Wednesday, August 12, 2020

இலங்கையில் உண்மையில் யானைகள் எண்ணிக்கை குறைவடைந்துவிட்டதா?

 


இலங்கையில் தற்போது எத்தனை யானைகள் உள்ளன என்பதை உறுதிபடக்கூறமுடியாதபோதும் 2011ம் ஆண்டில் மேற்கொள்ளப்பட்ட கணக்கெடுப்பின் படி இங்கு 6000 யானைகள் உள்ளதாக யானை ஆராச்சியாளர் கலாநிதி. எஸ் . விஜயமோகன் தெரிவிக்கின்றார். 


இலங்கையில் மனித செயற்பாடுகள் காரணமாக வருடந்தோறும் யானைகள் உயிரிழப்பதாக சுட்டிக்காட்டும் தரப்பினர் யானைகளின் இனப்பெருக்கம்  செய்கின்ற விடயத்தை கவனித்திற்கொள்வது குறைவு எனவும் சுட்டிக்காட்டுகின்றார். 

 ஆசியக்கண்டத்தில் இந்தியாவிலேயே அதிகளவான யானைகள் உள்ளன. அங்கு 24,000 யானைகள் காணப்படுகின்றன.

உலகிலே அதிகமான யானைகள் உள்ள கண்டமாக ஆபிரிக்கா விளங்குகின்றது. அங்கு ஐந்துலட்சம் யானைகள் உள்ளதாக கூறப்படுகின்றது. ஆபிரிக்காவிலுள்ள பொட்சுவானா என்ற நாட்டில் மாத்திரம் ஒன்றரை லட்சம் யானைகள் உள்ளதாக கூறப்படுகின்றது. 


இன்று உலக யானைகள் தினமாகும்.


யானைகள் பற்றி இதுவரை அறிந்திராத சுவையான பல தகவல்களை அறிந்துகொள்ள யானை ஆராச்சியாளர் கலாநிதி. எஸ். விஜயமோகனுடன் நடத்திய இந்த நேர்காணலைப் பாருங்கள் . 



No comments:

Post a Comment