Sunday, August 30, 2009

“இராணுவ வெற்றிகள் சமாதானத்தைக்கொண்டுவரவில்லை என்பதை வரலாறுகள் காண்பித்துநிற்கின்றன”

(ஓய்வுபெற்ற) லெப்டினற் ஜெனரல் வீ ஆர் ராகவன்


(அருண் ஆரோக்கியநாதர் )
மகத்தான இராணுவ வெற்றிகள் சமாதானத்தைக்கொண்டுவரவில்லை என்பதை வரலாறுகள் காண்பித்துநிற்கின்றன என இந்தியஇராணுவத்தின் துணைத்தளபதியாக முன்னர் பதவிவகித்தவரும் தற்போது சென்னையைத்தளமாகக்கொண்ட பாதுகாப்பு ஆய்வுகளுகான நிலையத்தின் தலைவராக திகழ்பவருமான ஒய்வுபெற்ற இராணுவ லெப்டினற் ஜெனரல் வீ ஆர் ராகவன் தெரிவித்தார் இராணுவத்தினர் ஈட்டியுள்ள மகத்தான வெற்றியிலிருந்து நீண்டகாலமாக நாடிநிற்கின்ற சமாதானத்தை கொண்டுவருவது நாட்டுத்தலைவர்களதும் பிரஜைகளதும் வகிபாகமாகும் எனவும் அவர் சுட்டிக்காட்டினார்  

கொழும்பில் இன்று ஆரம்பமான “யுத்தத்தில் வெற்றியீட்டியதிலிருந்து சமாதானத்தை வெற்றிகொள்வது’ இலங்கைச்சமூகத்தை யுத்தத்திற்கு பின்னர் மீளக்கட்டியெழுப்புதல் “ என்ற தொனிப்பொருளிலான இருநாள் கருத்தரங்கில் கலந்துகொண்டு ஆரம்ப உரையை ஆற்றியபோதே அவர் இந்தக்கருத்துக்களை தெரிவித்தார்  

இந்த கருத்தரங்கினை உபாயக் கற்கைகளுக்கான பிராந்திய நிலையம் மற்றும் பாதுகாப்பு ஆய்வுகளுக்கான நிலையம் என்பன இணைந்து ஏற்பாடு செய்துள்ளன மனித உரிமைகள் அமைச்சர் மஹிந்த சமரசிங்க பிரதம அதிதியாக இந்தக்கருத்தரங்கில் இலங்கை மற்றும் இந்தியாவைச்சேர்ந்த இராணுவ ஆய்வாளர்கள் கல்விமான்கள் பலரும் இதில் கலந்துகொண்டுள்ளனர்  

ஒய்வுபெற்ற இராணுவ லெப்டினற் ஜெனரல் வீ ஆர் ராகவன் இலங்கையின் இராணுவ வெற்றிகுறித்து கருத்துவெளியிடுகையில்  

(ஆயுத மோதல்களின் நிறைவானது மனிதப்பாதுகாப்பை உறுதிசெய்யும் நீண்டபயணத்தினை ஆரம்பித்துவைத்துள்ளது இராணுவவெற்றியினால் நாடு பாதுகாப்பாக இருப்பதாக உணரலாம் உங்கள் நாட்டின் எல்லைகள் பாதுகாக்கப்பட்டிருப்பதாக உணரலாம் உங்களது பிரஜைகளும் பாதுகாப்பாக இருப்பது இன்றியமையாதது புகழ்பெற்ற இராணுவசிந்தனையாளரான கார்ல் வொன் க்ளோஸ்விற்ஷ் யுத்தத்தின் நோக்கம் என்னவாக இருக்கவேண்டும் என்பது குறித்து கருத்துவெளியிட்டிருக்கின்றார் மோதல்களின் நோக்கம் “வெற்றி” எனக்கூறுவோமானால் அது குறுகியபார்வைகொண்ட ஒரு கூற்றாகவே அமைந்துவிடும் மாறாக யுத்தங்களதும் மோதல்களதும் நோக்கமானது வெறுமனே வெற்றியை மாத்திரமன்றி சமாதானத்தைக்கொண்டுவருவதாக இருக்கவேண்டும் என்றே அவர் குறிப்பிட்டுள்ளார் இதற்கு எம்மத்தியில் பல உதாரணங்கள் உள்ளன மத்தியகிழக்கில் அரபு இஸ்ரேல் மற்றும் பல உதாரணங்கள் உள்ளன அங்கெல்லாம் சிறப்பான இராணுவ வெற்றிகள் ஈட்டப்பட்டன .ஆனால் அவை சமாதானத்தைக்கொண்டுவரவில்லை.சிறப்பான இராணுவநடவடிக்கையில் வெற்றியீட்டியதன் மூலமாக வரலாற்றில் இலங்கை நாடு வரலாற்றுமுக்கியத்துவமிக்க உச்சத்தருணத்தில் உள்ளது இலங்கை இராணுவத்தில் ஏற்பட்டுள்ள மாற்றங்கள் குறித்து இந்தியாவில் இருந்து நாம் மிகுந்த வியப்புணர்வுடன் அவதானித்துவந்தோம் 20வருடகாலப்பகுதியில் இராணுவத்தினர் எப்படியான நிலையில் இருந்து இன்றுள்ள நிலைக்குவந்துள்ளனர் எப்போதுமே போராடுவதற்கு தயாரான குணாம்சம்கொண்ட இளமையான நவீனகரமான இராணுவமாக மோதலில் வெற்றிபெறவேண்டும் என்ற வேட்கைகொண்ட இராணுவமாக அவர்கள் மாற்றம்பெற்றுள்ளனர் ஆயுதப்படையினர் சிறப்பான பணியைச்செய்து முடித்துள்ளனர் அந்த வெற்றியிலிருந்து நாம் அனைவருமே நீண்டகாலமாக நாடிநிற்கின்ற சமாதானத்தை கொண்டுவருவது நாட்டுத்தலைவர்களதும் பிரஜைகளதும் தற்போதைய வகிபாகமாக இருக்கவேண்டும் அதனை எவ்வாறு நாம் சாதிக்கப்போகின்றோம் என்பது எமக்கு முன்பாகவுள்ள கேள்வியாகவுள்ளது)உச்சக்கட்டப்பாதுகாப்பு என்பது மக்களின் பாதுகாப்பே

( உச்சக்கட்டப்பாதுகாப்பு என்பது நாட்டின் பிரஜைகளது பாதுகாப்பே! தற்போது இந்தியாவிலும் கூட தேர்தொன்றுக்கு முன்பாக பல்வேறு கருத்துக்கணிப்புக்கள் மேற்கொள்ளப்படுகின்றன அப்படியாக கருத்துக்கணிப்புக்களை நடத்துபவர்களிடம் மக்களுக்கு மிகுந்த கரிசனைக்குரிய விடயங்கள் யாது அவர்கள் உள்ளடக்கும் பத்துவிடயங்களில் ஒன்றாக தேசியப்பாதுகாப்பு என்கிற விடயத்தையும் உள்ளடக்கும் படியாக நாம் கேட்டிருந்தோம் அப்படியாக கருத்துக்கணிப்புக்கள் மேற்கொள்ளப்பட்ட ஒவ்வொரு தடவையிலும் இந்தியப்பிரஜைகள் தமது கரிசனைக்குரிய விடயங்களடங்கிய பட்டியலில் தேசியப்பாதுகாப்பு என்பதை மிகவும் கடைசி நிலையிலேயே குறிப்பிட்டுள்ளனர் இதற்கு அவர்கள் தேசியப்பாதுகாப்புத்தொடர்பாக அக்கறை கொண்டிருக்கவில்லை என்பது அர்த்தமாகாது அவர்கள் தேசியப்பாதுகாப்பு தொடர்பில் அக்கறை கொண்டிருக்கின்றனர் ஆனால் இந்தியா பலமிக்கதாகவுள்ளது எமதுநாட்டை யாரும் ஆக்கிரமிக்க முடியாது எமது நாட்டின் பாகங்களை நாம் இழக்கப்போவதில்லை எம்மிடம் மிகச்சிறந்த ஆயுதப்படையினர் உள்ளனர் என்பது தொடர்பில் இந்தியப்பிரஜைகள் மிகவும் நம்பிக்கைகொண்டுள்ளனர் அவர்களுக்கு பாதுகாப்பு என்பது இராணுவபலமல்ல அவர்களைப்பொறுத்தவரையில் பாதுகாப்பு என்பது சட்டம் ஒழுங்கு ஊழல் மோசடியற்ற தன்மை கல்வி சுகாதாரம் அவர்களது சிறார்களின் எதிர்காலம் தொழில்வாய்ப்பு என்பவையே பாதுகாப்பு அவை இல்லையென்றால் தாம் பாதுகாப்பாக இல்லை என்பதே அவர்களது உணர்வாகவுள்ளது அது உங்களைப்பொறுத்தவரையிலும் பொருந்தக்கூடிய உண்மையாகும் என்னைப்பொறுத்தவரையும் உண்மையாகும் அதனால் தான் சமாதானம் என்பதன்;அர்த்தம் என்ன என்பதை நாம் பார்க்கவேண்டும் .இலங்கையில் இந்த மகத்தான வரலாற்றுமுக்கியத்துவமிக்க இராணுவவெற்றியைத் தொடர்ந்து நாங்கள் எப்படிப்பயணிக்கப்போகின்றோம் என்பதைசிந்தித்துப்பார்க்கவேண்டும் )


No comments:

Post a Comment