அமெரிக்காவுடன் இலங்கை செய்துகொள்ள உத்தேசிக்கப்பட்ட MCC ஒப்பந்தத்தில் உள்ளடக்கப்பட்டுள்ள விடயங்கள், நாட்டின் சட்டம் மற்றும் அரசமைப்பை மீறுவதாக உள்ளதென சட்டமா அதிபர் தெரிவித்துள்ளார்.
இந்த விடயம் தொடர்பில் ஜனாதிபதி செயலாளருக்கு அவர் அறிவித்துள்ளார்.
இதேவேளை எம்.சி.சி. ஒப்பந்தத்திற்கு அமைய இலங்கைக்கு வழங்கப்படவிருந்த 480 மில்லியன் அமெரிக்க டொலர் கொடுப்பனவை இரத்துச் செய்ய அமெரிக்கா தீர்மானித்துள்ளதாக கடந்த மாதத்தில் அறிவிக்கப்பட்டது.
கடந்தமாதம் மத்தியில் கூடிய எம்.சி.சி. பணிப்பாளர் குழு கூட்டத்தின் போது இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment