Monday, January 18, 2021

இலங்கையில் 18 வயதிற்கு மேற்பட்ட அனைவருக்கும் இராணுவப் பயிற்சி? பாராளுமன்றத்திற்கு வரவுள்ள புதிய யோசனை

 


இலங்கையில் 18 வயதிற்கு மேற்பட்ட அனைவருக்கும் இராணுவப் பயிற்சியை வழங்கும் புதிய யோசனையொன்றை பொதுப் பாதுகாப்பிற்கு பொறுப்பான அமைச்சர் ரியர் அட்மிரல் சரத் வீரசேகர பாராளுமன்றத்தில் முன்வைக்கவுள்ளதாக  தகவல்கள் வெளியாகியுள்ளன. 

இதுதொடர்பாக முன்னணி தொலைக்காட்சி அலைவரிசையொன்றுக்கு கருத்துவெளியிட்டுள்ள அமைச்சர் தெரிவித்ததாவது' இந்த யோசனையையிட்டு எவரும் அச்சம் கொள்ளத்தேவையில்லை. நாட்டின் நன்மைகருதியே நான் இந்த யோசனையை முன்வைத்துள்ளேன்.இந்தப் பயிற்சி மக்கள் தமது சொந்தக்காலில் நிற்பதற்கு வழிவகுக்கும். தலைமைத்துவ தகைமைகளை ஊக்குவிக்கும். அத்தோடு ஒழுக்கமிக்க சட்டத்திற்கு கீழ்படிந்து நடக்கும் நாட்டைக் கட்டியெழுப்பு பங்களிக்கும்' எனத் தெரிவித்துள்ளார். 

இந்த உத்தேச இராணுவப் பயிற்சி 18வயதைப் பூர்த்திசெய்த அனைவருக்கும் கட்டாயமானதா அன்றேல் தன்னார்வத்துடன் பங்கேற்பவர்களுக்கானதா என்பது தொடர்பான தகவல்கள் இதுவரை வெளியாகவில்லை. 

தற்போதைய நிலையில் உலகில் கட்டாய மற்றும் தன்னார்வ இராணுவ சேவையை நடைமுறைப்படுத்தும் நாடுகள் பின்வருமாறு:


பேர்முடா 

கேப் வேர்டே 

சீனா 

கொலம்பியா 

பிரான்ஸ் 

குவைத் 

மாலி 

சிங்கப்பூர் 

தாய்லாந்து 

தாய்வான் 

No comments:

Post a Comment