Thursday, August 13, 2009

சொந்த இடங்களில் வாழ வழிசெய்தாலே உண்மையான சந்தோசத்தை உணரமுடியும்


-சங்கைக்குரிய புதியாகம தேரர்
















கேள்வி:

வவுனியா முகாம்களுக்கு விஜயம் செய்ததாக குறிப்பிட்டீர்கள் அங்குள்ள நிலைமை எவ்வாறு காணப்படுகின்றது?

பதில்:
(வவுனியா முகாம்களில் உள்ள மக்கள் மிகந்த இன்னல்களுக்குள்ளாகியுள்ளனர் அரசாங்கம் கவனிக்கின்றதென்றாலும் அந்தமக்களிற்கு ஏற்பட்டுள்ள உளநிலைபாதிப்பு மற்றும் அதிவேதனையுணர்வை அவர்களைப்பார்க்கின்றபோது அவர்களின் உருவங்களிலிருந்தே புலனாகின்றது இயன்றவரைவிரைவாக தம்தம் சொந்தப்பிரதேங்களுக்குச் சென்று குடியேறி வாழுகின்ற சுதந்திரத்தை அவர்கள் எதிர்பார்த்துள்ளனர் அரசாங்கம் இந்த மக்களுக்கு உதவிகளைச்செய்கின்றது என்பது என்னவோ உண்மைதான் ஆனால் அது அவர்களுக்கு போதியதாக காணப்படவில்லை உணவுபானம் அவர்களுக்கு கிடைத்தாலும் அவர்கள் சந்தோசமாக வாழ்வதற்கு தத்தம் சொந்த இடங்களுக்கு சென்றுவாழவேண்டும் அதற்கு அரசாங்கம் விரைவாக நடவடிக்கை எடுப்பின் நன்று என்பதே எனது கருத்தாகும் )




கேள்வி : இதற்கும் மேலாக உங்கள் பயணத்தின் பின்னர் நீங்கள் உணர்ந்துகொண்ட விடயங்கள் யாது ?



பதில்:



இனப்பிரச்சனை தொடர்பாகவும் மீண்டும் யுத்தநிலை ஏற்படாதிருக்கவும் சமயத்தலைவர்கள் ஆற்றவேண்டியபங்குகொன்றுள்ளது இதற்கு அரசாங்கம் ஜனாதிபதி தலைமைத்துவம் வழங்கி சமயத்தலைவர்களுடன் பேச்சுவார்த்தை நடாத்தி அரசியல்கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடாத்தி அரசியல் யாப்பின் 13வது திருத்தத்தினூடாகவேனும் அதிகாரத்தைப்பகிர்வதன் மூலமாக இனப்பிரச்சனைக்கு தீர்வுகாணவேண்டும் இனப்பிரச்சனைக்கு தீர்வுகாணப்படாமல் முகாம்களிலுள்ள நிலை தொடர அனுமதிக்கப்பட்டால் மீண்டும் விடுதலைப்புலிகள் போன்ற அமைப்புக்கள் தலைதூக்க அது வாய்ப்பாகிவிடும் எனவே இதனை உணர்ந்துசெயற்படவேண்டும் எதிர்காலத்தில் இப்படியாக நடைபெறாமல் இருப்பதற்கு இதற்குள்ள தீர்வுயாதென்றால் அதிகாரத்தை பகிர்ந்து அந்த மக்களுக்க அதிகாரங்களை பெற்றுக்கொடுத்து தீர்வுகாணவேண்டும் இதற்கு தீர்வுகாணக்கூடியவராக நான் தற்போதைய ஜனாதிபதியைப் பார்க்கின்றேன் .ஜனாதிபதி ஒரு சட்டத்தரணி சட்டம் தொடர்பான அறிவுடையவர் இந்தியா ஈரான் போன்ற நாடுகளின் அரச தலைவர்களுடன் தொடர்புகளைப்பேணிவருபவர் அந்த நாடுகளில் அதிகாரங்களைப் பகிர்ந்துகொண்ட முறைமை என்பவற்றை உள்வாங்கி இந்தப்பிரச்சனைக்கு தீர்வுகாணவேண்டும் இந்தப்பிரச்சனைக்கான ஒரே தீர்வு அதிகாரங்களைப் பகிர்;ந்துகொள்வதே என்பதே எனது தனிப்பட்ட கருத்து )

கேள்வி : யுத்தத்தில் வெற்றிபெற்றதன் மூலம் அனைத்துபிரச்சனைகளும் முடிந்துவிட்டதென்ற நிலைபாடு பெரும்பான்மைமக்கள் மத்தியில் இருக்கின்றதா?



பதில்:



தமிழ் மக்களுக்கு இருந்த பிரச்சனைகளுக்கு தீர்வுகாணும் நோக்கில் தனிநாடு தனிநிர்வாகம் அதாவது தமிழீழத்தினைப்பெறுவதற்காக 30வருடகாலமாக இந்த ஆயுதப்போராட்டம் இடம்பெற்றிருக்கின்றது ஈழத்தை நோக்கிய பயணத்திற்கு மக்களை அணிதிரட்டுவதற்காக விடுதலைப்புலிகள் என பெயரிட்டு ஆயுதப்போராட்டத்தை முன்னெடுத்தனர் எனினும் யுத்தத்தில் அரசாங்கம் வெற்றிபெற்றதனால் அந்தப்போராட்டம் தோற்கடிக்கப்பட்டுள்ளது எனினும் யுத்தவெற்றியின் பின்னர் ஆயுதப்போராட்டம் அழிந்துவிட்டதென கருதி மக்களின் பிரச்சனைகளைப் புறக்கணித்து விடமுடியாது அவர்களது பிரச்சனைகள் அவ்வாறே உள்ளது அவர்களுக்கு அரசியல்ரீரியாக பொருளாதார ரீதியாக இன்னமும் பல பிரச்சனைகள் உள்ளது தற்போதுள்ள அரசாங்கம் இதனை விளங்கிக்கொண்டுள்ளதென்றே நான் நினைக்கின்றேன் இதனை அசட்டை செய்துவிடமுடியாது உதாரணமாக தென்பகுதியிலுள்ள மக்களின் பிரச்சனைகளை மையமாக வைத்து உருவாகிய ஜேவிபி 1970களில் வளர்ச்சிகண்டு பின்னர் அழிவடைந்தது எனினும் மீண்டுமாக அது 1980களின் பிற்பகுதியில் ஜேவிபி அரசியல் கட்சியாக வந்து தற்போது தேர்தல்களிலும் போட்டியிடுகின்றது எதிர்காலத்திலேனும் இந்தப்பிரச்சனையின் அடிப்படையைப்புரிந்துகொண்டு ஒரே நாட்டிற்குள் அதிகாரங்களைப்பகிர்ந்துகொண்டு 13வது திருத்தத்தினூடாவோ அன்றேல் அதற்கப்பாலோ சென்று அரசியல்திருத்தங்களுடாக அவர்களது பிரச்சனைகளுக்கு தீர்வுகாணவேண்டும்

கேள்வி: இலங்கை அரசியலில் பௌத்த மதத்தலைவர்களின் வகிபாகமானது இனப்பிரச்சனைத்தீர்விற்கு பாதகமாக இருப்பதாக சிலர் கூறுவது பற்றி என்ன கருதுகின்றீர்கள் ?



பதில்:

பௌத்தர்கள் வரலாற்றில் பல்வேறு சவால்களுக்கு முகங்கொடுக்கநேர்ந்தது ஏகாதிபத்தியர்களின் ஆக்கிரமிப்பு காலத்தில் பௌத்தமதம் மிகுந்த நெருக்கடிகளை எதிர்கொண்டது அதற்கு எதிராக கிளர்ந்தெழ வேண்டிய அவசியமுமம் அப்போது இருந்தது போர்த்துக்கேயர் ஒல்லாந்தர் ஆங்கிலேயருடைய காலனித்துவ ஆக்கிரமிப்பின் அனுபவங்கள் அச்சங்களுடாக பயணித்த பௌத்த மதத்தலைவர்கள் ஏகாதிபத்திய நாடுகளின் கைப்பொம்மைதாம் விடுதலைப்புலிகள் என்றோ இந்த வல்லாதிக்க நாடுகளின் சதியால் தாம் இந்தப்பிரச்சனை ஏற்பட்டதென்றோ எண்ணத்தை தம்முள்கொண்டிருக்கின்றனர் இவர்களது சந்தேகங்கள் அச்சங்களெல்லாம் வரலாற்று அனுபவங்களுடாகவே ஏறபட்;டிருக்கின்றது பௌத்தமதத்தலைவர்களை அரசியல்வாதிகள் தம் சுயலாபங்களுக்காகவும் பயன்படுத்தியிருக்கின்றார்கள் பௌத்த மதத்தலைவர்கள் அறிந்தோ அறியாமலோ இவ்வாறு அரசியல்தேவைகளுக்காக பயன்படுத்தப்பட்டிருக்கின்றனர்.ஆனால் நானோ இதனை ஒரு உள்நாட்டுப்பிரச்சனையாக பார்க்கின்றேன் இதற்கு உரிய அதிகாரப்பகிர்வின மூலமாகவே தீர்வுகாணமுடியும் எனக்கருதுகின்றேன்

No comments:

Post a Comment