தேசியப்பட்டியலில் பெயரிடப்பட்டுள்ள மேலும் எட்டுப் பேரின் விபரங்களை உள்ளடக்கிய வர்த்தமானி அறிவித்தல் நேற்று வெளியிடப்பட்டுள்ளது.
அந்தவகையில் ஒட்டுமொத்தமான 29 தேசியப்பட்டியல் பாராளுமன்ற உறுப்பினர்களில் 27 பேரின் பெயர்கள் தற்போது தேர்தல் ஆணைக்குழுவினால் உறுதிசெய்யப்பட்டுள்ளன.
ஐக்கிய தேசியக் கட்சி மற்றும் அத்துரலிய ரத்தன தேரர் தலைமையிலான எமது சக்தி கட்சியினுடைய தேசியப்பட்டியல் நியமன உறுப்பினர்களின் பெயர்களே உறுதிசெய்யப்படவுள்ளன.
எஞ்சிய இரண்டு உறுப்பினர்களின் விபரங்களும் எதிர்வரும் 20ம் திகதி புதிய பாராளுமன்றத்தின் முதலாவது அமர்வு ஆரம்பமாகுமுன்னர் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
No comments:
Post a Comment