Sunday, August 23, 2020

83 நாட்களின் பின்னர் இலங்கையில் கொரோனா உயிரிழப்பு பதிவானது


இலங்கையில் 83 நாட்களின் பின்னர் கொரோனா உயிரிழப்பு இன்று அதிகாலை பதிவாகியுள்ளது.  

கடந்த வியாழக்கிழமை (20) இந்தியாவிலிருந்து நாடு திரும்பிய நிலையில் கொரோனா தொற்றுக்குள்ளானதாக  இனங்கணப்பட்டதால்  IDH இல் சிகிச்சை பெற்றுவந்த   47 வயது பெண்ணே இன்று ஓகஸ்ட் 23ம் திகதி அதிகாலை  உயிரிழந்துள்ளார்.

ஏற்கனவே புற்றுநோய், இருதய நோயினால் பாதிக்கப்பட்டவரான இந்தப் பெண் கொரோனா சிகிச்சைக்குட்படுத்தப்பட்டு வந்தநிலையில் மாரடைப்பினால் மரணடைந்ததாக  IDH வைத்தியசாலை தொற்று நோய் விசேட வைத்திய நிபுணர் சுதத் சமரவீர தெரிவித்துள்ளார்.

இதன் மூலம் கொரொனா வைரஸால் பலியான இலங்கையர்களின் எண்ணிக்கை 12 ஆக அதிகரித்தது.

இதற்கு முன்னர் இலங்கையில் பதிவான கொரோனா மரணம் கடந்த ஜுன் மாதம் முதலாம் திகதியே இடம்பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

 இலங்கையில் இதுவரைஅடையாளம் காணப்பட்ட 2,947 தொற்றாளர்களில் வெளிநாட்டவர் 36 பேர் மற்றும் வெளிநாடுகளிலிருந்து வந்த இலங்கையர் 1,018 பேர் உள்ளிட்ட வெளிநாடுகளிலிருந்து வந்த 1,054 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர். கடற்படை (906) மற்றும் அவர்களுடன் தொடர்புடைய 950 பேர்இ கந்தக்காடு புனர்வாழ்வு மையத்துடன் தொடர்புடைய 630 பேர் மற்றும் நாட்டின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் 313 பேரும் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

அந்த வகையில், இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றியதாக தற்போது அடையாளம் காணப்பட்டுள்ள 2,947 பேரில் தற்போது 137 நோயாளிகள் சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதோடு, சீனப் பெண் உள்ளடங்கலாக இது வரை 2,798 பேர் கொரோனா வைரஸ் தொற்றிலிருந்து குணமடைந்துள்ளனர். அத்துடன் இது வரை 11 பேர் மரணமடைந்துள்ளனர்.

இதேவேளை, மருத்துவமனைகளில் கொரோனா வைரஸ் தொடர்பிலான சந்தேகத்தின் அடிப்படையில் 65 பேர் கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளதாகஇ சுகாதார மேம்பாட்டுப் பணியகம் அறிவித்துள்ளது.


இலங்கையில் கொரோனா தொற்று காரணமான மரணங்கள்

1ஆவது மரணம் கடந்த மார்ச் 28ஆம் திகதி 60 வயதான மாரவிலவைச் சேர்ந்த ஆண் ஒருவர்.

2ஆவது மரணம் கடந்த மார்ச் 30ஆம் திகதி, நீர்கொழும்புஇ,போருதொட்டையைச் சேர்ந்த 64 வயதான ஆண் ஒருவர்.

3ஆவது மரணம் ஏப்ரல் 01ஆம் திகதிஇ 73 வயதான மருதானையைச் சேர்ந்த ஆண் ஒருவர்.

4ஆவது மரணம் ஏப்ரல் 02ஆம் திகதி, 58 வயதான இரத்மலானையைச் சேர்ந்த ஆண் ஒருவர்.

5ஆவது மரணம், ஏப்ரல் 04ஆம் திகதி, 44 வயதான, ஹோமாகம பிரதேசத்தைச் சேர்ந்த ஆண் ஒருவர்.

6ஆவது மரணம், ஏப்ரல் 07ஆம் திகதிஇ 80 வயதான, தெஹிவளை பிரதேசத்தைச் சேர்ந்த ஆண் ஒருவர்

7ஆவது மரணம் ஏப்ரல் 08ஆம் திகதிஇ 44 வயதான கல்கிஸ்ஸையைச் சேர்ந்த ஆண் ஒருவர்.

8ஆவது மரணம், மே 04ஆம் திகதிஇ 72 வயதான, குருணாகல், பொல்பிதிகமவைச் சேர்ந்த பெண் ஒருவர்.

9ஆவது மரணம், மே 05ஆம் திகதி, 52 வயதானஇ கொழும்பு 15, மோதறையைச் சேர்ந்த பெண் ஒருவர்.

10ஆவது மரணம், மே 25ஆம் திகதி, 51 வயதானஇ குவைத்திலிருந்து வந்த, பயாகலையைச் சேர்ந்த பெண் ஒருவர்.

11ஆவது மரணம், ஜூன் 01ஆம் திகதி, 45 வயதான, குவைத்திலிருந்து வந்து ஹோமாகம வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த ஆண் ஒருவர்.

12ஆவது மரணம், ஓகஸ்ட் 23ஆம் திகதிஇ 47 வயதான, இந்தியாவிலிருந்து வந்து IDHவைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த பெண் ஒருவர்.


மரணமடைந்தவர்கள் - 12
ஓகஸ்ட் 23 - ஒருவர் (12)
ஜூன் 01 - ஒருவர் (11)
மே 25 - ஒருவர் (10)
மே 05 - ஒருவர் (09)
மே 04 - ஒருவர் (08)
ஏப்ரல் 08 - ஒருவர் (07)
ஏப்ரல் 07 - ஒருவர் (06)
ஏப்ரல் 04 - ஒருவர் (05)
ஏப்ரல் 02 - ஒருவர் (04)
ஏப்ரல் 01 - ஒருவர் (03)
மார்ச் 30 - ஒருவர் (02)
மார்ச் 28 - ஒருவர் (01)


No comments:

Post a Comment