அடுத்தாண்டு ஆரம்பத்தில் இடம்பெறவுள்ள மாகாணசபைத் தேர்தல்களை அடுத்தே ஐக்கிய தேசியக்கட்சியின் தலைவர் பதவியில் இருந்து ரணில் விக்கிரமசிங்க விலகுவார் என அக்கட்சியின் பொதுச் செயலாளர் அகில விராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார்.
நடைபெற்று முடிந்த பொதுத் தேர்தலில் போட்டியிட்டு வெற்றிபெறத்தவறிய கட்சியின் வேட்பாளர்களுடன் நேற்று கட்சித்தலைமையகமான ஸ்ரீகொத்தவில் நேற்று நடைபெற்ற சந்திப்பின்போதே ரணில் விக்கிரமசிங்க இந்தவிடயத்தை தெரியப்படுத்தியுள்ளதாக சண்டே டைம்ஸ் பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.
"இளைஞர்களிடம் தலைமைத்துவம் கையளிக்கப்படவேண்டும்" என ரணில் விக்கிரமசிங்க தெரிவித்ததுடன் எதிர்வரும் மாகாணசபைத் தேர்தல் பிரசாங்களுக்காக புதிய பொறிமுறை நடைமுறைக்கிடப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.
மாகாண சபைத்தேர்தல்கள் அடுத்த பெப்ரவரி -மார்ச் பகுதியில் நடைபெறும் என அரசாங்க வட்டாரங்கள் தகவல்களை வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment