நீங்கள் எதையாவது விரும்பும்போது அதை அடைய உங்களுக்கு உதவ பிரபஞ்சம் அனைத்தும் சதி செய்கின்றன
என்பது அல் கெமிஸ்ட் உட்பட உலகப்புகழ் பெற்ற நாவலை எழுதிய பிரேசிலிய எழுத்தாளர் பாவுலோ கொகெலோவின் பிரபல்யமான கூற்று . இது நம்ம நடராஜன் வாழ்வில் எத்தகைய உண்மையானது என்பது கடந்த சில மாதங்களாக நடக்கும் நிகழ்வுகளைப் பார்க்கும் போது வெள்ளிடைமலையாகும்.
136 கோடி இந்தியர்கள் இருக்கும் இந்த நாட்டில் இந்திய கிரிக்கெட் அணியில் இடம் பெறுவதே பலருக்கும் பெரிய கனவாக உள்ளது.
1931ம் ஆண்டு முதல் டெஸ்ற் கிரிக்கட் தொடக்கம் சர்வதேசப் போட்டிகளில் விளையாடிவரும் இந்திய கிரிக்கெட் வரலாற்றில் இப்படி ஒரு சம்பவம் நடந்ததே இல்லை.
சர்வதேச நாடுகளுக்கான இந்திய கிரிக்கட் சுற்றுப்பயணமொன்றில் டிடுவன்டி ஒருநாள் போட்டி டெஸ்ற் போட்டி என அனைத்து கிரிக்கட் வகையாறாக்களிலும் ஒரே தொடரிலேயே அறிமுகமான இந்திய வீரர் என்ற பெருமைமிகு சாதனைக்கு சொந்தக்காரராகியிருக்கின்றார் டி. நடராஜன் என அறியப்படும் தங்கராசு நடராஜன்.
வெறுமனே அறிமுகமானது மட்டுமன்றி தனது முதலாவது போட்டியிலேயே விக்கட்டுக்களையும் வீழ்த்தி அனைவரையும் திரும்பிப்பார்க்கவைத்துள்ளார் நம்ம நடராஜன்.
தமிழ் நாட்டின் சேலம் மாவட்டத்தின் சின்னப்பம் பட்டி என்ற குக்கிராமத்தைச் சேர்ந்த நடராஜன் ஐந்தாம் ஆண்டுமுதல் வீதியில் டென்னிஸ் போட்டிகளில் விளையாடிவந்தபோதும் அவரது 20வது வயதிலேயே லெதர் போலில் விளையாடத்தொடங்கியிருக்கின்றார். தமிழ் நாட்டின் 4த் டிவிஸன் போட்டிகளில் விளையாடத்தொடங்கிய அவர் 2015ம் ஆண்டு முதல் தமிழ் நாடு அணியில் விளையாடிவருகின்றார். தொடர்ந்து தமிழ் நாடு பிரீமியர் லீக் போட்டிகளில் யோக்கர்களால் கலக்கிய நடராஜன் 2017ம் ஆண்டில் கிங்ஸ் எக்ஸ் அணிக்காக ஐபிஎல் ஏலத்தில் வாங்கப்பட்டபோதும் காயங்காரணமாக ஆற்றலை வெளிப்படுத்த முடியவில்லை. பின்னர் 2018ம் ஆண்டில் சன்ரைஸர் ஹைதரபாத் அணியில் உள்வாங்கப்பட்டார்.
அனுபவம் வாய்ந்த இந்திய மற்றும் வெளிநாட்டு பந்துவீச்சாளர்களால் நிறைந்திருந்த சன் ரைஸர்ஸ் அணியில் ஆரம்பத்தில் அவருக்க இடம்கிடைக்கவில்லை. காயங்காரணமாக பந்துவீச்சாளர்கள் காயமுற்றதால் கடந்த 2020ம் ஆண்டில் ஐபிஎல் போட்டிகளில் ஆரம்பமுதலே அசத்தினார் நடராஜன். அவரது யோக்கர் பந்துகளுக்கு இரையானவர்களில் ஏபிடிவிலியஸர்ஸும் அடக்கம்
அனுபவம் வாய்ந்த இந்திய மற்றும் வெளிநாட்டு பந்துவீச்சாளர்களால் நிறைந்திருந்த சன் ரைஸர்ஸ் அணியில் ஆரம்பத்தில் அவருக்க இடம்கிடைக்கவில்லை. காயங்காரணமாக பந்துவீச்சாளர்கள் காயமுற்றதால் கடந்த 2020ம் ஆண்டில் ஐபிஎல் போட்டிகளில் ஆரம்பமுதலே அசத்தினார் நடராஜன். அவரது யோக்கர் பந்துகளுக்கு இரையானவர்களில் ஏபிடிவிலியஸர்ஸும் அடக்கம்
ஐபிஎல் போட்டிகளில் காண்பித்த அசாத்திய ஆற்றல் வெளிப்பாடு கடந்த ஒக்டோபர் மாதத்தில் அவுஸ்திரேலியாவிற்கு விஜயம் மேற்கொண்ட இந்திய அணியுடன் பயணிக்கும் சந்தர்ப்பத்தை நடராஜனுக்கு வழங்கியது. ஆனால் அணி வீரர்களின் வலைப்பயிற்சியின் போது அவர்களுக்கு பந்துவீசும் நான்கு பேரில் ஒருவர் என்ற சந்தர்ப்பமே கிடைத்தது.
எந்த வாய்ப்புக் கிடைத்தாலும் அதுவேதனது கடைசிவாய்ப்பு என்று இருக்கும் திறமையை குறிப்பாக அச்சொட்டாக யோக்கர் வீசும் ஆற்றலை காண்பித்த நடராஜனுக்காக வழிகள் திறந்தன. வாய்ப்புக்கள் குவிந்தன. முதலில் டிடுவின்றி அணியில் இடம்பிடித்திருந்த சக தமிழக வீரர் வருண் சக்கரவர்த்தி காயமுற்றநிலையில் வருண் சக்கரவர்த்திக்கு பதில் டி20 அணியில் சேர்க்கப்பட்டார். அப்போதும் அவர் போட்டிகளில் ஆடுவது உறுதியாகவில்லை. இதற்கிடையே ஒருநாள் போட்டி அணியில் சேர்க்கப்பட்டார்.
ஒருநாள் அணி டி20 அணி என வரிசையாக இரண்டு வித போட்டிகளில் அறிமுகம் ஆனார். அடுத்ததாக டெஸ்ட் தொடருக்கான அணியில் கூடுதல் வீரராக சேர்க்கப்பட்டு உத்தேச வீரர்கள் பட்டியலில் இணைந்தார். அடுத்ததாக பல வேகப் பந்துவீச்சாளர்கள் இந்திய அணியில் காயமடைந்த நிலையில் நான்காவது டெஸ்ட் போட்டியில் அவர் இன்று அறிமுகம் ஆனார்.ஒரே சுற்றுப்பயணத்தில் மூன்று வித கிரிக்கெட் அணிகளிலும் அறிமுகம் ஆன முதல் இந்திய வீரர் நடராஜன் தான். அந்த அரிய சாதனையை அவர் செய்துள்ளார். அது மட்டுமின்றி தான் அறிமுகம் ஆன போட்டிகளில் எல்லாம் குறைந்தது 2 விக்கெட்கள் வீழ்த்தி அசத்தி இருந்தார்.
நீங்கள் இருக்கின்ற சூழ்நிலை எவ்வளவு கடினமாக இருந்தாலும் விடாமுயற்சியும் கடின உழைப்பும் இருந்து விட்டால் சவால்களையும் தடங்கல்களையும் தாண்டி உங்களை வெற்றிபெறவைக்க பிரபஞ்சமும் பல்வேறு வழிகளில் கைகொடுக்கும் என்பதற்கு நடராஜனின் வாழ்க்கை நம் கண்முன்னே உள்ள மிகச்சிறந்த உதாரணம் என்றால் மிகையல்ல. அவரது வெற்றிக்கு வாழ்த்துக்கள் ,
No comments:
Post a Comment