புதிய அமைச்சரவையில் இளைஞர் விவகார விளையாட்டுத்துறை அமைச்சராக நியமிக்கப்பட்ட நாமல் ராஜபக்ஸவின் ஆதிக்க வரம்பின் கீழ் வரும் நிறுவனங்களின் பட்டியல் வெளியாகியுள்ளது.
1) விளையாட்டு அபிவிருத்தி திணைக்களம்
2) தேசிய இளைஞர் சேவைகள் மன்றம்
3)தேசிய இளைஞர் படையணி
4) இலங்கை தேசிய இளைஞர் சேவைகள் கூட்டுறவு நிறுவகம்
5) தலைமைத்துவ அபிவிருத்திக்கான தேசிய நிலையம்
6) மனித வலு மற்றும் வேலைவாய்ப்பு திணைக்களம்
7) ஸ்மார்ட் ஸ்ரீலங்கா நிறுவனம் SMART Sri Lanka’ Institute
1986ம் ஆண்டு ஏப்ரல் 10ம்திகதி பிறந்த நாமல் ராஜபக்ஸவின் முழுப்பெயர் லக்ஸ்மன் நாமல் ராஜபக்ஸ என்பதாகும். இலங்கையில் அமைச்சரவை வரலாற்றில் வயதில் குறைந்த கபினற் அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சர்களில் ஒருவராக 34வயதுடைய நாமல் ராஜபக்ஸ திகழ்கின்றார்.
ஆனாலும் இலங்கையின் மிக இளவயது கபினற் அமைச்சர் என்ற பெருமை தற்போது இராஜாங்க அமைச்சராக உள்ள துமிந்த திஸாநாயக்க வசம் உள்ளது. 2013ம் ஆண்டு ஜனவரி மாதத்தில் கல்விச் சேவைகள் கபினற் அமைச்சராக அவர் நியமிக்கப்பட்ட போது அவருக்கு 33வயது என்பது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment