ஐக்கிய மக்கள் சக்தியின் சார்பாக தேசியப்பட்டியல் உறுதிப்படுத்தப்பட்டுள்ள ஏழு பேரில் ஒரு பெண்ணும் உள்வாங்கப்பட்டுள்ளார்.
ஏழுபேரில் அறுவர் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றையவர் டயானா கமகே என்ற பெண்ணாவார். இவர் ஒரு சட்டத்தரணி என்பதுடன் ஐக்கிய மக்கள் சக்தியின் பிரதி செயலாளராகவும் விளங்குகின்றார்.
கடந்த அரசாங்கத்தின் போது ரன்மினித்தென்ன சினிமா கிராமத்தின் தலைவராக டயானா கமகே பதவிவகித்திருந்தார்.
இவற்றைத்தாண்டி பல பரிணாமங்களைக் கொண்டவராக விளங்கும் டயானா கமகே ஒரு நடிகை என்பது குறிப்பிடத்தக்கது.
ஐக்கிய தேசியக்கட்சியின் மாகாண சபை வேட்பாளராகப் போட்டியிட்டிருந்த அவர் டயானா கமகே பவுண்டேஸன் என்ற அமைப்பை நடத்திவருகின்றார்.
பொதுத் தேர்தல் பெறுபேறுகள் வெளியான மறுதினமே ஐக்கிய மக்கள் சக்தியின் தேசியப்பட்டியலுக்கு பிரேரிக்கப்பட்டுள்ளவர்கள் என சமூக வலைத்தளங்களில் பதிவிடப்பட்டிருந்த அதே ஏழு பேரின்பெயர்களை உறுதிப்படுத்தி கட்சியின் பொதுச்செயலாளர் ரஞ்சித் மத்துமபண்டாரவின் கையொப்பத்துடன் தேர்தல் ஆணைக்குழுவிற்கு உறுதிப்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
அவை பின்வருமாறு:
1) ரஞ்சித் மத்துமபண்டார -ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச்செயலாளர்
2) ஹரின் பெர்னாண்டோ-தேசிய அமைப்பாளர்
3) இம்தியாஸ் பாக்கீர் மாக்கார்
4) திஸ்ஸ அத்தநாயக்க
5) ஏரான் விக்கிரமரத்ன
6) மயந்த திஸாநாக்க
7) டயானா கமகே
No comments:
Post a Comment