யாழ் பல்கலைக்கழக வளாகத்தில் அமைக்கப்பட்டிருந்த முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபி அழித்தொழிக்கப்படுவதைக் கேள்விப்பட்டு அங்கு கரிசனையோடு சென்ற இளைஞர்கள் அங்கு குவிக்கப்பட்ட அதிரடிப்படையினர் உள்ளிட்ட பாதுகாப்பு தரப்பினர் முன்னர் அமைதியான முறையில் தமது எதிர்ப்பை வெளிப்படுத்தினர். வெறுங்கையோடு அங்கு அமர்ந்திருந்து எதிர்ப்புத்தெரிவித்த இளைஞர்களுக்கு முன்னர் ஆயுதம் தரித்த அதிரடிப்படையினர் உட்பட பாதுகாப்பு தரப்பினர் நிற்கும் புகைப்படங்கள் பரவலாக வெளியாகியிருந்தன.
இந்தநிலையில் அரச தொலைக்காட்சியான ITN( சுயாதீன தொலைக்காட்சி_) அதன் இணையத்தளத்தில்இன்று யாழ் பதற்றம் தொடர்பாக பிரசுரித்திருந்த இனவாத ரீதியான கட்டுரைக்கு ' பயங்கரவாதிகளாகச் சென்ற யாழ் இளைஞர்கள் அதிரடிப்படையினர் முன்னர் மண்டியிட்டனர்' எனக் குரோதமான தலைப்பை இட்டுள்ளனர். இதுதொடர்பாக இலங்கையின் முன்னாள் மனித உரிமைகள் ஆணையாளர் அம்பிகா சற்குணநாதன் ரோவர் இணைய செய்தி நிறுவனத்தின் பிரதம ஆசிரியர் ரொயல் ரேமண்ட ஆகியோர் ஏற்கனவே தமது வன்மையான கண்டனங்களைப்பதிவு செய்துள்ளதுடன் ஊடக தர்மத்திற்கு முற்றிலும் விரோதமாக செய்தி பிரசுரிக்கப்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டியுள்ளனர்.
இதேவேளை நேற்றைய தினம் முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபி அழித்தொழிக்கப்பட்டமைக்கு வன்மையான கண்டனங்கள் வெளியாகியவண்ணமுள்ளன. அவற்றின் தொகுப்பு காணொளி இதோ
No comments:
Post a Comment