இலங்கையின் அனைத்து பாடசாலைகளும் வழமை போன்று கல்வி நடவடிக்கைகளை மேற்கொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.
பாடசாலைகளில் 200ற்கு மேற்பட்ட மாணவர்கள் இருப்பினும் சுகாதார அமைச்சின் விதிமுறைகளைப் பின்பற்றி பாடசாலைகளைத் திறக்க முடியும் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
நாட்டில் கொரோனா தொற்று நிலைமை கட்டுப்பாட்டுக்குள் வந்திருக்கும் இந்நிலையில், வகுப்பறைகளில் வசதிகள் இருந்தால், சமூக விலகல் விதிமுறைகளை அமுல்படுத்த முடியுமானால் பாடசாலைகளை முழுமையாக மீளவும் திறக்க முடியும் என கல்வி அமைச்சு அறிக்கை ஒன்றினை வெளியிட்டு தெரிவித்துள்ளது.
இந்த அறிவித்தல் வர முன்னதாக மற்றுமொரு தகவல் வெளியாகியிருந்தது. இலங்கையிலுள்ள பிரபல தனியார் பாடசாலைகள் விடுமுறையை அடுத்து அடுத்த மாதமே அவற்றின் கல்வி நடவடிக்கைகளுக்காக திறப்பதாக இருந்தது. இருப்பினும் கல்வியமைச்சின் உடனடி அறிவுறுத்தல்களுக்கு அமைய அடுத்தவாரமே கற்றல் நடவடிக்கைகளை ஆரம்பிக்க இந்தப்பாடசாலைகள் நடவடிக்கை எடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment