்டிலும் அரசியல்தஞ்சம் கோரப்போவதுமில்லை இதுகாலமட்டில் நான் எந்தெந்த நாடுகளுக்கு விஸாவிற்காக விண்ணப்பித்திருந்தேனோ அத்தனை நாடுகளிடமிருந்தும் அது எனக்கு கிடைக்கப்பெற்றுள்ளது அந்தவகையில் அடுத்துவரும் கணிசமான காலப்பகுதிக்கு அவர்கள் என்னை எதிர்கொள்ளவேண்டியிருக்கும்

கேள்வி : இடம்பெயர்ந்த மக்களின் நிலைமைதொடர்பாக எப்படிப்பார்க்கின்றீர்கள் ?

பதில் : அந்தமக்கள் மிகவும் மோசமான சூழ்நிலையில் இருப்பதாகவே நான் கருதுகின்றேன் இந்தமக்கள் விடுதலைப்புலிகளின் பிடியிலும் பாதிக்கப்பட்டனர் யுத்த காலத்தின் போதும் இந்தமக்கள் பாதிப்பிற்குள்ளாகினர் இருதரப்பினரதும் சூட்டிற்கு இலக்காகினர் இப்படியாக பாதிப்பிற்குள்ளாகிய மக்கள் தற்போதோ தடுப்புமுகாமில் உள்ளதைப்போன்றே தடுத்துவைக்கப்பட்டுள்ளனர் அந்தமக்கள் வெள்ளப்பெருக்கு உட்பட பலவகையான பிரச்சனைகளுக்கும் முகங்கொடுக்க நேர்ந்துள்ளது இவர்கள் இலங்கையின் பிரஜைகளாவர். எமது அரசியல் சாசனத்தில் குறிப்பிட்டுள்ளதற்கமைவாக அனைத்து இலங்கை மக்களுக்கும் இருப்பதைப்போன்ற அடிப்படை உரிமைகளை இந்தமக்களும் அனுபவிக்க இடமளிக்கப்படவேண்டியது அவசியமாகும் உச்சநீதிமன்றத்திற்கு நாம் சமர்பித்த மனுவும் அடிப்படையில் இதைச்சார்ந்ததாகவே உள்ளது இந்தமக்கள் தத்தமது சொந்த இடங்களுக்கு செல்லமுடியாதவிடத்து அவர்களை இருகரம்நீட்டி வரவேற்பதற்கு அவர்களது உறவினர்களும் நண்பர்களும் தயாராகவே உள்ளனர் அவர்களது நடமாடும் சுதந்திரத்திற்கு தடைபோடக்கூடாது

கேள்வி: அரசியல் நல்லிணக்கத்தை காணும் விடயத்தில் அரசாங்கம் எதிர்பார்த்தவகையில் செயற்படத்தவறும் நிலையில் சர்வதேச ஆதரவை இழக்கும் அபாயத்தை எதிர்நோக்கியுள்ளதாக அமெரிக்க உதவிராஜங்க செயலர் ரொபட் பிளேக் குறிப்பிட்டுள்ளார் அரசியல் நல்லிணக்கத்தை ஏற்படுத்தும் விடயத்தில் அரசாங்கம் மேற்கொண்டுள்ள நடவடிக்கைகள் குறித்து என்ன கருதுகின்றீர்கள் ?

பதில்: இதுவிடயத்தில தற்போதையதருணத்தில் ஏதேனும் ஆக்கப+ர்வமான நடவடிக்கைகள் எடுக்கப்படுவதாக நான் கருதவில்லை இனியாவது இதனை அரசாங்கம் ஏற்றுக்கொண்டு செயற்படும் என நான் நம்புகின்றேன் அரசியல் தீர்வைக்காணும் விடயமாக இருப்பினும் இடம்பெயர்ந்த மக்கள் விவகாரமாக இருப்பினும் ஏனைய விடயங்களிலும் ஆக்கப+ர்வமான முன்னேற்றத்தை காண்பிப்பது முக்கியமென்பதை அரசாங்கம் உணர்ந்துகொள்ளவேண்டும் ஆனால் துரதிஸ்டவசமாக தற்போதைய நிலையில் நான் இதுவிடயத்தில் எவ்வித ஆக்கப+ர்வமான சமிக்ஞைகளையும் காணவில்லை

கேள்வி வடகீழ் பருவமழை தீவிரமடையும் காலப்பகுதியை நாம் எதிர்நோக்கியிருக்கும் நிலையில் இடம்பெயர்ந்த மக்கள் எதிர்நோக்கியிருக்கும் சவால்கள் என்ன?
பதில் : பருவமழைக்காலப்பகுதியானது மிகவும் துர்ப்பாக்கியமானதாகவும் மோசமானதாகவும் அமையப்போகின்றது அங்கு வெள்ளப்பெருக்கு ஏற்படும் சாத்தியங்கள் அதிகம் முகாம்களில் அதிக எண்ணிக்கையிலான மக்கள் உள்ளதால் அந்த முகாம்களின் சனத்தொகை அடர்த்தியைக்குறைப்பது அவசியமாகும் மக்கள் அந்த இடங்களில் இருந்து வெளியேற்றப்படவேண்டிய தேவையுள்ளது அனைத்தின் முடிவிலும் தனது பிரஜைகளின் நலன்கள் சார்ந்த விடயத்தில் இலங்கை அரசாங்கத்திற்கே முதன்மைப்பொறுப்பு உள்ளது இந்த பொறுப்பை இலங்கை அரசாங்கம் நிறைவேற்றுமா என்பதே எமக்கு முன்பாக உள்ள கேள்வியாகும் இன்றையநிலையில் இலங்கைத்தமிழர்களில் ஒரிடத்தில் அதிகூடிய எண்ணிக்கையில் இருப்பது தடுப்பு முகாம்களிலேயே என்கின்ற ஒரு விடயத்தை நாம் மறந்துவிடக்கூடாது



No comments:

Post a Comment