புதிய அமைச்சரவையில் வர்த்தக அமைச்சராக பதவியேற்றுள்ள பந்துல குணவர்த்தன முன்னர் வகித்த அமைச்சரவைப் பேச்சாளர் பொறுப்பை ஏற்க மறுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஜனாதிபத் தேர்தலையடுத்து நியமிக்கப்பட்ட 15 பேரைக்கொண்ட இடைக்கால அமைச்சரவையில் தகவல் மற்றும் தொடர்பாடல் தொழில்நுட்பம், உயர் கல்வி, தொழில்நுட்பம் மற்றும் புத்தாக்க அமைச்சராக பதவிவகித்து பந்துல குணவர்த்தன கலாநிதி ரமேஷ் பத்திரணவுடன் இணை அமைச்சரவைப் பேச்சாளராகவும் செயற்பட்டிருந்தார்.
புதிய அமைச்சரவையில் வர்த்தக அமைச்சராக நியமிக்கப்பட்டதைத் தொடர்ந்து தனக்கு முன்பு ஒதுக்கப்பட்ட மேலதிக பொறுப்பில் இருந்து விடுவிக்குமாறு பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவிற்கு தெரியப்படுத்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தன் சார்பாக அமைச்சரவை பேச்சாளராக நியமிக்குமாறும் பந்துல குணவர்த்தன பிரதமரிடம் கோரியுள்ளதாக தெரியவருகின்றது
No comments:
Post a Comment