Friday, August 21, 2020

இலங்கை திரும்புவதற்காக இன்னமும் 56,297 பேர் வெளிநாடுகளில் காத்திருப்பு

 

கொரோனா வைரஸ் பரவல் அச்சுறுத்தலையடுத்து வெளிநாடுகளில் இருந்து மீண்டும் தாயகம் திரும்புவதற்காக விருப்பம் வெளியிட்டிருந்த இலங்கையர்களில்  23,723  பேர் மீண்டும் தாயகம் திரும்பியுள்ளதாகவும் இன்னமும் 56,297 பேர் தாயகம் திரும்பக் காத்திருப்பதாகவும் இலங்கை வெளிநாட்டு அமைச்சு வட்டாரங்களில் இருந்து அறிய முடிகின்றது

இதுவரை இலங்கைக்கு  மீள அழைத்துவரப்பட்டுள்ள 23,000ற்கு மேற்பட்டவர்கள் 93 நாடுகளில் இருந்து இங்கு அழைத்துவரப்பட்டுள்ளதாக வெளிநாட்டு அமைச்சு வட்டாரங்கள் மேலும் தெரிவித்தன.

இலங்கைக்கு மீளத் திரும்புவதற்காக காத்திருக்கும் 56,000ற்கும் மேற்பட்டவர்களில் பலரும் கொவிட்-19 உலகளாவிய தொற்று நோய்காரணமாகவும் அதனால் ஏற்பட்ட  தொழில் இழப்பு காரணமாக நிதி நெருக்கடிகளை எதிர்கொண்டுள்ளவர்களாவர் 

வெளிநாடுகளில் காத்திருக்கும் இலங்கையர்களை நாட்டுக்கு அழைத்துவரும் நடவடிக்கை கந்தக்காடு புனர்வாழ்வு முகாமிலிருந்து கொரோனா தொற்றாளர்கள் கண்டறியப்பட்டமையை அடுத்தும் ஓகஸ்ட் 5 பொதுத் தேர்தலை முன்னிட்டும்  இரண்டு தடவைகள் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டிருந்த நிலையில் தற்போது மீண்டும்  ஆரம்பமாகியுள்ளன. 


ஜோர்தானில் இலங்கைப் பணியாளர்கள் கடந்த மாதத்தில் தாக்குதலுக்குள்ளான நிலையில் அவர்களின் உண்மை நிலையை வெளிக்கொண்டுவரும் வகையில் நடைபெற்ற கலந்துரையாடல் இதோ



No comments:

Post a Comment