Saturday, January 23, 2021

100 வைத்தியர்களுக்கு கொரோனா தொற்று!

 


கொவிட்-19 இரண்டாம் அலையின் போது 100 வைத்தியர்களுக்கு வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் உதவிச் செயலாளர் வைத்தியர் ஹரித அலுத்கே தெரிவித்துள்ளார். 

சுமார் 40 வைத்தியர்கள் நாட்டின் பல கொவிட்-19 நிலையங்களில் சிகிச்சை பெற்று வருவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கையில் கொரோனா இரண்டாம் அலை தொடர்பாக கடந்த ஒக்டோபர் மாதத்தில் தகவல் வெளியாகின. அது முதற்கொண்டு நாட்டில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை  56 076 ஆக அதிகரித்துள்ளது. 

No comments:

Post a Comment