Wednesday, May 13, 2009

சர்வதேசம் தலையிடுவதற்கான தருணம் இதுவே

-தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு



இலங்கையின் வன்னிப்பகுதியில் இடம்பெறும் மனிதப்பேரவலத்தை தடுத்துநிறுத்துவதற்கு இனிமேலும் தாமதிக்காமல் சர்வதேச சமூகம் தலையிடவேண்டும் இதுவே இறுதித்தருணம் என தமிழ்த்தேசியக்கூட்டமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது .

கொழும்பு ஜனாகி ஹோட்டலில் இடம்பெற்ற செய்தியாளர் மாநாட்டின் போதே இந்த அவசரக்கோரிக்கை விடுக்கப்பட்டது



இங்கு உரையாற்றிய தமிழ்த்தேசியக்கூட்டமைபின் பாராளுமன்றக்குழுத்தலைவர் இரா சம்பந்தன் தெரிவித்ததாவது
(மக்கள் சாவதற்கு இரண்டு காரணங்கள். ஒன்று அரச படைகளால் நடைபெறுகின்ற தாக்குதல்கள் மற்றது உணவில்லாமல் இருக்கின்ற நிலைமை அதனால் இதுவொரு மிகவும் பாரதூரமான நிலைமை தொடர்ந்தும் இந்த தாக்குதல் நடைபெறுமாக இருந்தால் உயிரிழப்புக்கள் இற்றைவரையிலும் நடந்ததைப்பார்க்க மிகவும் கூடுதலாக இருக்கலாம் அதைநாங்கள் ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது இந்தமக்கள் பாதுகாக்கப்படவேண்டும் இந்த மக்களுடைய உயிரைப்பாதுகாப்பதற்கு அரசாங்கத்திற்கு ஒரு கடமை இருக்கின்றது எல்ரீரீஈக்கு ஒரு கடமை இருக்கின்றது நிச்சயமாக மக்கள் பாதுகாக்கப்பட வேண்டும் )


இங்கு கருத்துவெளியிட்ட பாராளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிரேமசந்திரன் தெரிவித்ததாவது
( இப்படியொரு நாட்டில் இருக்கக்கூடிய மக்கள் அந்த நாட்டின் அரசாங்கத்தாலேயே ஆயிரக்கணக்கில் கொலைசெய்யப்படுவதை நாங்கள் ஒரு இனப்படுகொலையாகவே பார்க்கின்றோம் இட் இஸ் எ ஜெனசைட் இட் இஸ் எ ஜெனசைட் இதுவொரு இனப்படுகொலை இதுவொரு இனப்படுகொலை மூன்று மாசத்திற்குள் பத்தாயிரத்திற்கு மேற்பட்ட மக்கள் கொலைசெய்யப்பட்டு இருபதினாயிரத்திற்கு மேற்பட்ட மக்கள் காயப்பட்டுள்ளனர் ஆகவே அப்படியான ஒருசந்தர்ப்பத்தில் நிச்சயமாக இலங்கை அரசாங்கம் இந்த மக்களைப் பாதுகாக்கத் தவறினால் யாருக்கும் பாதுகாப்பதற்கான உரிமை ரைட்டு புரொடெக்ற் இந்தியாவிற்கும் அந்த உரிமை இருக்கின்றது சர்வதேச சமூகத்திற்கும் அந்த உரிமை இருக்கின்றது இவர்களைப்பாதுகாக்க வேண்டிய கடமை நிச்சயமாக சர்வதேச சமூகத்திற்கு இருக்கின்றது இதுக்கு பிறகு இன்னுமொரு ஐயாயிரம் பத்தாயிரம் மக்கள் செத்ததற்கு பின்பு எங்களோட சேர்ந்து அவர்களும் அழாமல் அப்படியான கொலைகள் நடப்பதற்கு முன்பு அவர்கள் பாதுகாக்கப்பட வேண்டும் என்றே நாங்கள் விரும்புகின்றோம் )





No comments:

Post a Comment