இன்று காலை கண்டி தலதா மாளிகையில் இடம்பெற்ற புதிய அமைச்சரவை நியமனங்களின் போது முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உட்பட சில சிரேஷ்ட உறுப்பினர்களுக்கு அமைச்சுப்பதவிகள் வழங்கப்படாமை பலரது கவனத்தையும் பெற்றுள்ளது.
இதில் முன்னாள் ஜனாதிபதியும் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் தலைவருமான மைத்திரிபால சிறிசேனவிற்கு அமைச்சுப்பதவியேதும்வழங்கப்படாமை பரவலாக சமூக வலைத்தளங்களில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
பொலநறுவை மாவட்டத்தில் அதிகூடிய விருப்பு வாக்குகளைப் பெற்ற மைத்திரி தமக்கு மகாவலி அமைச்சு வழங்கப்படவேண்டும் என வேண்டுகோள் விடுத்திருந்ததாக தகவல்கள் வெளியாகியிருந்தன.
மைத்திரியைத் தவிர விஜயதாஸ ராஜபக்ஸ, சுசில் பிரேமஜயந்த ,அநுர பிரியதர்ஸன யாப்பா, ரஞ்சித் சியம்பலாபிட்டிய ,எஸ்.பி. திஸாநாயக்க, ஏ.எல்.எம். அதாவுல்லா,டிலான் பெரேரா, மஹிந்த சமரசிங்க, சந்திம வீரக்கொடி போன்றோருக்கும் எவ்வித அமைச்சுக்களும் வழங்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment