மேற்கு ஆபிரிக்க நாடான மாலியில் ராணுவத்தினர் திடீர் புரட்சியில் ஈடுபட்டதை தொடர்ந்து அந்த நாட்டு ஜனாதிபதி(Ibrahim Boubacar Keita) இப்ராகிம் பவுபக்கர் கெய்டா,பிரதமர் பவ்பவ் சிஸ்சே ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
19 மில்லியன் மக்கள் சனத்தொகையைக் கொண்ட மாலியில் அந்நாட்டு அரசுக்கு தொடர் கிளர்ச்சிகள் நடைபெற்று வந்தன. மக்களின் தொடர் போராட்டங்களின் உச்சமாக ராணுவத்தினரும் கிளர்ச்சியில் இணைந்தனர்.
தலைநகர் பமாகோவில் டாங்கிகள், ஆயுதங்களுடன் ராணுவத்தினர் சுதந்திரமாக வலம் வந்தனர். நாட்டின் ராணுவ புரட்சி வெடித்ததாக கூறப்பட்ட நிலையில் ராணுவ அதிகாரிகளுடன் பிரதமர் பவ்பவ் சிஸ்சே பேச்சுவார்த்தை நடத்தினார். ஆனால் இந்த பேச்சுவார்த்தை கை கொடுக்கவில்லை.
ஒருகட்டத்தில் ஜனாதிபதி இப்ராகிம் பவுபக்கர் கெய்டா, பிரதமர் பவ்பவ் சிஸ்சே ஆகியோர் கைது செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டனர். இதனால் மாலியில் உச்சகட்ட குழப்பம் ஏற்பட்டுள்ளது.
இதனிடையே கைது செய்யப்பட்டுள்ள ஜனாதிபதி, பிரதமரை உடனே ராணுவத்தினர் விடுதலை செய்ய வேண்டும் என்று ஐக்கிய நாடுகள் சபை ஐரோப்பிய ஒன்றியம் ஆகியன வலியுறுத்தி உள்ளன. மேலும் ராணுவத்தால் கைது செய்யப்பட்ட நிலையில் ஜனாதிபதி இப்ராகிம் பவுபக்கர் கெய்டா தமது பதவியை ராஜினாமா செய்துள்ளதாகவும் தற்போதைய தகவல்கள் வெளியாகி உள்ளன.
ஒரு மாதத்திற்கு முன்னர் , மாலியில் இடம்பெறும் போராட்டங்களை அடுத்து அரசியலமைப்பு நீதிமன்றத்தைக் கலைப்பதாக அந்நாட்டு ஜனாதிபதி இப்ராஹிம் பௌபகார் கெய்டா அறிவித்திருந்தமை குறிப்பிடத்கத்கது
No comments:
Post a Comment