மாகாணசபைத் தேர்தல்களை அடுத்த வருடம் ஜனவரி அன்றேல் பெப்ரவரி மாதத்திற்கு நடத்துவதற்கு அரசாங்கம் எதிர்பார்த்துள்ளதாக ஞாயிறு லங்கா தீப பத்திரிகை செய்திவெளியிட்டுள்ளது.
பொதுத் தேர்தலில் கிடைத்த அமோக வெற்றியை அடுத்து இவ்வருட இறுதிக்குள் மாகாண சபைத் தேர்தலை நடத்துவதற்கு அரசாங்கம் முன்னதாக எதிர்பார்த்த போதும் வரவுசெலவுத்திட்டம் சமர்பிக்கப்படவேண்டியுள்ளமை, கா.பொத. சாதாரண தரம் மற்றும் கா.பொ.த . உயர்தரப்பரீட்சைகளை நடத்தவேண்டியுள்ளமை காரணமாக 2021ம் வருட முற்பகுதியில் மாகாண சபைத் தேர்தல்களை நடத்த அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக அரசாங்க வட்டாரங்களை மேற்கோள் காட்டி தென் பகுதியில் அதிக வாசகர்களைக் கொண்ட இரிதா லங்கா தீப பத்திரிகையையின் செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
2012 தேர்தலையடுத்து தெரிவான கிழக்கு மாகாண சபையின் பதவிக்காலம் 2017ம் ஆண்டு நிறைவடைந்தபோதும் இன்னமும் அங்கு தேர்தல் நடைபெறவில்லை. 2013ம் ஆண்டு இடம்பெற்ற தேர்தலையடுத்து தெரிவான வடக்கு மாகாணசபையின் பதவிக்காலம் 2018ம் ஆண்டு செப்டம்பர் மாதத்தில் நிறைவடைந்தபோதும் இன்னமும் அங்கு தேர்தல் நடைபெறவில்லை. இலங்கையின் இதர மாகாண சபைகளின் பதவிக்காலமும் 2018ம் ஆண்டில் நிறைவிற்கு வந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment