Friday, August 14, 2020

20வது திருத்தத்தை செப்டம்பர் மாத நடுப்பகுதியில் சமர்பிக்கவுள்ள அரசாங்கம் எதிர்பார்ப்பு ?

 

அரசியல்யாப்பின் 20வது திருத்தத்தை செப்டம்பர் மாதம் நடுப்பகுதியில் சமர்ப்பிப்பதற்கு அரசாங்கம் எதிர்பார்ப்பதாக புதிய நீதி அமைச்சர் அலி சப்றி நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

19வது திருத்தத்தை இல்லாதொழிப்பதற்கும்  அதற்கு பதிலீடாக 20வது திருத்தத்தை அறிமுகப்படுத்துவதற்கும் தேவையான நடவடிக்கைகளை அரசாங்கம் மேற்கொண்டுவருவதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

'19வது திருத்தத்திலுள்ள நாட்டிற்கு தீங்கு விளைவிக்கும் சரத்துக்கள் நீக்கப்பட்டு திருத்தியமைக்கப்படும் அனைத்து சமூகங்களையும் உள்ளடக்கியதாக 20வது திருத்தத்தை கொண்டுவர எதிர்பார்க்கின்றோம்' என அவர் தெரிவித்துள்ளார்.

20வது திருத்த வரைவுகள்  இறுதிசெய்யப்பட்ட பின்னர் அது அமைச்சரவை அங்கீகாரத்திற்காக வழங்கப்படும் என அவர் மேலும் சுட்டிக்காட்டினார். 

20வது திருத்தத்தின் கீழும் தற்போது 19வது  திருத்தத்தில் உள்ளவாறு ஜனாதிபதி ஒருவரின் பதவிக்காலம் ஐந்து ஆண்டுகளாக மட்டுமே வரையறுக்கப்பட்டிருப்பதுடன் ஒருவர் இரண்டு தடவை மாத்திரமே ஜனாதிபதி பதவிக்கு போட்டியிடமுடியும் என்ற சரத்தும் அப்படி நீக்கப்படாது இடம்பெற்றிருக்கும் என தெரிவிக்கப்படுகின்றது.

தற்போதுள்ள சுயாதீன ஆணைக்குழுக்கள் பற்றி கருத்துவெளியிட்ட நீதி அமைச்சர் 20வது திருத்தத்தினால் அவை பாதிக்கப்படமாட்டாதெனவும் அப்படியே தொடர்ந்தும் இயங்கும் எனவும் குறிப்பிட்டார்.

No comments:

Post a Comment