ஐக்கியஅமெரிக்காவின் கலிஃபோர்னியா மாகாணத்தில் உள்ள மரணப் பள்ளத்தாக்கு தேசிய பூங்காவில் கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று 130 டிகிரி ஃபாரன்ஹீட் (54.4 டிகிரி செல்சியஸ்) வெப்பம் பதிவு செய்யப்பட்டுள்ளது.
மரணப் பள்ளத்தாக்கின் ஃபர்னேஸ் க்ரீக் எனும் இடத்தில் இந்த வெப்பநிலை பதிவாகியுள்ளது.
இதுவரை பூமியில் பதிவுசெய்யப்பட்ட வெப்பநிலையில் இதுவே அதிகபட்சமாக இருப்பதற்கான சாத்தியங்கள் இருப்பதாக கருதப்படுகிறது.
அமெரிக்காவின் மேற்குக் கடலோரப் பகுதிகளில் கடுமையான வெப்ப அலை வீசி வரும் சூழலில் இந்த அதிகபட்ச வெப்பநிலை பதிவு செய்யப்பட்டுள்ளது.
அப்பகுதியின் வெப்பநிலை இந்த வாரத்தில் மேலும் அதிகரிக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது.
இதற்கு முன்பு பூமியில் பதிவான அதிகபட்ச வெப்பநிலை 129.2 டிகிரி ஃபாரன்ஹீட் (54 டிகிரி செல்சியஸ்) ஆகும்.
இதுவும் 2013-ஆம் ஆண்டு மரணப் பள்ளத்தாக்கில்தான் பதிவு செய்யப்பட்டது.
ஒரு நூற்றாண்டுக்கு முன்பாக மரணப் பள்ளத்தாக்கில் 134 டிகிரி ஃபாரன்ஹீட் (56.6 டிகிரி செல்சியஸ்) வெப்பநிலை பதிவு செய்யப்பட்டது என்று கூறப்படுவது குறித்து பல்வேறு சந்தேகங்கள் மற்றும் கேள்விகள் உள்ளன.
No comments:
Post a Comment